Powered by Blogger.

Commodity A2Z.17

Thursday, March 31, 2016

கமாடிட்டி A-Z தொடர
  கமாடிட்டி வியாபாரம் 17

தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 
சென்ற வாரம் அப் ஸ்விங், டவுன் சுவிங், ஸ்விங் ஹய் மற்றும் ஸ்விங் லோ போன்றவற்றை பார்த்தோம் அல்லவா!

 
இந்த வாரம் நாம் ஸ்டாப் லாஸ் பற்றியும் பார்க்கபோகிறோம்.

 
ஸ்டாப் லாஸ் என்றால் என்ன?

 
நாம் பொருட்சந்தையில் ஈடுபடும்போது, அது ஒரு வியாபாரம் என்று சொல்லி இருந்தேன்.  வியாபாரத்தில் ஈடுபடும்போது, அந்த வியாபாரம் லாபத்தில் முடியலாம் அல்லது நஷ்டத்தில் முடியலாம்.

 

எடுத்துக்காட்டாக, நாம் தங்கத்தின் விலை ஏறும் என்று, 10 கிராம் தங்கத்தை ரூ.26000 வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இனி தங்கத்தின் விலை ரூ.26000க்கு மேல் 26100, 26200 என்று ஏற ஆரம்பித்தால் லாபம்.  அதற்க்கு மாறாக விலையானது, ரூ.25900/-, 25800/- என்று இறங்க ஆரம்பித்தால் அது நஷ்டம் என்று நமக்கு தெரியும்.

 

லாபம் என்று வரும்போது நமக்கு சந்தோஷமும், நஷ்டம் என்று வரும்போது, அது நமக்கு வருத்தத்தையும் கொடுக்கும்.  ஏறும்போது வரக்கூடிய சந்தோஷத்தை ஒருபுறம் வைப்போம்.  இறங்கும்போது வரும் வருத்தம் நமக்குள் நிகழ்த்தும் உணர்வுபூர்வமான நடவடிக்கைகள் என்ன என்று பார்க்கலாம்.

 

தங்கத்தை ரூ.26000/- என்ற விலைக்கு வாங்கியபிறகு, விலை இறங்க ஆரம்பிக்கும்போது,  நமக்குள் ஒரு ஒவ்வாத உணர்வு வருகிறது. தங்கத்தின் விலை நாம் வாங்கி ரூ.26000/-ல் இருந்து ரூ.25900/- என்று வரும்போது நமக்குள் தோன்றுவது, என்ன பண்ணலாம்.

 

ஆனால், என்ன பண்ணுவது என்று தோன்றவில்லை, அப்படியே வேடிக்கை பார்க்கிறோம்.

பின்னர் விலை இன்னும் குறைந்து ரூ 25800/- என்று வருகிறது.  இது நமக்கு மேலும் அதிக வலியை சேர்கிறது.

ஆனால், என்ன பண்ணுவது, தெரியலிங்க? ஏறனும் அப்படின்னு விரும்பறோம்.  அல்லது எதிர்பாரக்கிறோம்.

இப்படி ஒரு எதிர்பார்ப்போடு காத்திருக்கும்போது, விலை இன்னும் சிரிந்து ரூ.25600/- என்ற விலைக்கு வருகிறது.  

 

இப்போது, நமக்குள் என்ன நடக்கிறது.

 

பயம்.... பயம் வர ஆரம்பிக்கிறது.

 

இந்த பயம்தான், இதுவரை நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வியாபாரம் பண்ணிய நம்மை, நாற்காலியின் நுணிக்கு இழுக்கிறது.   என்ன பண்ணலாம்?

 

நஷ்டத்தில் வித்திடலாமா?

 

நாம் வாங்கி இருக்கிறது ஒரு மெகா (1000 கிராம்).  இப்ப வித்தா? பத்து கிராமுக்கு ரூ.400/- நட்டம், அப்படின்ன ஒரு கிலோவுக்கு, இந்த நட்டத்தை 100ல் பெருக்க வேண்டும்.  அப்படி என்றால், ரூ.40000/- நட்டம்.

 

ஐயோ சாமி, காலையிலதான், ஒரு ரூ.1,50,000/-டெபாசிட் பண்ணி டிரேடிங்க ஆரம்பித்தேன்.  அதுக்குள்ள ரூ.40000/- நஷ்டமா?

 

மனதிற்க்குள் ஒரு பயத்தின் இழை வேகமாக ஆட ஆரம்பிக்கிறது.

 

இப்போது ரூ.40000/- நட்டத்தை ஏற்றுக்கொண்டு இந்த வியாபாரத்தில் இருந்து வெளியே வருவதா அல்லது பொருத்து இருக்கலாமா?  அல்லது இன்னும் கொஞ்சம் வாங்கி ஆவரெஜ் பண்ணலாமா?

 

இன்னும் ஒரு லாட்டை ரூ.25600/- என்ற விலைக்கு ஆவரெஜ் பண்ணா, மீண்டும் விலை ஏறும் போது, ரூ.25800/- என்ற விலை நமக்கு பிரேக்ஈவனை கொடுக்கும்.  அதாவதுர நோ லாஸ், நோ பிராஃபிட் என்ற நிலைக்கு வரும். அப்படி வந்த நாம், ரூ.40000/- நட்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

 

இப்படி நினைக்கும்போது, நமக்கு சற்றே ஆறுதலாக இருக்கிது.  எப்படியாவது இந்த ரூ.40000/- நட்டத்தில் இருந்து விடுபடவேண்டும்.  அது ஒன்றே நமக்கு நோக்கமாக இருக்கிறது. எனவே புரோக்கருக்கு ஒரு போனை போடுவோம்.  இன்னும் ஒரு லாட்டை வாங்குவோம்.  முடிவும் பண்ணியாச்சி, புரோக்கருகும் போனை போட்டாச்சி.....

 

ஆங், சொல்லுங்க சார், நான்தான் டீலர் பேசறேன்.

 

என்னது இன்னொரு மெகா வாங்கனுமா?

 

ஏற்கெனவே வாங்கன லாட்டுக்கு ரூ.40000/- எம்.டி.எம். லாஸ் போகுது, சார். அதை கட்டினாதான் இருக்கிற பொஷிஷனையே வச்சிக்கமுடியும்.  இன்னும் ஒரு லாட்டை எடுக்கனும்னா, இன்னும் ரூ.150000/- பணம் கட்டனும் சார்.

 

போன் ஸ்பீக்கரை கைய வைச்சி மறைச்சிக்கனு, யோசிக்கிறோம்.

 

இன்னும் ஒன்னரை லட்சமா?  இப்ப கட்டின பணமே என்னோட ஒரு வருஷ சேமிப்பு, இன்னும் ஒரு ஒன்னரை லட்சம் வேணும்மா, இன்னும் ஒரு வருஷம் உழைச்சாதான் முடியும்.

அப்படினா, இன்னும் ஒரு லாட் வாங்கறத வுட்ற வேண்டியதுதான்.

போன் ஸ்பீக்கரில் இருந்து கையை எடுத்துட்டு பேசறோம்.

புரோக்கர் சார், இன்னும் ஒரு லாட் நாங்க வாங்கலா சார்.  இருக்கிற ஒரு லாட்டு மட்டும் போதும்.  அதுமட்டும் அப்படியே இருக்கட்டும்.

 

டீலர் ஒரு படி மேலே போறார்.  சார், அந்த ஒரு லாட்டை நீங்க வைச்சிருக்கனும்னு நினைச்சாகூட எம்.டி.எம். ரூ.40000/- கட்டனும் சார். இல்லன்னா.... எங்க ஹெட் ஆபிசில இந்த பொஷிஷனை குளோஸ் பண்ணிடுவாங்களே?

நமக்கு மனசு கிடந்து அடிச்சிக்குது.

 

இன்னும் ரூ.40000/- கட்டனுமா? பணத்துக்கு எங்கே போவது. பணமும் கையில கிடையாது.  பணம் கையில இல்லனும் சொன்ன பொஷிஷனை இப்பவே குளோஸ் பண்ணிடுவாங்க.  சரி சமாளிக்கலாம்.

ஓகே சார், நான் ரூ.40000/- செக்கை நாளைக்கு காலையில கொடுத்திடறேன்.  அந்த பொஷிஷனை அப்படியே வைச்சுடுங்க.

 

டீலர்:  சரி சார், நான் ஹெட் ஆபிசல சொல்லிடறேன்.  கண்டிப்பா நாளைக்கு காலையில செக்கை கொடுத்திடனும்.

 

நம்ம மனசாட்சி கேட்குது, ஆமா, நாளைக்கு எப்படி செக் கொடுப்பே? அக்கவுன்ட்லதான் பணமே இல்லையே?

நீங்க சொல்லிறிங்க, அட பணம் இருந்தா மட்டும் கொடுத்துறபோறனா?  எப்டியாவது, நாளைக்கு தங்கம் இவ்ளோ வெலை இறங்கினதுக்கு நாளைக்கு கொஞ்சம் எப்படியும் ஏறித்தான் ஆவனும்.  அப்ப பாத்துக்காலம்.  நாளைக்கு வெலை ஏறிச்சினா, எம்.டி.எம். லாஸ் குறையலாம் அல்லது லாஸ் இல்லாமக்கூட போகலாம்.

எப்படியாவது, இன்னைக்கு சமாளிச்சா போதும்.

 

சரி சார்.  நாளைக்கு காலையில கட்டாயமா நான் செக் கொடுத்திர்றேன்.

டொக் போனை வைச்சாச்சி.

இன்னைக்கு பொழுதை ஓட்டியாச்சி. 

ராத்திரி தூக்கமே வரமாட்டேங்குது.  மனசு எல்லா கடவுளையும் வேண்டுது.  கடவுளே கடவுளே எப்படியாவது தங்கம் விலையை மேல ஏத்திடு.  இப்படி யோசிச்சி யோசிச்சே எப்படியோ தூங்கிவிடுகிறோம்.

ஆனால்...

ஆனால்...

மறுநாள் காலை விடியல் நமக்கு சாதகமா இல்லை.

மறுநாள் காலை தங்கம் ஒரு கேப்டவனுடன் துவங்குகிறது.  தங்கம் நேற்று ரூ.25600/- முடிந்து இருந்தது. இன்னக்கி காலைலை ரூ200/- குறைந்து ரூ.25400/-ல் துவங்குகிறது.

 

விலையை பார்த்தவுடன் நமக்கு பகீர் என்கிறது.  ரூ.200/- குறைவாக தொடங்கினால் என்ன அர்த்தம். நமக்கு இன்னும், ரூ.20000/- நட்டம் கூடி உள்ளது.  ஆக மொத்தம் இப்போது எம்.டி.எம். அளவு ரூ.60000/- என்ற அளவில் உள்ளது.

 

நமக்குள் பயம் தீயாக மாறுகிறது.  நம் உடலை சுற்றி, ஒரு இன்ச் அளவிற்க்கு  ஒரு உஷ்ண அளவு வெளிப்படுகிறது.  நெற்றியில் சூடு ஏற ஆரம்பிக்கிறது.  கால், கை முட்டிகளில் வலி விண் விண் என்று தெரிக்க ஆரம்பிக்கிறது.

 

மூளை எப்போதோ குழப்பி செயலற்ற நிலைக்கு சென்றுவிட்டது.

உடல் முழுவதும் வலி, மனம் முழுவதும் குழப்பம். 

என்ன செய்வது? என்ன செய்வது?

 

புரோக்கர் ஆபிசில் இருந்து போன், சார், இப்ப எம்.டி.எம் ரூ.60000/- இப்ப கட்டீரிங்களா அல்லது பொஷிஷனை குளோஸ் பண்ணலிட்லாமா?

 

நமக்கு கையும் ஓடல, காலும் ஓடல.  ஆனா வாய் மட்டும் தொடர்ந்து முணு முணுக்கிறது.  

சார்... சார்... குளோஸ் பண்ணிடாதீங்க சார்.  ஒரு மணிநேரம் பார்கலாம் சார்.  இப்ப குளோஸ் பண்ணா, எனக்கு ரூ.60000/- நட்டம் வரும் சார்.  கொஞ்சம்  பொருங்க.  தங்கம் ஒரு ரூ.200/- மேல வந்தாக்கூட போதும், அப்ப ஒரு ரூ.20000/- நட்டத்தையாவது குறைக்கலாம்.

 

நம்முடை கெஞ்சல், புரோக்கரின் மனதை கொஞ்சம் கரைத்தது.

சரி சார், கரெக்டா நாம் ஒரு மணிநேரம் பொருத்திருப்பேன்.  அப்பிடி ஒரு மணிநேரத்தில் உங்களுக்கு சாதகமா ஏறலனா, நான் கட்டிப்பா வித்துடுவேன்.  புரோக்கரின் எச்சரிக்கை காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

நாம் விலையை டி.வி.யில பார்க்கிறோம்.  நெட்ல பார்கிறோம். தங்கத்தின் விலை ஏறினபாடுதான் இல்லை.  பார்த்துக்கொண்டே இருக்கும்போது, விலை மேலும் மள மளவென்று சரிய ஆரம்பிக்கிறது.  புரோக்கர் சொன்ன ஒரு மணிநேரமும் முடிவுக்கு வருகிறது.  அதற்க்குள் தங்கம் மேலும் ரூ.200/- விலை சரிந்தது.  தங்கம் 10 கிராம் விலை ரூ.25200 ஐ தொட்டது.  நஷ்டம் ரூ.80000 ஐத்தொட்டது.

 

புரோக்கர் கொடுத்த ஒரு மணிநேரமும் முடிந்தது.

 

புரோக்கரிடம் இருந்து போன் கால் வருகிறது.  உங்கள் பொஷிஷன் ரூ.80000 நஷ்டத்தில் குளோஸ் பண்ணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.  நமக்கு காலின் கீழ் இருந்த நிலம் நழுவி விழுவதுபோல் உள்ளது.

ஒரு வருடத்தின் சேமிப்பில் பாதி இரண்டு நாள்ல போயிடிச்சி.

 

தலையெல்லாம் ஒரே வலி.  சரி நல்லதா ஒரு காபி குடிச்சா தேவலை என்பது போல் இருந்தது.   எனவே வெளியே போய் ஒரு காபி குடிச்சிட்டு, மனசே கொஞ்சம் தேத்தலாம் என்று வெளியே வருகிறோம்.

மனசு அசை போடுகிறது.

 

நாம் ஏன் தங்கத்தை ரூ.26000/- என்ற விலைக்கு வாங்கினோம். ஏறும் என்று வாங்கினோம்.  அப்புறம் ஏறிச்சா?  இல்லையே.  மாறாக இறங்க ஆரம்பிச்சது.  இந்த நிலையில, நமக்கு என்ன நடக்குது.  நட்டம் வருது.  இப்படி நட்டம் வரும்போது, நாம, இப்ப விட்டமாதிரி ரூ.80000/- ஒரே சமயத்தில் லம்பா விடமா ஏன் தடுத்து இருக்கக்கூடாது.  

நாம் வாங்கின விலை ரூ.26000/-.  இதில இருந்து ரூ.100/- குறைச்சி ரூ.25900/- என்ற விலைக்கு வரும்போது, நமக்கு எவ்ளோ நஷ்டம்?

 

ஓகே... 100 X 100 = ரூ.10000 நஷ்டம்.  

அப்பவாது நிறுத்தி இருக்கலாம்.  அப்புறம் ரூ.200/- என்ற அளவுக்கு இறங்கியது.

அப்ப எவ்வளவு நஷ்டம்?

ஓகே... 200 X 100 =  ரூ.20000/- நஷ்டம்.  இங்கேயாவது நட்டத்தை தடுத்து இருக்கலாம்.

இவ்வாறு, நாம் வாங்கியபிறகு, நாம் எதிர்பார்ததிற்க்கு மாறாக இறங்கும்போது, நமக்கு வரக்கூடிய நஷ்டத்தை நிறுத்த, நாம் நிர்ணயம் செய்யும் விலையின் அளவுதான் நஷ்டத்தடை என்கிறோம்.  அதை ஆங்கிலத்தில் ஸ்டாப்லாஸ் என்கிறோம்.

அப்படி என்றால், நாம் வியாபாரத்தில் ஏறும் என்று வாங்கும்போது, மாறங்கினால், வரக்கூடிய நஷ்டத்தை தடுத்தநிறுத்த நாம் முடிவு செய்யும் விலையின் அளவைவே ஸ்டாப்லாஸ் என்கிறோம்.

இப்போது நமக்கு ஸ்டாப்லாஸ் என்றால் என்னவென்று தெரியும்.  அதை போடாவிட்டால் எந்த அளவிற்க்கு பாதிப்பு வரும் என்றும் தெரியும் அல்லவா?

இந்த ஸ்டாப் லாசை பற்றிய இன்னும் பல அறிய விவரங்களை நாம் வரும் வாரம் பார்க்கபோகிறோம்.  மேலும் கேப் டவுனை எப்படி சமாளிக்கலாம் என்றும் படிக்க போகிறோம்.

Source:

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=8780

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP