Powered by Blogger.

கர்ப்பை இறக்கத்தை குணமாக்க..

Wednesday, March 10, 2021

கர்ப்பை இறக்கத்தை

குணமாக்க..

தேவையானவை

சாதிக்காயை  ---- 1


பசுவெண்ணெய்

தேவையான அளவு


செய்முறை


சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும்.

அதை பசுவெண்ணெயால் மூடவும்.

அதை  நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு, 

நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.


சிறிது நேரத்தில்,


வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.

சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,


மேலும்……மேலும்……


பசு வெண்ணெயை  கொஞ்சம், கொஞ்சமாக அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.

இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும்.  இறுதியாக  மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,

நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.


இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து,


காலை, மாலை இரு வேளையும்,


தேனில்  உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில்,


இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.


வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு,

(90)தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.


💚 செம்பருத்தி பூ நீர் 


காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து

இறக்கி வைத்து அதில் அடுக்கு

செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து

போட்டுப் பத்து நிமிடம் பாலை

மூடி வைத்து பின் 

வடிகட்டி விடவும். பால் சிவப்பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி

காலையிலும், மாலையிலும்

குடிக்கவும். இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. 

குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.


💚 உழுத்தங்களி


அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7 லிருந்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.


பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.


கமலாப்பழம் சர்பத் 


கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.


பூசணிக்காய் சர்பத்


வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.


முருங்கைக்காய் சூப்


தேவையான பொருட்கள்


முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.


செய்முறை


முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.


வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

Source:-

Mohideen Acu Meetheen:

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP