எலும்புகள் உறுதியாக இருக்க
Monday, December 7, 2020
எலும்புகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா?
உடலுக்கு அஸ்திவாரமாக விளங்குவது எலும்புகள் தான். நாம் ஓடி விளையாட, நிற்க, அமர அனைத்து வேலைகள் செய்வதற்கும் எலும்புகள் வலிமையாக இருப்பது அவசியமாகும். எலும்புகள் வலிமையாக இருக்க முக்கியமாக நம் உடலுக்கு தேவைப்படும் சத்து கால்சியம் ஆகும். எலும்புகளில் முறிவு ஏற்பட்டால் அவை விரைவில் இணைய கால்சியம் சத்து தேவைப்படுகிறது. கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் -டி அவசியமாக தேவைப்படுகிறது. இந்த இரண்டு சத்துக்களும் தேவையான அளவு கிடைக்கப்பட்டால் எலும்புகளில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
கால்சியம் நிறைந்த பொருட்கள் என்று சொன்னாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது பால் தொடர்பான பொருட்கள் தான். பால் மற்றும் அது சம்மந்தமான பொருட்களில் கால்சியம் சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகள் வலிமையாக இருக்க உதவுகிறது. எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் போது அவர்களுக்கு கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு மில்க், டோன்டு மில்க் போன்றவற்றை கொடுக்கலாம். காரணம் ஓய்வு காலங்களில் அவர்களுக்கு கொழுப்பு சத்து அதிகரிக்க கூடும். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்பது அவசியமாகும்.
லாக்டோஸ் இண்டாலரன்ஸ் எனும் பால் ஒவ்வாமை உடையவர்கள், தினமும் சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு போன்றவற்றை உட்கொண்டாலே போதும். அவர்களுக்கு 1000 மி.கி கால்சியம் கிடைத்து விடும்.
ஆஸ்டியோபொரோசிஸ் எனும் எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சனை பெண்களுக்கு இருக்கும். அவர்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி பால் அருந்த எடுத்துக் கொள்ளலாம்.
100 மி.கி சோயா பீன்ஸில் 25 மி.கி கால்சியம் உள்ளதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தினமும் காலையில் சோயாவில் பால் செய்து அருந்தி வரலாம். அதுமட்டுமில்லாமல் இந்த சோயாவில் கொழுப்பு குறைவாக உள்ளதால், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களும் இதை குடித்து வரலாம். இதனால் எலும்புகள் வலுவடையும்.
100 மி.கி மீனில், 15 மி.கி கால்சியம் உள்ளதால் இதை வாரத்திற்கு இருமுறை உணவாக உண்ண எடுத்துக் கொள்ளலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களான நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களை உண்பதன் மூலமாக எலும்புகள் அடர்த்தியாகும்.
ஆட்டுக்காலின் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதால் இதில் தாது உப்புகள் நிறைந்துள்ளன. எனவே ஆட்டு காலில் சூப் செய்து குடிக்கலாம். இதனால் எலும்பு விரைவில் கூடும்.
100 மி.கி நண்டில் 16 மி.கி கால்சியம் உள்ளதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் வாரத்திற்கு இருமுறை இதை சமைத்து உண்ணலாம். அதுமட்டுமில்லாமல் உடலுக்கு இது உஷ்ணத்தை தருவதால் வெயில் காலங்களில் இதை தவிர்த்து விடுங்கள்.
சைவம் உண்பவர்களுக்கு இது முக்கியமானது. கொள்ளில் சோயாவிற்கு நிகரான கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் 70 வயதிற்கும் அதிகமானவர்கள், சைவ பிரியர்கள் கொள்ளில் ரசம் வைத்து தினமும் குடித்து வந்தால், எலும்புகள் வலுவாக இருக்கும்.
புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற கனிவகைகளையும் தினமும் உண்டு வருவதால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.
100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம் நிறைந்துள்ளதால், இதை வாரத்திற்கு இருமுறையாவது, கட்டாயம் உட்கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வருவது அவசியமாகும் .
கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை போன்ற கீரைகளில் அதிக அளவில் கால்சியம் சத்து இருப்பதால் இதில் தினமும் ஏதாவது ஒரு கீரையை உண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் கீரையை உண்ணக்கூடாது. காரணம் செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தும், எனவே காலை மற்றும் மதிய நேரங்களில் இதை குழம்பாகவோ, பொறியலாகவோ, கடைந்தோ சாத்ததுடன் பிசைந்து உண்ணலாம்.
100 மி.கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம் உள்ளதால் எலும்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி கஞ்சி அல்லது தோசை செய்து உண்டு வரலாம். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை மட்டும் நீங்கள் பாலோ செய்தால் போதும், எலும்புகள் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்
Source
Mohideen Acu Meethee
n:
0 comments:
Post a Comment