கருப்பு பெட்டி' ரகசியம் ..
Monday, June 16, 2025
கருப்பு பெட்டி' ரகசியம் என்ன...
இந்திய விமானத்தின் பின்பகுதியில் 'கருப்பு பெட்டி' (பிளாக் பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். இதில் 'பிளைட் டேட்டா ரிகார்டர்', 'காக்பிட் வாய்ஸ்' என இரு பகுதி இருக்கும். ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரென் இதை கண்டுபிடித்தார். இது கருப்பு நிறத்தில் இருக் காது. எளிதில் தெரியும் விதமாக ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். விமானம் புறப்பட்டது முதல் தரையிறங்கும் வரையிலான புள்ளி விவரங்கள், கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் பேசியது இதில் பதிவாகியிருக்கும்.
இது 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும். துருப்பிடிக்காத இரும்பு அல்லது டைட்டா னியம் உலோகத்தால் ஆன நினைவுத்திறன் பகுதி (மெமரி) இருக்கும். 25 மணி நேர தகவல்களை பதிவு செய்யும். பேட்டரி 6 ஆண்டு நீடித்திருக் கும். 30 நாட்களுக்கு ரேடியோ சிக்னல் வரும். நீரில் 20 ஆயிரம் அடி ஆழத்திலும் வேலை செய்யும்.
Source:-
தினமலர்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment