Commodity A2Z - 29
Sunday, March 13, 2016
கமாடிட்டி வியாபாரம் 29
கமாடிட்டி டிரேடிங் - மெகாவிலா? மினியிலா?
- தி.ரா.அருள்ராஜன்
தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.
கமாடிட்டி டிரேடிங் என்பது ஃபியூச்சர்ஸ் என்பது நாம் அறிந்ததே.
இந்த வியாபாரம் என்பது ஒன்று லாபத்தில் முடியும் அல்லது நஷ்டத்தில் முடியும்.
பெரிய பெரிய லாபத்தில் முடியலாம், அல்லது பெரிய பெரிய நஷ்டத்தில் முடியலாம்.
என்ன பெரிசா பொடி போட்டு எழுத ஆரம்பிச்சேட்னு பார்கிறீங்களா! காரணம் இருக்குதுங்க.
பொதுவாக நாம் கமாடிட்டி சந்தையில் ஈடும்படும்போது, லாபம் சம்பாதிக்கவேண்டும் என்று விரும்பினாலும், அதில் நமக்கு வரக்கூடிய சங்கடங்களை பார்க்கவேண்டும்.
மேலும், அடிக்கடி நாம் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன?எந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் தவறு செய்து இழப்பை சந்திக்க நேரிடும்? ஏன் இழப்புகள் ஏற்படுகிறது?அதுவும் இழப்புகள் எப்படி அதிகமாக மாறுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் பற்றிய ஓர் அலசல்தான் இந்தக் கட்டுரை.
ஃபியுச்சர்ஸ் வியாபாரம் என்பதை ஒரு Zero Sum Game என்றும் அழைக்கலாம்.
அதாவது ஒருவருடைய லாபம், இன்னொருவருக்கு இழப்பாக மாறலாம். இதில் ஈடுபடுவர்களை, அவர்களுடைய ரிசல்ட்டை வைத்து மூன்று வகையாக பிரிக்கலாம்.
• ஒரு குறிப்பிட்ட கால அளவில், பல்வேறு வியாபாரம் செய்து முடிவில், லாபம் மற்றும் நஷ்டம் என்பதை சமமாக வைத்து இருப்பவர். இவர் இந்த வியாபாரம் பற்றி ஓரளவிற்கு ஞானம் கொண்டவர். தற்போதைய வியாபார முறையில், கொஞ்சம் மாற்றம் கொண்டுவந்தால்கூட போதும், இவர் லாபம் சம்பாதிக்கக்கூடிய மனிதராக மாறி விட முடியும்.
• ஒரு குறிப்பிட்ட கால அளவில், ஒருவர் தொடர்ந்து வியாபாரம் செய்யும்போது, பெரும்பான்மையான வியாபாரத்தில், அவர் லாபம் அடைவராக இருந்தால், தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு தகுதி படைத்தவராக எடுத்துக்கொள்ளலாம். இவரால், தன்னை நல்ல வெற்றியாளாராக மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
• ஒரு குறிப்பிட்ட கால அளவில், ஒருவர் தொடரந்த்து ஒருவர் வியாபாரம் செய்யும் போது, நெட்டாக நஷ்டத்தையே அடைகிறார் என்றால், அவருடைய சூழ்நிலை மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். இவர் இதை தொடர்ந்து செய்துவந்தால், இன்னும் அதிக நஷ்டத்தைதான் அடைவார் என்று அர்த்தம். இவர் கொஞ்சம் சதாகரித்துக்கொண்டு, தன்னுடைய செயல்திட்டத்தை மாற்றினால், தப்பித்துக்கொள்ளலாம். இல்லையென்றால், இவருடைய பலத்த நஷ்டம், பலருடைய லாபத்துக்கு காரணமாக இருக்கும்.
இவர்கள் தங்களை தகுதிபடுத்திக்கொள்ளவேண்டும். முறையாக பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும்.
பொதுவாக சந்தையில் நம்முடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும்? எப்போது வாங்குகிறோம்?
ஒரு கமாடிட்டியின் விலையை நாம் உற்று பார்க்க ஆரம்பிக்கிறோம். அவ்வாறு நாம் பார்க்கும்போது, நாம் பார்த்த விலையில் இருந்து மேல் நோக்கி நகர ஆரம்பிக்கிறது. அந்த விலை நகர்வை பார்க்கும்போது, நம் மனதில் ஒரு எண்ணம் பிறக்கிறது.
எஸ்.... இந்த கமாடிட்டி நன்கு ஏறுகிறது. எனவே நாம் வாங்கலாம். இந்த எண்ணம் வந்தவுடன் நாம் வாங்குவதற்கான ஆர்டரை போடுகிறோம். வாங்குவும் செய்துவிட்டோம்.
ஏன் வாங்கினோம்? ஏறுதேன்னு வாங்கினேன்.
இவ்வாறு வாங்கிய பிறகு, நாம் விலை ஏறும் கட்சியில் சேர்ந்துவிட்டோம். இனி ஏறும் கட்சிதான் ஜெயிக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்கிறோம்.
நியாயம்தானே!
ஓகே... விலையும் கொஞ்சம் ஏறி ஆரம்பிக்கிறது. இன்னும் ஏறட்டும் என்று நாம் காத்திருக்கிறோம். ஆனால் விலை இறங்க ஆரம்பிக்கிறது.
இப்போது நாம் கவலைபட ஆரம்பிக்கிறோம்.
மனது கொஞ்சம் தடுமாற ஆரம்பிக்கிறது. இப்ப வாங்கினது தப்பா, ரைட்டா? இன்னும் கொஞ்சம் பொருத்து வாங்கி இருக்கலாமோ?
விலையை பார்க்கிறோம். அது இன்னும் இறங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது நம் நிலை என்ன? நஷ்டம் கூடிக்கொண்டே போகிறது. நஷ்டம் கூட கூட, நம் மனதில் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
இப்போது என்ன செய்யலாம். விலை ஏறும் என்ற கட்சியில் சேர்ந்தோம். அந்த கட்சி இப்போது தோல்வியை சந்தித்து வருகிறது. மாறாக விலை இறங்கும் என்ற கட்சி இப்போது வலுவாக மாறிக்கொண்டு இருக்கிறது.
மனதில் ஒரு ஊசலாட்டம்.
தொடர்ந்து ஏறும் என்ற கட்சியிலேயே இருக்கலாமா? அல்லது இறங்கும் என்ற கட்சிக்கு மாறிவிடலாமா?
விலை இறங்க... இறங்க.... மனசு கட்சி மாற துடிக்கிறது. ஒரு கட்டத்தில் நஷ்டம் அதிகமாக மாறும் போது, நம்மால் தாக்குபிடிக்க முடியாத போது,
சரி... சரி.... விற்றுவிடு. நஷ்டம் கூடிக்கொண்டே போகிறது.
டக்கென்று ஏறும் என்ற கட்சியில் இருந்து வெளியேறி விடுகிறோம்.
நல்ல நஷ்டத்தில் விற்றாகிவிட்டது. இனி என்ன செய்வது?
ஏதாவது ஒரு கட்சியில் சேரனுமே.
இப்ப எந்த கட்சி வலுவாக இருக்கிறது. இறங்கு என்கிற கட்சிதான் வலுவாக இருக்கிறது. சரி அப்ப இறங்கும் கட்சியில் சேரந்துவிடுவோம்.
ஓகே.... ஒரு லாட் ஷாட் போடு.
இப்போது நாம் வாங்கி விற்கும் முறையில் இருந்து, விற்று வாங்கும் முறைக்கு மாறிவிடுகிறோம். எதிர் கட்சி்க்கு தாவி விட்டோம். இந்த கட்சியாவது, வர எலக் ஷனில் ஜெயிக்குதான்னு பார்ப்போம்.
விலை இறங்க ஆரம்பிக்கிறது. ஓகே... ஓகே... ஷாட் அடிச்சது கரெக்டுதான். விலையை உற்று பார்க்க ஆரம்பிக்கிறோம்.
விலை இறங்குதுதானே? ஆமாம். இறங்குது.
அடுத்த சில நிமிடங்களில்...
விலை இறங்குதுதானே? ஆமாம்.... இல்லை... இல்லை.. இப்ப கொஞ்சம் ஏற ஆரம்பிக்குது.
இப்ப....
ஐய்யய்யோ இன்னும் நல்லா ஏற ஆரம்பிக்குது. ஷாட் அடிச்சதல, நஷ்டம் வர ஆரம்பித்துவிட்டது. அந்த நஷ்டம் கூடவும் ஆரம்பித்துவிட்டது. உடலில் பதட்டம் தொற்றிக்கொள்கிறது.
விலை வலிமையாக ஏற ஆரம்பிகிறது.
பதட்டம் கூட ஆரம்பிக்கிறது.
என்ன பண்ண... என்ன பண்ண....
ஓடு... ஓடு.... ஷாட்டை கவர் பண்ணு.
வித்ததை வாங்கிவிட்டோம்.
விலை இறங்கும் கட்சியில் இருந்து விலகிவிட்டோம்.
இப்ப இரண்டு டிரேட் பண்ணி ரெண்டிலேயும் லாஸ்.
இவ்வளுவு லாஸ் ஆயிட்சே. இதை எப்படி எடுக்கிறது?
இப்ப விலையில என்ன நடக்குது? விலை ஏறுது. சரி மீண்டும் ஏறும் கட்சியிலே சேரந்து விடுவோம்.
ஒரு லாட் வாங்குப்பா.....
இப்போது நாம் இரண்டு வகையான செயல்பாடுகளை பார்த்தோம். இந்த இரண்டு செயல்பாடுகளைதான் நாம் மீண்டும் மீண்டும் செய்கிறோம்.
கீழே அதை ஒரு வரைபடத்தில் பார்க்கலாம்.
படம்: சிலைட் 9
இந்த வரைபடத்தில் .....
ஏறுதேன்னு வாங்கினேன்: இதுதான் நாம் நிம்மதியுடன் ஆரம்பிக்கும் முதல் வியாபாரம். மனதும் தெளிவாக இருக்கிறது.
இறங்குதேன்னு கவலைப்பட்டேன்: இதுதான் மனது குழம்ப ஆரம்பிக்கும் முதல் கட்டம். நாம் தவறு செய்துவிட்டோம் என்று நம்மை நாமே குற்றம் சாட்டும் மனநிலைக்கு வருகிறோம்.
நஷ்டத்தில் விற்றுவிட்டு ஷாட் போனேன்: நஷ்டம் கூடும்போது, நமக்கு இப்போது பதற்றம் கூடுகிறது. மூளை மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்வு பூர்வமாக கொந்த்தகளிக்க ஆரம்பிக்கிறது.
ஏறுதேன்னு கவலைப்பட்டேன்: மனதில் ஒரு விறுவிறுப்பு வருகிறது. மனதில் ஏதோ பிசைவது போல் தோன்றுகிறது.
ஷாட் கவர் பண்ணிவிட்டு லாங் போனேன்: இரண்டுமுறை நஷ்டத்தை அனுபவித்த பிறகு, மனது அதிக அளவில் கலங்கி, பலத்த குழப்பத்தை நோக்கி போகிறது.
அடச்சே... இறங்குதே: நம் மீது நமக்கே வெறுப்பு வரும் நேரம் இது. நாம் செய்யும் இந்த வேலை நமக்கு சரிபட்டு வராதோ என்று, அவநம்பிக்கை வரும் நேரம்.
இதைத்தான் நாம் திரும்ப திரும்ப, ஒவ்வொரு நாளும் பண்ணுகிறோம்.
இதை படிக்கும்போது, ஏற்கெனவே சந்தையில் இருப்பவர்களுக்கு, ஆமாங்க, இது உண்மைதானுங்க அப்படின்னு தோணும்.
சந்தை இன்னும் வராத புதியவர்களுக்கு, அட என்னங்க, இந்த மாதிரியா எல்லோரும் பண்ணுவாங்க அப்படின்னு ஒரு கேள்விகுறியா இருக்கும்.
இது எந்த அளவிற்க்கு உண்மை என்று, உண்மையாகவே நடந்த ஒரு வரைபடத்தை கீழே உங்களுக்காக காட்டுகிறேன்.
படம்: சிலைட் 10
கீழே உள்ள படத்தில் லெட் என்ற கமாட்டி, 24.08.2015. அன்று, காலை 10 மணியில் இருந்து இரவு 11.30 வரை எவ்வாறு நகர்ந்து உள்ளது என்பதை பார்க்கிறோம்.
சிலைட் 9 என்ற படத்தில் வெறும் கோடுகளாக பார்த்த நாம், அது எவ்வாறு நிஜ வியாபார வாழ்க்கையில் நடக்க வாய்ப்புண்டு என்பதையும் இங்கு பார்கிறோம்.
இதைத்தான் ரோலர் கோஸ்டர் நகர்வு என்று நான் பெயர் இட்டிருக்கிறேன்.
தனித்தனியாக பார்த்த இந்த இரண்டு படத்தையும், இணைத்து கீழே கொடுத்துள்ளேன்.
மேலே நீங்கள் கோடுகளாக இருந்த படத்தை தனியாக பார்த்த போது, அது ஏதோ கற்பனை போல் தோன்றும். பின் உண்மையாகவே லெட் அவ்வாறுதான் நகர்ந்துள்ளது என்பதை நான் வரைபடத்துடன் காட்டும்போது, அது சரிதான் என்று தோனும். ஆனால், இரண்டு எப்படி ஒன்று போல் இருக்க முடியும் என்ற சந்தேகமும் கூடவே வரும் அதை நிவர்த்தி செய்யத்தான், அந்த இரண்டு படங்களையும் இணைத்து கீழே கொடுத்துள்ளேன்.
அதை பார்க்கும்போது நமக்கு ஆச்சரியம் தோன்றலாம்.
எப்படி அது?
இரண்டு நிலையும் அப்படி அச்சு அசலாக அப்படியே பொருத்துகிறது. அப்படியென்றால் நாம் இப்படித்தான் தொடர்ந்து நடந்து கொள்கிறோமா?
இந்த கேள்விக்கு ஆம் என்பது பதில்.
அதை நம்புவதற்கே கீழே இந்த படம்.
படம் : சிலைட் 11
கமாட்டி வியாபாரத்தில் நாம் முதலில் அறியாமல் இந்த மாதியான செயல்பாட்டில் மாட்டிக்கொண்டாலும், பின்பு அதுவே பழக்கமாக மாறி, பணத்தை இழப்பது நடக்க ஆரம்பிக்கிறது.
இதுபோன்ற நாம் இன்னும் எந்த மாதியான பிரச்சனைகளில் தொடர்ந்து மாட்டிக்கொண்டு பணத்தை இழக்க நேரிடுகிறது, என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
நோ டிப்ஸ்....
நோ டிரிக்ஸ்...
ஒன்லி எஜுகேஷன்...
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10913
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment