கணினியை ஸ்டார்ட் செய்யும்போது NTLDR Missing என பிழைச்செய்தி வந்தால்
Monday, August 12, 2013
கணினியை ஸ்டார்ட் செய்யும்போது NTLDR Missing press
ctrl +alt+ Delete to restart என்ற பிழைச்செய்தி வந்தால்....
NTLDR என்பது New technology Loads என்பதாகும்.கணினி ஸ்டார்ட் ஆகும்போது பயாஸ் ஆனது ஹார்ட் ட்ரைவின் ஆக்டிவ்
பார்ட்டீசன் எம்பிஆர் [MBR] என்பதற்கான முதலாவது செக்டாரை ரீட் செய்யும் பின்புதான்
ஆபரேட்டிங் சிஸ்டம் பகுதிகள் லோட் ஆகும். எம்பிஆர் [MBR] ஆனது NTLDR என்பதற்கு
பாயிண்ட் செய்யப்பட்டுள்ளது.எனவேதான், NTLDR,Nt detect.com போன்ற
booting file-களில் பிழை ஏற்படும் போதுதான் இது போன்ற
பிழைச்செய்திகள் வருகின்றன.
இப்படி சிக்கல் ஏற்படும் போது விண்டோசை
புதிதாக நிறுவாமல்
கணினியை ரீஸ்டார்ட்செய்து விண்டோஸ் CD மூலம் பூட் செய்யுங்கள். சிறிது நேரத்தில் Taskbar ,Enter =Continue R =Repair,F3 =Quit போன்றவற்றைக் கொண்ட திரை தோன்றும். அதில்R என்பதை 1Windows என்பதும் அதற்கு கீழ் which windows
installation would you like to log on to [to cancel press enter] என்று காணப்படும் இதில் 1-ஐ அழுத்துங்கள்.பின்பு உங்கள்
அட்மினிட்ஸ்ரேட்டர் கடவுச் சொல்லை கொண்டு லாக் ஆன் செய்யுங்கள். இனி C:/windows> என்பதின் கீழ் COPY C:/1386/NTLDR H:/ என்று தட்டச்சு செய்து Enter கொடுங்கள். இனி Exit என்று தட்டச்சு செய்துவிட்டு கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்தால் உங்கள் சிக்கல் சரி செய்யப்பட்டு
இருக்கும்.
உங்கள் கணினியில் cd rom drive ஆக எது உள்ளதோ அதை கொடுக்கவேண்டும் இங்கு உதாரணத்திற்கு H:/ என கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நீங்கள் எந்த
ட்ரைவில்
Windows
நிறுவி உள்ளீர்களோ அதையும் சரியாக கொடுக்கவேண்டும்.
0 comments:
Post a Comment