கர்ப்பப்பை இறக்கம் ஏன் ஏற்படுகிறது?
Wednesday, March 10, 2021
கர்ப்பப்பை இறக்கம் ஏன்
ஏற்படுகிறது.?
பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப்பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம்.
இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்..
குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள்.
‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது,
5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.
கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது, மலச்சிக்கல், இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நரம்புகள் பலவீனமாக இருப்பது போன்ற பிற காரணங்களாலும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும். கர்ப்பப்பை உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப்படலாம்.
இறங்கிய……… கர்ப்பப்பையைத்தற்காலிகமாக
(#ஆங்கில_மருத்துவ_முறைபடி) மேலே தூக்கி வைக்க, #லூப் என்ற பிளாஸ்டிக் வளையம் உண்டு. ‘#ஸ்லிங்_ஆபரேஷன்’ மூலம் வயிற்றின் வழியே, கர்ப்பப்பையை மேலே தூக்கிப் பொருத்தலாம்.
குழந்தை பெற்று அதிக வயதான பெண்களுக்கு மட்டுமே இப்பிரச்னையின் போது, கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். பிரசவத்துக்குப் பிறகு
இடுப்பெலும்புத் தசைகள் உறுதிபெற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது, அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். பருமன் இந்தப் பிரச்னைக்கான மிக முக்கிய காரணம் என்பதால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
#காரணங்கள்
அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம் முக்கியமான காரணமாகும்.
ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.
பிரசவத்தின் போது குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.
மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.
இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.
நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).
பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.
அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.
அறிகுறிகள்.
கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.
கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.
கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.
பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.
அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.
சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.
அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.
சிறுநீரை அடக்க முடியாத நிலை.
சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.
மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
★இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளை
மேற்கொள்வது நல்லது.
Source:-
Mohideen Acu Meetheen:
0 comments:
Post a Comment