செம்மொழி
Tuesday, June 3, 2025
செம்மொழி என்பது ஒரு மொழியில் இலக்கிய பழமை செறிந்திருப்பதன் அடிப்படையில் தரப்படும் சிறப்பு பெருமையாகும். செம்மொழியாக ஒரு மொழியை தேர்வு செய்ய அதன் இலக்கிய படைப்புகள் வளம் மிகுந்தவையாகவும், பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளை சாராததாகவும் இருக்கவேண்டும். மேலும் அந்த மொழி 1500 முதல் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழமையான இலக்கியங்களை கொண்டிருக்கவேண்டும். உலக மொழிகளில் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, பாரசீகம் ஆகிய மொழிகள் இத்தகைய தகுதிகளை பெற்றிருக்கின்றன. 2004-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் செம்மொழியாக அறிவித்து தமிழுக்கு மகுடம் சூட்டினார். இந்த அளப்பரிய சாதனைக்கு சொந்தக்காரர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல. இதுமட்டுமல்ல 2010-ம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை 5 நாட்கள் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார். அந்த மாநாட்டுக்காக கலைஞர் கருணாநிதி எழுதி ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து புகழ்மிக்க பாடகர்கள் பாடிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் தமிழ் உள்ளளவும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கும்.
Daily thanthi .
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment