முதன்மையான காயத்ரி மந்திரம்
Tuesday, August 29, 2023
முதன்மையான காயத்ரி மந்திரம்
படைப்புக் கடவுளான பிரம்மதேவன், புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் நடத்திய யாகத்தின் போது, தன்னுடைய சக்தியால் காயத்ரி தேவியை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. இந்த காயத்ரி தேவி 5 முகங்களையும், 10 திருக்கரங்களையும் கொண்டவள். காயத்ரி மந்திரம் அனைத்து மந் திரங்களிலும் மேலானதாக விளங்குகிறது. என வேதான் பகவத் கீதையில் கிருஷ்ணர், 'நான் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறுகிறார்.'காயத்ரி' என்பதற்கு 'தன்னை ஜபிப்பவர்களை காப்பாற்றுவது’ என்று பொருள். 'ஓம் பூர் புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந ப்ர சோதயாத்' என்ற காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப் பவர்களுக்கு, அனைத்து விதமான ஆபத்துகளும் நீங்கும். பயம் என்பதே அறியாதவர்களாக அவர்கள் மாறு வார்கள். காயத்ரி மந்திரம் ஜபிக்கப் பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட் டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். இந்த மந்திரத்தில் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்தில் இருந்தும், 'பர்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜூர் வேதத்தில் இருந்தும், 'தியோயோந ப்ரசோதயாத்' என்ற வார்த்தை சாம வேதத்தில் இருந்தும் எடுக்கப்பட்டு ஒரே மந்திரமாக அருளப் பட்டுள்ளது.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment