மொபைல் போன் தொழில்நுட்ப வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள
Friday, July 19, 2013
Mobile terms glossary
மொபைல் போன் தொழில்நுட்ப வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள உதவும் தளம்
www.gsmarena.com
Labels:
Mobile glossary
videocon A55 Hd spec
Wednesday, July 17, 2013

5-inch (1280 x 720 pixels) HD capacitive touch screen
display
1.2 GHz quad-core processor
Android 4.2 (Jelly Bean)
Dual SIM (GSM + GSM)
8MP rear camera with LED Flash
3.2MP front-facing camera
3.5mm audio jack
1GB RAM, 4GB internal memory, 32GB expandable
memory with MicroSD
3G (HSDPA: 42.2 Mbps, HSUPA: 11.5 Mbps), WiFi 802.11 b/
g/n, Bluetooth 4.0, GPS
2000 mAh battery
Price -12400.Rs
source- http://www.indianpriceinfo.in
Labels:
Videocon
சுருக்கமாக இணைய தளப் பெயர்களை அமைக்க
Tuesday, July 16, 2013
இணைய தளம் ஒன்றின் முகவரிகளை அட்ரஸ் பாரில் அமைக்கையில், அவற்றில் உள்ள எட்டு எழுத்துக் களுக்கான கீகளை அழுத்தத் தேவையில்லை. “www.” or “.com” ஆகிய கீகளை பெரும்பாலான இணைய முகவரிகளில் அமைக்கத் தேவையில்லை. அந்த தளத்தின் தனிப் பெயர் மட்டும் அமைத்தால் போதும். எடுத்துக்காட்டாக dinamalar என மட்டும் அமைத்துப் பின் கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். உங்களுடைய பிரவுசர் “www.” மற்றும் “.com” ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளும். இதே போல மற்ற வற்றில் முடியும் தளங்களின் பெயர்களை அமைக்கவும் சுருக்கு வழிகள் உள்ளன. “www” and “.net” என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து “www” and “.org” என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+என்டர் தட்டவும்
Read more...
Labels:
தொழில்நுட்பம்
திறக்கும் புரோகிராம் எதுவென்று தெரியலையா?
நண்பர்களிடம் இருந்தோ, அல்லது இன்டர்நெட்டில் இருந்தோ, புரோகிராம் ஒன்றை பெற்றிருப்போம். உடனே அதனை இயக்கிப் பார்க்க ஆசைப்பட்டு , அதில் டபுள் கிளிக் செய்து, ஆஹா, இதோ புரோகிராம் இயங்கப்போகிறது; அதில் உள்ள புது விஷயங்களைத் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் காட்டப் போகிறோம் என்று கர்வத்துடன் மானிட்டர் திரையைப் பார்ப்போம். ஆனால், அதில் இந்த புரோகிராமை எதில் திறக்க? என்ற வகையில் Open With என்று ஒரு சிறிய விண்டோ திறக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களின் பட்டியல் இருக்கும் - எம்.எஸ். ஆபீஸ் உட்பட. இதில் எதைத் தேர்ந்தெடுக்க? என்ற யோசனையில் சில நேரம் செலவழித்துவிட்டு, இதைக் கிளிக் செய்திடலாமே என்று ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். ஆனால் மீண்டும் சில நேரம் கழித்து இதை விண்டோஸ் இயக்கத்தினால் திறக்க முடியவில்லை. வேறு ஒரு புரோகிராமினை இன்டர்நெட்டில் தேடலாமா? என்று ஒரு பரிந்துரையுடன் கூடிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
என்ன செய்யலாம்? இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் விரக்தியின் விளிம்பு வரை சென்று கூகுள் சர்ச் இஞ்சினில் Open With என டைப் செய்து என்டர் தட்டினால், உடனே கிடைத்த பட்டியலில் openwith என்று ஒரு தளமே இருப்பது தெரிய வந்தது. அதனைத் திறந்து காண்கையில் இப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற் கென்றே இந்த தளம் உருவாக்கப்பட்டதனை உணர முடிந்தது. இந்த தளத்தைப் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. முதல் காரணம் இதன் சேவை முற்றிலும் இலவசம். அடுத்ததாக நாம் எதிர்பார்க்கும், மற்றும் எதிர்பாராத பல எக்ஸ்டென்ஷன்கள் கொண்ட பைல்களுக்கெல்லாம் இது திறக்கும் புரோகிராமின் பெயரைத் தருகிறது. ஏன் .PNG, .SQL, மற்றும் CKZ என்றெல்லாம் கூட எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன என்று இங்கு தான் அறிந்து கொண்டேன். நீங்கள் திறக்க விரும்பும் பைலின் எக்ஸ்டென்ஷன் பெயரின் முதல் எழுத்தை டைப் செய்தால் அந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எக்ஸ்டென்ஷன் உள்ள அனைத்து பைல்வகைகளின் பட்டியலும் அவற்றிற்கான புரோகிராம்களும் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 'B' என டைப் செய்தால் .BAT, .BFL என்ற எக்ஸ்டென்ஷன்கள் எல்லாம் காட்டப்படுகின்றன.
இவற்றைக் காட்டிவிட்டால் போதுமா? அதற்கான புரோகிராம் நம்மிடம் இல்லையே என்ற சூழ்நிலையும் ஏற்படும். இதற்கும் இந்த தளம் தீர்வினைத் தருகிறது. எந்த எக்ஸ்டென்ஷன் கொண்ட பைலைத் திறக்க புரோகிராமினைத் தேடுகிறீர்களோ அதில் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இருக்கும் தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இலவசமாக புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இது நிச்சயமாய் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு தளமாக உள்ளது. எனவே புக்மார்க் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி தேவைப்படும். இதன் முகவரி http://www.openwith.org/

ஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்?
கம்ப்யூட்டர் ஒன்றுக்கு ஒரு புரோகிராமினை உருவாக்க, போன் ஒன்றுக்கு அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைக்க, ஏன், ஓர் இணைய தளம் ஒன்றை அமைக்க, நாம் புரோகிராமிங் மொழிகள் பலவற்றில், ஏதேனும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த புரோகிராமிங் மொழிகள் மூலமாகத்தான், நாம் கம்ப்யூட்டர்கள் என்ன செய்திட வேண்டும் என்பதனைக் கூற முடியும். அதனுடன் நாம் நம் விருப்பத்தினைத் தெரிவிக்க முடியும். டாகுமெண்ட் தயாரிக்க, கேம் விளையாடுகையில் விருப்பங் களைத் தெரிவிக்க, போட்டோ ஒன்றினை எடிட் செய்திடுகையில், நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை உருவாக்க எனப் பல வேலைகளை இந்த புரோகிராமிங் மொழிகள் மூலமாகத்தான் நாம் மேற்கொள்ள இயலும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வேலை என்பதால், ஒவ்வொரு புரோகிராமிங் மொழி தேவைப்படுகிறது. நாம் பேசும் மொழிகளைப் போலவே, இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையறைகளுடன் இயங்குகின்றன. இயங்கும் தளங்களும் வேறுபட்டு இருக்கின்றன.
ஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்? அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே புரோகிராமிங் மொழி இருக்கக் கூடாதா? என்ற கேள்விகள் எழலாம். வெவ்வேறு செயல்பாட்டு வழிகளுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் பல இருப்பதால், புரோகிராமிங் மொழிகளும் நிறைய உள்ளன. சில புரோகிராமிங் மொழிகள், பல்வேறுபட்ட கம்ப்யூட்டர்களிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கக் கூடிய வகையில் உள்ளன. சில மொழிகள், புரோகிராம் ஒன்றில் உள்ளாக இயங்குபவையாக இருக்கின்றன.
(இவற்றை scripting languages என அழைக்கின்றனர்.) மற்றவை, புரோகிராம் முழுவதையும் உருவாக்குவதுடன், அதன் பல பிரிவுகளுக்கு விளக்கம் அளிப்பவையாகவும் உள்ளன. (இவற்றை system programming languages என அழைக்கிறோம்.) இவற்றில் சிலவற்றை அதன் எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.
ஸ்கிரிப்டிங் மொழிகள் என்று அழைக்கப்படும் மொழிகளில் ஓர் எடுத்துக்காட்டு, இணையப் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படும் (HTML) எச்.டி.எம்.எல். புரோகிராமிங் மொழியாகும். இது புரோகிராம் ஒன்றின், அதாவது, வெப் பிரவுசர் புரோகிராம் உள்ளாக இயங்குகிறது. பிரவுசர் ஒன்றின் செயல்பாடுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என விளக்குவது இதன் வேலை. டெக்ஸ்ட் டிஸ்பிளே செய்வது, படங்களைக் காட்டுவது, பயனாளர்களிடம் இருந்து ஆப்ஷன் மற்றும் படங்களைப் பெறுவது ஆகியவற்றை ஒரு பிரவுசரில் இது மேற்கொள்கிறது. ஒரு வெப் பிரவுசர், இந்த எச்.டி.எம்.எல். குறியீடுகளைப் புரிந்து கொண்டால், அதில் காட்டப்படும் இணையப் பக்கங்கள் நமக்குச் சரியாகக் கிடைக்கும்.
இதனுடன் வேறு ஒன்றை இணைத்து ஒப்பிட்டுப் பார்ப்போம். சி ப்ளஸ் ப்ளஸ் என்பது இன்று அனைவராலும் அவசியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராமிங் மொழியாகும். புரோகிராமர் ஒருவர் தான் விரும்பிய அனைத்தையும் கம்ப்யூட்டர் வழி செயல்பட வைத்திட, இந்த புரோகிராமிங் மொழி உதவுகிறது. இதன் தன்மை என்னவென்றால், அடிப்படை இடைமுகம் அமைப்பதிலிருந்து, புரோகிராமினை இயக்கும் மேத்தமடிகல் பார்முலாக்கள் வரை, அத்தனையும் சரியாக, முழுமையாக வடிவமைக்கப்பட்டு, புரோகிராமரால் இணைக்கப்பட வேண்டும். புரோகிராமிங் மொழிகளுக்கிடையேயான வேறுபாடுகளை அறிந்து கொள்ள ஒரு சின்ன எடுத்துக் காட்டினைப் பார்ப்போம். மேலே தரப்பட்டுள்ள அனைத்து புரோகிராமிங் மொழிகளின் குறியீடுகளும் hello world என்ற டெக்ஸ்ட்டைக் காட்டிட எழுதப்பட்ட புரோகிராம்களே. அவற்றின் அமைப் பிலிருந்து நாம் வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய அளவில், ஏறத்தாழ 20 புரோகிராமிங் மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரபலமான சிலவற்றை இங்கு வகைப்படுத்தித் தருகிறேன்.
1. விண்டோஸ் அப்ளிகேஷன்கள்: C#, Visual C++, Visual Basic.Net, DirectX API’s, HTML 5, Jav
2. மேக் ஓ.எஸ். அப்ளிகேஷன்கள்: Objective C, X Code with Cocoa Framework, Java
3. ஐபோன் அப்ளிகேஷன்கள்: Objective C with Cocoa Framework
4. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்: Java and some C#
5. இணையப் பக்கங்கள்: HTML, CSS, Flash, JavaScript, Java, PHP, Perl, ASP.net
6. டிவிக்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள்: Assembly and C#
மேலே தரப்பட்டுள்ள விளக்கங்கள், ஓரளவிற்கு புரோகிராமிங் மொழிகளின் வகைகளையும், அவற்றின் தேவைகளையும் தந்திருக்கும் . இவற்றிலிருந்து நீங்கள் உங்கள் தளத்தினைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான புரோகிராமிங் மொழிகளை ஆழமாகக் கற்கலாம்

