Powered by Blogger.

உலகின் உயரமான கட்டடத்தில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ

Sunday, July 14, 2013

கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ பிரிவு, அண்மையில், உலகிலேயே மிக உயரமான, 2,717 அடி, கட்டடத்தின் உச்சியில் இருந்து பெறக் கூடிய காட்சி தனைத் தந்துள்ளது. எனவே, மனிதன் ஏற்படுத்திய மிக உயரமான இந்த இடத்தில் இருந்து பார்த்தால், எப்படி காட்சி இருக்கும் என்பதனை, நமக்கு மயக்கம் வராமலேயே தெரிந்து கொள்ளலாம். துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் இந்த கட்டடத்தின் மேலாக, கூகுள் ஸ்ட்ரீட் வியூ குழுவினர், தங்கள் கேமராக்களைக் கொண்டு சென்று, மூன்று நாட்கள், அரிய காட்சிகளைப் பிடித்து பதிந்து வந்துள்ளனர்.
கட்டடத்தின் 124 ஆவது மாடியில் இருந்து காட்சிகள் பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்கட்டடத்தின் பராமரிப்பு தளமான 73 ஆவது மாடியிலிருந்தும் பல அரிய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்ட்ரீட் வியூவின் ட்ரெக்கர் மூலம், மூன்று நாட்கள் உழைத்து, 360 டிகிரி கோணத்தில் பல காட்சிகள் எடுக்கப்பட்டு கிடைக்கின்றன. கூகுள் ஸ்ட்ரீட் வியூ தொடங்கிய பின்னர், விண்ணைத் தொடும் கட்டடம் ஒன்றிலிருந்து காட்சிகள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் தகவல்களுக்கும் காட்சிகளுக்கும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளங்களின் முகவரி
http://www.google.ae/intl/en/help/maps/streetview/gallery/burjkhalifa/burjkhalifaatthetopobservationdeck124thfloor.html

http://www.google.com/help/maps/streetview/learn/carstrikesandmore.html#trolley
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP