Powered by Blogger.

பெண்டுலம்

Friday, July 4, 2025

பெண்டுலம் அதற்கும் உயிருண்டு

பெண்டுலத்தைச் செயல்படுத்துவது மந்திர மாயம் எதுவுமில்லை. அதன் செயல்பாடு விஞ்ஞான விதிகளுக்கு உட்பட்டதுதான். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும், உயிருள்ளவைகளும், உயிரல்லாதவைகளும், அடிப் படையில் ஒரே தன்மையினைக் கொண்டவைதான். அனைத்துமே அணுக்களால் (atoms) ஆக்கப்பட்டவை. ஒவ்வொரு அணுவுக்கும் நியூக்ளியஸ் என்கிற மையம் உண்டு. அதைச் சுற்றிலும் எலக்ட்ரான்கள் ஒரு செகண்டுக்கு 1,86,000 மைல் வேகத்தில் சுழல்கின்றன. மிகச் சிறிய அணுவுக்குள் இந்த வேகத்தில் எலக்ட்ரான்கள் சுழல்வதை கற்பனை செய்வதற்கே ஒரு விசேஷ ஆற்றல் வேண்டும். நம்முடைய உடலிலுள்ள அணுக்கள் ஆனாலும், செடி, கொடி, தாவரங்கள், ஏனைய ஜடப் பொருட்கள் அனைத்திலும் உள்ள அணுக்கள் ஆனாலும் ஒரே அமைப்பைக் கொண்டவை. எனவே பிரபஞ்சத் திலுள்ள அனைத்துப் பொருட்களும் அடிப்படையில் ஒரே தன்மையானவை என்பது தெளிவாகிறது. இந்தத் தன்மைதான் ஒன்றை இன்னொன்றுடன் தொடர்பு படுத்துகிறது.

வெளித் தோற்றத்துக்கு இந்தத் தொடர்பு தெரியாமல் போகலாம். நாம் ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு அதிர்வும் (Vibration) பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கிறது

source:

ஆக்கபூர்வ சிந்தனையின் அற்புத ஆற்றல்கள்

 கணேசன். பி சி

Read more...

கருப்பு பெட்டி' ரகசியம் ..

Monday, June 16, 2025

 கருப்பு பெட்டி' ரகசியம் என்ன...

இந்திய விமானத்தின் பின்பகுதியில் 'கருப்பு பெட்டி' (பிளாக் பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். இதில் 'பிளைட் டேட்டா ரிகார்டர்', 'காக்பிட் வாய்ஸ்' என இரு பகுதி இருக்கும். ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரென் இதை கண்டுபிடித்தார். இது கருப்பு நிறத்தில் இருக் காது. எளிதில் தெரியும் விதமாக ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். விமானம் புறப்பட்டது முதல் தரையிறங்கும் வரையிலான புள்ளி விவரங்கள், கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் பேசியது இதில் பதிவாகியிருக்கும்.

இது 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும். துருப்பிடிக்காத இரும்பு அல்லது டைட்டா னியம் உலோகத்தால் ஆன நினைவுத்திறன் பகுதி (மெமரி) இருக்கும். 25 மணி நேர தகவல்களை பதிவு செய்யும். பேட்டரி 6 ஆண்டு நீடித்திருக் கும். 30 நாட்களுக்கு ரேடியோ சிக்னல் வரும். நீரில் 20 ஆயிரம் அடி ஆழத்திலும் வேலை செய்யும்.

Source:-

தினமலர்.

Read more...

தைராய்டு சுரப்பி*

Sunday, June 8, 2025

 தைராய்டு பரிசோதனைகள், தீர்வுகள்...

தைராய்டு சுரப்பி*

தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி. தொண்டையில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பியாகும். இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது, இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. உடலிலுள்ள அயோடினில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தைராய்டில்தான் இருக்கிறது. உணவின் மூலம் கிடைக்கக்கூடிய அயோடினில் பற்றக்குறை ஏற்பட்டால் தைராய்டு குறைபாடு ஏற்படும். 

தைராய்டு ஹார்மோன்கள்* 

மூளையிலுள்ள `ஹைப்போதாலமஸ்’ என்றழைக்கப்படும் பகுதிதான் தைராய்டைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹைப்போதாலமஸ், தைராய்டு ஹார்மோன்களுக்கான தேவை இருப்பதைக் கண்டறிந்தால், மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் கொடுக்கும். இந்தச் சுரப்பி ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்படி தைராய்டுக்கு சிக்னல் கொடுப்பதற்காக, தைராய்டு சுரப்பித் தூண்டு ஹார்மோனை (TSH) இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் TSH மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் தைராய்டின் செயல்பாட்டையும் நம்முடைய உடல்நிலையையும் பற்றி டாக்டர்களால் சொல்ல முடியும்.  


*தைராய்டுக்கு காரணங்கள்*

* உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது.

* வாய் திறந்து தண்ணீர் அருந்துவது முக்கிய காரணம்.

* தைராய்டு பிரச்னைக்கு, உணவில் அயோடின் சத்துக் குறைவது,  உடல்ரீதியான அல்லது மனரீதியான அழுத்தம், மரபியல் குறைபாடுகள், தொற்றுகள், நோய் சுயதடுப்பாற்றல்  (Autoimmune disease), பல்வேறு நோய்களுக்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகள் ஆகியவை காரணமாக இருக்கலாம். 


* தைராய்டு வீங்கியிருப்பது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அந்த வீக்கம் தைராய்டு சுரப்பி முழுவதும் பரவியிருக்கலாம் அல்லது கட்டிகள் வடிவில் இருக்கலாம். பொதுவாக, அது சாதாரண வீக்கமாக இருக்குமென்றாலும் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியது முக்கியம்; ஏனென்றால், சில சமயங்களில் அது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கு அறிகுறியாகவும் இருக்கலாம். 


* பொதுவாக, சரிவர செயல்படாத தைராய்டு மிகக் குறைவாகவோ மிக அதிகமாகவோ ஹார்மோன்களை உற்பத்தி செய்யலாம். அதிகமாக உற்பத்தி செய்வது, மிகைநிலை தைராய்டு - ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism) என்றும் குறைவாக உற்பத்தி செய்வது, குறைநிலை தைராய்டு  - ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) என்றும் அழைக்கப்படுகின்றன. 


*குறை தைராய்டு அறிகுறிகள்*


* எப்பொழுதும் சோர்வு, அதிகத் தூக்கம்.

* தாங்க முடியாத குளிர்.

* மெத்தனம், செயல்கள் மந்தமாகும்.

* நாடி துடிப்பில் வேகம் குறைவு.

* முகம் வீங்கும்.

* வறண்ட சருமம்.

* குரலில் மாற்றம்.

* முறையற்ற மாதவிலக்கு, அதிக இரத்த போக்கு.

* ஞாபக மறதி.

* பசியின்மை ஆனால், உடல் எடை கூடுதல்.

* மன அழுத்தம்.

* வறண்ட முடி, இளநரை, முடி கொட்டுதல்.

* மூட்டு வலி.

* இரத்தத்தில் கொழுப்பு அதிகம்.

என பல அறிகுறிகள் அடுத்தடுத்து வரும். 


*தைராய்டு ஹார்மோன் குறைவாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை*


* சிறு தானியங்கள்

* காலி பிளவர்

* ப்ரோகலி

* பசலை கீரை

* புகையிலை

* மது

* சோயா

* க்ளூடன் உணவு

* செயற்கை சர்க்கரை

* அதிக மாவு சத்து

* துரித உணவு ஆகியவை ஆகும்.


*மிகைத் தைராய்டு அறிகுறிகள்*


* அதிக தாகம்

* அதிக பசி

* சூடுபொறுக்க முடியாமை

* நாடித்துடிப்பு அதிகம்.

* அசதி

* நடுக்கம், விரல்கள் நடுக்கம்.

* எரிச்சல்

* அதிக வியர்வை

* எடை குறைதல்

* தசை பலவீனம்

* முறையான தூக்கமின்மை

* அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்;

* கண் பார்வை தொந்தரவு

* முறையான மாதவிடாய் இன்மை

* உடலில் அரிப்பு ஆகியவை ஏற்படும்.

* தைராய்டு ஹார்மோன் அதிகம் இருந்தாலும் மனச்சோர்வு, இருதய பாதிப்பு ஆகியவை ஏற்படும். 

https://chat.whatsapp.com/LWjLAyXUiWA0JEvkwHt0yE

*தைராய்டு ஹார்மோன் அதிகம் இருக்கும் பாதிப்பு உடையவர்கள் தவிர்க்க வேண்டியது*


* காபி, டீ போன்றவை

* அடர்ந்த பால்

* அதிக சர்க்கரை

* சிவப்பு அசைவம்

* அலர்ஜி தருபவை

* வனஸ்பதி போன்ற அடர்ந்த கொழுப்பு

* அயோடின் அதிகமானவை

* கடல் உணவு

* ஆல்கஹால் ஆகியவை ஆகும். 


*யார்யார் பாதிக்கப்படுவார்கள்* 


*தைராய்டு பாதிப்பு உடையவர்களில்*


* 10-ல் 8 பேர் பெண்களாக இருக்கின்றனர். 


* நீரிழிவு பாதிப்பு உடையவர்களில் 20- சதவீதம் நபர்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்படுகின்றது. 


* தைராய்டு நோய் படிப்படியாகவும் புலப்படாத விதத்திலும் ஏற்படலாம்; ஆகவே, பல வருடங்களாக அந்த நோய் இருப்பது ஒருவருக்குத் தெரியாமல் போகலாம், இதற்கும் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் குணம் பெறலாம்.


*தைராய்டு பரிசோதனைகள்*

• பரிசோதனை வெறும் வயிற்றில் செய்யப்படும்.


• பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தியிருக்கக் கூடாது; புகைபிடித்திருக்கக் கூடாது. 


• அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை தெரிந்து கொள்ள முடியும். 


• இப்போது ஐசோடோப் ஸ்கேன் (Isotope Scan) பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை  துல்லியமாகத் தெரிவிக்கிறது. 


• வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி, செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறியமுடியும். 


*யாருக்கெல்லாம் பரிசோதனை அவசியம்..?*


* குறை, மிகை தைராய்டு பிரச்சனை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள், இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


* தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்னை உள்ளவர்கள் தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இதயநோய்க்காக அமியோடாரோன் (Amiodarone) மாத்திரையை உட்கொள்பவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


*என்ன பரிசோதனை* 


வழக்கமான இரத்தப் பரிசோதனைகளுடன், இரத்தத்தில் T3, T4, TSH, FT3, FT4, Anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். 


*பொதுவாக* 


• T3 - 0.7 - 2.04 ng/dL என்ற அளவிலும், 

• T4 - 4.4  - 11.6 ng/dL என்ற அளவிலும் 

• TSH - 0.28 - 6.82 IU/dL என்ற அளவிலும் 

• FT3 - 1.4 - 4.2 pg/dL, 

• FT4 - 0.8 - 2 ng/dL இருக்க வேண்டும். 


இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் உட்கொள்ளும் மருந்துகள், கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் உட்கொள்ளும் மருந்து விவரத்தையும், கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். 


*முடிவுகள் எப்படி இருக்கும்?*


• குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும். 


• மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும். 


• இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள். 


• சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும். 


• சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும். 


• FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம். 


• குறை தைராய்டு உள்ளவர்களுக்கு இரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும். 


*தைராய்டு சிகிச்சை முறை*


தைராய்டு குறைபாட்டை சரி செய்யும் சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம். 8-10 மணி நேர தூக்கம் மிகவும் உதவும். அதிகம் செல்போன் பயன்படுத்தாது இருப்பது நல்லது. 


*தைராய்டை கட்டுக்குள் கொண்டு வர உதவும் உணவுகள்...* 


• பசலைக் கீரை

• முட்டை மற்றும் பால் பொருள்கள்

• பழுப்பு நிற அரிசி

• பார்லி

• தக்காளி

• உருளைக்கிழங்கு

• பூண்டு

• காளான்

• நாட்டுக்கோழி

• ஆட்டுக்கால் சூப். 


*சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா*


நமது பாரம்பர்ய சித்த மருத்துவ முறையிலும் தைராய்டு பிரச்னைக்கு தீர்வு உண்டு. தைராய்டு பிரச்னையைச் சரிசெய்ய முதலில் மனஅழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். 


இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முதலில் மன அழுத்தத்துக்குத் தகுந்த சிகிச்சை மேற்கொண்டே தைராய்டு பிரச்னையை சரிசெய்ய வேண்டும். பிராணயாமம், யோகாசனம் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.


*ஆரம்பகட்ட தைராய்டு பிரச்னைக்கு...*


* சீதாமர இலைகளில் நான்கைந்தை எடுத்து, ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அதில் இலைகளைப் போட்டு, அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு, காலை, மாலை இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் அருந்தலாம். தைராய்டு அளவைச் சீராக்கும் அற்புத மருந்து இது. 


* தைராய்டைப் போக்கக்கூடிய அற்புத மருத்துவ குணம் எலுமிச்சம்பழத்திற்கு உண்டு, காலை வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சம் பழத்தை  தோலோடு வெட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி  குடிங்கள் இனிப்பு உப்பு எதுவும் சேர்க்க கூடாது தைராய்டு சமன்படும்.


• சிறு பழமாக தேர்வு செய்து போடவும் பாதி பழம் இன்று மீதி நாளை  என்று ஜூஸ் போடக்கூடாது. 


•  மதிய உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன் எலுமிச்சம் பழத்தை தோலோடு ஜூஸ் போட்டு குடிங்கள்.

மேலும் தைராய்டின் தன்மைக்கேற்ப, மருத்துவரின் அறிவுரைப்படி சில சூரணங்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். 


ஆக, தைராய்டு மிகப்பெரிய பிரச்னை அல்ல. நம் மனதை அமைதியாகவும் தெளிவாகவும் வைத்துக்கொண்டாலே தைராய்டு பிரச்னையை தீர்க்கலாம். 


*தைராய்டு பிரச்னைக்கான உணவுமுறை...*


தைராய்டு நோயாளிகள் நோய்க்கான  முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது. அப்படியான உணவு வகைகள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம். 


*எந்த ஊட்டச்சத்து ஹைப்போ தைராய்டுக்கு நல்லது?*


* அயோடின் நம் உடலின் மெட்டபாலிசத்துக்கு அவசியம். தைராய்டு சுரப்பதற்கும் மிகவும் தேவை.  கடல் உணவுகள், பால், தயிர், சீஸ், யோகர்ட்(Yogurt), முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கீரை வகைகள், வேர்க்கடலை, பருப்பு வகைகள் போன்றவற்றில் அயோடின் தேவையான அளவு உள்ளது. 


* செலினியம் என்ற கனிமமும் தைராய்டு குறைபாட்டை சரி செய்யும். செலினியம் நிறைந்த உணவுகள் முட்டை, மீன், இறைச்சி, காளான், ஓட்ஸ், கொட்டை வகைகள், நட்ஸ், செலினியம் சேர்க்கப்பட்ட உணவுகள் (Enriched Selenium goods), கோழிக்கறி, தானியங்கள், சீஸ், பிரௌன் அரிசி, சூரியகாந்தி விதை, பீன்ஸ், கீரை, பால், யோகர்ட், வாழைப்பழம், பூண்டு போன்றவற்றில் செலினியம் நிறைந்துள்ளது. 


* துத்தநாகம்(Zinc) தைராய்டை ஆக்டிவேட் செய்யும். அதாவது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கும். இறைச்சி வகைகள், மட்டி (Shellfish), பருப்பு வகைகள், விதைகள், நட்ஸ், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், முட்டை, தானியங்கள், டார்க் சாக்லேட் போன்றவற்றில் துத்தநாகம் நிறைந்துள்ளது. 


*ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்* 


* பனீர், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீச் பழம், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ், விதைகள் போன்றவற்றை ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.  


* இதேபோல் க்ளூட்டன்(Gluten) என்கிற புரத உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கோதுமை மற்றும் பார்லியில் க்ளூட்டன் போன்றவை புரத உணவுகள், பிரெட், பாஸ்தா போன்றவையும் க்ளூட்டன் உணவுகளே! 


* அயோடின் அதிகம் உள்ள உணவுகள், நைட்ரேட்ஸ் அதிகம் இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளரிக்காய், பூசணிக்காய், கேரட், Gluten உணவுகள், சோயா மற்றும் சோயா பொருட்கள். கஃபைன் (Caffeine) நிறைந்த டீ, காபி, சோடா, சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 


*ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்*


* அயோடின் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக உப்பு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, வெள்ளைக்கரு சாப்பிடலாம். மேலும் ஃப்ரெஷ் பழங்கள், உப்பு இல்லாத நட்ஸ் மற்றும் பட்டர், உப்பு இல்லா பிரெட், பால் சார்ந்த பொருட்கள், ப்ரோக்கோலி, முளைகட்டிய தானியங்கள், காலிஃப்ளவர், கடுகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். 


* இரும்புச்சத்து குறைவாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு வரும். எனவே நட்ஸ், முட்டை, கோழி கறி, மீன், கீரை, முழுதானியங்கள், பீன்ஸ், விதைகள் போன்ற இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செலினியம் தைராய்டு ஹார்மோனை சரி சமமாக வைத்திருக்க உதவும். 


* எனவே கொட்டை வகைகள், நட்ஸ், மீன், செலினியம் சேர்க்கப்பட்ட உணவுகள், கோழிக்கறி, தானியங்கள், சீஸ், முட்டை, பிரௌன் அரிசி, சூரியகாந்தி விதை, பீன்ஸ், மஷ்ரூம், கீரை, பால், யோகர்ட், வாழைப்பழம், பூண்டு போன்றல் செலினியம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். 


* இதேபோல் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைக்க துத்தநாகம்(Zinc) உதவும். எனவே, Zinc நிறைந்த இறைச்சி வகைகள், மட்டி(Shellfish), பருப்பு வகைகள், விதைகள், நட்ஸ், பால் மற்றும் பால்i சார்ந்த உணவுகள், முட்டை, தானியங்கள், போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


Thanks

Source - வாழ்வை  வாழ்வோம் 

 channel on WhatsApp:

Reflexology,Yoga & Naturopathy 

Alternative Therapist-Jai Satheesh

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156, 9284964104*  

https://chat.whatsapp.com/BH5o0oIEtY252YF5MW8Zym 



Read more...

செம்மொழி

Tuesday, June 3, 2025

 செம்மொழி என்பது ஒரு மொழியில் இலக்கிய பழமை செறிந்திருப்பதன் அடிப்படையில் தரப்படும் சிறப்பு பெருமையாகும். செம்மொழியாக ஒரு மொழியை தேர்வு செய்ய அதன் இலக்கிய படைப்புகள் வளம் மிகுந்தவையாகவும், பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளை சாராததாகவும் இருக்கவேண்டும். மேலும் அந்த மொழி 1500 முதல் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழமையான இலக்கியங்களை கொண்டிருக்கவேண்டும். உலக மொழிகளில் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, பாரசீகம் ஆகிய மொழிகள் இத்தகைய தகுதிகளை பெற்றிருக்கின்றன. 2004-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் செம்மொழியாக அறிவித்து தமிழுக்கு மகுடம் சூட்டினார். இந்த அளப்பரிய சாதனைக்கு சொந்தக்காரர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல. இதுமட்டுமல்ல 2010-ம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை 5 நாட்கள் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார். அந்த மாநாட்டுக்காக கலைஞர் கருணாநிதி எழுதி ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து புகழ்மிக்க பாடகர்கள் பாடிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் தமிழ் உள்ளளவும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கும்.

Daily thanthi .

Read more...

நிம்மதி

Thursday, October 31, 2024

கீழே உள்ள கட்டளைகளை ஏற்றால் நிம்மதியாக வாழலாம்

அதிகாலையில் எழு

ஆண்டவரை மறக்காதே

இல்லை என சொல்லாதே

ஈவிரக்கம் கொள்

உதவி செய்யப் பழகு

ஊர் போற்ற வாழ்

எண்ணத்தால் உயர்ந்திடு.

 ஏற்றம் பெற உழை.

ஐம்புலனை கட்டுப்படுத்து

ஒற்றுமையே பலம்.



பாக்கியசாலி

நோயின்றி வாழ்பவர்

கவலை இல்லாதவர்

மகிழ்ச்சியுடன் உதவுபவர் இந்த பண்புகளைக் கொண்டவர் பாக்கியசாலி.

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP