Powered by Blogger.

பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிகள்

Wednesday, December 16, 2020

 பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிகள்

கடவுள் கொடுத்த வரம் சிரிப்பு என்பார்கள்! அந்த சிரிப்பு அழகாக இருப்பதற்கு காரணம் பற்கள் மட்டுமே. சிரிப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதிலிருந்து இருந்து பல விஷயங்களுக்கும் இந்த பற்களின் ஆரோக்கியம் அவசியம்.ஆனால் இன்று மிகவும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் சொத்தை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். பல் வலியை விட கொடுமையான வலி எதுவுமில்லை என்று கேள்விப்பட்டிருப்போம். இது மாதிரி எல்லாம் சிரமப்படாமல் இருக்க வருமுன் காப்பது நல்லது.

இந்த பதிவில் பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் பாட்டி வைத்திய குறிப்புகள் பலதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பல் சொத்தை என்றால் என்ன ?

எந்த உணவைச் சாப்பிட்ட பிறகும் வாயைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுதல் அவசியம். அப்படி சுத்தமாக வாயைக் கழுவாத இருக்கும்பொழுது கிருமிகள்(பாக்டீரியாக்கள்) பற்களைச் சென்று தாக்கும். இதனால் பல் சொத்தை பாதிப்பு ஏற்படும். பல் சொத்தை ஏற்பட்ட ஆரம்பக்கட்டத்தில் சாதாரண கரும்புள்ளி தென்படும். பிறகு பல்லில் சிறு ஓட்டை ஏற்படும்.

பல் சொத்தை எதனால் ஏற்படுகிறது?

1. சரியான முறையில் பற்களைத் துலக்காது.

2. இரண்டு வேளைகளும் பல் துலக்காமல் இருப்பது.

3. உணவு சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருத்தல்.

4. அதிகளவு இனிப்பு வகைகளைச் சாப்பிடுதல்.

5. பால் அருந்திய பின் வாயைச் சுத்தம் செய்யாமல் குழந்தைகளைத் தூங்க வைத்தல்.


பல் சொத்தை ஏற்பட்டால் வேறு என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்?

1. பல் சொத்தையைச் சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும்.

2. நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும்.

3. ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

4. பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

5. பற்களில் குழிகள் ஏற்படும். பற்கள் உடைந்து போய்விடும்.

6. இதனால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே நிலையான அமைப்பு இல்லாமல் போய் விடும்.

7. லேசான பல் வலி என்ற அளவில் ஆரம்பித்து மிகவும் கடுமையான வலி ஏற்படும்.

8. ஈறுகளில் சீல் ஏற்படும்.

9. கிருமிகளின் தாக்குதல் அதிகமாக அதிகமாகப் பற்களைத் தாங்கும் எலும்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதற்குச் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்து வரும் சூழல் உள்ளது.

10. நாளடைவில் சொத்தைப் பல்லைப் பிடுங்கி,நீக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.

பல் சொத்தைக்கான மருத்துவச் சிகிச்சை என்ன?

எனாமல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு மருத்துவர் நிரந்தரமாகப் பல் ஓட்டையை அடைத்து விடுவார்.ஒருவேளை ஓட்டை மிகவும் ஆழமாக இருந்தால் தற்காலிக அடைப்பை(சிமெண்ட் அடைப்பு) ஏற்படுத்தி மேலும் சொத்தை பரவாமல் தடுத்து விடுவார்.

ஒரு சிலருக்குப் பல் சொத்தை கடுமையான அளவு ஏற்பட்டிருக்கும். இதனால் பற்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.ஆனால் தற்போது ரூட் கேனல் சிகிச்சை முறை வந்துள்ளது. இந்த முறையில் பற்களை அகற்றாமல் பற்களின் வேர்களில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவதாக முடியும்.

பல் வலி/பல் சொத்தை சரியாக பாட்டி வைத்திய குறிப்புகள்

பல் வலிக்கு மூலகாரணம் பற்சொத்தை என்று பார்த்தோம். அந்தவகையில் கீழே பல் வலியைக் குறைக்க உள்ள பாட்டி வைத்திய குறிப்புகளைப் பார்க்கலாம்.

துளசி இலை

சிறிதளவு துளசி இலைகள் ,உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும்.

கிராம்பு

சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

உப்புத்தண்ணீர்

மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

வேப்பிலை

வேப்பிலை சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பல் சொத்தை ஏற்படாமல் இருக்க என்ன வழி?👇👇👇


இனிப்பு பொருட்களைத் தவிருங்கள்.இனிப்பு பொருட்களை சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான மூலகாரணம். சாக்லேட் ,இனிப்பு பலகாரங்கள் , ஐஸ்கிரீம் ,கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றைச் சாப்பிடும் பொழுது இதன் துகள்கள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும்.இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும். இதன் அடுத்தகட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும்.

பூண்டு

பூண்டில் அதிகளவு சல்பர் உள்ளது.இது பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது. இந்த பூண்டை லேசாக தட்டி உப்பில் கலந்து சொத்தையான பல்லின் மீது வைத்து அழுத்தவும். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை நீங்கி நல்ல பலன் கிட்டும்.

எருக்கம்பால்

எருக்கம் பாலை எடுத்து பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். இந்த முறையைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பல் சொத்தை சரியாகும்.

இலவங்கப் பொடி

பல் சொத்தை உள்ள இடத்தில் இலவங்கப் பொடியைத் தடவ வேண்டும். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்துக் கொள்வது அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை, பல்வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.

ஆயில் புல்லிங்

தினமும் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி பத்து நிமிடம் அளவிற்கு வைத்துக் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு பல் ஆரோக்கியம் மேம்படும்.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளைப் பறித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும்.இந்த நீரைக் கொண்டு தினமும் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது பல்வலி ,பல் சொத்தைச் சரியாகும்.

அறுகம்புல்

அறுகம்புல் சாற்றைப் பல் சொத்தை ஏற்பட இடத்தில் தடவ வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.இதைத் தினமும் செய்து வரும் பொழுது பல்நோய் குணமடையும்.

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்

சுத்தமாகப் பராமரியுங்கள்

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் பற்களில் சொத்தை ஏற்படும். அதனால் பற்களைச் சுத்தமாகப் பராமரிப்பது மிக முக்கியம். காலை எழுந்தவுடனும் இரவு தூங்கும் முன்பும் மறக்காமல் பற்களைச் சுத்தமாகத் துலக்க வேண்டும். பற்களில் கறை படியாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதேபோல பற்களை அரைகுறையாகத் துலக்கக் கூடாது. சரியான வழியில் துலக்கினால் மட்டுமே இடுக்குகளில் புகுந்து அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.

இவற்றைச் செய்யாதீர்கள்

குண்டூசி,ஹேர் பின் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து பற்களை நோண்ட வேண்டாம். இது பற்களையும் வேர்களையும் பாதிக்கும். சில சமயம் ஈறுகளில் புண் ஏற்பட்டு வீக்கம் வந்து விடும். சில சமயங்களில் சீழ் கூட பிடித்துவிடும். எனவே இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதேபோல வெற்றிலை ,பான்மசாலா ,புகையிலை போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும். இவை அனைத்துமே முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பரிசோதனை

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையையும் முளையிலே கிள்ளி விட்டால் பெரிய பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

பழ வகைகள்

அன்னாசி ,ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கப்படும். இந்த பழ வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் சி சத்து பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகளவு கைகொடுக்கும்.

ஆலம் விழுது

ஆலம் விழுதுகளைக் கொண்டு தினமும் பல் தேய்க்கலாம். இதன்மூலம் பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

St4,6,Li4 acupuncture points.press 2minutes 2times a day.

 Mohideen Acu Meetheen:

Read more...

கண் பார்வைக் குறைபாடுகள்

Saturday, December 12, 2020

 மனிதனின் கண் என்பது 576 மெகாபிக்ஸல் கேமரா. ஒரு லென்ஸ் மற்றும் ஒரு திரை. திரைதான் ரெட்டினா. திரை நகராது இருக்கும். இந்த லென்ஸை தசைகளால் சுருக்கவும் நீட்டவும் முடியும். அதன்மூலம் பக்கத்தில் இருக்கும் பொருளுக்கும் தூரத்தில் இருக்கும் பொருளுக்கும், பார்வையை அரைநொடிக்கும் குறைவான நேரத்தில் எடுத்துப்போக முடியும்.

நமக்கு வரும் பொதுவான கண் பார்வைக் குறைபாடுகளாக மூன்றைச் சொல்லலாம். 

முதலாவது, கிட்டப்பார்வை (Myopia). கிட்டப்பார்வை என்றால் அருகில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தெளிவாக இருக்கும். ஆனால், தூரத்தில் இருப்பவை தெரியாது. கண்கோளம் நீட்சி அடைவதால் அல்லது ஆஸ்டிக்மாட்டிஸம் எனப்படும் கார்னியா அமைப்பின் கோளாறால் ஒளி அலைகள் ரெட்டினாவுக்கு முன்பே குவியும். அப்போது தூரத்துப் பொருட்கள் மங்கலாகவே இருக்கும். யாரோ நடந்து வருகிறார்கள் என்று நினைத்திருந்து, அருகில் வந்தவுடன், “ஓ! சங்கரா? அதான் சங்கர் மாதிரியே இருக்கேன்னு பாத்தேன்” என்பார்கள். இவர்களுக்குக் கண்ணாடி அணிவது பலன் தரும். அவை குழி ஆடி (concave lens) வகையைச் சார்ந்தது. அவை ஒளியை இன்னும் கொஞ்சம் விரட்டி சரியாக ரெட்டினாவில் விழச் செய்யும். 

அடுத்தது, தூரப்பார்வை (Hyperopia). கிட்டத்து ஒளி அலைகள் ரெட்டினாவில் குவியாமல், ரெட்டினாவையும் தாண்டி அதன் பின்புறத்தில் குவிவதால், பார்வை தெளிவாக இருக்காது. இவர்களுக்கு குவி ஆடி (convex lens) வகையைப் பொருத்துவார்கள். அவை, ஒளியை சரியாக ரெட்டினாவில் விழச்செய்யும்.

கடைசியாக, வயதான காரணத்தால் கண் லென்ஸின் இயல்பான சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைவதால், சிறு எழுத்துகளை நம்மால் தெளிவாகப் படிக்க முடியாது

ஆம். மிகவும் தெளிவான விளக்கம்... இதைத்தான் "கிட்டக்குழி தோண்டி தூரக்குவி" என்கிற சொல்லடையில் வரையறுப்பார்கள். அதாவது, கிட்டப்பார்வை குறைபாடு என்றால் குழி ஆடியும், தூரப்பார்வை குறைபாடு என்றால் குவி ஆடியும் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக இவை ஏற்படுவதற்கான காரணம் லென்ஸ் மற்றும் திரைக்கான தூரம் ஏற்றத்தாழ்வினால் ஏற்படுகிறது. இதற்கு விழித்திரையில் சரியான நீர்மத்தன்மை மாற்றமடைவதாலும், லென்ஸின் சுருங்கி விரியும் தன்மை குறைவதாலும் ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கான காரணமாவது நம் கண்களுக்கும் உற்று நோக்கும் பொருளுக்கும் இடையே தொடர வேண்டிய தூரத்தை சரிவர செய்யாததன் விளைவே! அதாவது, பொருளினை கண்களுக்கு மிக அருகிலோ அல்லது அதிக தூரத்திலோ வைப்பதாலும், மிக அதிக நேரம் ஒரே இடத்தினை உற்று நோக்குவதாலும், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமலிருந்தாலும் இது போன்ற குறைபாடுகள் ஏற்படும். வாழ்வியல் முறையை சரிவர பின்பற்றினாலே இதிலிருந்து எளிதில் குணமடையலாம்.

கீழுள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் தினமும் 2அல்லது 3 நேரம் சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வாருங்கள்..விரைவில் கண் பார்வை தெளிவாகும்.Gb 37,Liv2, tw23,ub1,2,St1,gb1,Ex1,2

Mohideen Acu Meetheen:

Read more...

மைத்ர முகூர்த்தம் கணக்கிடும் முறை :

 மைத்ர முகூர்த்தம் கணக்கிடும் முறை :


1. செவ்வாய்க்கிழமையும் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் - 100% 

2. செவ்வாய்க்கிழமையும் + அனுஷ நட்சத்திரமும் + விருச்சிக லக்கினம் - 100%

 வேறு கிழமைகள் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் - 75% 

வேறு கிழமைகள் + அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்கினம் - 75%

Source:

https://youtu.be/g1SBPuUobow

Read more...

கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம்,

Friday, December 11, 2020

 கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம். ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு.


பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் சத்து குறைவதும் முக்கியக் காரணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். இவ்வாறு வலுவிழந்த எலும்புகள் வழக்கமான தசைகளின் அழுத்தம் காரணமாக, விரைவிலேயே தேய்ந்துவிடும். ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள் (Osteophytes) வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும்.


இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.


குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும். புகைபிடிக்கும் பழக்கம் இருந்தாலோ உடற்பருமன் இருந்தாலோ கழுத்துவலி சீக்கிரத்தில் வந்துவிடும்.


கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது: வயதாக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும்.


அறிகுறிகள்


இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும். நடப்பதற்குச் சிரமமாக இருக்கும்.


என்ன பரிசோதனை?


கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.


என்ன உணவு?


புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், பால் பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி, காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


தடுப்பது எப்படி?


# எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.


# பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.


# ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.


# கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி.


# கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.


# தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள்.


# மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.


# அளவுக்கு அதிகமான சுமையைத் தூக்காதீர்கள்.


# உடல் பருமன் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


# நடத்தல், நீந்துதுல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் கடைப்பிடியுங்கள்.


# கழுத்துத் தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதும் நல்லது.


# மோசமான சாலைகளில், ஸ்பீடு பிரேக்கர்களில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

Mohideen Acu Meetheen:


Read more...

தைமஸ் சுரப்பி

 தைமஸ் சுரப்பி  :-                

இரத்த வெள்ளணுக்களில் 5 வகை உண்டு. அவற்றில் நிணவணுக்கள் (Lymphocytes) ஒரு வகை. இவற்றில் பி நிணவணுக்கள் (B–Lymphocytes), டி நிணவணுக்கள் (T–Lymphocytes) என இரு வகை உண்டு. பி நிணவணுக்கள் (B–Lymphocytes) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. டி நிணவணுக்களை (T–Lymphocytes) ‘தைமஸ் சுரப்பி’ (Thymus gland) உற்பத்தி செய்கிறது.


மனிதன் உள்ளிட்டப் பாலூட்டிகளுக்கு உடலில் உருவாகிற முதல் ‘நிணவகை உறுப்பு’ (Lymphoid organ) இதுதான். கழுத்தும் நெஞ்சும் இணைகிற இடத்தில், நெஞ்சு எலும்புக்குப் பின்புறமாகவும், மூச்சுக் குழாய்க்கு முன்புறமாகவும் இருக்கிறது, தைமஸ் சுரப்பி. பிரமிட் வடிவில் இருக்கிற இந்தச் சுரப்பி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலோடு தொடர்புடையது; தொற்றும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.


நாம் பிறக்கும்போது இதன் எடை 12 கிராம். இது 12 வயதுவரை மட்டுமே வளர்கிறது. அப்போது இதன் எடை 36 கிராம். அதன் பிறகு இது சுருங்க ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு இது 10 கிராம் எடையில் இருக்கும். அதனால்தான் முதுமையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுகிறது. மனிதரைத் தவிர மற்ற விலங்கினங்களுக்குத் தைமஸ் சுரப்பி தொடர்ச்சியாக வளர்ந்து, சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.


தைமஸ் சுரப்பியில் வலது, இடது என இரண்டு மடல்கள் (Lobes) உண்டு. ஒவ்வொன்றிலும் ஏராளமான நுண்மடல்கள் (Lobules) இருக்கின்றன. இதன் அமைப்பை வெளிப் பக்கமாகப் புறணி (Coretx) என்றும், உட்பக்கமாக அகனி (Medulla) என்றும் பிரிக்கிறார்கள். புறணியில் இளம் நிணவணுக்களும், அகனியில் முதிர்ந்த நிணவணுக்களும் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ‘ஹஸல் கார்ப்பசல்ஸ்’ (Hassall’s corpuscles) எனும் சிறப்பு நிணவணுக்களும் உள்ளன.


இவற்றின் வேலைதான் என்ன?


தைமஸ் சுரப்பி, டி நிணவணுக்களை மட்டுமில்லாமல், ‘தைமிக் ஹார்மோன்களை’யும் (Thymic hormones) உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை தைமுலின் (Thymulin), தைமோஸின் (Thymosin), தைமோபாய்டின் (Thymopoietin). இவைதான் பி நிணவணுக்களுக்கும் டி நிணவணுக்களுக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊட்டுகின்றன. உடலுக்குள் நோய்க்கிருமிகள் நுழையும்போது அவற்றை எதிர்க்கின்ற எதிர்ப்பொருட்களை (Anti bodies) உருவாக்கி, அந்தக் கிருமிகளை அழிக்கவும், உடலிலிருந்து வெளியேற்றவும் நிணவணுக்களுக்குப் பயிற்சி தருகின்றன. நிணவணுக்கள் ரத்தத்தில் மட்டுமில்லாமல், நிணநீர் மண்டலத்திலும் பயணம் செய்கின்றன.


அது என்ன நிணநீர் மண்டலம்?


உடலில் ரத்தச் சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக நிணநீர் மண்டலம் (Lymphatic system) இருக்கிறது. இதுவும் நோய் காக்கும் காவலனாக அமைந்துள்ளது. தந்துகிகளின் தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கும் என்பதால், அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருள்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’ (Lymph). நாளொன்றுக்கு 2 - 3 லிட்டர்வரை நிணநீர் சுரக்கிறது.


இது உடலில் ஆங்காங்கே சிறு சிறு நிண நாளங்களில் சேகரிக்கப்படுகிறது. சிறிய நிண நாளங்கள் ஒன்று சேர்ந்து, பெரிய நிண நாளமாக உருவாகிறது. பேருந்து செல்லும் பாதையில் பேருந்து நிறுத்தங்கள் இருப்பதைப்போல், இந்த நாளங்கள் செல்லும் பாதையில் ‘நிணக்கணுக்கள்’ (Lymph nodes) இருக்கின்றன. குறிப்பாகத் தலை, கழுத்து, அக்குள், வயிறு, தொடை இடுக்குகள் ஆகிய இடங்களில், தோலுக்கு அடியில், ஒரு பட்டாணிக் குவியல் மாதிரி காணப்படுகின்றன. உடலில் சுமார் 600 நிணக்கணுக்கள் உள்ளன. ரத்தச்சுற்றோட்டதுக்கு இல்லாத இந்தச் சிறப்புத் தகுதி நிணநீர் சுற்றோட்டத்துக்கே உரியது.


உடல் எங்கும் ஒரு சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள நிண நாளங்கள் தாம் கொண்டுவரும் நிணநீரை அருகில் உள்ள நிணக்கணுக்களில் சேர்க்கின்றன. அந்த நிணக்கணுக்களில் இருந்து வேறு புதிய நிண நாளங்கள் புறப்படுகின்றன. அவற்றில் மறுபடியும் நிணநீர் பயணிக்கிறது. இறுதியில் இந்த நாளங்கள் வலது, இடது கழுத்துப் பட்டை எலும்பின் அடியிலுள்ள சிரைக்குழாய்களில் (Subclavian veins) இணைகின்றன. அதன் வழியே ரத்த ஓட்டத்தில் நிணநீர் கலக்கிறது.


நிண நாளங்களில் வால்வுகள் உள்ளதால், நிணநீர்ப் போக்குவரத்து ஒரு திசைப் பயணமாக இதயத்தை நோக்கியே நிகழ்கிறது. நிண நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால் இந்தப் போக்குவரத்து சாத்தியமாகிறது. அப்போது திசுக்களிலிருந்து பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிரிகளை நிணநீர் உறிஞ்சிக்கொள்கிறது. அவற்றை நிணக்கணுக்கள், மண்ணீரல், தைமஸ் ஆகிய நிணவகை உறுப்புகள் வடிகட்டி வெளியேற்றுகின்றன.


இவ்வாறு நிணநீர், நிண நாளங்கள், நிணக்கணுக்கள், தைமஸ், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை, குடல் மற்றும் சுவாச மண்டல நிணத்திசுக்கள் போன்ற நிண வகை உறுப்புகள் அனைத்தையும் கொண்டது நிணநீர் மண்டலம். நிணநீரில்


கலக்கும் உடல் கழிவுகளை நீக்கி, நோய்க்கிருமிகளை அழித்து, அயல்பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தி, மீண்டும் அந்த நிணநீரை ரத்தத்துக்கு அனுப்புவது இந்த மண்டலத்தின் முக்கிய வேலை.


அதோடு, தந்துகிகளின் சுவரில் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாக உள்ள உணவு மூலக்கூறுகள் நிண நாளங்களின் வழியே உடலுக்குள் செல்கின்றன. உதாரணமாக, குடலில் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படும் கொழுப்பு உணவு நிண நாளங்கள் வழியாகவே ரத்தத்தில் கலக்கிறது. 

நெறிக்கட்டு என்பது என்ன?


நோய்த்தொற்று ஏற்படும்போது, உடலுக்குள் புகுந்துகொள்ளும் நோய்க் கிருமிகளோடு போராடி அவற்றை அழிப்பதற்கு நிணக்கணுக்கள் நிறைய நிணவணுக்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அப்போது நிணக்கணுக்கள் கோலிக்குண்டு அளவுக்குப் பெரிதாகின்றன. இதைத்தான் ‘நிணக்கணு வீக்கம்’ அல்லது ‘நெறிக்கட்டு’ என்கிறோம். உதாரணமாக, காலில் புண் வந்தால் தொடை இடுக்கில் நெறி கட்டும். நோய்க்கிருமிகளின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, அது நிண நாளங்களை அடைத்துக்கொள்ளுமானால், திசுக்களில் நீர் கோத்து, வீங்கிவிடும். பாதங்களில் நோய்த்தொற்று ஏற்படும்போது கால் முழுவதும் சிவப்பு நிறத்தில் வீங்குவது இப்படித்தான்.


உடலில் புற்றுநோய் இருந்தால், அது உடலுக்குள் பரவக்கூடிய பாதைகளில் ஒன்று நிணநீர்ப் பாதை. எந்த உடற்பகுதியில் புற்றுநோய் இருக்கிறதோ. அதோடு தொடர்புடைய நிணக்கணுக்களைத் திசு ஆய்வு (Biopsy) செய்தால், புற்றுநோய் பரவியுள்ளதா என்பது தெரிந்துவிடும். உதாரணமாக, மார்பில் புற்றுநோய் இருந்தால், அக்குளில் உள்ள நிணக்கணுக்களைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும். மார்பில் புற்றுநோய் இருந்தால், அந்த நிணக்கணுக்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடுகிறார்கள்.

Source:

Mohideen Acu Meetheen:

Read more...

கண் துடிப்பு காரணம்

Wednesday, December 9, 2020

கண் துடிப்பு காரணம்: 1

மன அழுத்தம், அதிக அளவு காஃபைன் சேர்த்தல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை போன்றவை கண் துடிப்புக்கு காரணம் ஆகும்.

கண் துடிப்பு காரணம்: 2

மது அருந்துதல், பிரகாசமான விளக்கு வெளிச்சம், கண் பரப்பு மற்றும் இமையின் உள்பக்கம் உறுத்தல், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், காற்று, தலை சுற்றுவது போன்ற உணர்வு, மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவையும் கண்ணிமை துடிப்புக்குக் காரணமாவதோடு, அதை அதிகப்படுத்தவும் செய்யும்.

கண் துடிப்பு காரணம்: 3

பெரும்பாலும் வலி இல்லாமலே தான் இமை துடிக்கும்.

கண் துடிப்பு காரணம்: 4

இது ஆபத்தானதும் அல்ல. பல நேரங்களில் சிகிச்சை ஏதும் தேவையில்லாமல் தானாகவே இது நின்று விடும்.

இமையில் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் துடிப்பை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.

சரி இந்த கண் துடிப்பு நிற்க (How to stop eye twitching) சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கண் துடிப்பு நிற்க (How to stop eye twitching) சில வழிமுறைகள்:

இமை துடிப்பு நிற்க – காஃபைன்:

தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பது, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம்.

ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காஃபைனை நிறுத்திவிட்டு கண்ணிமை துடிக்கிறதா என்று கண்காணிக்கலாம்.

கண் துடிப்பு நிற்க – மதுபானங்கள்:

தங்களுக்கு கண்கள் துடிப்பதற்கு மதுபானமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே கண் துடிப்பு நிற்க மது அருந்துவதை தவிர்த்து கொள்ளவும்.

இமை துடிப்பு நிற்க – ஆழ்ந்த உறக்கம்: 

சரியான தூக்கம் இல்லையென்றாலும், கண் தொடர்ந்து அதிகமாக துடித்து கொண்டே இருக்கும். எனவே ஒருவருக்கு இரவு தூக்கமானது ஏழு முதல் எட்டு மணி நேரம், நல்ல ஆழ்ந்து உறங்குங்கள்.

குறிப்பாக படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

கண் துடிப்பு நிற்க – நீர்ச்சத்து குறைபாடு:

உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து குறைபாட்டினால், இந்த கண் துடித்து கொண்டே இருக்கும்.

எனவே தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். இவ்வாறு செய்வதினால் இந்த கண் துடிப்பதை தடுத்துவிடலாம்.

கண் துடிப்பு நிற்க  – ஊட்டச்சத்து:

மெக்னீசியம் போன்ற சத்துகள் குறைவதும் கண்ணிமை துடிப்பை உருவாக்கக் கூடும் என்கின்றர்.

கண் துடிப்பு நிற்க  – ஹைட்ரோதெரப்பி:

கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரைs மாறி, மாறி இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம்.

ஹைட்ரோதெரபி என்ற இந்த முறையில், தண்ணீரை தெளிக்கும்போது கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும், வெதுவெதுப்பான நீர் படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கண் துடிப்பு நிற்க – பயிற்சிகள்

எளிமையான சில பயிற்சிகள் மற்றும் மசாஜ் செய்வதன் மூலம் கண்களுக்கு ஓய்வும் இளைப்பாறுதலும் கிடைக்கும். இமையில் இழுப்பு ஏற்படுவது இதன் மூலம் குறையும்.

கண் துடிப்பு நிற்க  – மசாஜ்:

கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரத்துக்கு (30 விநாடிகள்) மசாஜ் செய்யலாம்.

இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்கும்.

Source:

விழிப்புணர்வு விவேக்

Read more...

கோள்களின் அலைவீச்சிலிருந்து நம் உயிருக்கு எவ்வாறு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கின்றன?*

Monday, December 7, 2020

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

கேள்வி: கோள்களின் அலைவீச்சிலிருந்து நம் உயிருக்கு எவ்வாறு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கின்றன?*

பதில்:* இந்தப் பிரபஞ்சத்தில் எந்தப் பொருளாக இருந்தாலும் அது பரமாணுக்களுடைய கூட்டு இயக்கமே. பரமாணு என்பது மிக நுண்ணிய சுழலலை. அதனால், எல்லாப் பொருள்களுமே அலைகளுடைய கூட்டு இயக்கமாகவே உள்ளன. அந்தக் கூட்டு இயக்கத்தில் பரமாணுக்களின் சுழல் விரிவுக்கேற்ப, காந்த ஆற்றல் இரசாயனங்களாக மாறிக் கொண்டே இருக்கின்றன.


 ஒவ்வொரு பொருள்களிலிருந்தும் அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப பொருத்தமான அலை வந்து கொண்டேயிருக்கிறது. அது மற்றொரு பொருளிலிருந்து வரக்கூடிய அலையோடு மோதும்போது மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுறுவுதல், முன் பின்னோடுதல் என்ற ஐந்து விதமான அலையியக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்., 


 இந்த அலையியக்கத் தத்துவத்தைப் பின்னனியாக வைத்துப் பார்த்தீர்களானால் பிரபஞ்சத்திலிருந்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களிலிருந்து – காந்த அலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன என்பது தெரிய வரும். எந்த நட்சத்திரங்கள், எந்த கோள்களிலிருந்து அலைகள் வருகின்றனவோ அந்தந்த நட்சத்திரங்கள் அல்லது கோள்களின் தன்மைகளையும், ஆற்றலையும் அடக்கமாகக் கொண்டிருக்கும்.


 அந்த ஆற்றல் துகள் உயிர்களின் மீது மோதுகிறபோது அங்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த உயிர் வகைகள் ஒவ்வொன்றும் வருகின்ற அலைகளை எந்த அளவுக்கு வாங்கிக் கொள்கின்றன என்பது அவற்றின் கருமையப் பதிவில் அமைந்துள்ள ஈர்ப்பைப் பொறுத்தது.


 உதாரணமாக 100 பூத்தொட்டியை வைத்திருக்கின்றோம். அதில் 100 விதைகளை ஊன்றுகின்றோம். ஒரே மண், ஒரே தண்ணீர் என்றாலும் அந்தந்த விதைக்குத் தகுந்தவாறு செடி வரும். அதேபோல் ஒவ்வொரு ஜீவனும் கோள்களிலிருந்து வருகின்ற ஆற்றலில் இருந்தும், உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், பூமியின் மத்தியிலிருந்து மேற்பரப்பை நோக்கி வருகின்ற சக்தியிலிருந்தும் அதற்கு வேண்டியதை தான் எடுத்துக்கொள்ளும்; தன்மயமாக அவற்றை மாற்றியும் கொள்ளும்.


 ஒவ்வொருவரும் பிறந்தபொழுது எந்தெந்தக் கோள்களின் தொலைவு எவ்வளவு இருந்ததோ, அதற்கு ஏற்ப காந்த அலைப் பதிவுகளை என்னென்ன அலை நீளத்தில், அழுத்தத்தில் பெற்றிருந்தோமோ, அந்தந்தக் கோள்கள் பூமிக்கு அருகில் வரும்போதும், விலகிச் செல்லும்போதும் உடலில் வெவ்வேறு விதமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு கோள் இன்னொரு கோளோடு சேர்ந்து வரும்போது ஒரு வகையான ரசாயன மாற்றமும், மாறி வரும்போது வேறு வகையான ரசாயன மாற்றமும் கோள்களின் கூட்டமைப்பிற்குத் தகுந்தவாறு ஏற்படுத்துவதால் உடலின் சக்தி ஓட்டத்தில் மாற்றம் தோன்றும். இவ்வாறு நாம் கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியைப் பெறுகிறோம்.


வாழ்க வளமுடன்!


*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

Read more...

எலும்புகள் உறுதியாக இருக்க

 எலும்புகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா?

உடலுக்கு  அஸ்திவாரமாக  விளங்குவது எலும்புகள்   தான். நாம் ஓடி விளையாட, நிற்க, அமர   அனைத்து வேலைகள் செய்வதற்கும் எலும்புகள்   வலிமையாக இருப்பது அவசியமாகும். எலும்புகள் வலிமையாக   இருக்க முக்கியமாக நம் உடலுக்கு தேவைப்படும் சத்து   கால்சியம் ஆகும். எலும்புகளில் முறிவு ஏற்பட்டால் அவை   விரைவில் இணைய கால்சியம் சத்து தேவைப்படுகிறது. கால்சியம்   சத்தை கிரகிக்க வைட்டமின் -டி அவசியமாக தேவைப்படுகிறது. இந்த இரண்டு  சத்துக்களும் தேவையான அளவு கிடைக்கப்பட்டால் எலும்புகளில் எந்த பிரச்சனையும்  ஏற்படாது.


கால்சியம்   நிறைந்த பொருட்கள்   என்று சொன்னாலே நமக்கு   முதலில் நியாபகம் வருவது   பால் தொடர்பான பொருட்கள் தான். பால்   மற்றும் அது சம்மந்தமான பொருட்களில் கால்சியம்   சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகள் வலிமையாக   இருக்க உதவுகிறது. எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்கள்  வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் போது   அவர்களுக்கு கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு மில்க், டோன்டு மில்க்  போன்றவற்றை கொடுக்கலாம். காரணம்   ஓய்வு காலங்களில் அவர்களுக்கு கொழுப்பு   சத்து அதிகரிக்க கூடும். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட   கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்பது அவசியமாகும்.


லாக்டோஸ் இண்டாலரன்ஸ் எனும் பால் ஒவ்வாமை உடையவர்கள்,   தினமும் சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு போன்றவற்றை  உட்கொண்டாலே   போதும். அவர்களுக்கு  1000 மி.கி கால்சியம் கிடைத்து   விடும்.


ஆஸ்டியோபொரோசிஸ் எனும்  எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சனை   பெண்களுக்கு இருக்கும். அவர்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவரின்   ஆலோசனைப்படி பால் அருந்த எடுத்துக் கொள்ளலாம்.  


100 மி.கி சோயா பீன்ஸில் 25 மி.கி கால்சியம் உள்ளதால்   எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தினமும் காலையில் சோயாவில்   பால் செய்து அருந்தி வரலாம். அதுமட்டுமில்லாமல் இந்த சோயாவில்   கொழுப்பு குறைவாக உள்ளதால், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களும்   இதை குடித்து வரலாம். இதனால் எலும்புகள் வலுவடையும்.


100 மி.கி மீனில், 15 மி.கி கால்சியம்   உள்ளதால் இதை வாரத்திற்கு இருமுறை உணவாக  உண்ண எடுத்துக் கொள்ளலாம்.  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களான  நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களை   உண்பதன் மூலமாக எலும்புகள் அடர்த்தியாகும்.


ஆட்டுக்காலின்  எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து   போன்ற சத்துக்கள் உள்ளதால் இதில் தாது உப்புகள் நிறைந்துள்ளன.  எனவே ஆட்டு காலில் சூப் செய்து குடிக்கலாம். இதனால் எலும்பு   விரைவில் கூடும்.


100 மி.கி நண்டில் 16 மி.கி கால்சியம்  உள்ளதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்   வாரத்திற்கு இருமுறை இதை சமைத்து உண்ணலாம். அதுமட்டுமில்லாமல்   உடலுக்கு இது உஷ்ணத்தை தருவதால் வெயில் காலங்களில் இதை தவிர்த்து  விடுங்கள்.


சைவம்   உண்பவர்களுக்கு   இது முக்கியமானது. கொள்ளில்  சோயாவிற்கு நிகரான கால்சியம்   சத்து நிறைந்துள்ளதால் 70 வயதிற்கும்   அதிகமானவர்கள், சைவ பிரியர்கள் கொள்ளில்   ரசம் வைத்து தினமும் குடித்து வந்தால், எலும்புகள்   வலுவாக இருக்கும்.


புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள்  போன்ற கனிவகைகளையும் தினமும் உண்டு வருவதால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.


100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம்  நிறைந்துள்ளதால், இதை வாரத்திற்கு இருமுறையாவது, கட்டாயம்   உட்கொள்ள எடுத்துக்  கொள்ள வேண்டும்.


கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு  போன்ற உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வருவது  அவசியமாகும் .


கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை  போன்ற கீரைகளில் அதிக அளவில் கால்சியம் சத்து இருப்பதால் இதில் தினமும் ஏதாவது   ஒரு கீரையை உண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் கீரையை உண்ணக்கூடாது. காரணம் செரிமானம்   அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தும், எனவே காலை மற்றும் மதிய நேரங்களில் இதை குழம்பாகவோ, பொறியலாகவோ, கடைந்தோ   சாத்ததுடன் பிசைந்து உண்ணலாம்.

100 மி.கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம்  உள்ளதால் எலும்புகளில் பிரச்சனை உள்ளவர்கள்   இதை அடிக்கடி கஞ்சி அல்லது தோசை செய்து உண்டு  வரலாம். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை மட்டும் நீங்கள்   பாலோ செய்தால் போதும், எலும்புகள் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும்   இருக்கும்

Source

Mohideen Acu Meethee


n:






Read more...

இயற்கை முறையில் அழகு சேர்க்க;

Saturday, November 21, 2020

 இயற்கை முறையில் அழகு சேர்க்க;

உடற்பயிற்சி  செய்தாலோ , காஸ்மெடிக்ஸ்  பயன்படுத்தியோ   அழகுப்படுத்தும்  பெண்களுக்கு    ஏகப்பட்ட பின்விளைவை  ஏற்படுத்தும்  .இயற்கை மருத்துவ குறிப்புகளை   யாரையும் எதிர்பார்க்காமல்  ,நாம் பயன்படுத்துவதோடு  மட்டுமல்லாமல்  எந்த ஒரு பின்விளைவையும்  ஏற்படுத்தாது .அதற்கான வலி முறைகளை பார்க்கலாம் .

முடி நன்றாக வளர ;

முடி  செழித்து  வளர  வாரம்  ஒரு முறை   வெண்ணெயை தலைக்கு தடவி  ஒரு மணி நேரம் கழித்து அலசி  வந்தால்  முடி  நன்றாக வளரும்.

கருவளையம் நீங்க ;

கண்களை  சுற்றியுள்ள  கருவளையம்   நீங்க   வெள்ளரிக்காய்  ஜுசை பஞ்சில்  நனைத்து   கண்கள் மீது தினமும்  போட்டு வரவும் .

உதடு  வசீகர  தோற்றம் பெற ;

உதடு   வசீகரமாக  இருக்க  முட்டையில்  வெண்கரு   ,பதம் பவுடர் ,பால் இம்மூன்றையும்  கலந்து   உதட்டில் தடவி  அது காய்ந்ததும்   சூடு நீரில்  கழுவி விட வேண்டும் .

முகம் பொலிவு  பெற ;

உருளைக்கிழங்கை  இடித்து  சாறு பிழிந்து ,சமமாக  தேன் கலந்து  முகத்தில்  தடவினால்  முகம் அழகுபெறும் .

முகச்சுருக்கம்  நீங்க ;

முகத்தில் உள்ள சுருக்கம்  மறைய  முட்டையின்  வெண்கருவை  தடவுங்கள் ,சிறிது நேரம்  கழித்து  முகம் கழுவ  முகத்திலுள்ள  சுருக்கம் மறையும் .

கருமை நீங்க ;

கருமையடைந்த    முகம் பொலிவு  பெற    பாதாம் பருப்பை   பாலில் அரைத்து  இரவில் முகத்தில் தொடர்ந்து  பூசிவர பொலிவு பெறும்.

முக வறட்சி  நீங்க ;

முகத்தில்  வறட்சி அகல   பச்சை கொத்தமல்லி   அல்லது  புதினாவை  நன்றாக  அரைத்து   முகத்தில்  பூசி  பிறகு சிறிது  நேரம்  கழித்து அலம்ப  வேண்டும் .

முகப்பரு  நீங்க ;

முகப்பருக்கள்  போக  பூண்டு அல்லது கருந்துளசியை   அரைத்து  போட நாளடைவில் பருக்கள்  மறையும் .

வாய் நாற்றம் நீங்க ;

வாய் துர்நாற்றம்   நாம் பேசும் பொது  உண்டாகும்  ,எப்போதும்   புத்துணர்வோடு  இருக்க  வேண்டுமென்றால்  , புதினை கீரையை  காயவைத்து  போடி செய்து   பல் துலக்கி வந்தால் புத்துணர்வோடு இருப்பதோடு மட்டுமல்லாமல்  பல் வெண்மையாக இருக்கும் .

 பல் வெண்மையாக இருக்க;

பல்  வெண்மையாக இருக்க   இரவு  நேரத்தில்  தினமும் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன்  பல் வெண்மை பெறும்.

உதடு  ஷைனிங்  பெற ;

உதடு  வறண்டு  காணப்படுகிறதோ ,அதை போக்கி   ஷைனிங் பெற தினமும்  உதட்டின் மேல்  தேங்காய் எண்ணெய்  தடவி வந்தால்  ஷைனிங்  தோற்றத்தை பெறும் .

Source

Mohideen Acu Meetheen:


 


 

Read more...

பல் சொத்தை தீர்வு

Wednesday, November 18, 2020

: வீட்டிலேயே உடனடித் தீர்வு

  

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்ளும் உணவுகளின் மிச்சம் தான். 


உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தையைத் தடுக்கலாம்.


ஆயில் புல்லிங்


ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.


கிராம்பு


2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்.


உப்பு தண்ணீர்


அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.


பூண்டு


3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.


மஞ்சள்


மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.


வேப்பிலை


வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் பாதுகாக்கலாம்.


உணவுமுறைகளில் மாற்றம்

சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

Source

Mohideen Acu Meetheen:


 

Read more...

குறட்டை பிரச்சினைக்கு தீர்வு

Monday, November 16, 2020

 பொதுவாக, குறட்டை என்பது ஒரு கோளாறு.  இது தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது.  மூக்கின் பின்புறம் அடினாய்ட் தசையும், தொண்டைக்குள் டான்சிலும் இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது. குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள். இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவைகளால் ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் பாதிக்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.


ஆரோக்கியமான ஒரு மனிதர் 8 மணி நேரம் தூங்குகின்றார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்து விடும்.  இது இயற்கையான நிகழ்வு.  ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ, இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும்.  அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலேயே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.


இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உங்கள் பாசமான உறவுகளில் தொல்லையை உண்டாக்கும்.  ஆகவே, அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒரு சில எளிய வழிகளை பின்பற்றி குறட்டையை தவிர்த்திடுங்கள்.


ஒரு சில எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி குறட்டையை தவிர்க்கலாம்.


ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான குடி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியைப் போட்டுக் கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.


ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம். (மஞ்சள் தூள் கலப்படமின்றி சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நல்லது).


காலையிலும் இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூட்டுடனுள்ள பசு நெய்யை விட்டுக்கொள்ளலாம். நெய்யுக்குப் பதில் பிராமி எண்ணை கிடைத்தால் உபயோகிக்கலாம்.


மேலும், படுக்கும்போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்குப் பதிலாக, சற்று அதிக அளவில் தலையணைகளைப் பயன்படுத்தி தூங்கினால் குறட்டையை தவிர்க்கலாம்.


மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து தூங்கலாம். இடது பக்கவாட்டிலேயே திரும்பி அதிக நேரம் உறங்குவது நல்லது. இரவு முழுவதும் இடதுவாக்கில் படுப்பது சாத்தியமில்லைதான். இருப்பினும் பக்கவாட்டில் படுத்து உறங்கினால், அது குறட்டையை தடுக்கும்.


சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியான சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். நீராவி பிடித்தாலும் குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.


இரவில் தூங்கச் செல்லும் முன் பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து குறட்டைக்கு வழிவகுக்கும்.  எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.


புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் குறட்டைவிடுவதும் ஒன்றுதான்.  ஏனெனில் புகைபிடிக்கும்போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குகிறது. இது மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தி விடும். மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, மூச்சுக்காற்று எளிதாக செல்ல உதவும்.


சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாதபடிக்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு-வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

Source

Mohideen Acu Meetheen:


 

Read more...

குறட்டை பிரச்சினை ஏன்

 குறட்டை  -:############# நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?


தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.


அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.


என்ன காரணம்?


சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.


ஆபத்தானதா?


குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) எனப்படும்.


அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.


ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.


இதில் சில ஆபத்துகளும் உள்ளன. இவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோத்துக்கொள்ளும்.


தடுக்க என்ன செய்யலாம்?


# தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.


# மல்லாக்கப் படுக்க வேண்டாம்.


# ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.


# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.


# தைராய்டு பிரச்சினைக்கு இயற்கை வழி தீர்வு எடுக்க வேண்டும்.


# மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.                            

#காலையில் சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும்.

# தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது

Source

Mohideen Acu Meetheen:


 

Read more...

இன்சுலின் சுரப்பு அதிகரிக்க

Saturday, November 14, 2020

 *இன்சுலின் சுரப்பை அதிகரிக்க பூசணி விதையை சாப்பிடுங்க*..!


*சூப்பர் டிப்ஸ்*... 

 

*பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதனுள் இருக்கும் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. இது தெரியாமல் பலர், சமைப்பதற்கு பூசணிக்காயை நறுக்கியவுடனேயே விதைகளை அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள். பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது. ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை*.


*பூசணி விதையில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்*…

*பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ‘இ’ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்*.


*ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது*.


*பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்*.

 

*பூசணி விதையில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும்.பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும்*.


*துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன*.


*இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்*.

*பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்*..

Mohideen Acu Meetheen:

Read more...

இரத்தம் சுத்தமாக

 

*இரத்தம் சுத்தமாக*               புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும். இந்த மருத்துவத்தை வேப்பிலை தளிரும் காலத்தில் ஒரு மாதம் முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை என பழக்க படுத்திக் கொண்டால் ஆயுளுக்கும் ரத்தம் சுத்தமாக இருக்கும்.


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.


1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.


2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.


3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.


4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.


5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.


6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.


7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.


8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Mohideen Acu Meetheen:

Read more...

தைராய்டு

Wednesday, November 11, 2020


தைராய்டு என்றால் என்ன?


தைராய்டு என்பது ஒரு நாள மில்லாச் சுரப்பி. இந்தச் சுரப்பி நம் தொண்டைக்குழியில் அமைந்துள் ளது. மூச்சுக் குழலுக்கு முன்புறம் குரல்வளையைச் சுற்றி இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது. உச்சி முதல் உள்ளங்கால்வரை தைராய்டு சுரப்பியுடன் சம்பந்தப்படாத உடல் உறுப்பே இல்லை என்று சொல்லலாம். பிட்யூட்டரியில் தைராய்டு சுரப்பியை ஊக்குவிக்கும் ஹார்மோன் உள்ளது. இது தைராய்டு சுரப்பியின் சுரப்பைப் பாதிக்கிறது. தைராய்டு சுரப்பி ரத்தத்தில் நேராகச் சென்று கலப்பதால் உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடைகிறது.


உடல் உறுப்புகளின் வளர்ச்சி, தோலின் தன்மை, தலைமுடியின் அடர்த்தி, இதயம், இனப்பெருக்கம், மாதவிடாய் சீராக இருப்பது, குழந்தைப்பேறு, எலும்புகளின் உறுதி, தசையின் உறுதி, புத்திக் கூர்மை, மாதவிடாய் நிகழ்வதற்கான வளர்ச்சியில் தாக்கம் எனப் பல்வேறு உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கும் தைராய்டு சுரப்பியில் இருந்து வரும் தைராக்ஸின் ஹார்மோன் ஆதாரமாகச் செயல்படுகிறது.  அதேபோல், நம்முடைய உடலில் உள்ள செல்கள் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்கும் தைராக்ஸின் தேவைப்படுகிறது.


சிறுகுடலின் உள்ளே உணவு கூழாக்கப் படுகிறது. அதிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் தைராக்ஸினின் பங்கு முக்கியமானது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப் படுத்துவதும்  தைராக்ஸின்தான். அது மட்டுமல்ல; முன்பே சொன்னதுபோல் இது அனைத்து உறுப்புகளையும் சென்றடைந்து அந்தந்த உறுப்புகள் அவற்றின் பணியை முழுமையாகச் செய்யத் தூண்டுகிறது.


தைராய்டு சுரப்பில் பிரச்சினைகள் இருந்தால் என்னவாகும்?


அது அனைத்து உறுப்புகளின் செயல்பாடு களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  தைராய்டில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாகவோ அளவுக்குக் குறைவாகவோ சுரப்பதைப் பொறுத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு போன்றவை ஏற்படக்கூடும். ஹைப்போ தைராய்டு என்பது குறை தைராய்டு அதாவது தைராய்டு குறைவாகச் சுரத்தல்.


இதை எப்படி அடையாளம் காண்பது?


குறை தைராய்டு சுரப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சோர்வாக இருப்பார்கள். எழுந்து எதையாவது செய்வதற்குக்கூடத் தோன்றாமல் மந்தமாக இருப்பார்கள். முடி கொட்டும். சிறு வயதிலேயே இளநரை தோன்றும். முகம் வீங்கலாம். தோலின் மினுமினுப்பு குறைந்து வறட்சியாகக் காணப்படும். உடல் எடை அதிகரிக்கலாம். மாதவிடாய்ச் சுழற்சியில் ஒழுங்கின்மை இருக்கும். மலச்சிக்கல் இருக்கும். தூக்கம் அதிகமாக வரும். ஞாபக மறதியும் வரும். பெண்களுக்கு இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் - கருச்சிதைவு அல்லது கருத்தரிப்பில் பிரச்சினை போன்றவை ஏற்படலாம். ரத்தசோகை வரலாம்; ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம்.


தைராய்டு சுரப்பில் மாறுதல்கள் வருவதில் முக்கியமான காரணங்களில் ஒன்று நாம் உண்ணும் உணவில் தேவைக்கு ஏற்ற அளவில் அயோடின் சத்து இல்லாமல் இருப்பது. அதனால்தான் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு தற்போது விற்கப்படுகிறது. குறிப்பிட்ட ஊர் ஒன்றில் பலரும் தைராய்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு பலருக்கும் அயோடின் சத்துக் குறைபாடு இருந்தது. அயோடின் சேர்க்கப் பட்ட உப்பைப் பயன்படுத்திய பிறகு பிரச்சினை சரியானது.


ஹைப்போ தைராய்டுதான் அதிகமாக  இருக்கக்கூடியது என்றாலும் ஹைப்பர் தைராய்டும் சிலருக்கு இருக்கலாம்.  அதாவது தைராய்டு அதிகமாக இருப்பது.  கண் முழி பிதுங்கியிருத்தல், உடல் எடை குறைவது, திடீரென்று கைகளில் நடுக்கத்தை உணர்வது போன்றவை இதன் அறிகுறிகளில் சில.


வளரிளம் பருவத்தில் பெண்களில் சிலருக்கு ஹைப்போ தைராய்டிசம் வரலாம். சில நேரம் தானாகவே சரியாகும். ஆனால், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது


மாத விடாய்க்கும் தைராய்டுக்கும் தொடர்பு உள்ளதா?


கண்டிப்பாக உள்ளது. சில பெண்களுக்கு வழக்கமாக வருகிற மாதவிடாய்ச் சுழற்சி தவறிப் போகலாம். ரத்தத்தின் அளவு சிலருக்கு அதிகமாகலாம். சிலருக்குச் சொட்டுச் சொட்டாக வரலாம். மூன்று நாள் வந்துகொண்டிருந்த மாதவிடாய்ச் சுழற்சி, அரை நாள் மட்டும் வரலாம். இப்படி மாதவிடாய் தொடர்பாக வரக்கூடிய கோளாறுகள் பலருக்கும் தைராய்டு சுரப்புடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். இவர்களுக்கு இதயத் துடிப்பில் மாறுதல் இருக்கும். 


மன அழுத்தம்கூட தைராய்டு பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். அறிகுறிகள் மூலம் பிரச்சினை இருக்கக்கூடும் என்று நினைத்தாலும் அதைப் பரிசோதனை மூலம்தான்  உறுதிப்படுத்த முடியும்.


மன அழுத்தத்தால் வரக்கூடிய தைராய்டு பிரச்சினையை மன அழுத்தத்தை சரிசெய்து விட்டால் வென்றுவிடலாம். 


எந்தெந்த உணவைத் தவிர்க்க வேண்டும்?


சோயா, முட்டைக்கோஸ் இரண்டையும் தவிர்ப்பது நல்லது. காலிஃபிளவரைக் குறைவாகச் சாப்பிடலாம்.

Source

Mohideen Acu Meetheen:


 

Read more...

தலைச்சுற்றல்

 காது கேட்பது எப்படி?


காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.


அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.


சமநிலை காவலன்


உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது.


மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.


இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது


தலைச்சுற்றல் என்பது என்ன?


கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.


இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.


மூன்று வகை


மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.


மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.


தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.


மினியர் நோய்


உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.


ஒரு திசை தலைச்சுற்றல்


சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.


உட்செவி நரம்புப் பிரச்சினை


ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.


இதர காரணங்கள்


பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.

Mohideen Acu Meetheen:

Read more...

சிறுநீரகம்

 சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !


இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திரும்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.


கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.


இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5% லிருந்து 80% ஆக , இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.


மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.


மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.


அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.


எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,


தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.


மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.


இஞ்சி ஒத்தடம்:


இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.


1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.


2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.


3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.


4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,

துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.


5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.


6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.


7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.


8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.


9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

Source

Mohideen Acu Meetheen:


 


Read more...

முட்டை வாங்கும்போது கவனம்

Saturday, July 4, 2020

முட்டை வாங்கும்போது கவனம்
நாட்டுக்கோழி முட்டை என்று போலியாக விற்பனை செய்யப்படும் முட்டை ,55 முதல் 60 கிராம் வரை எடையும் , அவற்றின் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும் .
ஒரிஜினல் முட்டை ,30 முதல் 35 கிராம் அளவில் சிறியதாக வும் , மஞ்சள்கரு நல்ல மஞ்சள் நிறத்திலும் , முட்டை ஓடு சற்று கடினமாகவும் ,  முட்டை வெளிர் பழுப்பு நிறத்திலும்  இருக்கும் . எனவே , பொது மக்கள் ஏமாற வேண்டாம்
தினமலர் :-

Read more...

பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்

Monday, June 15, 2020

பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்
பிரபஞ்ச ஆற்றலை நம்புகிறோமோ இல்லையோ , அது எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து தன் வேலைகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது .
 நம் உடலின் பிரபஞ்ச ஆற்றலை உணர சில எளிய வழிமுறைகள் .

வழிமுறை 1. இரு உள்ளங்கைகளையும் தேய்த்து கொள்ளுங்கள் .
2. பின் , இரு உள்ளங்கைகளையும் நேர் பார்த்தால் போல் வைத்துக்கொள்ளுங்கள் . தொட வேண்டாம் .
 3. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதை உணரலாம்
4. ஆற்றலை உணர முடியாவிட்டால் , கைகளை சற்று அசைத்து கொடுங்கள் .
Source
Holistic reiki

Read more...

விக்கலை நிறுத்துவது சுலபம்

Sunday, June 14, 2020

விக்கலை நிறுத்துவது சுலபம்
சாதாரணமாக  நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம் . அப்போது மார்பு தசைகள் விரிகின்றன . மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது . உடனே , தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன . அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது . அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது . இதனால் நாம் சுவாசிக்கும் காற்று , திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றிநுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது . இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு . சில நேரங்களில் , மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால் ,அது மூளை கட்டுப்பாட்டை மீறி , தன்னிச்சையாக திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும் , அப்போது குரல்நாண்கள் சரியாக திறப்பதில்லை . அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும் . அப்போது அந்த காற்று , புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதை போல , தொண்டையில் ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது . இதுதான் விக்கல் .வேக வேகமாக உணவை சாப்பிடுவது , மிகச்சூடாக சாப்பிடு வது , தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள் . வலி நிவாரணி மாத்திரைகள் , சில குறிப்பிட்ட வகை மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும் . இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால் , அது நோய்க்கான அறிகுறி ஆகும் .
 உதாரணத்துக்கு , இரைப்பையில் அல்சர் இருக்கும்போது , சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும் . உதரவிதானத்தில் நோய்த்தொற்று  கல்லீரல் கோளாறு , நுரையீரல் நோய்த்தொற்று , குடல் அடைப்பு , மூளைக் காய்ச்சல் , கணைய அழற்சி , பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும் மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள் . 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விட வேண்டாம் . பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும் . இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும் . வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் , விக்கல் நின்றுவிடும் . ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால் , விக்கல் நிற் கும் . ஏதேனும் ஒருவகையில் தும்மலை உண்டாக்கினால் , விக்கல் |நிற்கும் அடுத்த வழி இது .
ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள் , பிறகு அந்த காற்றையே மீண்டும் சுவாசியுங்கள் . இவ்வாறு சற்று நேரம் செய்தால் , ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து , விக்கல் நின்றுவிடும் .
அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது .

Source
Daily thanthi.

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP