மொபைல் போன் எப்படி செயல்படுகிறது # 4
Sunday, April 15, 2012
மொபைல் போன் எப்படி செயல்படுகிறது எனும் தொடர் பதிவில் ELECTRONIC COMPONENTS பற்றி பார்க்கலாம்.
ரெசிஸ்டர்- RESISTORS
மொபைல் மதர்போர்டில் நூறுக்கும் மேற்பட்ட செவ்வக வடிவில் கறுப்பு நிறத்தில் ரெசிஸ்டர்கள் இருக்கும் இதை ஒம்ஸ்-ohms எனும் அலகால் குறிக்கிறோம்
ரெசிஸ்டரின் முக்கிய செயல்பாடு:
வோல்டேஜை தடை செய்வது. மின்னோட்டம் அதிகமானால் அதனை குறைப்பதும், குறைந்துபோனால் சரியான அளவிற்கு அதிகப்படுத்துவது இதன் முக்கிய பணியாகும்.
கபாசிடர்-CAPACITORS
மொபைல் சார்ஜ் செய்யும்போது ACமின்னோட்டம் தரப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது அதிலிருந்து DCமின்னோட்டமாக செல்போன் பாகங்களுக்கு மின்சாரம் தரப்படுகிறது .அவ்வாறு செல்லும் மின்னோட்டத்தில் சிறிதளவுAC மின்சாரம் கலந்து இருக்கலாம். இதை வடிகட்டி துய்மையான DC மின்சாரமாக அனுப்புவதே கபாசிடர்களின் பணியாகும்.
கபாசிடரின் முக்கிய செயல்பாடு
1.சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங்
2.தேவையற்ற சிக்னல்களை வடிகட்டுதல்-FILTERING
இதை FARAD எனும் அலகால் குறிக்கிறோம்.
SERIEL CONNECTION -சீரிஸ் கன்னெக்சனில் AC மின்சாரத்துடன் கலந்து வருகின்ற குறைந்த அளவு DCமின்சாரம் வடிகட்டப்பட்டு தூய்மையான
AC மின்சாரம் மட்டும் தரப்படுகிறது
PARALLEL CONNECTION-பேரலல் கன்னெக்சனில் DC மின்சாரத்துடன் கலந்து வருகின்ற குறைந்த அளவு AC மின்சாரம் வடிகட்டப்பட்டு தூய்மையான
DC மின்சாரம் மட்டும் தரப்படுகிறது
0 comments:
Post a Comment