Powered by Blogger.

கேஸ் சிலிண்டரின் ஆயுட்காலம் தெரியுமா

Monday, April 16, 2012

பலருக்கு இந்த தகவல் தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்காக இப்பதிவு .ஒவ்வொரு  சமையல் கேஸ் சிலிண்டரிலும்,சில எண்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.அதை வைத்து அந்த சிலிண்டரின் ஆயுட்காலம் அதாவது காலாவதி நேரத்தை  அறிந்து கொள்ளலாம் காலாவதியான   கேஸ் சிலிண்டரில், கேஸ் நிரப்பி அனுப்புவதை அந்தந்த நிறுவனங்களே நிறுத்திவிடும்.சில சமயங்களில்
தவறுதலாக  கேஸ் நிரப்பி வாடிக்கையாளர்களுக்கு வந்துவிடும் அத்தகைய சூழ்நிலையில் வாடிக்கையாளர் சற்று கவனமாக இருந்தால்,காலாவதியான   கேஸ் சிலிண்டரை நாம் திருப்பி அனுப்பிவிடலாம்.
சிலிண்டரின் மேல் பகுதியில்,வட்டவடிவில் இருக்கும் இரும்பு
கம்பி பிடியுடன், கீழாக இணைந்துஇருக்கும் பட்டையின் உள்புறமாக, சில
எண்களும் எழுத்துகளும் இருக்கும்.உதாரணமாக ஆங்கில எழுத்து  A என்றும்
அதன் அருகில் 12 என இருந்தால்  சிலிண்டரின் ஆயுட்காலம் 2012 மார்ச் ஆகும்
அதற்கு பிறகு கேஸ் நிரப்பக்கூடாது என்று அர்த்தம். D 14 என இருக்குமானால்அதன் சிலிண்டரின் 2014ம் வருடம் டிசம்பர் மாதத்தில் நிறைவடைகிறது என அர்த்தம்.

ஒரு ஆண்டின் 12 மாதங்களை, மூன்று மாதங்களாக பிரித்து,ஒவ்வொரு மூன்று மாதத்தையும் A,B,C,D என பிரித்துள்ளனர். A என்றால்  ஜனவரி, பிப்ரவரி, மார்ச் வரையும், B என்றால் ஏப்ரல், மே, ஜூன் வரையும்,,C என்றால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரையும், D என்றால் அக்டோபர் ,நவம்பர் ,டிசம்பர்
வரையிலும் என எடுத்துக்கொள்ளவேண்டும். ஆண்டின் கடைசி  இரண்டு இலக்கங்கள் மட்டும் அதாவது  C 15 என்றால் செப்டம்பர் 2015 என்று அர்த்தமாகும். இது சிலிண்டரின் உட்புறமாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமுறை வீட்டுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் வரும்போது  உட்புறமாக அச்சடிக்கப்பட்டுள்ள எழுத்துகளைப் பார்த்து  சிலிண்டரின் ஆயுட்காலத்தை அறிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் பயன்படும் தகவல்  என்பதால்  
தினமலர் - சிறுவர்மலரில் படித்த செய்தி.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP