Powered by Blogger.

புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?

Thursday, August 29, 2013

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில்சென்றுதான் கல்வித் தகுதி யைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணி களையும் வீட்டிலிருந்தபடியே ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெ னவே வேலை வாய்ப்பு அலுவ லகங்களில் பதிவு செய்த வர்கள், இந்த இணைய தளத் தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவர ங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.
புதியதாக ஆன்லைனில் பதிவது எப்படி?
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றி தழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னி ரெ ண்டாம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழை கண்டிப்பாக கையில் வை த்திருத்தல் வேண்டும். முதலில்www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registra tion என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில்  முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்ததேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடு க்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்க ளுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.
கவனிக்க 1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும்அதில் கிளிக் செய்து Save கொடுக் கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வே ண்டும்.
கவனிக்க 2: மேலே சொன்ன அனை த்தும் முடிவடைந்தவுடன் Home பகு திக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
கவனிக்க 3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவனிப்பு 4: Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான விவரம்: 
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : ARD2012M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD – என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)
பதிவு செய்த ஆண்டு: 2010
ஆண் / பெண் : M/F
பதிவு எண்: 7802
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
 User ID: ARD2012M00007502
Password: dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.
வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண் ;
 மாவட்ட விவரமும்: 
1. ARD – District Employment Office-Ariyalur
2. CBD – District Employment Office-Coimbatore
3. CBR – Office of the Regional Deputy Director (Employment) -Coimbatore
4. CDC – Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore
5. CHD – District Employment Office-Chennai CHG Head Office-Chennai
6. CHP – Professional and Executive Employment Office-Chennai
7. CHR – Regional Deputy Director Office-Chennai
8. CHS – District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai
9. CHT – District Employment Office(Technical Personnel). -Chennai
10. CHU – District Employment Office (Unskilled)-Chennai
11. CUC – Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore
12. CUD – District Employment Office-Cuddalore
13. DGD – District Employment Office-Dindigul
14. DRD – District Employment Office-Dharmapuri
15. ERD – District Employment Office-Erode
16. KGD – District Employment Office-Krishnagiri
17. KPD – District Employment Office-Kancheepuram
18. KRD – District Employment Office-Karur
19. MDD – District Employment Office-Madurai
20. MDP – Professional and Executive Employment Branch Office-Madurai
21. MDR – The Regional Deputy Director (Employment) Office-Madurai
22. NGD – District Employment Office-Kanyakumari
23. NKD – District Employment Office-Namakkal
24. NPD – District Employment Office-Nagapattinam
25. PDD – District Employment Office-Pudukottai
26. PRD – District Employment Office -Perambalur
27. RPD – District Employment Office-Ramanathapuram
28. SGD – District Employment Office-Sivaganga
29. SLD – District Employment Office-Salem
30. TCC – Coaching-cum-Guidance centre -Trichy
31. TCD – District Employment Office-Trichy
32. TCR – The Regional Deputy Director (Employment)-Trichy
33. THD – District Employment Office-Theni
34. TJD – District Employment Office-Thanjavur
35. TMD – District Employment Office-Thiruvannamalai
36. TNC – Coaching-cum-Guidance Centre-Thirunelveli
37. TND – District Employment Office-Thirunelveli
38. TPD – District Employment Office-Tiruppur
39. TRD – District Employment Office-Thiruvarur
40. TTD – District Employment Office-Tuticorin
41. TVD – District Employment Office-Thiruvallur
42. UGD – District Employment Office-Nilgiris
43. UGV – Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris
44. VLC – Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore
45. VLD – District Employment Office-Vellore
46. VPD – District Employment Office-Villupuram
47. VRD – District Employment Office-Virudhunagar
இன்று வேலைவாய்ப்பகத்தில் பதிந்து விட்டு காத்திருப்பது கொஞ் சம் வெட்டி வேலைதான்.பூட்டித் தேர்வுகளில் கலந்து வேலையை பெறுவதுதான் சரி.ஆசிரியர் பதிவு கூட இப்போது தகுதி தேர்வில் தான் முடிவாகிறது.ஆனாலும் ஒரு பதிவு எண் இருப்பது சில வே ளைகளில் உபயோகமாக இருக்கும்.அடுத்துவரும் ஆட்சியினர் பதிவு மூப்பு அடிப்படையில் பணி என்று சொல்லி விட்டால் 
SOURCE-vidhai2virutcham

Read more...

கணினியில் USB ட்ரைவ் வழியாக தகவல் திருட்டை தடுப்பது எப்படி?.

நமது  கணினியை அடுத்தவர்கள் உபயோகிக்கும் போது கணினியில் உள்ள முக்கிய FILE-கள், தகவல்களை USB ட்ரைவ்- பென்ட்ரைவ்  வழியாக  COPY செய்து எடுத்து செல்லலாம் .
இத்தகவல்கள்  COPY செய்வதை தடுக்க REGISTRY-ல் சிறிய மாற்றம் செய்யவேண்டும்.
முதலில்  START ---> RUN ---> type "REGEDIT" and click ok
HKEY LOCAL MACHINE ---SYSTEM ---CURRENT CONTROLSET001 ---SERVICES ---USB STOR
என்றவாறு தேர்வு செய்து. பின்பு வலது பக்கத்தில்
           START-REG DWORD -0*00000003(3) என்ற மதிப்பில் 3என்ற எண்னை 4 என மதிப்பை மாற்றவேண்டும்.அதற்கு  START-ன் மீது right click செய்து MODIFY-ல் 3 மதிப்பை

4 என மாற்றி OK கொடுக்கவேண்டும்.
இப்போது பெண்ட்ரைவை connect செய்தால் கணினியில் USB ட்ரைவ் தெரியாது
மீண்டும் தெரிய வேண்டுமானால்
MODIFY-ல் 4 மதிப்பை 3 என மாற்றி OK கொடுக்கவேண்டும்

Read more...

எஸ்.டி. கார்ட்கள் - சில தகவல்கள்

Thursday, August 15, 2013


செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.
செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 
செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. 
இவை குறித்து அறிய முற்படுகையில் பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.
2. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)
3. SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. 
4. ஒரு வீடியோ பதிவில், எஸ்.டி. கார்டின் வேகத்திறன் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது என்பது சரியா? ஆம், உண்மையே. ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.
5. எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது. 
6. எஸ்.டி. கார்டில் உள்ள லாக் சிஸ்டத்தை இயக்கிவிட்டால், மீண்டும் அதில் எதுவும் எழுத முடியாதா? இந்த பூட்டு சிஸ்டம் பூட்டவும், மீண்டும் திறந்து இயக்கவும் என்ற வகையில் உள்ளது. மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.
7. எந்த வகை மிகச் சிறிய எஸ்.டி. கார்ட்?
எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.
8. பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க இயலுமா? தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த எஸ்.டி.கார்ட் ரீடர், அதன் கெபாசிட்டி பார்மட்டினைப் படித்து தகவல்களைத் தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
9. எஸ்.டி.கார்ட் ஒன்றை பார்மட் செய்திட, எஸ்.டி.கார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கும் வழி என்ன? இந்த அசோசியேஷன் SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமினை இதற்கென வழங்குகிறது. ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.
10. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம்? இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.

Read more...

இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற


இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

1. தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்: நாம் தகவல்களைத் தேடும் போதுதான், இது போன்ற ஆபாச தளங்கள், தகவல் பட்டியலில் தலை நீட்டுகின்றன. இதனைத் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் தளத்தினைப் பயன்படுத்துபவர்கள், http://www.google.com/ familysafety/; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். பிங் (Bing) தேடல் தளம் பயன்படுத்துபவர்கள்http://www.bing.com/preferences.aspx; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மற்ற தேடல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், அந்த தளங்கள் தரும் safety settings சென்று இந்த வசதியைக் காணலாம். உங்கள் வீட்டுச் சிறுவன் யு-ட்யூப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துபவனாக இருந்தால், அவற்றையும் “safe” modeல் அமைக்கவும். 
2. கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் குடும்ப பாதுகாப்பு வசதிகளைப் (family safety tools) பயன்படுத்தவும்.விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இந்த பாதுகாப்பு வசதிகளைத் தருகின்றன.

2. குடும்ப பாதுகாப்பிற்கான டூல்ஸ்: Parental Control என அழைக்கபட்ட இந்த டூல்ஸ் மூலம், நாம் தேவையற்றவை அல்லது ஆபத்தானவை என்று கருதும் விஷயங்கள் கொண்ட இணையப் பக்கங்கள் கொண்ட தளங்களைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டிகளை (filters) அமைக்கலாம். பாலியல் தளங்களை மட்டுமின்றி, வன்முறை சார்ந்த தகவல்கள் மற்றும் நாம் வெறுக்கும் பொருள் கொண்ட தளங்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம். நம் சிறுவர்கள் இளைஞர்களாய் வளர்ந்த பின்னர், சில தளங்கள் பார்க்கும் வகையில் இருக்கலாம். ஆனால், சில தளங்களை நாம் எப்போதும் வெறுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்போதும் நம் கம்ப்யூட்டரில் தோன்றாதபடி அமைக்கலாம். இதற்கான வடிகட்டிகளைத் தேடிப் பார்த்து, நமக்குத் தேவையானதைப் பயன்படுத்த வேண்டும். இந்த டூல்ஸ்களை நாம் மற்றும் நம் குடும்பத்தினர் பயன்படுத்தும், இணைய இணைப்பினைத் தரும் அனைத்து சாதனங்களிலும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். கம்ப்யூட்டர், கேம் கன்ஸோல், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள், பெர்சனல் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் என அனைத்திலும் இவை இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். சில டூல்ஸ்கள், இந்த அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டும் இயங்கும்படி இருக்கும்.

3. சிறுவர்களின் பிரவுசர்களை கண்காணிக்கவும்: சிறுவர்கள் பயன்படுத்தும் பிரவுசரின் ஹிஸ்டரியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். இப்போதெல்லாம் பாலியல் தளங்களில், பாலியல் சார்ந்த செயல்பாடுகளை, மூடி மறைக்கும் வகையில் சாதாரண சொற்கள் கொண்டு குறிக்கின்றனர். இவற்றை எல்லாம் கண்காணித்து, வடிகட்டிகளில் இவற்றைக் கொடுத்து அவற்றையும் தடை செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.

4. சமூக வளைதளங்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் சமூக வளைத்தளங்களில், அவர்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் வட்டத்தினைக் கண்காணிக்கவும். மிகவும் நெருக்கமான, நம்பிக்கையுள்ள நண்பர்களை மட்டும் இந்த வட்டத்தில் வைக்கவும். ஏனென்றால், நண்பர்கள் என்ற போர்வையில், முதலில் சாதாரணமாக அஞ்சல் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட பின்னர், பாலியல் தளங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இழுத்துச் சென்று, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் நிறைய பேர் இப்போது சமூகத் தளங்களில் இயங்கி வருகின்றனர். 

5. பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள போட்டோக்களை அவ்வப்போது கண்காணிக்கவும். இந்த சோதனையை, சோதனை ரீதியில் இல்லாமல், நட்பு ரீதியில் மேற்கொள்ளவும். “நம் பெற்றோர்கள், நம் மொபைல் போன்களை அவ்வப்போது பார்ப்பார்கள்” என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிய வேண்டும். “அப்படி பார்ப்பது நல்லதுதான்” என்று அவர்கள் கொள்ள வேண்டும்.
தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் அமைக்கும் வடிகட்டிகள், கண்காணிப்புகள் மட்டுமே, உங்கள் குழந்தைகளை பாலியல், வன்முறை, வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் தளங்கள் பக்கம் செல்லாமல் தடுக்கும் என்று எண்ண வேண்டாம். உங்கள் பிள்ளைகளிடம் இதனால் ஏற்படுத்தும் ஆபத்து, இது போல பிறருக்கு நேர்ந்தது போன்றவற்றை எடுத்துக் கூறவும். உங்கள் மனைவியுடன் அவர்களையும் அமர வைத்து, இதனால் ஏற்படும் தீங்குகளை, வாழ்க்கை பாதிப்புகளை, மற்றவர்களுக்கு நேர்ந்தவற்றை அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். இந்த அன்பு கலந்த எச்சரிக்கை தான் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட முடியும்

Read more...

கணினியை ஸ்டார்ட் செய்யும்போது NTLDR Missing என பிழைச்செய்தி வந்தால்

Monday, August 12, 2013

கணினியை ஸ்டார்ட் செய்யும்போது NTLDR Missing press ctrl +alt+Delete  to restart என்ற பிழைச்செய்தி வந்தால்....
NTLDR என்பது New technology Loads என்பதாகும்.கணினி ஸ்டார்ட் ஆகும்போது பயாஸ் ஆனது ஹார்ட் ட்ரைவின் ஆக்டிவ் பார்ட்டீசன் எம்பிஆர் [MBR] என்பதற்கான முதலாவது செக்டாரை ரீட் செய்யும் பின்புதான் ஆபரேட்டிங் சிஸ்டம் பகுதிகள் லோட் ஆகும். எம்பிஆர் [MBR] ஆனது NTLDR என்பதற்கு பாயிண்ட் செய்யப்பட்டுள்ளது.எனவேதான், NTLDR,Nt detect.com போன்ற booting file-களில் பிழை ஏற்படும் போதுதான் இது போன்ற பிழைச்செய்திகள் வருகின்றன.
இப்படி சிக்கல் ஏற்படும் போது விண்டோசை புதிதாக நிறுவாமல்
கணினியை ரீஸ்டார்ட்செய்து விண்டோஸ் CD மூலம் பூட் செய்யுங்கள். சிறிது நேரத்தில் Taskbar ,Enter =Continue R =Repair,F3 =Quit போன்றவற்றைக் கொண்ட திரை தோன்றும். அதில்R என்பதை 1Windows என்பதும் அதற்கு கீழ் which windows installation would you like to log on to [to cancel press enter] என்று காணப்படும் இதில் 1-ஐ அழுத்துங்கள்.பின்பு உங்கள் அட்மினிட்ஸ்ரேட்டர் கடவுச் சொல்லை கொண்டு லாக் ஆன் செய்யுங்கள். இனி C:/windows> என்பதின் கீழ் COPY C:/1386/NTLDR H:/ என்று தட்டச்சு செய்து Enter கொடுங்கள். இனி Exit என்று தட்டச்சு செய்துவிட்டு கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட்  செய்தால் உங்கள் சிக்கல் சரி செய்யப்பட்டு இருக்கும்.
உங்கள் கணினியில் cd rom drive ஆக எது உள்ளதோ அதை கொடுக்கவேண்டும் இங்கு உதாரணத்திற்கு H:/ என கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நீங்கள் எந்த ட்ரைவில்
Windows நிறுவி உள்ளீர்களோ அதையும் சரியாக கொடுக்கவேண்டும்.

Read more...

XP -ல் Registered owner பெயரை மாற்றுவது எப்படி?

Xp Owner Name change

HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\Microsoft\WindowsNT\CurrentVersion
                                                                                               

Right panel  Double click Registered owner
then modify

Read more...

FORMAT செய்யாமலே C: drive இடத்தை அதிகரிக்கலாம்

FORMAT செய்யாமலே C: drive இடத்தை அதிகரிக்கலாம்
RAM நினைவகத்தில் ஏற்றப்படுபவை அவ்வப்போது அதனை நினைவக பக்கங்களாக உருவாக்கி C: drive ல் பதிந்து வைக்கப்படும். பிறகு அதனை எடுத்து பயன்படுத்திகொள்ளுமாறு operating system-த்தை உருவாக்கியுள்ளார்கள்.இதனால் 1GB முதல் பல GB கொள்ளவு வரை C: drive ன் இட வசதியினை RAM நினைவகம் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த Paging File களை C: drive  லிருந்து வேறொரு drive க்கு மாற்றுவதன் மூலம் C: drive ன் இடத்தை பின்வரும் முறைகளில் குறைக்கலாம்
Right click >> Mycomputer >>Properties >>Advanced >> Performance டேபில் க்ளிக் செய்து Change பட்டனை அழுத்தவும்.அதில் VIRTUAL MEMORY என்ற விண்டோவில் C: drive க்கு கீழே CUSTOM SIZE என்பதற்கு எதிரில் உள்ள எண்களை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் D or E ஏதேனும் ஒரு டிரைவில் SELECT செய்து அதன் கீழே
CUSTOM SIZE பாக்ஸில் நாம் குறித்து வைத்த எண்களை Initial Size ,Maximum Size பாக்ஸில் கொடுத்து SET பட்டனை அழுத்தவும்.
பிறகு மீண்டும் C: drive ஆப்சன் சென்று NO Paging File ஆப்சனை தேர்ந்தெடுத்து OK பட்டனை அழுத்தவும்.

இப்பொழுது  Paging File கள் C: drive லிருந்து பிற டிரைவிற்கு மாற்றப்பட்டுவிடும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு Hard Disk ன் இடத்தினை சேமிக்கலாம்.

Read more...

ப்ளாக்கர் டிப்ஸ்

ப்ளாக்கர் டிப்ஸ்
நமது வலைதளத்தை  வேறொரு வலைதளத்திக்கு திருப்பிவிடுவது [Redirect] ,
Metatag இணைப்பது  போன்ற இன்னும் ப்ளாக் பற்றி இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் கணினி 

Read more...

கூகுள் மெயில்: சில தேடல் வழிகள்

Sunday, August 4, 2013

கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


from: குறிப்பிட்ட நபரிடமிருந்து வந்துள்ள மெயில்களை மட்டும் பெற. எ.கா.from:
kannan:கண்ணன் என்பவரிடமிருந்து வந்த மெயில்கள் மட்டும் காட்ட.
to:நாம் அனுப்பிய மெயில்களில், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட. எ.கா: to:kannan.கண்ணன் என்பவரிடமிருக்கு (நீங்களோ அல்லது மற்றவர்கள், அந்த மெயிலைப் பயன்படுத்தி) அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட.
subject: மெயில்களில் உள்ள சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ள சொற்களில் தேடிப் பெற. எ.கா.subject:dinner சப்ஜெக்ட் வரியில் உள்ள சொற்களில் “dinner” என்ற சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட.
OR:இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதனைத் தேடி, அச்சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட. எ.கா. from:
kannan OR from:lakshmi.கண்ணன் அல்லது லஷ்மி என யாரிடமிருந்தும் வந்த மெயில்களைக் காட்ட. இதில் இந்த கட்டளைச் சொல் OR எப்போதும் கேபிடல் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். 
(hyphen): குறிப்பிட்ட சொல் உள்ள கடிதங்களைக் காட்டாமல் இருக்க. எ.கா. dinner movie:கடிதங்களில், என்ற சொல் மட்டுமே உள்ளவை. அவற்றில் movie என்ற சொல் இருந்தால் அது தேவையில்லை.
label: குறிப்பிட்ட ஒரு லேபில் கொண்ட கடிதங்களில் மட்டும் தேட. எ.கா.from:kannan label: myfamily; myfamily என்ற லேபிலில் உள்ள கடிதங்களில், kannan அனுப்பிய கடிதம் மட்டும். 
has:attachment: அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டவும். எ.கா. from:
kannan has:attachment: இங்கு கண்ணனிடமிருந்து வந்த மெயில்களில், அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். 
list:குறிப்பிட்ட மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து பெற்ற மெயில்கள் மட்டும். எ.கா. list:info@example.com. info@example.com என்ற சொற்களை ஹெடரில் பெற்ற மெயில்கள் மட்டும். அதாவது இந்த மெயிலிங் லிஸ்ட்டிலிருந்து பெற்ற மற்றும் அந்த லிஸ்ட்டுக்கு அனுப்பப்பட்ட மெயில்கள் மட்டும். 
filename: இணைக்கப்பட்ட, குறிப்பிட்ட பைல் அல்லது பைல் வகையினைப் பெற. எ.கா.filename:physicshomework.txt “physicshomework.txt” என்ற அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். label:work filename:pdf: “work” என்ற லேபில் இடப்பட்டு, பி.டி.எப். பைல் அட்டாச்மெண்ட் ஆக உள்ள மெயில்கள் மட்டும். 
“ "(மேற்கோள் குறிகள்): இந்த குறிகளுக்குள் இடப்பட்ட டெக்ஸ்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டப்பட. எ.கா. “i’m feeling lucky”: “i’m feeling lucky” என்ற சொற்களை உடைய மெயில்கள் மட்டும். இந்த தேடலில் பெரிய, சிறிய எழுத்து வித்தியாசம் பார்க்காமல் தேடப்படும். 

எடுத்துக் காட்டாக இந்த தேடலில் “I’m feeling lucky” எனச் சொற்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் காட்டப்படும். 
இன்னொரு எடுத்துக் காட்டினையும் இங்கு பார்க்கலாம். subject:”dinner and a movie” என்று கொடுத்தால், சப்ஜெக்ட் கட்டத்தில், “dinner and a movie” என்ற சொற்கள் உள்ள மெயில்கள் மட்டும் என்று பொருள். 
in:anywhere: பொதுவாக நாம் கொடுக்கும் தேடல்கள் வினாக்கள், இன் பாக்ஸில் மட்டும் தேடிக்கொடுக்கப்படும். அவ்வாறு இல்லாமல், Spam மற்றும் Trash பெட்டிகளில் உள்ள மெயில்களிலும் தேடப்பட வேண்டும் எனில், கட்டளை வரியை இவ்வாறு அமைக்க வேண்டும்.

 எடுத்துக்காட்டு: in:anywhere
movie: All Mail, Spam,மற்றும் Trash ஆகிய அனைத்திலும் “movie” என்ற சொல் உள்ள மெயில்களைத் தேடித் தா என்பது இதன் பொருள்.
cc:இந்த இரு பீல்டுகளிலும் உள்ளதைத் தேடு என்பது பொருள். எடுத்துக்காட்டாக, cc:kannan எனக் கொடுத்தால், கண்ணனுக்கு என்ற பீல்ட் வழி கொடுக்கப்பட்ட மெயில்களை மட்டும் தேடிக் காட்டு என்பது பொருள். இதே போல் bcc:என்ற பீல்டுக்காகவும் தேடலாம்.
after:before: குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பப்பட்ட மெயில்களைக் காட்டு என்பது இதன் பொருள். எடுத்துக்காட்டு after:2004/04/16 before:2004/04/18: 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 லிருந்து 18 வரை அனுப்பப்பட்ட மெயில்கள்.
is:chat:இந்தக் கட்டளை சேட் மெசேஜ்களில் மட்டும் தேடலுக்காகப் பயன்படுத்தப்படும். எடுத்துக் காட்டாக எனக் கொடுத்தால், சேட் மெசேஜ்களில் “monkey” என்ற சொல் பயன்படுத்தப்படும் மெசேஜ் மெயில்களை மட்டும் காட்டவும்.

Read more...

ஜிமெயில் பேக் அப்

ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.

நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல, தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன. எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும். எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.
இதற்கான பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. 

ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe புரோகிராமினை http://www. gmailbackup. com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம். 
இன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில், மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும். அனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம். 
பேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம். மேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்

Read more...

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் சேப் மோட்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்குப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம், நமக்கு ஆபத்தில் உதவும் நண்பனாக வருவது சேப் மோட் எனப்படும் பாதுகாப்பான இயக்க முறை ஆகும். இதன் மூலம், சிஸ்டம் இயங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை, விண்டோஸ் இயக்கத்திலா அல்லது அப்ளிகேஷன் புரோகிராமிலா என்பதை நாம் அறிய முடியும். 
விண்டோஸ் 8 கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட் செய்வது, முந்தைய சிஸ்டங்களில் மேற்கொண்டதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த சிஸ்டத்திலும் சேப் மோடில் பூட் செய்திடலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
உங்களுடைய கம்ப்யூட்டர் சரியாக ஷட் டவுண் ஆகவில்லை என்றாலோ, அல்லது, பூட் ஆக மறுத்தாலோ, சேப் மோட் இயக்கம் தான் உங்களுக்கு உதவும். சேப் மோடில், விண்டோஸ் சில குறிப்பிட்ட பைல்கள் மற்றும் ட்ரைவர்களுடன் இயங்கத் தொடங்கும். எந்த புரோகிராமும், சேப் மோடில், தானாக இயங்கத் தொடங்காது. உங்களுடைய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணையாது. இதனால், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டருக்குப் பரவும் வாய்ப்பு இல்லை. இதனால்,கம்ப்யூட்டர் அல்லது நம் டேட்டாவிற்குப் பாதிப்பு ஏற்படாமல், நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னயை நாம் அறியும் வாய்ப்பு அதிகமாகிறது.
சேப் மோடில் பூட் செய்வதில், விண்டோஸ் 8 தனி வழியைக் கொண்டுள்ளது. முந்தைய சிஸ்டங்களைப் போல் இதில் எளிதில் சேப் மோடுக்குச் செல்வதில்லை. விண்டோஸ் 8, சிஸ்டம் இயங்கத் தொடங்கு கையில், அதனைக் கண்காணிக்கிறது. பிரச்னைகளைக் கண்டறிந்தால், தானாகவே அது உங்களை Recovery Modeக்கு அழைத்துச் செல்கிறது. அப்போது உங்களுக்கு Recovery. It looks like Windows didn’t load correctly’ என்ற எச்சரிக்கை செய்தி காட்டப்படும். இங்கு காட்டப்படும் விண்டோவில் advanced repair options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Troubleshoot, Advanced options, ‘Windows Startup Settings’, Restart என ஒவ்வொன்றாகச் செல்லவும். அடுத்து உங்களுடைய கம்ப்யூட்டர் ‘Advanced Boot Options’ என்னும் திரைக்குச் செல்லும். இதில் நீங்கள் Safe modeஐத் தேர்ந்தெடுக்கலாம். 
நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தை, நீங்களாகவே சேப் மோடில் இயக்க முடியும். இதற்கு முந்தைய சிஸ்டங்களில் இருந்ததைப் போல, msconfig சென்று அதில் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. தேடல் கட்டம் சென்று, அதில் System Configuration எனக் கொடுக்கவும். இதில் Boot டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Safe boot என்ற டேப்பில் சென்றால், பலவகையான சேப் மோட் பூட்டிங் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதிலிருந்து நீங்கள் தேவையான ஆப்ஷனை மேற்கொள்ளலாம். 
இன்னொரு மிக எளிய, விரைவான வழியும் உள்ளது. நீங்கள் விண்டோஸ் 8 லாக் இன் ஸ்கிரீனில் இருந்தால், ரீ ஸ்டார்ட் தேர்ந்தெடுக்கவும். கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் செய்திடத் தொடங்குகையில், ஷிப்ட் கீயை அழுத்தியவாறு இருக்கவும். உங்களுக்கு பிரச்னையைக் கண்டறியும் troubleshoot பக்கம் கிடைக்கும். இதில் சேப் மோட் செல்லும் ஆப்ஷன் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து சேப் மோடுக்குச் செல்லலாம்.
சேப் மோட் சென்ற பின்னர், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் மேற்கொண்டது போலவே, எங்கு பிரச்னை உள்ளது என ஆய்வு செய்திடலாம்

Read more...

எக்ஸ்பி இனி வேண்டாம் இந்திய டிஜிட்டல் பாதுகாப்பு துறை எச்சரிக்கை

தங்களுடைய கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப்களிலும் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்துபவர்கள், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதனை விடுத்து, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற வேண்டும் என, இந்திய டிஜிட்டல் தகவல் போக்குவரத்தின் காவல் பிரிவு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக, எக்ஸ்பி பயன்படுத்தும் நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பயன்படுத்துவது சரியல்ல என்று எச்சரிக்கை தந்துள்ளது. வரும் 2014 ஏப்ரல் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான தன் ஆதரவை விலக்கிக் கொள்ள இருக்கிறது. இதனால், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்பாட்டிற்கான பாதுகாப்பு புரோகிராம்களை மைக்ரோசாப்ட் வெளியிடாது. எனவே, எக்ஸ்பியில் இயங்கும் சிஸ்டங்கள் இணைய இணைப்பில் மற்ற வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 
இந்தச் சூழ்நிலையில், தங்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் காப்பாற்றிக் கொள்ள, தகவல்கள் திருடு போகாமல் இருக்க, அனைவரும் அடுத்த சிஸ்டத்திற்கு இப்போதே மாறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான், புதிய சிஸ்டத்தினை முழுமையாகப் புரிந்து கொண்டு அதிகப் பயனடைய முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், டேட்டா திருட்டு ஏற்பட்டால், நிச்சயம் டிஜிட்டல் பாதுகாப்பு துறையினர் உதவிக்கு வர மாட்டார்கள் என்பதுவும் உறுதியாகிறது.

Read more...

அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

Saturday, August 3, 2013

அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
தமிழ்காரன் கிளிக் செய்க.

Read more...

அரசாங்கத்தின் முக்கிய இணையதள முகவரிகள்.

Wednesday, July 24, 2013

அராசாங்கத்தின் முக்கிய இணையதள முகவரிகள் அறிந்துகொள்ள

வேலன் க்ளிக் செய்யவும்

Read more...

மொபைல் போன் தொழில்நுட்ப வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள

Friday, July 19, 2013

Mobile terms glossary 

மொபைல் போன்  தொழில்நுட்ப  வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள  உதவும் தளம்

www.gsmarena.com 

 






Read more...

videocon A55 Hd spec

Wednesday, July 17, 2013


http://indianpriceinfo.in/wp-content/uploads/2013/06/Videocon-A55-HD-Price-In-India1.jpg

5-inch (1280 x 720 pixels) HD capacitive touch screen
 display
1.2 GHz quad-core processor
Android 4.2 (Jelly Bean)
Dual SIM (GSM + GSM)
8MP rear camera with LED Flash
3.2MP front-facing camera
3.5mm audio jack
1GB RAM, 4GB internal memory, 32GB expandable
memory with MicroSD
3G (HSDPA: 42.2 Mbps, HSUPA: 11.5 Mbps), WiFi 802.11 b/
g/n, Bluetooth 4.0, GPS
2000 mAh battery
Price -12400.Rs 
source- http://www.indianpriceinfo.in

Read more...

சுருக்கமாக இணைய தளப் பெயர்களை அமைக்க

Tuesday, July 16, 2013

இணைய தளம் ஒன்றின் முகவரிகளை அட்ரஸ் பாரில் அமைக்கையில், அவற்றில் உள்ள எட்டு எழுத்துக் களுக்கான கீகளை அழுத்தத் தேவையில்லை. “www.” or “.com” ஆகிய கீகளை பெரும்பாலான இணைய முகவரிகளில் அமைக்கத் தேவையில்லை. அந்த தளத்தின் தனிப் பெயர் மட்டும் அமைத்தால் போதும். எடுத்துக்காட்டாக dinamalar என மட்டும் அமைத்துப் பின் கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். உங்களுடைய பிரவுசர் “www.” மற்றும் “.com” ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளும். இதே போல மற்ற வற்றில் முடியும் தளங்களின் பெயர்களை அமைக்கவும் சுருக்கு வழிகள் உள்ளன. “www” and “.net” என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து “www” and “.org” என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+என்டர் தட்டவும்

Read more...

திறக்கும் புரோகிராம் எதுவென்று தெரியலையா?

நண்பர்களிடம் இருந்தோ, அல்லது இன்டர்நெட்டில் இருந்தோ, புரோகிராம் ஒன்றை பெற்றிருப்போம். உடனே அதனை இயக்கிப் பார்க்க ஆசைப்பட்டு , அதில் டபுள் கிளிக் செய்து, ஆஹா, இதோ புரோகிராம் இயங்கப்போகிறது; அதில் உள்ள புது விஷயங்களைத் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் காட்டப் போகிறோம் என்று கர்வத்துடன் மானிட்டர் திரையைப் பார்ப்போம். ஆனால், அதில் இந்த புரோகிராமை எதில் திறக்க? என்ற வகையில் Open With என்று ஒரு சிறிய விண்டோ திறக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் புரோகிராம்களின் பட்டியல் இருக்கும் - எம்.எஸ். ஆபீஸ் உட்பட. இதில் எதைத் தேர்ந்தெடுக்க? என்ற யோசனையில் சில நேரம் செலவழித்துவிட்டு, இதைக் கிளிக் செய்திடலாமே என்று ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். ஆனால் மீண்டும் சில நேரம் கழித்து இதை விண்டோஸ் இயக்கத்தினால் திறக்க முடியவில்லை. வேறு ஒரு புரோகிராமினை இன்டர்நெட்டில் தேடலாமா? என்று ஒரு பரிந்துரையுடன் கூடிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
என்ன செய்யலாம்? இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் விரக்தியின் விளிம்பு வரை சென்று கூகுள் சர்ச் இஞ்சினில் Open With என டைப் செய்து என்டர் தட்டினால், உடனே கிடைத்த பட்டியலில் openwith என்று ஒரு தளமே இருப்பது தெரிய வந்தது. அதனைத் திறந்து காண்கையில் இப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற் கென்றே இந்த தளம் உருவாக்கப்பட்டதனை உணர முடிந்தது. இந்த தளத்தைப் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. முதல் காரணம் இதன் சேவை முற்றிலும் இலவசம். அடுத்ததாக நாம் எதிர்பார்க்கும், மற்றும் எதிர்பாராத பல எக்ஸ்டென்ஷன்கள் கொண்ட பைல்களுக்கெல்லாம் இது திறக்கும் புரோகிராமின் பெயரைத் தருகிறது. ஏன் .PNG, .SQL, மற்றும் CKZ என்றெல்லாம் கூட எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன என்று இங்கு தான் அறிந்து கொண்டேன். நீங்கள் திறக்க விரும்பும் பைலின் எக்ஸ்டென்ஷன் பெயரின் முதல் எழுத்தை டைப் செய்தால் அந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எக்ஸ்டென்ஷன் உள்ள அனைத்து பைல்வகைகளின் பட்டியலும் அவற்றிற்கான புரோகிராம்களும் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 'B' என டைப் செய்தால் .BAT, .BFL என்ற எக்ஸ்டென்ஷன்கள் எல்லாம் காட்டப்படுகின்றன.
இவற்றைக் காட்டிவிட்டால் போதுமா? அதற்கான புரோகிராம் நம்மிடம் இல்லையே என்ற சூழ்நிலையும் ஏற்படும். இதற்கும் இந்த தளம் தீர்வினைத் தருகிறது. எந்த எக்ஸ்டென்ஷன் கொண்ட பைலைத் திறக்க புரோகிராமினைத் தேடுகிறீர்களோ அதில் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இருக்கும் தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இலவசமாக புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இது நிச்சயமாய் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு தளமாக உள்ளது. எனவே புக்மார்க் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி தேவைப்படும். இதன் முகவரி http://www.openwith.org/

Read more...

ஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்?

கம்ப்யூட்டர் ஒன்றுக்கு ஒரு புரோகிராமினை உருவாக்க, போன் ஒன்றுக்கு அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைக்க, ஏன், ஓர் இணைய தளம் ஒன்றை அமைக்க, நாம் புரோகிராமிங் மொழிகள் பலவற்றில், ஏதேனும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த புரோகிராமிங் மொழிகள் மூலமாகத்தான், நாம் கம்ப்யூட்டர்கள் என்ன செய்திட வேண்டும் என்பதனைக் கூற முடியும். அதனுடன் நாம் நம் விருப்பத்தினைத் தெரிவிக்க முடியும். டாகுமெண்ட் தயாரிக்க, கேம் விளையாடுகையில் விருப்பங் களைத் தெரிவிக்க, போட்டோ ஒன்றினை எடிட் செய்திடுகையில், நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை உருவாக்க எனப் பல வேலைகளை இந்த புரோகிராமிங் மொழிகள் மூலமாகத்தான் நாம் மேற்கொள்ள இயலும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வேலை என்பதால், ஒவ்வொரு புரோகிராமிங் மொழி தேவைப்படுகிறது. நாம் பேசும் மொழிகளைப் போலவே, இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையறைகளுடன் இயங்குகின்றன. இயங்கும் தளங்களும் வேறுபட்டு இருக்கின்றன.
ஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்? அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே புரோகிராமிங் மொழி இருக்கக் கூடாதா? என்ற கேள்விகள் எழலாம். வெவ்வேறு செயல்பாட்டு வழிகளுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் பல இருப்பதால், புரோகிராமிங் மொழிகளும் நிறைய உள்ளன. சில புரோகிராமிங் மொழிகள், பல்வேறுபட்ட கம்ப்யூட்டர்களிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கக் கூடிய வகையில் உள்ளன. சில மொழிகள், புரோகிராம் ஒன்றில் உள்ளாக இயங்குபவையாக இருக்கின்றன.
(இவற்றை scripting languages என அழைக்கின்றனர்.) மற்றவை, புரோகிராம் முழுவதையும் உருவாக்குவதுடன், அதன் பல பிரிவுகளுக்கு விளக்கம் அளிப்பவையாகவும் உள்ளன. (இவற்றை system programming languages என அழைக்கிறோம்.) இவற்றில் சிலவற்றை அதன் எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.
ஸ்கிரிப்டிங் மொழிகள் என்று அழைக்கப்படும் மொழிகளில் ஓர் எடுத்துக்காட்டு, இணையப் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படும் (HTML) எச்.டி.எம்.எல். புரோகிராமிங் மொழியாகும். இது புரோகிராம் ஒன்றின், அதாவது, வெப் பிரவுசர் புரோகிராம் உள்ளாக இயங்குகிறது. பிரவுசர் ஒன்றின் செயல்பாடுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என விளக்குவது இதன் வேலை. டெக்ஸ்ட் டிஸ்பிளே செய்வது, படங்களைக் காட்டுவது, பயனாளர்களிடம் இருந்து ஆப்ஷன் மற்றும் படங்களைப் பெறுவது ஆகியவற்றை ஒரு பிரவுசரில் இது மேற்கொள்கிறது. ஒரு வெப் பிரவுசர், இந்த எச்.டி.எம்.எல். குறியீடுகளைப் புரிந்து கொண்டால், அதில் காட்டப்படும் இணையப் பக்கங்கள் நமக்குச் சரியாகக் கிடைக்கும்.
இதனுடன் வேறு ஒன்றை இணைத்து ஒப்பிட்டுப் பார்ப்போம். சி ப்ளஸ் ப்ளஸ் என்பது இன்று அனைவராலும் அவசியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராமிங் மொழியாகும். புரோகிராமர் ஒருவர் தான் விரும்பிய அனைத்தையும் கம்ப்யூட்டர் வழி செயல்பட வைத்திட, இந்த புரோகிராமிங் மொழி உதவுகிறது. இதன் தன்மை என்னவென்றால், அடிப்படை இடைமுகம் அமைப்பதிலிருந்து, புரோகிராமினை இயக்கும் மேத்தமடிகல் பார்முலாக்கள் வரை, அத்தனையும் சரியாக, முழுமையாக வடிவமைக்கப்பட்டு, புரோகிராமரால் இணைக்கப்பட வேண்டும். புரோகிராமிங் மொழிகளுக்கிடையேயான வேறுபாடுகளை அறிந்து கொள்ள ஒரு சின்ன எடுத்துக் காட்டினைப் பார்ப்போம். மேலே தரப்பட்டுள்ள அனைத்து புரோகிராமிங் மொழிகளின் குறியீடுகளும் hello world என்ற டெக்ஸ்ட்டைக் காட்டிட எழுதப்பட்ட புரோகிராம்களே. அவற்றின் அமைப் பிலிருந்து நாம் வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய அளவில், ஏறத்தாழ 20 புரோகிராமிங் மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரபலமான சிலவற்றை இங்கு வகைப்படுத்தித் தருகிறேன்.
1. விண்டோஸ் அப்ளிகேஷன்கள்: C#, Visual C++, Visual Basic.Net, DirectX API’s, HTML 5, Jav
2. மேக் ஓ.எஸ். அப்ளிகேஷன்கள்: Objective C, X Code with Cocoa Framework, Java
3. ஐபோன் அப்ளிகேஷன்கள்: Objective C with Cocoa Framework
4. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்: Java and some C#
5. இணையப் பக்கங்கள்: HTML, CSS, Flash, JavaScript, Java, PHP, Perl, ASP.net
6. டிவிக்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள்: Assembly and C#
மேலே தரப்பட்டுள்ள விளக்கங்கள், ஓரளவிற்கு புரோகிராமிங் மொழிகளின் வகைகளையும், அவற்றின் தேவைகளையும் தந்திருக்கும் . இவற்றிலிருந்து நீங்கள் உங்கள் தளத்தினைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான புரோகிராமிங் மொழிகளை ஆழமாகக் கற்கலாம்

Read more...

இசை உலகில் மிக எளிதாகப் பயன்படுத்தப்படும் எம்பி3 ஆடியோ வடிவத்தினைக் கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டில் இது புழக்கத்தில் வந்தது

ஆடியோ பைல்களைச் சுருக்கிப் பயன்படுத்தும் இந்த அரிய கண்டுபிடிப்பிற்குச் சொந்தக்காரர் Karlheinz Brandenburg என்பவராவார். அவரிடம் கேட்டால், தான் மட்டுமல்ல, ஒரு குழுவே இணைந்து இதனைக் கண்டுபிடித்ததாகக் கூறுவார். எம்பி3 (MPEG1 Audio Layer III. MPEG – for Motion Picture Experts Group) என்ற இந்த பெயர் 1995ல் கொடுக்கப்பட்டாலும், இதற்கான ஆய்வு அதற்கும் முன்னால், சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. இதன் எளிய, வேகத்தன்மையைக் கண்டறிந்த அனைத்து ஆடியோ சாதனங்களின் தயாரிப்பாளர்களும் இதனை அப்படியே ஏற்றுக் கொண்டனர். 1997ல், இதனை இயக்க விண் ஆம்ப் வெளியானது. அதன் பின்னரே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் மீடியா பிளேயரை, எம்பி3 இயக்கும் வகையில் வெளியிட்டது. உலகளாவிய அளவில், மக்களின் இசைத் தாகத்தை எம்பி3 தீர்த்து வைத்தது

Read more...

மைக்ரோசாப்ட் TUESDAY என தனியே சொல்லப்படுகிறது? இந்த நாளின் விசேஷம் என்ன

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையும், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்திடும் பைல் தொகுப்புகளை, தன் இணைய தளத்தில் வெளியிடுகிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதல் தன் அனைத்து தொகுப்புகளுக்கும் தேவையான பைல்கள் அன்று கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, சென்ற மார்ச் இரண்டாம் செவ்வாய்க் கிழமை வெளியான பைல் தொகுப்பில், Internet Explorer, Silverlight, SharePoint, OneNote, மற்றும் Outlook for Mac ஆகிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைல்கள் தரப்பட்டன. நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் தொகுப்புகள், அந்த கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கும்போது, தானாகவே, மைக்ரோசாப்ட் இணைய தளத்தைத் தொடர்பு கொண்டு, இந்த பைல்களைத் தரவிறக்கம் செய்திடும். நாம் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, அவற்றைத் தானாகவோ, அல்லது நம் அனுமதியின் பேரிலோ, இன்ஸ்டால் செய்து கொள்ளும், இந்த செவ்வாய்க்கிழமையினை “Patch Tuesday” எனவும் பலர் அழைக்கின்றனர்.

Read more...

4ஜி மொபைல் சேவை என்பதின் அளவு என்ன?

4 ஜி என்பது மொபைல் தொழில் நுட்பத்தின் நான்காம் நிலை fourth generation cellular technology என்பதின் சுருக்கம். இந்த தொழில் நுட்பமும் பயன்பாடும், கொரியாவில் 2006 ஆம் ஆண்டில் சோதனை செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தலை காட்ட ஆரம்பித்தது. 4ஜி என எதனை அழைக்கலாம் என்பதற்கான தொழில் நுட்ப வரையறைகளைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். ஒரு கார் அல்லது வேறு வாகனத்தில் செல்கையில், 4ஜி தொழில் நுட்பமானது விநாடிக்கு 100 மெகா பிட் தகவல்களைப் பரிமாற வேண்டும். இதுவே, அலுவலகம் போன்ற நிலைத்த இடங்களில், ஒரு கிகா பிட் ஆக இருக்க வேண்டும். தற்போது பல நாடுகளில், அமெரிக்கா உட்பட, இந்த தொழில் நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. அதற்கேற்ப மொபைல் ஸ்மார்ட் போன்களும், 4ஜி பயன்பாட்டில் இல்லாத நாடுகளிலும், இந்தியா உட்பட, சந்தையில் கிடைக்கின்றன. முதலில் அமைத்த வரையறைகளை இவை நிறைவேற்றுகின்றனவா என்பது கேள்விக்குரியது என்றாலும், தொடர்ந்து வேகத்தினை அதிகரிக்கும் பணியினை தொழில் நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் தற்போதைக்கு 3ஜி தொழில் நுட்ப அடிப்படையில் சேவை கிடைக்கிறது. அதுவும் நல்ல வேகத்திலேயே செயல்படுகிறது

Read more...

மொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்

இணையத்தில், ஒளிவு மறைவற்ற தன்மை, புதுமை மற்றும் புதிய சந்தர்ப்பங்களையும் வசதிகளையும் அமைத்தல் என்ற இலக்குகளை அமைத்து, கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாக, வெற்றிப் பெருமிதத்துடன் மொஸில்லா நிறுவனம் அறிவித்தது. இது நாம் அனைவரும் கண்டு, அனுபவித்து வரும் உண்மையே. புதிய தொழில் நுட்பம், திறவூற்று டிஜிட்டல் வளர்ச்சி, புதிய தளங்களில் செயல்பாடு, ஒவ்வொரு நாளும் புதிய பயனாளர்களைப் பெறுதல் என மொஸில்லாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளதை, யாரும் மறுக்க முடியாது. மொஸில்லாவின் வளர்ச்சியைக் கீழே தரப்பட்டுள்ள அதன் வரலாற்றுச் சாதனைகள், உறுதி செய்வதாக அமைந்துள்ளன.
1998 ஆம் ஆண்டு மார்ச் 31ல் மொஸில்லா திட்டம் உருவானது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் புதுமையையும், அவர்கள் விரும்புவதனையும் தரவேண்டும் என்பதனை இலக்குகளாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது. இலாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட இந்த திட்டம், இணையப் பயனாளர்கள் கைகளில், விருப்பப்பட்டவற்றைத் தருவதற்காக, பயர்பாக்ஸ் பிரவுசரை உருவாக்கியது.
2004 ஆம் ஆண்டில், பயர்பாக்ஸ் பதிப்பு 1 வெளியானபோது, நியூ யார்க் டைம்ஸ் இதழில் அறிவிக்கப்பட்ட ஒரு பக்க விளம்பரத்தினைப் பார்த்த, 10 ஆயிரம் பேர், அந்த விளம்பரத்திற்கான நிதியைக் கொடுத்து, தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர். இன்று, அனைத்து நாடுகளிலிருந்தும், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், நிதி உதவி செய்து வருகின்றனர். அன்டார்ட்டிகா கண்டத்திலிருந்தும் இதற்கு உதவி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு இணையம் பயன்படுத்துபவர்களில், 80 சதவீதம் பேர், பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.
பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் தொகுப்புகள், இணைய அனுபவத்தினை, அவரவர் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள இடம் அளித்து வருகின்றன. இந்த தொகுப்புகள் இதுவரை 300 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இணையத்தில் உலா வருபவர்களின் தனி நபர் தகவல்களை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதை, பயர்பாக்ஸ் பிரவுசர் தான் முதலில் எடுத்துச் சென்றது. இந்த வகையில் பிரைவேட் பிரவுசிங் போன்ற வழிகளைப் பயனாளர்களுக்குத் தந்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களின் தனி நபர் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
உலகளாவிய அளவில், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள் ஒரு சமுதாயமாக இணைக்கும் பணியினை மொஸில்லா மேற்கொண்டுள்ளது. இவர்கள், பயர்பாக்ஸ் பிரவுசரை உலகின் 89 மொழிகளில் மொழி பெயர்த்து அமைத்துள்ளனர். இதன் மூலம், உலகின் ஜனத்தொகையில் 95 சதவீதம் பேர் தங்கள் மொழிகளில், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்த முடிகிறது.
2008 ஆம் ஆண்டில், 80,02,530 பேர் ஒரே நாளில் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தரவிறக்கம் செய்தனர். இதன் மூலம் 24 மணி நேரத்தில் அதிகமான பேர்களால், தரவிறக்கம் செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ற கின்னஸ் உலக சாதனையை பயர்பாக்ஸ் பிரவுசர் மேற்கொண்டது. மொஸில்லா திருவிழா என ஆண்டு தோறும் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான இணைய வல்லுநர்கள் இதில் இணைந்து தங்கள் திறமையின் நிகழ்வுகளை மொஸில்லாவிற்கு அளிக்கின்றனர். இதன் மூலம், இணையத்தின் முழுத் திறனை மக்கள் அனுபவிக்க முடிகிறது.
மொஸில்லா வெப் மேக்கர் (Mozilla Webmaker) மூலம், இணையம் கற்ற ஓர் உலகத்தை அமைக்க முடிகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் இணையத்தை வடிவமைக்கத் தேவையான சாதனங்களை, சாப்ட்வேர் தொகுப்புகளாக அளிக்கிறது. இதே போல Mozilla WebFWD program என்பது, ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று வகையிலான புரோகிராமர்கள் மற்றும் புதியன கண்டுபிடிப்பாளர்களைப் புதியனவற்றை வடிவமைத்துத் தர உற்சாகப்படுத்தும் புரோகிராம் ஆகும். இதன் மூலம் இணைய பயன்பாடு இன்னும் மேன்மையடைகிறது.
Mozilla Developer Network என்பது மொஸில்லா சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களால் அமைக்கப்பட்ட ஒரு இணைய வெளி சமுதாயம். இச்சமுதாய உறுப்பினர்கள், மிகச் சிறந்த இணையச் செயல்பாட்டு விளக்கங்கள், சாதனங்கள் மற்றும் உரைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இவை ஏறத்தாழ 20 லட்சம் வாடிக்கையாளர்களை அடைகின்றன.
இந்த 2013 ஆம் ஆண்டில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. இதன் மூலம், ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் சிறப்புகளை முழுமையாக அடையலாம். இதன் மூலம், ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை நாடும் மக்களுக்கு, அதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தனிப்பட்ட முறையில் அதன் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும் என மொஸில்லா இலக்கு நிர்ணயித்துள்ளது.
மொஸில்லாவின் இந்தப் பணி ஒரு சமுதாயப் பணியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கானவர் செய்திடும் நிதி உதவியும், தன்னார்வ வல்லுநர்கள் வழங்கிடும் தொழில் நுட்ப உதவியும் இதனை ஈடேற்ற உதவுகின்றன. இணையம் என்பது எல்லாருக்கும் எந்த நேரமும் பயன்படுத்தும் ஒரு வெளியாக இருக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்களா! உடனே மொஸில்லாவின் இணைய சமுதாயத்தில் இணையுங்கள். உங்கள் பங்களிப்புதான் இன்னும் 15 ஆன்டுகள் அல்ல, பல ஆண்டுகள் மொஸில்லாவினையும், அதன் மூலம் இணையத்தையும், நம் மக்களையும் அர்த்தமுள்ள வாழ்க்கையினை மேற்கொள்ள வைக்கும்.

Read more...

லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஹீட் ஸிங்கின் பணி என்ன?

வெப்பத்தினைக் கடத்தும் ஒரு சாதனம் heat sink. எலக்ட்ரானிக் சாதனங்கள் இயங்குகையில் உருவாகும் வெப்பத்தினைத் தொடர்ந்து கடத்தி அனுப்பும் பணியினை இது மேற்கொள்கிறது. இதனால், தொடர்ந்து உருவாகும் வெப்பத்தினால், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் செயல் தடைபடுவது தடுக்கப்படுகிறது. காரில் உள்ள ரேடியேட்டர் போன்ற வடிவமப்புடன் இது உருவாக்கப்பட்டு, லேப்டாப் கம்ப்யூட்டரில் அமைக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் ப்ராசசர், லேசர் டயோட், எல்.இ.டி. பல்ப் போன்ற, வெப்பத்தினை அதிகமாக வெளிப்படுத்தும் சாதனங்களுடன் இணைவாகப் பொருத்தப்பட்டு இவை இயங்குகின்றன. இவை வெப்பத்தினைக் கடத்துவதால், இந்த சாதனங்கள் இயங்க நிலையான, சரியான வெப்ப சூழ்நிலை தரப்படுகிறது.

Read more...

சமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க..

ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, அக்கவுண்ட் நீக்கும் வழியை நாடலாம்.
1.பேஸ்புக்:
இன்றைய நிலையில், மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு இரண்டு வழிகள் தரப்படுகின்றன. இந்த சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதால், நீங்கள் எவற்றை எல்லாம் இழக்கிறீர்கள் என்று தெரியாமல் இருந்தால், தற்போதைக்கு இதனை மூடிவிட்டு, பின் ஒரு நாளில், மீண்டும் இதனைப் புதுப்பிக்க நீங்கள் எண்ணலாம். அதற்கான வழி தரப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் செல்லவும். சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இனித் தொடர்பு கொள்ள முடியாது, இது உங்களுக்கு இசைவா? என ஒரு செய்தி தரப்படும். அதே நேரத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தினை விட்டு விலகுகிறீர்கள் எனக் கட்டாயமாகக் காரணத்தைப் பதிய வேண்டியதிருக்கும். இதனை முடித்த பின்னர், Confirm என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பதிவு மறைந்துவிடும். இனி, மீண்டும் நீங்கள் பதிவினைப் புதுப்பித்தால் மட்டுமே, நண்பர்களுடன் நீங்களும், நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முடியும். புதுப்பிக்க வழக்கம் போல அக்கவுண்ட் லாக் இன் செய்தாலே போதும். இப்படி இல்லாமல், நமக்கு இந்த பேஸ்புக் தொடர்பே வேண்டாம் என்று முடிவு செய்தால், நீங்கள் account removal பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு Delete My Account என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்டு உறுதி செய்யப்படும். பின்னர், அங்கு கிடைக்கும் கேப்சா சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின்னரும், உங்கள் அக்கவுண்ட் இரு வாரங்களுக்கு இருக்கும். இந்தக் காலத்தில், அந்த அக்கவுண்ட்டைப் புதுப்பிக்க நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் அக்கவுண்ட் காலாவதியாகி, நீக்கப்படும்.
2. ட்விட்டர்:
அடுத்ததாக, பிரபலமாக இயங்கும் சமூக இணைய தளம் ட்விட்டர். இதிலிருந்து விலகும் முடிவினை எடுத்து விட்டீர்களா? ட்விட்டர் இணைய தளத்திற்கு வழக்கம் போலச் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் பதிவில் நுழையுங்கள். இணைய தளப் பக்கத்தில், வலது மேல் மூலையில் காணப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் பக்கத்தில் கீழாகக் காட்டப்படும் ‘Deactivate my account’ என்ற தொடர்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கும். தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட் பதிவு நீக்கப்படு வதாகவும், தொடர்ந்து 30 நாட்கள் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உங்கள் பதிவு நீக்கப்படும் என்று ஒரு செய்தி காட்டப்படும். இந்த 30 நாட்களில், மீண்டும் ட்விட்டர் இணையதளத் தொடர்பு தேவை என நீங்கள் எண்ணினால், வழக்கம் போல லாக் இன் செய்து தொடரலாம்.
3. கூகுள் ப்ளஸ்:
கூகுள் இணைய தளத்தின் ஒரு பிரிவான, கூகுள் ப்ளஸ் பிரிவில் உள்ள உங்கள் அக்கவுண்ட்டினை, முழுவதுமாகவே நீங்கள் நீக்கிவிடலாம். இதற்கு முதலில் கூகுள் இணையதளம் (www.google.com) செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள உங்கள் அக்கவுண்ட் லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலாகப் பார்க்கையில் இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிந்தாலும், மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நீங்கள் கூகுள் ப்ளஸ் தொடர்பிலிருந்து விலக விரும்பினால், ‘Delete profile and remove related Google+ features’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இப்போது இதனைத் தேர்ந்தெடுப்பதால், ஏற்படும் விளைவுகள் பட்டியலிடப்படும். கூகுள் தளத்தில் பல இடங்களில் உங்களால் தொடர்பு கொள்ள முடியாது என எச்சரிக்கை கிடைக்கும். இவற்றில் எந்த சேவை எல்லாம் தேவை இல்லையோ, அவற்றை டிக் செய்திடவும். பின்னர் ‘Remove selected services’ என்பதில் கிளிக் செய்திடவும். இதற்குப் பதிலாக ‘Delete your entire Google profile’ என்பதில் கிளிக் செய்தால், யூட்யூப் மற்றும் குகூள் பஸ் முதற்கொண்டு பல சேவைகளை நீங்கள் இழக்க வேண்டியதிருக்கும். உங்கள் அக்கவுண்ட்டினை முழுமையாக நீக்க எண்ணினால், உங்கள் அக்கவுண்ட் பிரிவில் Account Management என்பதில் உள்ள ‘Close account and delete all services and information associated with it’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். பல நிலைகளில் உள்ள தகவல்களை இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கையில் நீக்க வேண்டியதிருப்பதால், மீண்டும் உங்களிடம் உறுதி செய்திடும் ஆப்ஷன் கேட்கப்படும். எனவே கூகுள் தரும் பல சேவைகளில் (AdSense முதல் YouTube வரை) எவை எல்லாம் வேண்டாமோ, அவற்றில் கிளிக் செய்து, உறுதி செய்திடவும். உறுதி செய்திடுகையில், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டு உறுதி செய்யப்படும். மீண்டும் ஒருமுறை ‘Yes, I want to delete my account’ என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.
மேலே காட்டியுள்ள இணைய தளங்களுடன், Instagram மற்றும் Flickr போன்ற சமூக தளங்களும், இன்னும் சிலவும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இருந்து நம் பதிவுகளை நீக்குவது எளிதான வழியாகத் தரப்பட்டுள்ளது. எப்போது தேவை இல்லை என்று உணர்கிறோமோ, அப்போதே, நம்மால் ஏற்படுத்தியுள்ள தகவல்களைக் காப்பி எடுத்துப் பின்னர், பதிவை நீக்கிவிடலாம்.
இதன் தொடர்பில் இன்னொரு தகவலையும் இங்கு காணலாம். இது போன்ற அக்கவுண்ட்களை நீக்குவதற்கென accountkiller என்ற ஒரு புரோகிராம் உள்ளது. இதனை http://www.accountkiller.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் இணையதளங்களில் உள்ள அக்கவுண்ட்களை நீக்குவதில் உள்ள சிக்கல்களின் அடிப்படையில், அனைத்து தளங்களும் ஒயிட்லிஸ்ட், கிரே லிஸ்ட் மற்றும் பிளாக் லிஸ்ட் என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒயிட் லிஸ்ட் மிக எளிதான வழிகளைக் கொண்டுள்ள தளங்களையும், பிளாக் லிஸ்ட் சுற்றி வளைத்துச் செயல்பட்டு நீக்கும் தளங்களையும் கொண்டுள்ளன. இடையே உள்ள கிரே லிஸ்ட், சிக்கல்கள் சுமாராக உள்ளனவற்றைக் கொண்டுள்ளன

Read more...

அனைத்து வகையான ட்ரைவர்களையும் ஒரே இடத்தில் தரவிறக்கம் செய்ய..

டிரைவர் CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த டிரைவரை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான டிரைவர்கள் முற்றிலும் இலவசமாக Windows XP, Windows 7(32-Bit) , Windows 7(64-Bit) போன்றவற்றுக்கு கிடைக்கும்.
Audio Drivers
Barebone Drivers
Bluetooth Drivers
EEE PC Drivers
Fax-Modem Drivers
Graphics Card Drivers
LCD Monitors Drivers
Mobile Phone Drivers
Modem Drivers
Motherboard Drivers
Mouse Drivers
Netbook Drivers
Networking Drivers
Notebook Drivers
Other Drivers
Printer Drivers
Scanner Drivers
Sound Drivers
TV-Card Drivers
Webcam Drivers
Wireless Drivers


ALL-DRIVER.COM

Read more...

எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுத்து பயன்படுத்துவது சலிப்பைத் தருகிறது. இந்த முறையை மாற்ற முடியுமா

Monday, July 15, 2013

பாஸ்வேர்டை செயலற்றதாக மாற்றிவிடலாம். ஒரு சிறிய எச்சரிக்கை வேண்டுகோள். உங்கள் பாஸ்வேர்டினை முழுமையாக அழித்துவிடுவது நல்லதல்ல. கம்ப்யூட்டர் பயனாளர் என்ற முறையில், உங்களைச் சார்ந்த தகவல்கள் மற்றும் பைல்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் பணியைக் காட்டிலும் முக்கியமானதல்லவா! எனவே, பாஸ்வேர்டினை முழுமையாக நீக்காமல், ஒவ்வொரு முறையும் அதனைத் தந்து, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதனை மாற்றலாம். பாஸ்வேர்ட் இருப்பதனாலேயே, அதனைத் தந்து தான், உங்கள் பணியைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. Start அழுத்தி, பின் Run தேர்ந்தெடுங்கள். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் நீள விண்டோவில் control userpasswords2 என டைப் செய்திடவும். இதில் இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே ஒரு ஸ்பேஸ் இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
இப்போது ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் அந்த கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட்ஸ் குறித்த தகவல் தரப்படும். பயனாளர் பட்டியல் இருக்கும். இதில் உங்கள் பெயரைத் தேர்ந்தெடுங்கள். இங்கு Users must enter a user name and password to use this computer என்று இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் Apply என்பதில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து கிடைக்கும் பாக்ஸில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து, உறுதி செய்திடுங்கள். அவ்வளவுதான். இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும், உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே செல்ல வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் அக்கவுண்ட்டிற்கான பாதுகாப்பு தொடரும்..

Read more...

இணையதளம் - இன்று நான் தெரிந்து கொண்டேன்

எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன. சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பது நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும். இதனால், நம் அறிவும் விசாலமாகிறது. இது போன்ற தகவல்களை அன்றாடம் நமக்கு ஓர் இணையதளம் வழங்கினால் எவ்வளவு எளிதாக இருக்கும். இந்த இலக்குடனே ஓர் இணையதளம் இயங்குகிறது. அதன் முகவரி  http://www.todayifoundout.com.

இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, அன்றைக்குப் புதியதாக பதியப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகள் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றன. பக்கத்தின் மேலாக, நாம் தேடிப் பெறுவதற்கென, சில வகைகள் தரப்பட்டுள்ளன. Articles, Quick Facts, Answers, Know It, This Day in History, and Infographics – என இவை அமைந்துள்ளன. இவற்றின் வழிதான் செல்ல வேண்டும் என்பதல்ல. நாம் விரும்பும் அல்லது தேடும் பொருள் குறித்து, கேள்வி அமைத்துத் தேடிப் பெறலாம்.

முதன்மைப் பக்கம் மட்டுமின்றி, பக்கங்களுக்குள் சென்றும் சில பிரிவுகளைக் காணலாம். இவற்றில் எனக்கு Myths and Misconcep tions என்ற பிரிவு மிகவும் ரசிக்கத்தக்கதாகவும், வியக்கத்தக்கதாகவும் உள்ளது. இந்தத் தகவல் குறிப்பினை எழுதுகையில், ஒவ்வொரு கண்டத்திற்கும் எப்படி அந்த பெயர் வந்தது என்ற சுவையான தகவல் தரப்பட்டிருந்தது. இதே போலவே பல வேறுபட்ட தகவல்கள் கிடைத்தன. இந்த தளத்தில் நம் மின் அஞ்சல் முகவரியினைப் பதிந்து வைத்தால், அன்றாடம் தளத்தில் பதியப்படும் தகவல்கள் குறித்து லிங்க் அஞ்சல் செய்யப்படுகிறது. அதில் கிளிக் செய்தால், இந்த தளத்தில் அத்தகவல் உள்ள பக்கம் கிடைக்கிறது. தகவல் தொகுப்பின் கீழாக, முன்னதாக மற்றும் அடுத்து உள்ள தகவல்களுக்கான லிங்க்கும் கிடைக்கும். இதில் கிளிக் செய்து தரப்பட்டிருக்கும் தகவல்களையும் காணலாம்.
அரிய தகவல்கள் தேடுவோர் அவசியம் காண வேண்டிய தளம் இது

Read more...

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளின் பெயர்கள்...

கூகுள் தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு உணவுப் பதார்த்தங்களின் பெயரை வைத்து அழைத்து வருகிறது.
 ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளின் பெயர்கள்.
Android 1.5 – Cupcake (கப்கேக்)
Android 1.6 – Donut (டோநட்)
Andorid 2.0 – Eclair (எக்ளேர்)
Android 2.2 Froyo (ப்ரையோ)
Android 2.3 – Gingerbread (ஜிஞ்சர் ப்ரெட்)
Android 3.0 – Honeycomb (ஹனி ஹோம்ப்)
Android 4.0 – Ice Cream Sandwich (ஐஸ்கிரீம் சாண்ட்விச்)
Android 4.1 – Jelly Bean (ஜெல்லிபீன்)

Read more...

இணையதளம் - கொறிக்க கொஞ்சம் அறிவியல்

இணையத்தில் உலா வந்த போது, சயின்ஸ் ஸ்நாக்ஸ் (Science Snacks) என்ற தலைப்பு சற்று வேடிக்கையாக என் கண்ணில் பட்டது. வியந்து உள்ளே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மூளைக்கு தீனி (ஸ்நாக்ஸ்) போடும் அறிவியல் சமாச்சாரங்கள் என்று. அட, அப்படியா! என நாம் வியக்கும் வகையில், பல அறிவியல் விஷயங்களை இந்த இணைய தளம் நமக்குத் தருகிறது.
நாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. ஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது? பிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது?இது போன்ற சாதாரண விஷயங்களுக்கு நாம் விளக்கங்களைத் தேடி எங்கு செல்வது? பல இணைய தளங்கள் இருந்தாலும்,
 http://www.exploratorium.edu/snacks/index.html என்ற முகவரியில் உள்ள தளம், இந்த கேள்விகளுக்கு நல்ல விளக்கத்தினைத் தருகிறது. இது போன்ற பல விஷயங்கள் இதில் மிகவும் எளிமையாகவும், அனைத்து தகவல்களுடனும் தரப்பட்டுள்ளன.
தளத்தில் நுழைந்தவுடன் இரண்டு வரிசைகளில் மேலே காட்டப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைத் தேடி, நாம் விரும்புவதைக் கிளிக் செய்தால், அங்கு நம் கேள்விக்கான விடை தரப்படுவதுடன், எளிய பொருட்கள் மூலம் எப்படி அவற்றை விளக்கலாம் என்றும் காட்டப்படுகிறது. இது தான் இந்த தளத்தின் சிறப்பு. Instructions, Advice, and Helpful hints என மூன்று பிரிவுகளில் இவை தரப்படுகின்றன. நீங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதில் உள்ள எளிய செயல்பாட்டினை மேற்கொண்டால் போதும். விஷயங்கள் தெளிவாகும்.
தளத்தின் முகப்பு பக்கத்தில் சயின்ஸ் ஸ்நாக்ஸ் மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளன. Science by Subject, Snack supplies, Snacks from az என இவை உள்ளன. முதல் பிரிவில் கெமிஸ்ட்ரி, கலர், மின்சாரம் எனத் தொடங்கி, பாடப்பிரிவுகள் பதினாறு பெரிய பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கிளிக் செய்தாலும் நாம் தேடும் தகவல்கள் கிடைக்கும். அறிவியலை மிக எளிதாகவும், விளக்கமாகவும் தரும் இந்த தளம் நாம் அடிக்கடி சென்று படித்து வர வேண்டிய ஒரு நல்ல புத்தகத் தளமாகும்.

Read more...

அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?

Sunday, July 14, 2013

உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரில் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொண்டுள்ளவர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. 

அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ்டம் பைல்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமைப்பை பாதிக்கலாம். இந்த இரு வகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான், மற்றவர்கள், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது. முக்கியமான பைல்களை அழிக்க முடியாது. இஷ்டத்திற்கு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முடியாது.
சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடுத்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல், நீங்கள் இயக்க முயற்சிக்கையில், முதலில் திரையில் தோன்றும் கட்டத்தில், இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்துவதனை அனுமதிக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்படும். நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில், அந்தக் கம்ப்யூட்டரில் நுழையவில்லை என்றால், அந்த புரோகிராமினைத் திறக்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் உங்களுக்கு அனுமதி கிடைக்காது. பைல்களை அழிக்க முற்படுகையிலும், புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையிலும் இதே போல அனுமதி மறுக்கப்படும்.

அனுமதி மறுக்கப்படும் இந்த புரோகிராம்களை இயக்குவதற்கும், புதிய சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதற்கும், உங்களைப் பற்றிய குறிப்பு தொகுதியை (profile), ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் தொகுதியாக மாற்ற வேண்டும். உங்களால், அட்மினிஸ்ட்ரேட்டருக்கான சலுகைகளைப் பெறும் வகையில் நீங்கள் லாக் இன் செய்யவில்லை என்றால், முதலில் ஸ்டார்ட் மெனு திறக்கவும். பின்னர், “Shut Down” என்ற பட்டன் அருகே உள்ள, அம்புக்குறி ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர், “Switch User” என்பதனைத் தேர்ந்தெடுத்து, எந்த வித profileல் நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனையும் தேர்ந்தெடுக்கவும். கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் பிரிவை அணுக, மீண்டும் ஸ்டார்ட் மெனு திரும்பி, கண்ட்ரோல் பேனல் பட்டனை அழுத்தவும்.

கண்ட்ரோல் பேனல் மெனுவில், பச்சை நிறத்தில் உள்ள “User Accounts and Family Safety ,""தலைப்பில் கிளிக் செய்திடவும். இது விண்டோவில், மேல் வலது மூலையில் இருக்கும். இதில் “User Accounts” என்பதில் கிளிக் செய்து, ஆப்ஷன்ஸ் பெறவும். அடுத்து நீல வண்ணத்தில் தரப்பட்டிருக்கும் “Change Your Account Type,” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இது “Make Changes To Your User Account” என்பதன் கீழாகக் கிடைக்கும். இனி உங்கள் profile ஐ அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்ற, “Administrator” என்னும் ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதன் பின் விண்டோவின் கீழாக உள்ள “Change Account Type” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
    சில வேளைகளில், அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் நுழைவதனாலேயே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து பைல்களையும் அணுக முடியாது. சில புரோகிராம்களை இயக்கும் முன், அதனை அட்மினிஸ்ட்ரேட்டராக இயக்க விரும்புவதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இந்த ஆப்ஷனைக் கேட்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், சில செக்யூரிட்டி புரோகிராம்கள் இந்த சோதனையை நடத்தும்.
ஏதேனும் சில புரோகிராம்கள், அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக லாக் இன் ஆன பின்னரும், அதன் முழு வசதிகளையும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றால், அதன் டெஸ்க்டாப் ஐகானில், ரைட் கிளிக் செய்து, Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துப் பின் இயக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேட்டர்
அக்கவுண்ட்டிற்கு சிஸ்டம் பைல்களை மாற்றும் அனுமதி தரப்படுவதால், நம் அன்றாட பணிகளுக்கு, மைக்ரோசாப்ட், ஸ்டாண்டர்ட் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறது. இதனால் சில வசதிக் குறைவுகள் ஏற்பட்டாலும், ஸ்பைவேர் மற்றும் வைரஸ் புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டரில் தங்கள் ஆளுமையை ஏற்படுத்துவது சிரமமாக மாறும். ஏன், முடியாமலே போகலாம்

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP