Powered by Blogger.

திறக்கும் புரோகிராம் எதுவென்று தெரியலையா?

Tuesday, July 16, 2013

நண்பர்களிடம் இருந்தோ, அல்லது இன்டர்நெட்டில் இருந்தோ, புரோகிராம் ஒன்றை பெற்றிருப்போம். உடனே அதனை இயக்கிப் பார்க்க ஆசைப்பட்டு , அதில் டபுள் கிளிக் செய்து, ஆஹா, இதோ புரோகிராம் இயங்கப்போகிறது; அதில் உள்ள புது விஷயங்களைத் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் காட்டப் போகிறோம் என்று கர்வத்துடன் மானிட்டர் திரையைப் பார்ப்போம். ஆனால், அதில் இந்த புரோகிராமை எதில் திறக்க? என்ற வகையில் Open With என்று ஒரு சிறிய விண்டோ திறக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களின் பட்டியல் இருக்கும் - எம்.எஸ். ஆபீஸ் உட்பட. இதில் எதைத் தேர்ந்தெடுக்க? என்ற யோசனையில் சில நேரம் செலவழித்துவிட்டு, இதைக் கிளிக் செய்திடலாமே என்று ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். ஆனால் மீண்டும் சில நேரம் கழித்து இதை விண்டோஸ் இயக்கத்தினால் திறக்க முடியவில்லை. வேறு ஒரு புரோகிராமினை இன்டர்நெட்டில் தேடலாமா? என்று ஒரு பரிந்துரையுடன் கூடிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
என்ன செய்யலாம்? இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் விரக்தியின் விளிம்பு வரை சென்று கூகுள் சர்ச் இஞ்சினில் Open With என டைப் செய்து என்டர் தட்டினால், உடனே கிடைத்த பட்டியலில் openwith என்று ஒரு தளமே இருப்பது தெரிய வந்தது. அதனைத் திறந்து காண்கையில் இப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற் கென்றே இந்த தளம் உருவாக்கப்பட்டதனை உணர முடிந்தது. இந்த தளத்தைப் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. முதல் காரணம் இதன் சேவை முற்றிலும் இலவசம். அடுத்ததாக நாம் எதிர்பார்க்கும், மற்றும் எதிர்பாராத பல எக்ஸ்டென்ஷன்கள் கொண்ட பைல்களுக்கெல்லாம் இது திறக்கும் புரோகிராமின் பெயரைத் தருகிறது. ஏன் .PNG, .SQL, மற்றும் CKZ என்றெல்லாம் கூட எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன என்று இங்கு தான் அறிந்து கொண்டேன். நீங்கள் திறக்க விரும்பும் பைலின் எக்ஸ்டென்ஷன் பெயரின் முதல் எழுத்தை டைப் செய்தால் அந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எக்ஸ்டென்ஷன் உள்ள அனைத்து பைல்வகைகளின் பட்டியலும் அவற்றிற்கான புரோகிராம்களும் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 'B' என டைப் செய்தால் .BAT, .BFL என்ற எக்ஸ்டென்ஷன்கள் எல்லாம் காட்டப்படுகின்றன.
இவற்றைக் காட்டிவிட்டால் போதுமா? அதற்கான புரோகிராம் நம்மிடம் இல்லையே என்ற சூழ்நிலையும் ஏற்படும். இதற்கும் இந்த தளம் தீர்வினைத் தருகிறது. எந்த எக்ஸ்டென்ஷன் கொண்ட பைலைத் திறக்க புரோகிராமினைத் தேடுகிறீர்களோ அதில் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இருக்கும் தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இலவசமாக புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இது நிச்சயமாய் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு தளமாக உள்ளது. எனவே புக்மார்க் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி தேவைப்படும். இதன் முகவரி http://www.openwith.org/
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP