மீன் எப்படி வாங்க வேண்டும் ?.
Tuesday, April 17, 2012
பொதுவாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மீன் உள்ளது.எனவே மீன் வாங்கும்போது நல்ல மீனா அல்லது அழுகியதா என பார்த்து மீனைப்பற்றி தெரிந்து வாங்கவேண்டும்.அனைவருக்கும் பயன்படும் செய்தி என்பதால் இப்பதிவை பகிர்கிறேன்
மீன்களின் கண்கள் நம்மையே முறைத்து பார்ப்பது போல் தெளிவாக இருக்கவேண்டும் மங்கலாகவோ, இயல்புக்கு மாறாக காணப்பட்டால், அவை கெட்டுவிட்டன என்று அர்த்தம்.
நல்ல பதமான மீனின் மாமிசம், அழுத்திப் பார்த்தால் கெட்டியாக, உறுதியாக இருக்கும் கெட்டுப்போனோ மீனோ, கொழ,கொழ என்று குழையும் தன்மை கொண்டு இருக்கும்.
மீனின் முதுகெழும்பை ஒட்டிய மாமிசம் வெளிறித்தான் இருக்க வேண்டும், சிவப்பாக இருக்க கூடாது அது கெட்டுபோன மீன் இதை துண்டு துண்டாக வெட்டும்போது காணலாம்.
நல்ல மீனின் உடல் மேல்,நாம் கை வைத்து அழுத்தி எடுத்தோமானால் அதன் மேல் ரேகைகள் பதியாமல் இருக்கும்.
நல்ல மீனின் அடிவயிறு பாகம் உறுதியாக இருக்கும். மீனின் செவுள்கள், செந்நிறமாக இருக்கவேண்டும் நிறம் மாறியிருப்பின், மீன் கெட்டுவிட்டது என்று அர்த்தம்.
பயனுள்ள தகவல் என்பதால் தினமலர்-வாரமலரிலிருந்து..
0 comments:
Post a Comment