இசை உலகில் மிக எளிதாகப் பயன்படுத்தப்படும் எம்பி3 ஆடியோ வடிவத்தினைக் கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டில் இது புழக்கத்தில் வந்தது
ஆடியோ பைல்களைச் சுருக்கிப் பயன்படுத்தும் இந்த அரிய கண்டுபிடிப்பிற்குச் சொந்தக்காரர் Karlheinz Brandenburg என்பவராவார். அவரிடம் கேட்டால், தான் மட்டுமல்ல, ஒரு குழுவே இணைந்து இதனைக் கண்டுபிடித்ததாகக் கூறுவார். எம்பி3 (MPEG1 Audio Layer III. MPEG – for Motion Picture Experts Group) என்ற இந்த பெயர் 1995ல் கொடுக்கப்பட்டாலும், இதற்கான ஆய்வு அதற்கும் முன்னால், சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. இதன் எளிய, வேகத்தன்மையைக் கண்டறிந்த அனைத்து ஆடியோ சாதனங்களின் தயாரிப்பாளர்களும் இதனை அப்படியே ஏற்றுக் கொண்டனர். 1997ல், இதனை இயக்க விண் ஆம்ப் வெளியானது. அதன் பின்னரே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் மீடியா பிளேயரை, எம்பி3 இயக்கும் வகையில் வெளியிட்டது. உலகளாவிய அளவில், மக்களின் இசைத் தாகத்தை எம்பி3 தீர்த்து வைத்தது
Read more...
Labels:
தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் TUESDAY என தனியே சொல்லப்படுகிறது? இந்த நாளின் விசேஷம் என்ன
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையும், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்திடும் பைல் தொகுப்புகளை, தன் இணைய தளத்தில் வெளியிடுகிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதல் தன் அனைத்து தொகுப்புகளுக்கும் தேவையான பைல்கள் அன்று கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, சென்ற மார்ச் இரண்டாம் செவ்வாய்க் கிழமை வெளியான பைல் தொகுப்பில், Internet Explorer, Silverlight, SharePoint, OneNote, மற்றும் Outlook for Mac ஆகிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைல்கள் தரப்பட்டன. நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் தொகுப்புகள், அந்த கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கும்போது, தானாகவே, மைக்ரோசாப்ட் இணைய தளத்தைத் தொடர்பு கொண்டு, இந்த பைல்களைத் தரவிறக்கம் செய்திடும். நாம் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, அவற்றைத் தானாகவோ, அல்லது நம் அனுமதியின் பேரிலோ, இன்ஸ்டால் செய்து கொள்ளும், இந்த செவ்வாய்க்கிழமையினை “Patch Tuesday” எனவும் பலர் அழைக்கின்றனர்.
Read more...
Labels:
தொழில்நுட்பம்
4ஜி மொபைல் சேவை என்பதின் அளவு என்ன?
4 ஜி என்பது மொபைல் தொழில் நுட்பத்தின் நான்காம் நிலை fourth generation cellular technology என்பதின் சுருக்கம். இந்த தொழில் நுட்பமும் பயன்பாடும், கொரியாவில் 2006 ஆம் ஆண்டில் சோதனை செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தலை காட்ட ஆரம்பித்தது. 4ஜி என எதனை அழைக்கலாம் என்பதற்கான தொழில் நுட்ப வரையறைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். ஒரு கார் அல்லது வேறு வாகனத்தில் செல்கையில், 4ஜி தொழில் நுட்பமானது விநாடிக்கு 100 மெகா பிட் தகவல்களைப் பரிமாற வேண்டும். இதுவே, அலுவலகம் போன்ற நிலைத்த இடங்களில், ஒரு கிகா பிட் ஆக இருக்க வேண்டும். தற்போது பல நாடுகளில், அமெரிக்கா உட்பட, இந்த தொழில் நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. அதற்கேற்ப மொபைல் ஸ்மார்ட் போன்களும், 4ஜி பயன்பாட்டில் இல்லாத நாடுகளிலும், இந்தியா உட்பட, சந்தையில் கிடைக்கின்றன. முதலில் அமைத்த வரையறைகளை இவை நிறைவேற்றுகின்றனவா என்பது கேள்விக்குரியது என்றாலும், தொடர்ந்து வேகத்தினை அதிகரிக்கும் பணியினை தொழில் நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் தற்போதைக்கு 3ஜி தொழில் நுட்ப அடிப்படையில் சேவை கிடைக்கிறது. அதுவும் நல்ல வேகத்திலேயே செயல்படுகிறது
Read more...
Labels:
தொழில்நுட்பம்
மொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்
இணையத்தில், ஒளிவு மறைவற்ற தன்மை, புதுமை மற்றும் புதிய சந்தர்ப்பங்களையும் வசதிகளையும் அமைத்தல் என்ற இலக்குகளை அமைத்து, கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாக, வெற்றிப் பெருமிதத்துடன் மொஸில்லா நிறுவனம் அறிவித்தது. இது நாம் அனைவரும் கண்டு, அனுபவித்து வரும் உண்மையே. புதிய தொழில் நுட்பம், திறவூற்று டிஜிட்டல் வளர்ச்சி, புதிய தளங்களில் செயல்பாடு, ஒவ்வொரு நாளும் புதிய பயனாளர்களைப் பெறுதல் என மொஸில்லாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளதை, யாரும் மறுக்க முடியாது. மொஸில்லாவின் வளர்ச்சியைக் கீழே தரப்பட்டுள்ள அதன் வரலாற்றுச் சாதனைகள், உறுதி செய்வதாக அமைந்துள்ளன.
1998 ஆம் ஆண்டு மார்ச் 31ல் மொஸில்லா திட்டம் உருவானது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் புதுமையையும், அவர்கள் விரும்புவதனையும் தரவேண்டும் என்பதனை இலக்குகளாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது. இலாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட இந்த திட்டம், இணையப் பயனாளர்கள் கைகளில், விருப்பப்பட்டவற்றைத் தருவதற்காக, பயர்பாக்ஸ் பிரவுசரை உருவாக்கியது.
2004 ஆம் ஆண்டில், பயர்பாக்ஸ் பதிப்பு 1 வெளியானபோது, நியூ யார்க் டைம்ஸ் இதழில் அறிவிக்கப்பட்ட ஒரு பக்க விளம்பரத்தினைப் பார்த்த, 10 ஆயிரம் பேர், அந்த விளம்பரத்திற்கான நிதியைக் கொடுத்து, தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர். இன்று, அனைத்து நாடுகளிலிருந்தும், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், நிதி உதவி செய்து வருகின்றனர். அன்டார்ட்டிகா கண்டத்திலிருந்தும் இதற்கு உதவி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு இணையம் பயன்படுத்துபவர்களில், 80 சதவீதம் பேர், பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.
பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் தொகுப்புகள், இணைய அனுபவத்தினை, அவரவர் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள இடம் அளித்து வருகின்றன. இந்த தொகுப்புகள் இதுவரை 300 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இணையத்தில் உலா வருபவர்களின் தனி நபர் தகவல்களை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதை, பயர்பாக்ஸ் பிரவுசர் தான் முதலில் எடுத்துச் சென்றது. இந்த வகையில் பிரைவேட் பிரவுசிங் போன்ற வழிகளைப் பயனாளர்களுக்குத் தந்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களின் தனி நபர் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
உலகளாவிய அளவில், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள் ஒரு சமுதாயமாக இணைக்கும் பணியினை மொஸில்லா மேற்கொண்டுள்ளது. இவர்கள், பயர்பாக்ஸ் பிரவுசரை உலகின் 89 மொழிகளில் மொழி பெயர்த்து அமைத்துள்ளனர். இதன் மூலம், உலகின் ஜனத்தொகையில் 95 சதவீதம் பேர் தங்கள் மொழிகளில், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்த முடிகிறது.
2008 ஆம் ஆண்டில், 80,02,530 பேர் ஒரே நாளில் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தரவிறக்கம் செய்தனர். இதன் மூலம் 24 மணி நேரத்தில் அதிகமான பேர்களால், தரவிறக்கம் செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ற கின்னஸ் உலக சாதனையை பயர்பாக்ஸ் பிரவுசர் மேற்கொண்டது. மொஸில்லா திருவிழா என ஆண்டு தோறும் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான இணைய வல்லுநர்கள் இதில் இணைந்து தங்கள் திறமையின் நிகழ்வுகளை மொஸில்லாவிற்கு அளிக்கின்றனர். இதன் மூலம், இணையத்தின் முழுத் திறனை மக்கள் அனுபவிக்க முடிகிறது.
மொஸில்லா வெப் மேக்கர் (Mozilla Webmaker) மூலம், இணையம் கற்ற ஓர் உலகத்தை அமைக்க முடிகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் இணையத்தை வடிவமைக்கத் தேவையான சாதனங்களை, சாப்ட்வேர் தொகுப்புகளாக அளிக்கிறது. இதே போல Mozilla WebFWD program என்பது, ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று வகையிலான புரோகிராமர்கள் மற்றும் புதியன கண்டுபிடிப்பாளர்களைப் புதியனவற்றை வடிவமைத்துத் தர உற்சாகப்படுத்தும் புரோகிராம் ஆகும். இதன் மூலம் இணைய பயன்பாடு இன்னும் மேன்மையடைகிறது.
Mozilla Developer Network என்பது மொஸில்லா சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களால் அமைக்கப்பட்ட ஒரு இணைய வெளி சமுதாயம். இச்சமுதாய உறுப்பினர்கள், மிகச் சிறந்த இணையச் செயல்பாட்டு விளக்கங்கள், சாதனங்கள் மற்றும் உரைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இவை ஏறத்தாழ 20 லட்சம் வாடிக்கையாளர்களை அடைகின்றன.
இந்த 2013 ஆம் ஆண்டில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. இதன் மூலம், ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் சிறப்புகளை முழுமையாக அடையலாம். இதன் மூலம், ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை நாடும் மக்களுக்கு, அதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தனிப்பட்ட முறையில் அதன் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும் என மொஸில்லா இலக்கு நிர்ணயித்துள்ளது.
மொஸில்லாவின் இந்தப் பணி ஒரு சமுதாயப் பணியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கானவர் செய்திடும் நிதி உதவியும், தன்னார்வ வல்லுநர்கள் வழங்கிடும் தொழில் நுட்ப உதவியும் இதனை ஈடேற்ற உதவுகின்றன. இணையம் என்பது எல்லாருக்கும் எந்த நேரமும் பயன்படுத்தும் ஒரு வெளியாக இருக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்களா! உடனே மொஸில்லாவின் இணைய சமுதாயத்தில் இணையுங்கள். உங்கள் பங்களிப்புதான் இன்னும் 15 ஆன்டுகள் அல்ல, பல ஆண்டுகள் மொஸில்லாவினையும், அதன் மூலம் இணையத்தையும், நம் மக்களையும் அர்த்தமுள்ள வாழ்க்கையினை மேற்கொள்ள வைக்கும்.

லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஹீட் ஸிங்கின் பணி என்ன?
வெப்பத்தினைக் கடத்தும் ஒரு சாதனம் heat sink. எலக்ட்ரானிக் சாதனங்கள் இயங்குகையில் உருவாகும் வெப்பத்தினைத் தொடர்ந்து கடத்தி அனுப்பும் பணியினை இது மேற்கொள்கிறது. இதனால், தொடர்ந்து உருவாகும் வெப்பத்தினால், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் செயல் தடைபடுவது தடுக்கப்படுகிறது. காரில் உள்ள ரேடியேட்டர் போன்ற வடிவமப்புடன் இது உருவாக்கப்பட்டு, லேப்டாப் கம்ப்யூட்டரில் அமைக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் ப்ராசசர், லேசர் டயோட், எல்.இ.டி. பல்ப் போன்ற, வெப்பத்தினை அதிகமாக வெளிப்படுத்தும் சாதனங்களுடன் இணைவாகப் பொருத்தப்பட்டு இவை இயங்குகின்றன. இவை வெப்பத்தினைக் கடத்துவதால், இந்த சாதனங்கள் இயங்க நிலையான, சரியான வெப்ப சூழ்நிலை தரப்படுகிறது.
Read more...
Labels:
தொழில்நுட்பம்
சமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க..
ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, அக்கவுண்ட் நீக்கும் வழியை நாடலாம்.
1.பேஸ்புக்:
இன்றைய நிலையில், மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு இரண்டு வழிகள் தரப்படுகின்றன. இந்த சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதால், நீங்கள் எவற்றை எல்லாம் இழக்கிறீர்கள் என்று தெரியாமல் இருந்தால், தற்போதைக்கு இதனை மூடிவிட்டு, பின் ஒரு நாளில், மீண்டும் இதனைப் புதுப்பிக்க நீங்கள் எண்ணலாம். அதற்கான வழி தரப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் செல்லவும். சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இனித் தொடர்பு கொள்ள முடியாது, இது உங்களுக்கு இசைவா? என ஒரு செய்தி தரப்படும். அதே நேரத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தினை விட்டு விலகுகிறீர்கள் எனக் கட்டாயமாகக் காரணத்தைப் பதிய வேண்டியதிருக்கும். இதனை முடித்த பின்னர், Confirm என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பதிவு மறைந்துவிடும். இனி, மீண்டும் நீங்கள் பதிவினைப் புதுப்பித்தால் மட்டுமே, நண்பர்களுடன் நீங்களும், நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முடியும். புதுப்பிக்க வழக்கம் போல அக்கவுண்ட் லாக் இன் செய்தாலே போதும். இப்படி இல்லாமல், நமக்கு இந்த பேஸ்புக் தொடர்பே வேண்டாம் என்று முடிவு செய்தால், நீங்கள் account removal பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு Delete My Account என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்டு உறுதி செய்யப்படும். பின்னர், அங்கு கிடைக்கும் கேப்சா சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின்னரும், உங்கள் அக்கவுண்ட் இரு வாரங்களுக்கு இருக்கும். இந்தக் காலத்தில், அந்த அக்கவுண்ட்டைப் புதுப்பிக்க நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் அக்கவுண்ட் காலாவதியாகி, நீக்கப்படும்.2. ட்விட்டர்:
அடுத்ததாக, பிரபலமாக இயங்கும் சமூக இணைய தளம் ட்விட்டர். இதிலிருந்து விலகும் முடிவினை எடுத்து விட்டீர்களா? ட்விட்டர் இணைய தளத்திற்கு வழக்கம் போலச் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் பதிவில் நுழையுங்கள். இணைய தளப் பக்கத்தில், வலது மேல் மூலையில் காணப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் பக்கத்தில் கீழாகக் காட்டப்படும் ‘Deactivate my account’ என்ற தொடர்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கும். தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட் பதிவு நீக்கப்படு வதாகவும், தொடர்ந்து 30 நாட்கள் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உங்கள் பதிவு நீக்கப்படும் என்று ஒரு செய்தி காட்டப்படும். இந்த 30 நாட்களில், மீண்டும் ட்விட்டர் இணையதளத் தொடர்பு தேவை என நீங்கள் எண்ணினால், வழக்கம் போல லாக் இன் செய்து தொடரலாம். 3. கூகுள் ப்ளஸ்:
கூகுள் இணைய தளத்தின் ஒரு பிரிவான, கூகுள் ப்ளஸ் பிரிவில் உள்ள உங்கள் அக்கவுண்ட்டினை, முழுவதுமாகவே நீங்கள் நீக்கிவிடலாம். இதற்கு முதலில் கூகுள் இணையதளம் (www.google.com) செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள உங்கள் அக்கவுண்ட் லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலாகப் பார்க்கையில் இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிந்தாலும், மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நீங்கள் கூகுள் ப்ளஸ் தொடர்பிலிருந்து விலக விரும்பினால், ‘Delete profile and remove related Google+ features’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இப்போது இதனைத் தேர்ந்தெடுப்பதால், ஏற்படும் விளைவுகள் பட்டியலிடப்படும். கூகுள் தளத்தில் பல இடங்களில் உங்களால் தொடர்பு கொள்ள முடியாது என எச்சரிக்கை கிடைக்கும். இவற்றில் எந்த சேவை எல்லாம் தேவை இல்லையோ, அவற்றை டிக் செய்திடவும். பின்னர் ‘Remove selected services’ என்பதில் கிளிக் செய்திடவும். இதற்குப் பதிலாக ‘Delete your entire Google profile’ என்பதில் கிளிக் செய்தால், யூட்யூப் மற்றும் குகூள் பஸ் முதற்கொண்டு பல சேவைகளை நீங்கள் இழக்க வேண்டியதிருக்கும். உங்கள் அக்கவுண்ட்டினை முழுமையாக நீக்க எண்ணினால், உங்கள் அக்கவுண்ட் பிரிவில் Account Management என்பதில் உள்ள ‘Close account and delete all services and information associated with it’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். பல நிலைகளில் உள்ள தகவல்களை இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கையில் நீக்க வேண்டியதிருப்பதால், மீண்டும் உங்களிடம் உறுதி செய்திடும் ஆப்ஷன் கேட்கப்படும். எனவே கூகுள் தரும் பல சேவைகளில் (AdSense முதல் YouTube வரை) எவை எல்லாம் வேண்டாமோ, அவற்றில் கிளிக் செய்து, உறுதி செய்திடவும். உறுதி செய்திடுகையில், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டு உறுதி செய்யப்படும். மீண்டும் ஒருமுறை ‘Yes, I want to delete my account’ என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.மேலே காட்டியுள்ள இணைய தளங்களுடன், Instagram மற்றும் Flickr போன்ற சமூக தளங்களும், இன்னும் சிலவும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இருந்து நம் பதிவுகளை நீக்குவது எளிதான வழியாகத் தரப்பட்டுள்ளது. எப்போது தேவை இல்லை என்று உணர்கிறோமோ, அப்போதே, நம்மால் ஏற்படுத்தியுள்ள தகவல்களைக் காப்பி எடுத்துப் பின்னர், பதிவை நீக்கிவிடலாம்.
இதன் தொடர்பில் இன்னொரு தகவலையும் இங்கு காணலாம். இது போன்ற அக்கவுண்ட்களை நீக்குவதற்கென accountkiller என்ற ஒரு புரோகிராம் உள்ளது. இதனை http://www.accountkiller.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் இணையதளங்களில் உள்ள அக்கவுண்ட்களை நீக்குவதில் உள்ள சிக்கல்களின் அடிப்படையில், அனைத்து தளங்களும் ஒயிட்லிஸ்ட், கிரே லிஸ்ட் மற்றும் பிளாக் லிஸ்ட் என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒயிட் லிஸ்ட் மிக எளிதான வழிகளைக் கொண்டுள்ள தளங்களையும், பிளாக் லிஸ்ட் சுற்றி வளைத்துச் செயல்பட்டு நீக்கும் தளங்களையும் கொண்டுள்ளன. இடையே உள்ள கிரே லிஸ்ட், சிக்கல்கள் சுமாராக உள்ளனவற்றைக் கொண்டுள்ளன
Labels:
தொழில்நுட்பம்
அனைத்து வகையான ட்ரைவர்களையும் ஒரே இடத்தில் தரவிறக்கம் செய்ய..
டிரைவர் CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த டிரைவரை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான டிரைவர்கள் முற்றிலும் இலவசமாக Windows XP, Windows 7(32-Bit) , Windows 7(64-Bit) போன்றவற்றுக்கு கிடைக்கும்.
Audio Drivers
Barebone Drivers
Bluetooth Drivers
EEE PC Drivers
Fax-Modem Drivers
Graphics Card Drivers
LCD Monitors Drivers
Mobile Phone Drivers
Modem Drivers
Motherboard Drivers
Mouse Drivers
Netbook Drivers
Networking Drivers
Notebook Drivers
Other Drivers
Printer Drivers
Scanner Drivers
Sound Drivers
TV-Card Drivers
Webcam Drivers
Wireless Drivers
ALL-DRIVER.COM
Read more...
Audio Drivers
Barebone Drivers
Bluetooth Drivers
EEE PC Drivers
Fax-Modem Drivers
Graphics Card Drivers
LCD Monitors Drivers
Mobile Phone Drivers
Modem Drivers
Motherboard Drivers
Mouse Drivers
Netbook Drivers
Networking Drivers
Notebook Drivers
Other Drivers
Printer Drivers
Scanner Drivers
Sound Drivers
TV-Card Drivers
Webcam Drivers
Wireless Drivers
ALL-DRIVER.COM
Labels:
தொழில்நுட்பம்
எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுத்து பயன்படுத்துவது சலிப்பைத் தருகிறது. இந்த முறையை மாற்ற முடியுமா
Monday, July 15, 2013
பாஸ்வேர்டை செயலற்றதாக மாற்றிவிடலாம். ஒரு சிறிய எச்சரிக்கை வேண்டுகோள். உங்கள் பாஸ்வேர்டினை முழுமையாக அழித்துவிடுவது நல்லதல்ல. கம்ப்யூட்டர் பயனாளர் என்ற முறையில், உங்களைச் சார்ந்த தகவல்கள் மற்றும் பைல்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் பணியைக் காட்டிலும் முக்கியமானதல்லவா! எனவே, பாஸ்வேர்டினை முழுமையாக நீக்காமல், ஒவ்வொரு முறையும் அதனைத் தந்து, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதனை மாற்றலாம். பாஸ்வேர்ட் இருப்பதனாலேயே, அதனைத் தந்து தான், உங்கள் பணியைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. Start அழுத்தி, பின் Run தேர்ந்தெடுங்கள். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் நீள விண்டோவில் control userpasswords2 என டைப் செய்திடவும். இதில் இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே ஒரு ஸ்பேஸ் இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
இப்போது ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் அந்த கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட்ஸ் குறித்த தகவல் தரப்படும். பயனாளர் பட்டியல் இருக்கும். இதில் உங்கள் பெயரைத் தேர்ந்தெடுங்கள். இங்கு Users must enter a user name and password to use this computer என்று இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் Apply என்பதில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து, உறுதி செய்திடுங்கள். அவ்வளவுதான். இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும், உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே செல்ல வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் அக்கவுண்ட்டிற்கான பாதுகாப்பு தொடரும்..

இணையதளம் - இன்று நான் தெரிந்து கொண்டேன்
எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன. சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பது நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும். இதனால், நம் அறிவும் விசாலமாகிறது. இது போன்ற தகவல்களை அன்றாடம் நமக்கு ஓர் இணையதளம் வழங்கினால் எவ்வளவு எளிதாக இருக்கும். இந்த இலக்குடனே ஓர் இணையதளம் இயங்குகிறது. அதன் முகவரி http://www.todayifoundout.com.
இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, அன்றைக்குப் புதியதாக பதியப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகள் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றன. பக்கத்தின் மேலாக, நாம் தேடிப் பெறுவதற்கென, சில வகைகள் தரப்பட்டுள்ளன. Articles, Quick Facts, Answers, Know It, This Day in History, and Infographics – என இவை அமைந்துள்ளன. இவற்றின் வழிதான் செல்ல வேண்டும் என்பதல்ல. நாம் விரும்பும் அல்லது தேடும் பொருள் குறித்து, கேள்வி அமைத்துத் தேடிப் பெறலாம்.
முதன்மைப் பக்கம் மட்டுமின்றி, பக்கங்களுக்குள் சென்றும் சில பிரிவுகளைக் காணலாம். இவற்றில் எனக்கு Myths and Misconcep tions என்ற பிரிவு மிகவும் ரசிக்கத்தக்கதாகவும், வியக்கத்தக்கதாகவும் உள்ளது. இந்தத் தகவல் குறிப்பினை எழுதுகையில், ஒவ்வொரு கண்டத்திற்கும் எப்படி அந்த பெயர் வந்தது என்ற சுவையான தகவல் தரப்பட்டிருந்தது. இதே போலவே பல வேறுபட்ட தகவல்கள் கிடைத்தன. இந்த தளத்தில் நம் மின் அஞ்சல் முகவரியினைப் பதிந்து வைத்தால், அன்றாடம் தளத்தில் பதியப்படும் தகவல்கள் குறித்து லிங்க் அஞ்சல் செய்யப்படுகிறது. அதில் கிளிக் செய்தால், இந்த தளத்தில் அத்தகவல் உள்ள பக்கம் கிடைக்கிறது. தகவல் தொகுப்பின் கீழாக, முன்னதாக மற்றும் அடுத்து உள்ள தகவல்களுக்கான லிங்க்கும் கிடைக்கும். இதில் கிளிக் செய்து தரப்பட்டிருக்கும் தகவல்களையும் காணலாம்.
அரிய தகவல்கள் தேடுவோர் அவசியம் காண வேண்டிய தளம் இது

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளின் பெயர்கள்...
கூகுள் தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு உணவுப் பதார்த்தங்களின் பெயரை வைத்து அழைத்து வருகிறது.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளின் பெயர்கள்.
Android 1.5 – Cupcake (கப்கேக்)
Android 1.6 – Donut (டோநட்)
Andorid 2.0 – Eclair (எக்ளேர்)
Android 2.2 Froyo (ப்ரையோ)
Android 2.3 – Gingerbread (ஜிஞ்சர் ப்ரெட்)
Android 3.0 – Honeycomb (ஹனி ஹோம்ப்)
Android 4.0 – Ice Cream Sandwich (ஐஸ்கிரீம் சாண்ட்விச்)
Android 4.1 – Jelly Bean (ஜெல்லிபீன்)

ஆண்ட்ராய்ட்
இணையதளம் - கொறிக்க கொஞ்சம் அறிவியல்
இணையத்தில் உலா வந்த போது, சயின்ஸ் ஸ்நாக்ஸ் (Science Snacks) என்ற தலைப்பு சற்று வேடிக்கையாக என் கண்ணில் பட்டது. வியந்து உள்ளே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மூளைக்கு தீனி (ஸ்நாக்ஸ்) போடும் அறிவியல் சமாச்சாரங்கள் என்று. அட, அப்படியா! என நாம் வியக்கும் வகையில், பல அறிவியல் விஷயங்களை இந்த இணைய தளம் நமக்குத் தருகிறது.
நாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. ஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது? பிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது?இது போன்ற சாதாரண விஷயங்களுக்கு நாம் விளக்கங்களைத் தேடி எங்கு செல்வது? பல இணைய தளங்கள் இருந்தாலும்,
http://www.exploratorium.edu/snacks/index.html என்ற முகவரியில் உள்ள தளம், இந்த கேள்விகளுக்கு நல்ல விளக்கத்தினைத் தருகிறது. இது போன்ற பல விஷயங்கள் இதில் மிகவும் எளிமையாகவும், அனைத்து தகவல்களுடனும் தரப்பட்டுள்ளன.
தளத்தில் நுழைந்தவுடன் இரண்டு வரிசைகளில் மேலே காட்டப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைத் தேடி, நாம் விரும்புவதைக் கிளிக் செய்தால், அங்கு நம் கேள்விக்கான விடை தரப்படுவதுடன், எளிய பொருட்கள் மூலம் எப்படி அவற்றை விளக்கலாம் என்றும் காட்டப்படுகிறது. இது தான் இந்த தளத்தின் சிறப்பு. Instructions, Advice, and Helpful hints என மூன்று பிரிவுகளில் இவை தரப்படுகின்றன. நீங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதில் உள்ள எளிய செயல்பாட்டினை மேற்கொண்டால் போதும். விஷயங்கள் தெளிவாகும்.
தளத்தின் முகப்பு பக்கத்தில் சயின்ஸ் ஸ்நாக்ஸ் மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளன. Science by Subject, Snack supplies, Snacks from az என இவை உள்ளன. முதல் பிரிவில் கெமிஸ்ட்ரி, கலர், மின்சாரம் எனத் தொடங்கி, பாடப்பிரிவுகள் பதினாறு பெரிய பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கிளிக் செய்தாலும் நாம் தேடும் தகவல்கள் கிடைக்கும். அறிவியலை மிக எளிதாகவும், விளக்கமாகவும் தரும் இந்த தளம் நாம் அடிக்கடி சென்று படித்து வர வேண்டிய ஒரு நல்ல புத்தகத் தளமாகும்.

அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?
Sunday, July 14, 2013
உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரில் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொண்டுள்ளவர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator.
அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ்டம் பைல்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமைப்பை பாதிக்கலாம். இந்த இரு வகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான், மற்றவர்கள், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது. முக்கியமான பைல்களை அழிக்க முடியாது. இஷ்டத்திற்கு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முடியாது.
சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடுத்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல், நீங்கள் இயக்க முயற்சிக்கையில், முதலில் திரையில் தோன்றும் கட்டத்தில், இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்துவதனை அனுமதிக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்படும். நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில், அந்தக் கம்ப்யூட்டரில் நுழையவில்லை என்றால், அந்த புரோகிராமினைத் திறக்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் உங்களுக்கு அனுமதி கிடைக்காது. பைல்களை அழிக்க முற்படுகையிலும், புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையிலும் இதே போல அனுமதி மறுக்கப்படும்.
அனுமதி மறுக்கப்படும் இந்த புரோகிராம்களை இயக்குவதற்கும், புதிய சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதற்கும், உங்களைப் பற்றிய குறிப்பு தொகுதியை (profile), ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் தொகுதியாக மாற்ற வேண்டும். உங்களால், அட்மினிஸ்ட்ரேட்டருக்கான சலுகைகளைப் பெறும் வகையில் நீங்கள் லாக் இன் செய்யவில்லை என்றால், முதலில் ஸ்டார்ட் மெனு திறக்கவும். பின்னர், “Shut Down” என்ற பட்டன் அருகே உள்ள, அம்புக்குறி ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர், “Switch User” என்பதனைத் தேர்ந்தெடுத்து, எந்த வித profileல் நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனையும் தேர்ந்தெடுக்கவும். கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் பிரிவை அணுக, மீண்டும் ஸ்டார்ட் மெனு திரும்பி, கண்ட்ரோல் பேனல் பட்டனை அழுத்தவும்.
கண்ட்ரோல் பேனல் மெனுவில், பச்சை நிறத்தில் உள்ள “User Accounts and Family Safety ,""தலைப்பில் கிளிக் செய்திடவும். இது விண்டோவில், மேல் வலது மூலையில் இருக்கும். இதில் “User Accounts” என்பதில் கிளிக் செய்து, ஆப்ஷன்ஸ் பெறவும். அடுத்து நீல வண்ணத்தில் தரப்பட்டிருக்கும் “Change Your Account Type,” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இது “Make Changes To Your User Account” என்பதன் கீழாகக் கிடைக்கும். இனி உங்கள் profile ஐ அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்ற, “Administrator” என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதன் பின் விண்டோவின் கீழாக உள்ள “Change Account Type” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
சில வேளைகளில், அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் நுழைவதனாலேயே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பைல்களையும் அணுக முடியாது. சில புரோகிராம்களை இயக்கும் முன், அதனை அட்மினிஸ்ட்ரேட்டராக இயக்க விரும்புவதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இந்த ஆப்ஷனைக் கேட்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், சில செக்யூரிட்டி புரோகிராம்கள் இந்த சோதனையை நடத்தும்.
ஏதேனும் சில புரோகிராம்கள், அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக லாக் இன் ஆன பின்னரும், அதன் முழு வசதிகளையும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றால், அதன் டெஸ்க்டாப் ஐகானில், ரைட் கிளிக் செய்து, Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துப் பின் இயக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேட்டர்
அக்கவுண்ட்டிற்கு சிஸ்டம் பைல்களை மாற்றும் அனுமதி தரப்படுவதால், நம் அன்றாட பணிகளுக்கு, மைக்ரோசாப்ட், ஸ்டாண்டர்ட் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறது. இதனால் சில வசதிக் குறைவுகள் ஏற்பட்டாலும், ஸ்பைவேர் மற்றும் வைரஸ் புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டரில் தங்கள் ஆளுமையை ஏற்படுத்துவது சிரமமாக மாறும். ஏன், முடியாமலே போகலாம்

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்-2
10. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள்: புதியதாக, அப்ளிகேஷன்களைச் சுருக்கி, ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் பார்க்கும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டு அப்ளிகேஷன்களை ஒன்றின் அருகே மற்றொன்றை வைத்துப் பார்க்கும் வசதி இது. உங்களிடம் பெரிய டிஸ்பிளே காட்டக் கூடிய மானிட்டர் இருந்தால், நான்கு அப்ளிகேஷன்களைக் கூட ஒன்றாக வைத்துக் காணலாம். இவற்றை ஒரே அளவில் வைத்து இயக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெவ்வேறு அகலத்தில் இவற்றின் காட்சியை செட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இருப்பதனால், மெயில் அல்லது வேறு பைலில் உள்ள படம் ஒன்றைக் கிளிக் செய்கையில், அது இன்னொரு அப்ளிகேஷனாக, அதே திரையில், அடுத்த விண்டோவாகக் காட்சியில் கிடைக்கிறது.
11. புதிய விண்டோஸ் ஸ்டோர் 8.1: விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டதாக உள்ளது. பக்க வாட்டில், அப்ளிகேஷன் வகைகளைப் பார்ப்பதைக் காட்டிலும், அவற்றைத் தேர்ந்தெடுக்க எளிதான வழி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரில் ஓர் அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், அது குறித்த காட்சி நமக்குத் தெளிவைத் தருகிறது. விண்டோஸ் 8ல் இது டேப்கள் வழியாகச் சற்று குழப்பத்தினைத் தந்தது. மேலும், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும், அதன் செயல்திறன் மதிப்பீடு (ratings) மிகப் பெரிய அளவில் காட்டப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான நட்சத்திர மதிப்பீடு அட்டவணை, குறிப்பிட்ட அப்ளிகேஷன் குறித்து அறிய சந்தர்ப்பம் அளிக்கிறது. அது மட்டுமின்றி, டாப் டென் லிஸ்ட் என, கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்கள் மற்றும் இலவச அப்ளிகேஷன்கள் பட்டியல் தரப்படுகிறது.
12. பின் நாளில் படிக்க: விண்டோஸ் 8.1 பதிப்பில், Reading List என்று ஒரு புதிய அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Share charm பயன்படுத்தி, இணையப் பக்கம் அல்லது அப்ளிகேஷன் ஒன்றைக் குறித்து வைக்க, அதனை லிங்க்காக Reading Listல் போட்டு வைக்கலாம். பின்னாளில், இந்த லிஸ்ட் பெற்று, தொடர்பில் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.
13. போட்டோ எடிட்டிங்: விண்டோஸ் 8ல் தரப்பட்ட போட்டோ அப்ளிகேஷன் ஏமாற்றத்தினையே தந்தது. விண்டோஸ் 8.1ல், இது மிகப் பயனுள்ளதாகவும், அதிக செயல் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டோக்களை எடிட் செய்வதற்கு பல வகை டூல்ஸ் கொடுக்கப் பட்டுள்ளன. நீங்கள் டேப்ளட் பிசியில் போட்டோ எடுக்கும் பழக்கம் உள்ளவராயின், விண்டோஸ் 8.1 பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்க்கலாம். கேமரா ரோல் பட்டன், எக்ஸ்போஷர் டூல், டைமர், வீடியோ செட் செய்தல் ஆகிய டூல்கள் அனைத்தும், சார்ம் பாரில் உள்ள செட்டிங்ஸ் செக்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. (மவுஸின் வீல் போட்டோ அப்ளிகேஷனில் பல புதிய பயன்பாடுகளைத் தருகிறது. இந்த அப்ளிகேஷனில் மட்டுமின்றி, பல்வேறு அப்ளிகேஷன்களிலும், மவுஸின் வீல் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.)
14. அலாரம்: புதிதாகத் தரப்பட்டுள்ள அலாரம் அப்ளிகேஷன் நமக்குப் பலவழிகளில் பயன் தரக்கூடிய, புதிய அலாரம் கடிகாரத்தினை வழங்குகிறது. இதனை ஸ்டாப் வாட்ச் மற்றும் கவுண்ட் டவுண் சாதனமாகவும் பயன்படுத்தலாம். வீல் சுழற்றி நேரத்தை அமைப்பது எளிதான ஒன்றாக இங்கு தரப்பட்டுள்ளது. இதே போல கால்குலேட்டர் மேம்படுத்தப்பட்டு, அடிப்படை கணக்கீட்டு வசதிகளுடன், கன்வர்டர், மேதமடிக்ஸ் செயல்பாடுகள், சயின்டிபிக் கால்குலேட்டர் எனப் பல பயன் தரும் கால்குலேட்டராகத் தரப்பட்டுள்ளது.
15. உடல்நலத்திற்கான டிப்ஸ்: பிங் டூல் கிட் அமைப்பில், உடல் நலம் பேணுதல், உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி செய்தல் மற்றும் டிப்ஸ் வழங்கப்படுகின்றன.
16. மொபைல் ஹார்ட் ஸ்பாட் ஆக மாறும் கம்ப்யூட்டர்: உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் இணைய இணைப்பினை, மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி, விண்டோஸ் 8.1ல் தரப்பட்டுள்ளது. இதற்கேற்றார் போல, விண்டோஸ் 8.1 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.யை செட் செய்து கொள்ளலாம்.
17. பயோ மெட்ரிக் பாதுகாப்பு: விரல் ரேகை மூலம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது முன்பிருந்தே விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8.1ல் இந்த திறன், இணைந்தே கிடைக்கிறது. புதிய இடைமுகமாகவும் தரப்பட்டுள்ளது.
இன்னும் பல புதிய வசதிகளைத் தந்து, புதிய விண்டோஸ் 8.1 பதிப்பினைச் சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் மைக்ரோசாப்ட் நிறைவு செய்துள்ளது

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்-1
விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.
1. ஸ்டார்ட் ஸ்கிரீன்: முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ்கள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து, புரோகிராம்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களைக் காட்ட மொத்தம் நான்கு வகை ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அத்துடன், டெஸ்க்டாப்பின் டாஸ்க்பாரில் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுத்து, அதன் டேப்களில் கிளிக் செய்தால், நமக்கு பலவகை boot to desktop, default to Apps view in the Start screen, and list desktop apps first in the Apps view என ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பயனாளரின் விருப்பத்திற்கேற்ற கம்ப்யூட்டராக மாற்றப்பட்டுகிறது. விண்டோஸ் 8ல், மைக்ரோசாப்ட் வடிவமைத்த கட்டமைப்பிற்குள் நாம் வளைய வேண்டி இருந்தது.
2. அப்ளிகேஷன்கள்: அப்ளிகேஷன்கள், திரையை ஒருமுறை ஸ்வைப் செய்தால் கிடைக்கின்றன. தொடுதிரை இல்லாத சாதனங்களில், ஒரு அம்புக்குறியினைக் கிளிக் செய்தால் போதுமானது. நான்கு வகையாக அப்ளிகேஷன்களைப் பிரித்து அடுக்கி வைத்து, எளிதாகப் பயன்படுத்தலாம். அப்ளிகேஷன்களைக் கண்டறிய அதிகத் தேடல் நேரம் தேவைப்படுவதில்லை.
3. டைல்ஸ்களை குரூப்பாக அமைத்தல்: விண்டோஸ் 8ல், ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் தேவைகளுக்கேற்ப அமைப்பது சற்று சிரமமானதாக இருந்தது. சிறிய வேலைகளுக்குக் கூட, பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1ல், இந்த செயல்பாடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு கிளிக்கில், ஆறு அப்ளிகேஷன்களை ஒரு குழுவாக அமைக்கலாம். குழுவாக அமைக்கப்பட்ட டைல் ஒன்றின் தன்மையை, மாற்றி அமைக்கலாம்; டைலின் அளவை மாற்றலாம்; நகர்த்தலாம்; டாஸ்க்பாரில் ஒட்டலாம் அல்லது நீக்கலாம். ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு நிலைக்கு மாற்றித்தான், குரூப்பின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டும் மாற்றலாம்.
4. கண்ட்ரோல் பேனல் மாற்றம்: விண்டோஸ் 8 கண்ட்ரோல் பேனல் முழுமையடையாத தோற்றத்தினையும் செயல்பாட்டினையும் கொண்டிருந்தது. சிறிய, எளிய வேலைகளுக்குக் கூட, டெஸ்க்டாப் செல்ல வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1 ல், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான செயல்பாடுகள், புதிய ஆப்ஷன்கள் அனைத்தும் ஒன்பது வகைகளிலும், இவற்றின் 42 துணைப் பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலின் டிஸ்பிளே டயலாக் பாக்ஸ் தோற்றம், 1990லிருந்து மாற்றப்படாமலேயே இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட்டில், இது முற்றிலும் புதிய தோற்றத்தையும் உணர்வினையும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
5. ஸ்கை ட்ரைவ் இணைந்தே உள்ளது: ஒரு புதிய யூசர் அக்கவுண்ட் செட் செய்திடுகையில், SkyDrive உடன் இணைக்க பயனாளருக்கு ஓர் ஆப்ஷன் தரப்படுகிறது. இதற்கு விருப்பம் தெரிவித்தால், புதிய கம்ப்யூட்டர் அமைப்பில், இந்த வசதி தரப்படுகிறது. வெளியே இருந்து எந்த வசதியும் தேவைப்படுவதில்லை. SkyDrive இதிலேயே ஒருங்கிணைக்கப்படுவதால், இது விண்டோஸ் ஆர்.டி. சாதனத்திலும் செயல்படும்.
6. திரும்பக் கிடைத்த ஸ்டார்ட் பட்டன்: பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறையாகக் கூறிய ஸ்டார்ட் பட்டன் இல்லாமை, இதில் நிவர்த்தி செய்யப்பட்டு, ஸ்டார்ட் பட்டன் தரப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ட் பட்டனை, எந்த செயல்பாடும் மறைக்க முடியாது. ஒரு சின்ன கிளிக், நம்மை ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மாற்றமாக, ரைட் கிளிக்கில் கிடைக்கும் பவர் யூசர் மெனுவில் தரப்படும் Shutdown ஆப்ஷன்களைக் குறிப்பிடலாம்.
7. பைல் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப் பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் தரும் மாற்றம் கிடைத்துள்ளது. ஒரு ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் ஷார்ட்கட் மெனுவில், Libraries மீண்டும் அமைக்கலாம். இந்த மாற்றம் மூலம் This PC என்பது Computer ஆக மாறுகிறது.
8. டெஸ்க்டாப் ஆப்ஷன்ஸ்: விண்டோஸ் 8.1 பெர்சனல் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 கம்ப்யூட்டராக மாற்றி அமைக்க வேண்டும் என விருப்பப்பட்டால், தொடக்கத்தில் கிடைக்கும் ஸ்கிரீனைத் தாண்டி, டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை நேரடியாகக் காட்டும் படி அமைக்கலாம். தேவையற்ற, நம் கவனத்தைச் சிதற அடிக்கும் விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களைத் தவிர்க்கலாம்.
9. எங்கும் எதையும் தேடலாம்: விண்டோஸ் கீ + S அழுத்தினால், தேடல் கட்டம் உடனே கிடைக்கிறது. இதில் நம் தேடலை உடனே செயல்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்தது போல, இதனைத்தான் தேடப் போகிறேன் என, வரையறை தர வேண்டியதில்லை. நீங்கள் தரும் தேடலுக்கான சொற்கள், அப்ளிகேஷன்கள், செட்டிங்ஸ் அல்லது இணையம் சார்ந்தவை என எதுவாகவும் இருக்கலாம்

பூமியின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட்
இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டெகாபோ ஏரியின் அருகே இருந்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் மூலம், இணைய தொடர்பு கிடைக்க இயலாத, பூமியின் பல இடங்களில் வாழும் 480 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்க இருக்கிறது.
லூன் திட்டம் (Loon Project) என அழைக்கப்படும் இந்த திட்டம், தொலைவான இடங்களில் வாழும் அனைவருக்கும், எப்படியேனும், இணைய இணைப்பினைத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய பலூன்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, இணைய இணைப்பு தருவதற்கான ட்ரான்ஸ்மீட்டர் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 30 பலூன்கள், பூமிக்கு மேலே 12 மைல் தூரத்தில், ஸ்ட்ராட்டோ ஸ்பியர் என அழைக்கப்படும் பகுதியில் பறக்கவிடப்படும். இவற்றின் விட்டம் 49 அடி. 780 ச.மைல் அல்லது 1,250ச. கிலோ மீட்டர், பரப்பில் வாழும் மக்களுக்கு, ஒவ்வொரு பலூனும் இணைய இணைப்பினை வழங்க முடியும். இந்த பலூன்கள், கூகுள் எக்ஸ் சோதனைச் சாலையில், கூகுள் கிளாஸ் மற்றும் கூகுள் ட்ரைவர் இல்லாமல் இயங்கும் கார் ஆய்வுத் திட்ட விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள், இணைய இணைப்பிற்கென, பைபர் கேபிள்களை அமைப்பதற்கான செலவினை மேற்கொள்வது கடினம் என்பதால், இந்த ஏற்பாட்டினை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த இணைய பலூன்கள், மிக மெல்லிய பாலிதைலீன் பிலிம் கொண்டு உருவாக்கப்பட்டவை.
நியூசிலாந்தின் தெற்கு ஏரி அருகே இருந்து அனுப்பப்பட்ட இவை, வெகு எளிதாக, ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றதாக, இதனை அனுப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவை நம் கண்களுக்குப் புலப்படாத தூரத்தில் பறந்து இணைய இணைப்பினை வழங்கி வருகின்றன. இதில் இணைக்கப்பட்டுள்ள, சிறிய டேபிள் அளவில் உள்ள சோலார் பேனல்கள், இவை செயல்படுவதற்குத் தேவையான மின் சக்தியை நான்கு மணி நேரத்தில் பெற்று தருகின்றன. தரையில் அமைக்கப்பட்டுள்ள இணையக் கட்டமைப்பில் செயல்படும் மையங்களிலிருந்து, இந்த இணைய பலூனில் உள்ள ரிசீவர்களுக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு பலூனும், 780 சதுர மைல் அளவில், இணையத் தகவல்களை வழங்குகின்றன. அது மட்டுமின்றி, ஒரு பலூனிலிருந்து, அதிக பட்சம் ஐந்து பலூன்களுக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. ஸ்ட்ராட்டோஸ்பியர் என அழைக்கப்படும், குறிப்பிட்ட விண் எல்லையில், இந்த பலூன்கள் சென்று செயல்படத் தொடங்குகையில், மனிதனின் கண்களுக்கு இவை புலப்படாது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால், விண் வெளியில், ஓர் இணைய இணைப்புக் கட்டமைப்பு ஏற்படுகிறது.
இதன் மூலம் உலகின் அனைத்து மூலைகளுக்கும் இணைய தொடர்பினை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானின், மிக ஆழமான, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அங்கு வசிக்கும் மக்களையும், இந்த பலூன் வெளிப்படுத்தும் சிக்னல்கள் எளிதாக அடைய முடிந்தன. நூற்றுக்கு நான்கு பேர் மட்டுமே இணைய இணைப்பு தற்போது பெற்று வரும், கேமரூன் நாடு முழுவதும், இந்த பலூன்கள் இணைய இணைப்பினைத் தந்தன. பைபர் கேபிள்களை அமைத்து இணைய இணைப்பினை வழங்குவதைக் காட்டிலும், பரந்து விரிந்த ஆகாயத்தைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், உலகம் முழுமைக்கும் இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற இலக்குடன் இந்த பலூன் இணைய இணைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல நூறு இணைய பலூன்களை, விண்வெளியில், வளையங்களாக நிற்க வைத்து, இணைப்பு கொடுத்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பு வழங்குவதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என இத்திட்டத் தலைவர் மைக் கேசிடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் செயல்பாட்டினை சோதனை செய்திட, உலகின் பல இடங்களில் இருந்து, தன்னார்வ இணையப் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் வீடுகளில், பாஸ்கட் பால் அளவிலான, சிகப்பு ரிசீவர்கள் பொருத்தப்பட்டன. பயனாளர்களுக்குத் திட்டத்தின் முழு விபரமும் வழங்கப்படவில்லை. இணைய இணைப்பு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களே திரட்டப்பட்டன.
இந்த இணைய பலூன்கள், 3ஜி தகவல் வேகத்தைக் கொண்டுள்ளன. உலகில், மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில், இந்த இணைய இணைப்பு பலூன்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது எளிதாகும். இதனால் உயிர் இழப்பு தடுக்கப்படும்.
இவ்வகை இணைப்பின் மூலம், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், கூகுள் போன்ற இணைய விளம்பர நிறுவனங்களின் வருமானம் பெருகும். இந்த திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என கூகுள் அறிவிக்கவில்லை.
பதினெட்டு மாத கடும் உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த இணைய பலூன்களின் செயல்பாடு சாத்தியமாகியுள்ளது.
கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த பலூன்கள் ஏவப்பட்டன. இந்த இடம் இந்த திட்டத்திற்கேற்ற இடமாக, கூகுள் தேர்ந்தெடுத்தது. 2011 ஆம் ஆண்டு, ஏற்பட்ட நில அதிர்வில், இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள், உலகின் மற்ற இடங்களுடன் தொடர்பற்ற நிலையில், பல வாரங்கள் வாழ்ந்தனர். நில அதிர்வில், 185 பேர் பலியாயினர். இது போன்ற பேரிடர் நிகழ்வுகளில், இணைய பலூன் இணைப்பு செயல்பட்டு, மக்கள் இறப்பதைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய தகவல்களையும், உதவியையும் வழங்க இயலும்

ஆண்ட்ராய்ட் போன்களில் பேட்டரி பாதுகாப்பு
பொதுவாக, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில், சக்தி மிக்க பேட்டரிகளே தரப்படுகின்றன. இருப்பினும், சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், இந்த பேட்டரிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம். அவற்றில் சில இங்கு பட்டியலிடப்படுகின்றன. இங்கு சுட்டிக் காட்டப்படுபவை, பொதுவான வழிகளாக, அனைத்து போன்களுக்கும் செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். தற்போது வரும் நவீன ஆண்ட்ராய்ட் போன்களில், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மின்சக்தியை எவ்வளவு பயன்படுத்துகின்றன என்று காட்டும் வரைபடங்கள் கிடைக்கின்றன.
இவற்றைக் கொண்டு, அதிக பேட்டரி சக்தியினை எடுத்துக் கொள்ளும் புரோகிராம்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தேவை இல்லை எனில், நிறுத்தி வைக்கலாம்.
1. போனை குளுமையாக வைக்கவும்: போன் வெப்பமான சூழ்நிலையில் செயல்படுவது, பேட்டரியின் செயல்பாட்டினைக் குறைக்கும் என்பதனைப் பலர் அறியாமல் இருக்கின்றனர். எனவே, அதிக வெப்பம் உள்ள இடங்களில், மொபைல் போன்களைக் கையில் எடுத்துச் செல்வதைக் காட்டிலும், பாக்கெட்டில், கைப் பைகளில் வைத்துக் கொள்ளலாம்.
2. திரை ஒளியை குறித்திடவும்: போன் திரையின் டிஸ்பிளே ஒளி அதிகமாக இருப்பது, பேட்டரியின் திறனை அதிகமாகவே உறிஞ்சும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்ட் போன்களில் இது சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த போன்களில் autobrightness setting என்ற வசதி தரப்பட்டுள்ளது. வெளி வெளிச்சத்திற்கேற்ற வகையில், இது திரைக் காட்சியின் ஒளி அளவைக் கட்டுப்படுத்தி அமைக்கும்.
3. திரைக் காட்சி மறைதல்: ஆண்ட்ராய்ட் போன்கள் தானாகவே, திரையின் ஒளி அளவைக் குறைத்து, இறுதியில் முற்றிலுமாக அணைத்துவிடும் வசதி கொண்டவை. இதற்கான கால அளவை நாமாக செட் செய்திடலாம். இதனை மிகக் குறைவாக அமைத்து வைப்பது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்கும். சாம்சங் காலக்ஸி Note 2 போன்ற போன்களில் Smart stay என்றொரு வசதி தரப்பட்டுள்ளது. போனைப் பயன்படுத்துபவர் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதனை, இது அறிந்து கொண்டு, திரை ஒளியை மட்டுப்படுத்தாமல் வைக்கிறது. பின்னர் அணைத்துவிடுகிறது.
4. மின் சக்தி சேமிப்பு: பெரும்பாலான போன்களில், மின்சக்தி வீணாவதனைத் தடுத்து, Power saving என்னும் சேமிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. செயல்படாத, வை-பி, புளுடூத் போன்ற ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் வசதிகளை நிறுத்தி வைக்கும். ஆனால், இந்த Power saving வசதி, போன் சிஸ்டம் செயல்படுவதனையும் மட்டுப்படுத்தும் என்பதால், இதனை பேட்டரி பவர் மிகவும் கீழாக இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில போன்களில், பேட்டரியின் நிலை 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்போது, தானாகவே கணிதீஞுணூ ண்ச்திடிணஞ் வசதி இயக்கப்படுகின்ற வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
5. அதிர்வை தடுக்கவும்: பெரும்பாலான போன்களில், போனுக்கு அழைப்பு வருகையிலும், மெசேஜ் கிடைக்கும்போதும், ஒலியோடு, போன் அதிர்வும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் சக்தியைப் பெரும் அளவில் எடுத்துக் கொள்ளும். எனவே, ஏதாவது ஒன்றினை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். அதிர்வினை இயங்காமல் வைப்பது, பேட்டரியின் வாழ்நாளை அதிகப்படுத்தும்.
6. ரேடியோ அலைப் பயன்பாட்டினைத் தடுத்தல்: ஆண்ட்ராய்ட் போன்களில், வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். போன்ற ரேடியோ அலைப் பயன்பாட்டு வசதிகள் அனைத்தும், பேட்டரியின் சக்தியை அதிகம் எடுத்துக் கொள்ளும். எனவே, புளுடூத் ஹெட்செட் பயன்படுத்தவில்லை எனில், புளுடூத் வசதியை எப்போதும் அணைத்தே வைக்கலாம். ஜி.பி.எஸ். வசதியை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இதனையும் அணைத்தே வைக்கலாம்.
7. ஹேப்டிக் பீட்பேக் (haptic feedback): பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன்களில், கீகளை அழுத்தும் போது, மெலிதான அதிர்வு கிடைக்கும். இதுவும் பேட்டரி திறனைக் குறைக்கும் என்பதால், இந்த வசதி பலருக்குத் தேவை இல்லை என்பதால், இதனை நிறுத்தி வைக்கலாம்.
8. அவ்வப்போது ரீ பூட் செய்க: ஆண்ட்ராய்ட் போன்கள் அனைத்தும் கைகளில் நாம் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர்களே. நாட்கள் செல்லச் செல்ல, பெரிய கம்ப்யூட்டர்களில் புரோகிராம்கள் அதிகம் பதியப்படுவதைப் போல, இந்த போன்களிலும் பதியப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன. இவை பேட்டரியின் வாழ்நாளைக் குறைக்கின்றன. போனை ரீ பூட் செய்திடுவது, பேட்டரியின் வாழ்நாளை அதிகப்படுத்தாது என்றாலும், அவ்வப்போது போனை ரீ பூட் செய்வது, போனை எந்த கூடுதல் புரோகிராமும் இல்லாமல் செயல்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும். இதனால், பயன்படுத்தப்படும் மின் சக்தி குறைவாக இருக்கும்.
9. அறிவிப்புகள் எதற்கு? பல இணையதளங்கள், குறிப்பாக சமூக இணைய தளங்கள், திடீர் திடீரென அறிவிப்புகளை வழங்கும். பின்னணியில் இயங்குவதை இவை குறிக்கின்றன. குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்கள் இவற்றை அதிகமாகவே வழங்குகின்றன. இவை கட்டாயம் பார்க்கப்பட வேண்டும் என்ற நிலையில் மட்டுமே இவற்றை இயக்க நிலையில் வைக்கவும். இல்லை எனில், தேவைப்படும்போது மட்டுமே இவற்றை இயக்கலாம்.
10. கூடுதலாக ஒரு பேட்டரி: தொடர்ந்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், வர்த்தக மற்றும் அலுவலகப் பணிகளுக்கும் போன்களைப் பயன்படுத்துபவர்கள், பேட்டரியை சார்ஜ் செய்திடும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பார்கள். இவர்கள், கூடுதலாக, போனுக்குரிய பேட்டரி ஒன்றினை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. இது சுமையாக இருந்தாலும், நாம் தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தும்.

ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ்
வாட்ஸ் அப் (Whatsapp) என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் புரோகிராம், ஒரே நாளில் 2,700 கோடி செய்திகளைக் கையாண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ் அமைப்பில், இதுவரை ஒரு நாளில் அதிக பட்சமாக நூறு கோடி செய்திகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதனை ஒப்பிடுகையில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் விஸ்வரூப சாதனை புரிய வரும்.
வாட்ஸ் அப் மெசேஜ் புரோகிராமில், மெசேஜ் சேவை ஒரு போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலவசமாக எஸ். எம்.எஸ். சேவை தரப்படுவதால், எஸ். எம்.எஸ். கட்டணம் அதிகமாகவுள்ள இந்தியா போன்ற நாடுகளில், இந்த சேவை அதிக பிரபலமடைந்துள்ளது. மேலும், நோக்கியா ஆஷா போன்ற, ஸ்மார்ட் போன் அல்லாத மொபைல் போன்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது போன்ற வசதிகளால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1,800 கோடி மெசேஜ்களைக் கையாண்ட வாட்ஸ் அப் அப்ளிகேஷன், தற்போது 2,700 கோடிக்குத் தாவியுள்ளது. எந்த இணைய சேவையும் இது போல திடீரென உயர்ந்த நிலையை அடைந்ததில்லை.

தெரிஞ்சுக்கலாமா!..
பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும். வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது ட்ரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்
Read more...
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது ட்ரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்
Labels:
தொழில்நுட்பம்
உலகின் உயரமான கட்டடத்தில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ
கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ பிரிவு, அண்மையில், உலகிலேயே மிக உயரமான, 2,717 அடி, கட்டடத்தின் உச்சியில் இருந்து பெறக் கூடிய காட்சி தனைத் தந்துள்ளது. எனவே, மனிதன் ஏற்படுத்திய மிக உயரமான இந்த இடத்தில் இருந்து பார்த்தால், எப்படி காட்சி இருக்கும் என்பதனை, நமக்கு மயக்கம் வராமலேயே தெரிந்து கொள்ளலாம். துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் இந்த கட்டடத்தின் மேலாக, கூகுள் ஸ்ட்ரீட் வியூ குழுவினர், தங்கள் கேமராக்களைக் கொண்டு சென்று, மூன்று நாட்கள், அரிய காட்சிகளைப் பிடித்து பதிந்து வந்துள்ளனர்.
கட்டடத்தின் 124 ஆவது மாடியில் இருந்து காட்சிகள் பிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்கட்டடத்தின் பராமரிப்பு தளமான 73 ஆவது மாடியிலிருந்தும் பல அரிய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்ட்ரீட் வியூவின் ட்ரெக்கர் மூலம், மூன்று நாட்கள் உழைத்து, 360 டிகிரி கோணத்தில் பல காட்சிகள் எடுக்கப்பட்டு கிடைக்கின்றன. கூகுள் ஸ்ட்ரீட் வியூ தொடங்கிய பின்னர், விண்ணைத் தொடும் கட்டடம் ஒன்றிலிருந்து காட்சிகள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் தகவல்களுக்கும் காட்சிகளுக்கும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளங்களின் முகவரி
http://www.google.ae/intl/en/help/maps/streetview/gallery/burjkhalifa/burjkhalifaatthetopobservationdeck124thfloor.html
http://www.google.com/help/maps/streetview/learn/carstrikesandmore.html#trolley

Google
25 கோடி வாடிக்கையாளருடன் whatsApp
இணையத்தில் மெசேஜ் அனுப்பிப் பெறுவதில் மிக வேகமாக இயங்கும் வாட்ஸ் அப் (WhatsApp) அமைப்பில், 25 கோடி பயனாளர்கள் தொடர்ந்து செயல்படும் வாடிக்கையாளர்களாக 25 கோடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் 20 கோடி பேர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த தகவல் கிடைத்துள்ளது. எனவே ஆன்லைன் மெசேஜ் சேவையில், அதிக எண்ணிக்கையுடன் செயல்படும் வாடிக்கையாளர்களைக் கொண்ட சேவையாக வாட்ஸ் அப் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்கைப் தளத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 கோடியாகும். வாட்ஸ் அப் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளே ஆவதால், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது.
வாட்ஸ் அப் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கிடைக்கிறது. நன்றாகவும் செயல்படுகிறது. நோக்கியாவின் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் கூட வாட்ஸ் அப் வசதி இயங்குகிறது. எந்தவித சிரமமும் இன்றி, இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை இணைத்து அனுப்புவது மிக எளிதான ஒன்றாகும். ஸ்மார்ட் போன் விற்பனை உலகளாவிய அளவில், குறிப்பாக இந்தியாவில், பெருகி வருவதால், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகிட வாய்ப்புகள் உள்ளன

பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
மொஸில்லா நிறுவனம், தான் அறிவித்தபடி, மொபைல் போன்களுக்கான தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து எங்கெல்லாம் இயலுமோ, அந்த நாடுகளில் எல்லாம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்ட மொபைல் போன்களை வெளியிட, மொஸில்லா முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்மார்ட் போன்களுக்கானது. திறவூற்று அடிப்படையில் யார் வேண்டுமானாலும், இதன் குறியீட்டு வரிகளைப் பெற்றுக் கொள்ளலாம். புதிய முயற்சி என்ற அடிப்படை வேகத்துடன் இது வடிவமைக்கப்பட்டு உலகிற்கு வழங்கப்படுகிறது. இணையம் என்பது உலகின் பொதுவான ஓர் இடம். இதனை அனைவரும், உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் அணுக இயலும் ஒரு சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளதாக மொஸில்லா அறிவித்துள்ளது.

Firefox os
micromax A111 கேன்வாஸ் டூடில்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மொபைல் போன், மைக்ரோமேக்ஸ் ஏ 111. இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 147 x76.5 x 9.7 மிமீ. எடை 168 கிராம். இதில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை 5.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டதாக இது இயங்குகிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் 4 ஜிபி. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் உள்ளது. எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் இயங்குகிறது. வை-பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்குக் கிடைக்கின்றன. 8 எம்பி திறன் கொண்ட பின்புறக் கேமராவும். 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இயங்குகின்றன. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது. ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுத்தல் ஆகிய வசதிகள் கொண்டதாக கேமரா அமைக்கப்பட்டுள்ளது. எப்.எம்.ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் ஆகியவை உள்ளன.
இதன் சி.பி.யு.வில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் சிப் உள்ளது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகளும் கிடைக்கின்றன. எம்பி3,எம்பி 4 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,100 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 220 மணி நேரம் மின் சக்தி தக்க வைக்கப்படுகிறது. தொடர்ந்து 6.5 மணி நேரம் இதன் மூலம் பேசலாம்.
இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. `

micromax,
தொழில்நுட்பம்
ஆண்ட்ராய்ட் Dual sim 3G போனில் இரண்டாவது sim -ஐ 2G ஆக மாற்றுவது எப்படி..
Thursday, July 11, 2013
ஆண்ட்ராய்ட் Dual sim 3G போனில் முதல் sim - ஐ 3Gஆக உபயோகித்துக் கொண்டு இருப்போம்.சில சமயம் நாம் இரண்டாவது sim -ஐ 2G ஆக மாற்றி உபயோகிக்க விரும்பினால் settings-ல் பின்வருமாறு
மாற்றம் செய்ய வேண்டும்.
உதாரணமாக -Bsnl-1 ,Airtel-2
Settings---Dual sim settings ---preferred SIM settings
Click"Voice"- select "Airtel-2" (இரண்டாவது SIM)
Click "Data"- select "Airtel-2"(இரண்டாவது SIM)
Click "Message"- select "Airtel-2"(இரண்டாவது SIM )
பின்பு மொபைலை Switch Off செய்து ON செய்யவும்.
இண்டர்நெட் Activate செய்தால் நெட் 2G connect ஆகும்.

ஆன்லைனில் தமிழ் இமேஜ் எடிட்டர் -tamil ocr
Sunday, July 7, 2013
ஆங்கிலத்தில் இமேஜ் எடிட் செய்ய பல ocr மென்பொருள்கள் உள்ளது ஆனால் தமிழில் இமேஜ் எடிட் செய்ய tamil ocr மென்பொருள் கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருள்கள் மட்டுமேஉள்ளது.ஆனால் ஆன்லைனில் இமேஜ் எடிட் செய்ய i2OCR is a free online tamil ocr (Optical Character Recognition) என்ற தளம் இலவசமாகவும் எந்த வித Registration இல்லாமலும், இந்த தளத்தில் மூன்று வித step-ல் Text extract செய்து நாம் விரும்பியபடி எடிட் செய்து Download செய்து கொள்ளலாம்
60 மொழிகளை ஆதரிக்கிறது.
step-1 இமேஜை select செய்து
step-2 மொழியை தேர்வு செய்யவும்
step-3.ல் Extract text கொடுத்து பின்பு Download செய்து எடிட் செய்து கொள்ளலாம்.
Labels:
Tamil ocr
google play store supported device list-ஐ pdf ஆக தரவிறக்கம் செய்ய.
google play appilications- களை support செய்யும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களின் device list-ஐ pdf ஆக தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக். செய்யுங்கள்.
கடைசியாக ஜூலை 1ந் தேதி update செய்யப்பட்டுள்ளது
Read more...
கடைசியாக ஜூலை 1ந் தேதி update செய்யப்பட்டுள்ளது
Labels:
google play
ஹிப்னோ தெரபி சிகிச்சை முறையில் முன் ஜென்மம் அறியலாம்.
Saturday, July 6, 2013
ஹிப்னோ தெரபி சிகிச்சை முறையில் முன் ஜென்மங்களை அறியலாம்.
ஹிப்னோ தெரபி சிகிச்சை என்பது ஒருவருடைய ஆழ்மனதில் என்ன பதிவு உள்ளதோ அதுவே அவரின் எதிர்கால வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றது. ஆழ்மனதிலுள்ள கெட்ட பதிவுகளை அழித்துவிட்டு நல்ல பதிவுகளையும் மட்டும் பதியவைக்கும் போது எதிர்கால வாழ்க்கை மாற்றியமைக்கப்படுகிறது.
ஹிப்னோ சிகிச்சை முறையில் மனரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கப்படுகிறது குறிப்பாக பயம், மறதி, கோபம்,கனவு,ஆண்மை,துக்கம்,காதல்தோல்வி பிரச்சனைகள்,கணவன் மனைவி பிரிவு,சந்தேகம்,மனசஞ்சலம்,கவலை,துயரம்,ஹிஸ்டிரியா,மனநோய்கள்,தற்கொலை,குறும்பு செய்யும் மாணவர் மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு ஹிப்னோ சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியும்.
மேலும் பக்கவாதம், திக்குவாய்,காதுகேளாமை,இனிய பிரவசம்,கடுமையான தலைவலி,வ்யிற்றுவலி, மைக்ரான் தலைவலி போன்றவைகளுக்கும் உடனடி தீர்வு ஹிப்னோ சிகிச்சையில் உண்டு.
ஹிப்னோ சிகிச்சையின் சிறப்பு அம்சம்
இதன் மூலம் இந்த ஜென்ம வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் குறிப்பாக தொழில் நஷ்டம்,தீராதநோய்,மனக்கஷ்டம்,குடும்பதிற்கு அடங்காத நபர் அவர்களின் தவறான தொடர்பு போன்றவைகளுக்கு முன் ஜென்ம நிகழ்வு காரணமா? என்று அறிந்து அதற்கு தகுந்தாற்போல் மனரீதியான தீர்வு மற்றும் ஆலோசனை அளிப்பது. ஹிப்னோ சிகிச்சையின் சிறப்பு அம்சம். அது மட்டுமல்லாமல் பள்ளி,கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆழ்மன பதிவு முறையில் பயிற்சி கொடுத்து அதன்மூலம் எல்லா மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி அடைய சிறப்பு பயிற்சி ஹிப்னோ சிகிச்சை ஆகும்.
ஹிப்னோ தெரபி சிகிச்சைமுறையில் தமிழகத்திலேயே தனித்தன்மை வாய்ந்தவராக டாக்டர். ராஜராஜன் D.ACU,MD(ACU) விளங்கி வருகிறார்.இவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பாடிகேர் க்ளினிக், அக்குபஞ்சர் க்ளினிக், ஆராய்ச்சி மற்றும் கல்விமையம் நடத்தி வருகிறார். இவரிடம் தொடர்பு கொண்டு ஹிப்னோ தெரபி சிகிச்சை பற்றி மேலும் அதிக விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு.
டாக்டர். ராஜராஜன். D.ACU,MD(ACU)
பாடிகேர் க்ளினிக், அக்குபஞ்சர் க்ளினிக்,
ஆராய்ச்சி மற்றும் கல்விமையம்
41ஏ,காந்திரோடு,
அனுப்பர்பாளையம் பஸ்நிலையம்,
திருப்பூர். செல்:- 93442 07624 ,97502 66655
Labels:
ஹிப்னோ தெரபி
Subscribe to:
Posts (Atom)