Powered by Blogger.

25 கோடி வாடிக்கையாளருடன் whatsApp

Sunday, July 14, 2013

இணையத்தில் மெசேஜ் அனுப்பிப் பெறுவதில் மிக வேகமாக இயங்கும் வாட்ஸ் அப் (WhatsApp) அமைப்பில், 25 கோடி பயனாளர்கள் தொடர்ந்து செயல்படும் வாடிக்கையாளர்களாக 25 கோடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் 20 கோடி பேர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த தகவல் கிடைத்துள்ளது. எனவே ஆன்லைன் மெசேஜ் சேவையில், அதிக எண்ணிக்கையுடன் செயல்படும் வாடிக்கையாளர்களைக் கொண்ட சேவையாக வாட்ஸ் அப் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்கைப் தளத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 கோடியாகும். வாட்ஸ் அப் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளே ஆவதால், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது.
வாட்ஸ் அப் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கிடைக்கிறது. நன்றாகவும் செயல்படுகிறது. நோக்கியாவின் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் கூட வாட்ஸ் அப் வசதி இயங்குகிறது. எந்தவித சிரமமும் இன்றி, இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை இணைத்து அனுப்புவது மிக எளிதான ஒன்றாகும். ஸ்மார்ட் போன் விற்பனை உலகளாவிய அளவில், குறிப்பாக இந்தியாவில், பெருகி வருவதால், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகிட வாய்ப்புகள் உள்ளன
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP