Commodity A2Z-21
Thursday, March 17, 2016
கமாடிட்டி A-Z தொடர் 21
கமாடிட்டி வியாபாரம் 21
தி.ரா.அருள்ராஜன்
தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.
நாம் சென்ற வாரம் கேப் அப் முறையில் சந்தை துவங்கி வலிமையாக ஏறினால், என்ன நிகழும் என்று விரிவாக பார்த்தோம்.
இனி...
இதே கேப் முறையில் சந்தை துவங்கிய பிறகு, இரண்டு வகையாக என்ன நடக்கலாம் என்று பார்க்கலாம்.
கேப் அப என்பது, சந்தையானது, முந்தைய நாள் முடிவுவிலையைவிட அதிகமான விலையில் அல்லது புள்ளியில் துவங்குவது என்று பார்த்தோம்.
இப்படி கேப் அப் முறையில் துவங்குவது என்பது, சந்தை வலிமையாக இருப்பதை காட்டுகிறது. எனவே சந்தையில் ஒரு புல்லிஷ் கேன்டில் தோன்றுவதைகூட பார்க்கலாம்.
படம் 1:
படம் - 1 ல், முந்தைய நாள் முடிவுவிலை என்பதை தாண்டி, இன்றைய ஆரம்பவிலை மேலே துவங்கி உள்ளதை காண்கிறீர்கள். இவ்வாறு கேப்அப்பில் துவங்குவது வாங்குபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. எனவே வாங்குபவர்களின் வலிமையை காட்டும்விதமாக ஒரு காளைகளுக்கான புல் கேட்டில் தோன்றி இருப்பதை காட்டுகிறீர்கள். புல் கேன்டில்கள் என்பதை காட்டுவதற்காக, அது பச்சை வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
படம் - 2:
கேப்அப்பில் துவங்கிய பிறகு, காளைக்களுக்கான வலிமையான கேன்டில் துவங்குவதை பார்த்தோம். அடுத்து, தொடர்ந்து எந்த திசையில் பயணிக்கும் என்பதே நம் கேள்வி?
பொதுவாக சந்தையை கேப் அப்பில் துவக்கவே காளைகள் தங்கள் பெரும் சக்தியை உபயோகப்படுத்தவேண்டும். அதாவது, எந்த அளவிற்க்கு அதிகவிலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை பொருத்தே அந்த கேப்பின் அளவு இருக்கும். எனவே கேப்பை அதிகமாக்க, காளைகள் அதிக விலையில் வாங்க தயாராக இருக்கவேண்டும். அவ்வாறு வாங்கும்போது, அவர்கள் தங்கள் பணசக்தியை அதிக அளவு பிரயோகம் செய்கிறார்கள். கேப் அப்பில் துவங்கிய சந்தை, முதல் அரைமணிநேரத்தில் அல்லது முதல் ஒரு மணிநேரத்தில், காளைகள் முழுமூச்சுடன் ஏற்றுவதில் முனைகிறார்கள். அப்போது முதல் ஒரு மணிநேரத்தில் அதிக வால்யூமுடன் வியாபாரமும் நடக்கிறது. அவ்வாறு ஏற்றிய பிறகு, காளைகள் மீண்டும் இரண்டாம் மணிதுளியில் அடுத்த கட்ட ஏற்றத்திற்க்கு முயற்சிக்கு முனைகிறார்கள்.
இந்த இரண்டாம் கட்ட முயற்சி என்பது முதல் ஒரு மணிநேரத்தில் ஏற்றியதைபோல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. ஏனெனில், கரடிகள் இப்போது களத்தில் இறங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போது காளைகளின் ஏற்றத்திற்கான முயற்சியை, கரடிகள் முறியடிக்க முயற்சிக்கிறார்கள். அதனால், காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. எனவே ஸ்பின்னிங் டாப் போன்ற கேன்டில்கள் தோன்றுகின்றன. இந்த நிலையில் முதல் ஒரு மணிநேரத்தின் உச்சமானது, ஒரு முக்கிய தடைநிலையாக மாறுகிறது.
படம் 3:
காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிகழ்ந்துக்கொண்டு இருக்கும்போது, அடுத்த கட்ட நிகழ்வாக கரடிகள் கைகள் மெள்ள மேலோங்க ஆரம்பிக்கிறது. காளைகள் தாங்கள் வாங்குதலின் அளவை முழுவதும் முடித்துவிடுவதால், அதன் பின் வாங்குதல் என்பது குறைய ஆரம்பிக்கிறது. அதாவது, இந்த சூழலில் விற்பவர்கள் அதிகமாகவும், வாங்குபவர்கள் குறைவாகவும், இருக்கிறார்கள். இதனால், சந்தையில் கரடிகள் பலமானவர்களாக மாறிகிறார்கள். பின் சந்தையில் விலையானது, குறைய ஆரம்பிக்கிறார்கள். இந்த நிலையில், முதல் ஒருமணிநேரத்தின் உச்சம் முக்கிய தடைநிலையாக இருக்கிறது. தடையை தாண்டாதவரை விலையானது, படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து கரடிகளுக்கான கேன்டில்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.
படம் 4:
இப்போது, சந்தைய முழுவதும், கரடிகளின் கட்டுப்பாட்டுக்கு மாறுகிறது. இந்த மாற்றத்தினால் விலை சரிய ஆரம்பிக்கிறது. விலை சரிய ஆரம்பிக்கும்போது, ஏற்கெனவே வாங்கியவர்களுக்கு நட்டம் வர ஆரம்பிக்கிறது. எனவே அவர்கள் நட்டத்தை தடுப்பதற்க்காக, தாங்கள் வாங்கி வைத்திருந்த பங்குகளை விற்கிறார்கள். எனவே சந்தையில் விற்பனை கூட ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே ஷாட் அடிப்பவர்கள், ஷாட் அடிப்பதன் மூலம், விலை இறங்க ஆரம்பிக்கிறது. இந்த விற்பனையுடன், வாங்கியவர்கள் நட்டத்தடையும் டிரிகர் ஆகும்போது, சந்தையில் விற்பனை அதிகமாக மாறுகிறது. ஆகவே சந்தையில் அதிக அளவில் விற்பனை கூடி கரடிகளுக்கான கேன்டில்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.
படம் 5:
படம் ஐந்தில் பார்க்கும்போது, ஒரு கேப் அப் நிகழ்ந்த பிறகு, விலையானது, தொடர்ந்து இறங்க ஆரம்பிக்கும்போது, முதல் ஒரு மணிநேரத்தின் குறைந்தபட்ச்ச விலையானது, ஒரு சப்போட் லெவலாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது, விலையானது, சப்போட்டை எடுத்து மேல்நோக்கி திரும்ப வாய்ப்புள்ள சூழ்நிலையில், விலையானது, நிற்காமல், தொடர்ந்து இறங்கி, சப்போட்டை உடைத்து இறங்க ஆரம்பிக்கிறது. இது இறக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. இதுவரை மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்த விலையானது, பலமான இறக்கத்திற்க்கு உள்ளாகிறது. இந்த இறக்கமானது, வேகமான இறக்கமாக மாறுகிறது. இந்த வேகமான இறக்கமானது, அடுத்த கட்ட சப்போட் லெவலான முந்தயைநாள் முடிவு விலையை நோக்கி நகர்கிறது.
படம் 6: சில்வர்
மேலே உள்ள சில்வர் மணிதுளி வரைபடத்தில், 07.11.2014. அன்று முடிவுற்ற விலையில் இருந்து அடுத்த வேலை நாளான, 10.11.14 அன்று, கேப் அப்பில் துவங்கியுள்ளது. இந்த நாளின், முதல் ஒரு மணிநேரத்தின் உச்சம் ரெசிஸ்ட்டன் லெவலாகவும், குறைந்தபட்ச விலை சப்போட் அளவாகவும் செயல்படுகிறது. இந்த வரைபடத்தில், கேப் அப் நடந்த பிறகு, முதல் ஒரு மணிநேரத்தின், லோவை உடைத்து படிப்படியாக இறங்க ஆரம்பிக்கிறது. பின் வேகமான இறங்கி, முந்தைய நாளின், முடிவு விலையையும் உடைத்து இறங்க ஆரம்பிக்கிறது. முந்தைய நாளின் முடிவு விலையை உடைத்து இறங்கிய பிறகு இன்னும் வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது.
படம் 7:
மேலே உள்ள இந்த படம் நிக்கல். இந்த நிக்கல், 07.11.14. வரைபடத்தில், இறங்கி முடிந்துள்ளது. அடுத்த நாள் 10.11.14 அன்று ஒரு கேப் அப்பில் துவங்கி உள்ளது. இந்த கேப் அப் என்பது முந்தைய நாள் இறக்கத்தில் இருந்து, மாறி இனி ஏறப்போகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சந்தயில் ஈடுபடுவர்களை வாங்கத்தூண்டுகிறது. விலையும் முதல் ஒரு மணிநேரத்தில் விலை முதல் ஒரு மணிநேரத்தில் வேகம் வேகமாக ஏற ஆரம்பித்து, அதன் பின் சற்றே தேங்க ஆரம்பிக்கிறது. அப்படி ஒரு மணிநேரத்தின் முடிவில் தேங்க ஆரம்பிக்கிறது என்பதை முதல் ஒரு மணிநேரத்தின் பச்சை நிற புல் கேன்டிலின் உச்சத்தில் உள்ள கேன்டிலின் திரி பகுதி நமக்கு காட்டுகிறது. அதாவது, விலையை உயர்த்திய காளைகள் ஏற்றிய உச்சத்தின் அளவை தக்கவைக்க முடியவில்லை என்பதை காட்டுகிறது.
பின் அடுத்த இரண்டு மணிநேரத்திற்க்கு பிறகு, முதல் ஒரு மணிநேரத்தின் லோவானது, முக்கிய ஆதரவுவாக செயல்பட வாய்ப்புள்ளதை காட்டுகிறது, ஆனால், மூன்றாவது மணிநேரத்தின் கேன்டிலானது, முதல் ஒரு மணிநேரத்தின் கேன்டிலின் லோவானது, உடைத்து இறங்க ஆரம்பிக்கிறது. சப்போட் லெவலை உடைக்க ஆரம்பிக்கும்போது, மிக வலிமையாக வேகமாக இறங்க ஆரம்பிக்கிறது. நிக்கல் விலை பின் மட மடவென இறங்க ஆரம்பித்துள்ளது.
Source:
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=9172
0 comments:
Post a Comment