Powered by Blogger.

micromax A111 கேன்வாஸ் டூடில்.

Sunday, July 14, 2013



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மொபைல் போன், மைக்ரோமேக்ஸ் ஏ 111. இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 147 x76.5 x 9.7 மிமீ. எடை 168 கிராம். இதில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 5.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டதாக இது இயங்குகிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் 4 ஜிபி. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் உள்ளது. எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் இயங்குகிறது. வை-பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்குக் கிடைக்கின்றன. 8 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமராவும். 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இயங்குகின்றன. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது. ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுத்தல் ஆகிய வசதிகள் கொண்டதாக கேமரா அமைக்கப்பட்டுள்ளது. எப்.எம்.ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் ஆகியவை உள்ளன.
இதன் சி.பி.யு.வில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிப் உள்ளது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகளும் கிடைக்கின்றன. எம்பி3,எம்பி 4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,100 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 220 மணி நேரம் மின் சக்தி தக்க வைக்கப்படுகிறது. தொடர்ந்து 6.5 மணி நேரம் இதன் மூலம் பேசலாம்.
இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.            `
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP