Powered by Blogger.

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது #7

Saturday, June 30, 2012

CELLPHONE PROCESSING

 மொபைல் போன் எடுத்து தேவையான எண்களை அழுத்துகின்றோம். அழுத்தி முடித்து, ஒலி பெருக்கிப் பகுதியை- SPEAKER நாம் காதில் வைத்து கேட்கும் போது நாம் தொடர்பு கொண்ட எண்ணில் RING ஒலி கேட்கிறது.பின்பு நாம் அழைத்தவர் பேசுகிறார்.நாமும் பதில் பேசுகிறோம்
இந்த இரண்டு மொபைல் போன்கள் இடையே தொடர்பு பின்வரும் நான்கு விதங்களில் நடைபெறலாம்.

1.அழைப்பவர் ஒரு இடத்திற்குள் மட்டும் உள்ளார், அழைக்கப்படுபவரும்  ஒரே இடத்தில் மட்டும் இருந்து பேசுகிறார்,
2.அழைப்பவர் ஒரு இடத்திலும் , அழைக்கப்படுபவர்  நகர்ந்து கொண்டுள்ள நிலையிலும் உள்ளார்.
3.அழைப்பவர் மற்றும்  அழைக்கப்படுபவர் என இருவருமே நகர்ந்து கொண்டுள்ள நிலை,
4. அழைப்பவர் நகர்ந்து கொண்டுள்ள நிலையில் உள்ளார், அழைக்கப்படுபவர் ஒரே இடத்தில்
உள்ள நிலை
இரண்டு மொபைல் போன்கள் இடையே தொடர்பு மேலே சொல்ல நான்கு முறைகளில் எந்த முறைப்படி நடந்தாலும்
உரையாடல் நடைபெறுகிறது. இது அந்த்ந்த மொபைல்போன்  நிறுவனங்களின் TOWER டவர் வ்ழியே நடைபெறுகிறது.

ஒரே நிறுவனத்தையுடைய இரண்டுமொபைல் போன் உரையாடல் பின்வருமாறு
உதாரணம்; AIRTEL TO AIRTEL
இருவருக்கும் இடையே தொடர்பு கிடைப்பதற்கு மூன்று நிலைகள் மட்டும் உள்ளன.
எந்த மொபைலாக இருந்தாலும் ON  செய்யப்பட்டவுடன் ஆட்டோ மேட்டிக்காக  அருகே உள்ள  TOWER -டவர்உடன்
தொடர்பு பெற்றுக்கொண்டு இருக்கும். ON நிலையில் ஒவ்வொரு மொபைல் போனும்  தற்போது உள்ள இருப்பிடம், அது
இணைக்கப்பட்ட டவர் வழியே தலைமை நிலையத்தில் பதிவாகியிருக்கும்.


அழைப்பவர் தன் செல்போனை இயக்க தொடங்கி முடியும் வரை அவரது அருகில் உள்ள டவர் வழியே தகவல் பரிமாற்றம் நடைபெருகிறது. இவர் கொடுக்கும் அழைப்பு செல்போன் டவர் வழியே அந்த செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தின் தலைமையகத்தை அடைகிறது. இங்கு செல்போன் தொடர்பு பற்றிய அனைத்துத் தகவல்களும் குறிப்பிட்ட பகுதியில் பதிவு செய்யப்படுகின்றது. அடுத்து இந்த தலைமையகத்தின் உயர்நிலை கோபுரம் வழியாக அழைக்கப்படுபவரது செல்போன் தற்போது உள்ள இடத்திற்கு அருகே அமைந்துள்ள செல்போன் டவருக்கு தொடர்பு தரப்பட்டு அதிலிருந்து அழைக்கப்படுபவரது செல்போனுக்கு தொடர்பு கிடைக்கிறது.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP