Powered by Blogger.

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்-2

Sunday, July 14, 2013

10. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள்: புதியதாக, அப்ளிகேஷன்களைச் சுருக்கி, ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் பார்க்கும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டு அப்ளிகேஷன்களை ஒன்றின் அருகே மற்றொன்றை வைத்துப் பார்க்கும் வசதி இது. உங்களிடம் பெரிய டிஸ்பிளே காட்டக் கூடிய மானிட்டர் இருந்தால், நான்கு அப்ளிகேஷன்களைக் கூட ஒன்றாக வைத்துக் காணலாம். இவற்றை ஒரே அளவில் வைத்து இயக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெவ்வேறு அகலத்தில் இவற்றின் காட்சியை செட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இருப்பதனால், மெயில் அல்லது வேறு பைலில் உள்ள படம் ஒன்றைக் கிளிக் செய்கையில், அது இன்னொரு அப்ளிகேஷனாக, அதே திரையில், அடுத்த விண்டோவாகக் காட்சியில் கிடைக்கிறது.

11. புதிய விண்டோஸ் ஸ்டோர் 8.1: விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டதாக உள்ளது. பக்க வாட்டில், அப்ளிகேஷன் வகைகளைப் பார்ப்பதைக் காட்டிலும், அவற்றைத் தேர்ந்தெடுக்க எளிதான வழி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரில் ஓர் அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், அது குறித்த காட்சி நமக்குத் தெளிவைத் தருகிறது. விண்டோஸ் 8ல் இது டேப்கள் வழியாகச் சற்று குழப்பத்தினைத் தந்தது. மேலும், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும், அதன் செயல்திறன் மதிப்பீடு (ratings) மிகப் பெரிய அளவில் காட்டப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான நட்சத்திர மதிப்பீடு அட்டவணை, குறிப்பிட்ட அப்ளிகேஷன் குறித்து அறிய சந்தர்ப்பம் அளிக்கிறது. அது மட்டுமின்றி, டாப் டென் லிஸ்ட் என, கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்கள் மற்றும் இலவச அப்ளிகேஷன்கள் பட்டியல் தரப்படுகிறது.

12. பின் நாளில் படிக்க: விண்டோஸ் 8.1 பதிப்பில், Reading List என்று ஒரு புதிய அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Share charm பயன்படுத்தி, இணையப் பக்கம் அல்லது அப்ளிகேஷன் ஒன்றைக் குறித்து வைக்க, அதனை லிங்க்காக Reading Listல் போட்டு வைக்கலாம். பின்னாளில், இந்த லிஸ்ட் பெற்று, தொடர்பில் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

13. போட்டோ எடிட்டிங்: விண்டோஸ் 8ல் தரப்பட்ட போட்டோ அப்ளிகேஷன் ஏமாற்றத்தினையே தந்தது. விண்டோஸ் 8.1ல், இது மிகப் பயனுள்ளதாகவும், அதிக செயல் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டோக்களை எடிட் செய்வதற்கு பல வகை டூல்ஸ் கொடுக்கப் பட்டுள்ளன. நீங்கள் டேப்ளட் பிசியில் போட்டோ எடுக்கும் பழக்கம் உள்ளவராயின், விண்டோஸ் 8.1 பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்க்கலாம். கேமரா ரோல் பட்டன், எக்ஸ்போஷர் டூல், டைமர், வீடியோ செட் செய்தல் ஆகிய டூல்கள் அனைத்தும், சார்ம் பாரில் உள்ள செட்டிங்ஸ் செக்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. (மவுஸின் வீல் போட்டோ அப்ளிகேஷனில் பல புதிய பயன்பாடுகளைத் தருகிறது. இந்த அப்ளிகேஷனில் மட்டுமின்றி, பல்வேறு அப்ளிகேஷன்களிலும், மவுஸின் வீல் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.)

14. அலாரம்: புதிதாகத் தரப்பட்டுள்ள அலாரம் அப்ளிகேஷன் நமக்குப் பலவழிகளில் பயன் தரக்கூடிய, புதிய அலாரம் கடிகாரத்தினை வழங்குகிறது. இதனை ஸ்டாப் வாட்ச் மற்றும் கவுண்ட் டவுண் சாதனமாகவும் பயன்படுத்தலாம். வீல் சுழற்றி நேரத்தை அமைப்பது எளிதான ஒன்றாக இங்கு தரப்பட்டுள்ளது. இதே போல கால்குலேட்டர் மேம்படுத்தப்பட்டு, அடிப்படை கணக்கீட்டு வசதிகளுடன், கன்வர்டர், மேதமடிக்ஸ் செயல்பாடுகள், சயின்டிபிக் கால்குலேட்டர் எனப் பல பயன் தரும் கால்குலேட்டராகத் தரப்பட்டுள்ளது.

15. உடல்நலத்திற்கான டிப்ஸ்: பிங் டூல் கிட் அமைப்பில், உடல் நலம் பேணுதல், உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி செய்தல் மற்றும் டிப்ஸ் வழங்கப்படுகின்றன.

16. மொபைல் ஹார்ட் ஸ்பாட் ஆக மாறும் கம்ப்யூட்டர்: உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் இணைய இணைப்பினை, மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி, விண்டோஸ் 8.1ல் தரப்பட்டுள்ளது. இதற்கேற்றார் போல, விண்டோஸ் 8.1 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.யை செட் செய்து கொள்ளலாம்.

17. பயோ மெட்ரிக் பாதுகாப்பு: விரல் ரேகை மூலம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது முன்பிருந்தே விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8.1ல் இந்த திறன், இணைந்தே கிடைக்கிறது. புதிய இடைமுகமாகவும் தரப்பட்டுள்ளது.
இன்னும் பல புதிய வசதிகளைத் தந்து, புதிய விண்டோஸ் 8.1 பதிப்பினைச் சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் மைக்ரோசாப்ட் நிறைவு செய்துள்ளது
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP