தோலின் பணி
Monday, July 29, 2024
தோலின் பணி: உடலில் உள்ள கழிவு உறுப்புகளில் மிகப் பெரியது தோல் அது உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலுக்கு அழகைத் தருகிறது. தோலில் கோடிக்கணக்கான வியர்வைத் துளைகள் உள்ளன. இவற்றின் வழியாக உள்ளுறுப்பு களின் கழிவுகள் வியர்வையாக வெளியேறுகின்றன.
தோல் பாதுகாப்பு: வியர்வைத் துளைகள் வழியாக வெளி யேறும் நீரும் சுற்றுப் புறத் தூசிகளும் சேர்ந்து தோலில் அழுக்காகப் படிந்து வியர்வைத் துளைகளை அடைத்து விடும். எனவே, தோலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கு உதவுவது குளியல். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. தொடர்ந்து வெந்நீரில் நல்லதல்ல. குளிப்பது
அருவி நீரில் குளிப்பது அற்புதம். ஆற்று நீரில் குளிப்பது சிறப்பு. குளம், கிணறுகளில் குளிப்பது நன்று. வீட்டில் குளியலறையில் குளிப்பதும் சரியே! எந்த வேளையில் எங்குக் குளித்தாலும் சரி. தலையுடன் சேர்த் திதுக் குளிக்க வேண்டும்.
தலையில் தண்ணீர் ஊற்றி, உடம்பு முழுவதும் நன்றாக நனைத்து, தண்ணீரில் உடம்பு சிறிது நேரம் ஊறும்படி வைத்திருக்க வேண்டும். பின்னர் கை விரல்களாலோ தடித்த துணியாலோ உடம்பைத் தேய்க்க வேண்டும். கால் முதல் வயிறு வரை கீழிருந்து மேலாகவும், தலையிலிருந்து கழுத்து வரை மேலிருந்து கீழாகவும் தேய்க்க வேண்டும். முதுகு, விலாப் புறங்களைத் தேய்க்கும் போது இதயத்தை நோக்கித் தேய்க்க வேண்டும். பின்னர் தலையில் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment