கலப்பட தேனை கண்டறிவது எப்படி?
Friday, June 2, 2023
கலப்பட தேன் கண்டறிதல்
உணவுப் பொருளில் கலப்படம் செய்பவர்கள் தேனையும் விட்டு வைக்கவில்லை. தேனிலும் சர்க்கரைப் பாகு கலந்து சிலர் விற்பனை செய் கின்றனர். சிலர் வெல்லப் பாகுவை தேன் என்று ஏமாற்றி விற்பனை செய்வதும் உண்டு. எனவே தேனில் கலப்படம் இருக்கிறதா? என்பதை கண் டறிய சில வழிகளை பின்பற்றலாம்.
* ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடும் போது, அந்த தேனை வெள்ளைத்தாள் உறிஞ்சாமலும், காகிதத்தில் மேலும் தேன் பரவாம லும் இருந்தால் அது அசல் தேன். காகிதத்தால் தேன் உறிஞ்சப்பட்டால் அது கலப்படத் தேன்.
* ஒரு டம்ளர் தண்ணீருக்குள் சில துளி தேனை விட்டால், அந்த துளி தேன் தண்ணீரில் கரையாமல் இருந்தால் அது அசல் தேன். தண் ணீரில் கரைந்தால் அது கலப்படத் தேன்.
* ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை தீப்பெட் டியில் உரசும் போது உடனே தீப்பற்றினால் அது அசல் தேன். தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்படத் தேன்.
Source :-
தினத்தந்தி
G
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment