Powered by Blogger.

Commodity A2Z-20

Thursday, March 17, 2016

கமாடிட்டி வியாபாரம் 20

கமாடிட்டி வியாபாரம் 20

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

சென்ற வாரங்களில் கேப் டவுன் என்றால் என்ன? அத்தகைய சூழலில் நாம் எவ்வாறு அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று விரிவாக பார்த்தோம்.

இனி...

கேப் அப்பை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

கேப் டவுனை படித்த உங்களுக்கு கேப் அப்பை விளங்கிக்கொள்வது மிகவும் எளிதான விஷயமே.அதற்காக முந்தைய கட்டுரை படிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த கட்டுரை மட்டும் படித்தாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள கேப் அப் பற்றிய விளக்கம் உங்களுக்கு எளிதாகவே புரியும்.

சரி, கேப் அப்பிற்க்கு வருவோம்.

கேப் அப் என்பது, ஒரு பொருளின் விலை முந்தைய நாளின் முடிவுவிலையைவிட இன்றைய நாளின் ஆரம்ப விலை, அதிகரித்து துவங்குவது ஆகும்.

கேப் அப்பில் சந்தை துவங்கியுள்ளது

இன்றைய ஆரம்பவிலை

நேற்றைய முடிவுவிலை

இவ்வாறு கேப் அப்பில் சந்தை துவங்கினால்,சந்தையானது மிக வலுவாக உள்ளது என்பதை காட்டுகிறது. விற்பவர்களைவிட வாங்குபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது காட்டுகிறது.சந்தையானது, காளைகளின் கையில் இருப்பது காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சந்தையின் நகர்வை பற்றி பேசும்போது, ஏற்கெனவே நான் சொல்லி இருந்த விவரத்தை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன்.

அதாவது...

பொதுவாக சந்தையின் செயல்பாடுகள் என்பது, பெருபான்மையானவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அந்த திசையில் நகரும். அதாவது, பெரும்பான்யானவர்கள் வாங்குபவர்களாக இருந்தால், சந்தை ஏறுமுகமாக இருக்கும். பெரும்பான்மையானவர்கள் விற்பவர்களாக இருந்தால், சந்தை இறங்குமுகமாக இருக்கும். பெரும்பான்மையானவர்கள் சந்தையில் பங்கெடுக்கவில்லையென்றால், சந்தை பக்கவாட்டு நகர்வில் இருக்கும்.

இந்த மூன்றுவகையான நகர்வில் சந்தை பொதுவாக நகரும்.

இப்போது, சந்தையானது சற்றே மேலே துவங்கி, மேலும் ஏறி வியாபாரம் ஆகிறது. இதைத்தான் கேப் அப் என்று சொல்லுகிறோம்.

இந்த கேப்பில், தொடர்ந்து என்ன நடக்கலாம் என்ற கேள்வியை முன்வைத்தால், சந்தை காளைகளின் கையில் இருக்கிறது. எனவே சந்தை தொடர்ந்து மேலே செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கிறோம்.

ஆனால், நாம் இப்போது வாங்கலாமா?

இந்த கேள்விதான் பொதுவாக ஒரு தர்மசங்கடமான கேள்வி. வாங்கலாம்தான்.

ஏறினா.... சந்தோஷம்.

ஒரு வேளை இறங்கிடிச்சினா?

சந்தை யார் கட்டுப்பாட்டிலும் இல்லைதான். இருந்தாலும், சந்தையில் வியாபாரம் செய்ய நாம் ஏதாவது ஒரு உக்கதியை கையாள வேண்டும் அல்லவா!

அந்த வகையில், சந்தை கேப் அப்பில் துவங்கினால், நாம் உடனடியாக வாங்குவதற்கு பதிலாக,முதல் அரை மணிநேரம் அல்லது முதல் ஒரு மணிநேர் நாம் காத்திருப்பது நல்லது

முதல் அரை மணி நேரம் அல்லது ஒர மணிநேர அளவிற்க்கு சந்தை எந்த பக்கம் நகருகிறது என்று பார்க்கவேண்டும்.

அதை எப்படி கணிப்பது?

சந்தை ஒரு கேப் அப்பில் துவங்கிய பிறகு, முதல் அரைமணி நேரத்தின் கேன்டில் அல்லது முதல் ஒரு மணிநேர கேன்டிலை எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த கேன்டிலின், உச்சம் என்பது முக்கியதடைநிலையாகவும், கீழே உள்ள குறைந்தபட்ச விலை என்பது, முக்கிய ஆதரவுநிலையாகவும் செயல்பட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே நாம் பயிற்சி வகுப்புகள் மூலமும், தொலைகாட்சிகள் மூலமும், தொடர்ந்து சொல்லிவருவதை நினைவுபடுத்துகிறேன். அதாவது, தடையை தாண்டி ஏறினால், வாங்கும் வாய்ப்பாகவும். (அதாவது, வாங்கி விற்பது), அதுவே ஆதரவு நிலையை உடைத்து இறங்கினால் விற்பதற்கான வாய்ப்பாகவும் (விற்று வாங்குதல்) பார்க்கவேண்டும்.

எனவே முதல் ஒரு மணிநேரத்தின் லோ உடைக்கப்படாதவரை சந்தை வலிமையாக மேலே ஏறுவதற்கான வாய்ப்பாகவே பார்க்கவேண்டும். அதிலும் முதல் ஒரு மணிநேரத்தின் உச்சம் உடைக்கப்பட்டால், சந்தை இன்னும் வலிமையாக ஏறுவதற்க்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்பலாம்.

முதல் ஒருமணிநேர உச்சம்

கேப் அப் ஓபனிங்

ஆரம்ப விலை

முந்தையநாள் முடிவுவிலை

மேலே உள்ள வரைபடத்தில், விலையானது,முந்தையநாள் முடிவு விலையைவிட உயரந்து துவங்கி உள்ளது. அடுத்து, சந்தையானது, முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை உடைத்து தாண்டி ஏற ஆரம்பித்துள்ளது. இது சந்தை இன்னும் மேலே ஏறுவதற்கான அறிகுறி ஆகும்.

இந்த அடையாத்தின் அடிப்படையில் வாங்க திட்டமிடலாம். அதன் பின் சந்தை வலுவாக மேலே ஏறிக்கொண்டு இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த ஏற்றம் என்பது வாங்குபவர்கள் சந்தையில் அதிகமாக இருப்பதையும், இதைத்தான் சந்தை காளைகள் கட்டுப்பாட்டில் இருப்பதை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

கேப் அப் முறையில் துவங்கி தொடர்ந்து வலிமையாக ஏறுவதற்க்கான சில எடுத்துக்காட்டுகளை இப்போது பார்க்கலாம்.

வெள்ளி:

இந்த வரைபடம் வெள்ளியின் ஒரு மணிநேர கேன்டில்களை கொண்டு வரையப்பட்டுள்ளது.

மேலே உள்ள வரைபடத்தில், வெள்ளியில் எப்படி கேப் அப் முறையில் துவங்கி தொடர்ந்து மேலே ஏறியது என்பதை பார்க்கலாம்.

வெள்ளி 24.11.14, அன்று 36221 என்ற விலையில் முடிந்துள்ளது. அடுத்த நாள், 36350 என்ற விலையில் துவங்கியது. அதுவாது, கிட்டத்தட்ட 130 புள்ளிகள் கேப் அப்பில் துவங்கி உள்ளது. பின் முதல் ஒரு மணிநேரத்தின் உச்சமான 36500ஐ தாண்டி ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றமானது,அடுத்து 36776 என்ற உச்சத்தை தொட காரணமாது.

நேச்சுரல் கேஸ்:

மேலே உள்ளது நேச்சுரல்கேஸ் வரைபடம்., இந்த வரைபடம் ஒரு தினசரி வரைபடம் ஆகும்.

இந்த வரைபடத்தில் 28.10.14 அன்று 223.20 என்ற விலையில் முடிந்துள்ளது. அடுத்த நாள் 29.1.14.அன்று விலை ஒரு கேப் அப்பில் துவங்கி உள்ளது. 229 என்ற விலையில் துவங்கி உள்ளது.இவ்வாறு கேப் அப்பில் துவங்கிய நேச்சுரல் கேஸ், அன்று முடியும்போது 235.40 என்ற விலையில் முடிந்துள்ளது. இந்த ஏற்றம் பின்பு தொடர்ந்தது. பல நாட்களாக தொடர்ந்த இந்த ஏற்றம், 7.11.14.வரை தொடர்ந்தது. இந்த ஏற்றத்தின் உச்சமாக 7.11.14.அன்று 276.40 என்ற விலையை தொட்டது.

இந்த வரைபடம் ஒரு தினசரி வரைபடம் ஆகும்.

ஆகவே நாம் இந்த கேப் அப் என்ற முறையில் ஓப்பன் ஆகும்போது, அடுத்து அடுத்து சந்தை ஏறுமுகமாக இருந்தால், சந்தை வலிமையாக ஏறும் என்பதிற்கு இதுவே சான்று.

இதுவரை நாம் கேப் அப் ஓபனில், சந்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்த்தோம். இது ஒரு வகையான நகர்வு ஆகும்.

அடுத்த வாரம் கேப் அப் ஓபன் நடக்கும்போது, எப்படி இன்னொரு வகையான செயல்பாடு நடக்கலாம் என்பதை பார்க்கலாம்.

Source:
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=9151

  

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP