Powered by Blogger.

நோயின் தன்மை/ Diseases-Treatment points

Sunday, November 11, 2012

நோன் யிதமைன்/ Diseases
சிகிச்சை அளிக்க வேண்டிய
அக்குபஞ்சர் புள்ளிகள்/Treatment points
1. அடி வயிறு வீக்கம் (ABDOMEN DISTENDED)ST-25, CV-6,CV-12, ST-36
2. கருக்கலைப்பு (ABORTION)SP-4 UB -67
3. முகப்பரு (ACNE)K-2
4. மதுப்பழக்கம் (ALCOHOLISM)ST-45, GV-20,LIV-3,ST-8,25,UB-10,62,H-7,CV-10
5. கழலை வீக்கம் (ADENITIS)LIV-3, LI-11, GV-14
6. இரத்தமின்மை (ANEMIA)UB-15, UB-39, UB-67, GB-24, GB-43, SP-6, SP-15, SP-23, T-3
7. நினைவு இழத்தல் (AMNESIA)H-9, LU-7, GV-20
8. மார்பு வலி (ANGINA)SI-3, H-3, H-7, H-9, P-1, P-6, LU-1, TW-3, TW-4, ST-41, K-3, UB-14, UB-22
9. பசியின்மை (ANOREXIA)SP-3, SP-15, ST-36, UB-64, GB-34, LIV-4
10. சிறுநீர் உற்பத்தித் தடை (ANORIA)LIV-9, CV-4
11. மூட்டு முடிச்சு (ARTHRITIS)K-2, LIV-2
12. இரத்த அழுத்தம் (BLOOD PRESSURE)LIV-5
13. ஆஸ்துமா (ASTHMA)ST-40, GV-14, LU-1, LU-5, LU-7, K-3, SP-6, P-6
14. மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் (BLEEDING NOSE)LI-3, ST-3
15. மூச்சுக்குழல் அழற்சி (BRONCHITIS)
16. சுவாசிப்பதில் சிரமம் (BREATHING BAD)P-7, ST-36, LIV-4
17. சிறுநீரக நோய்கள் (BRIGHT DISEASES)K-3, UB-23
18. தளர்ந்த நெஞ்சுத் துடிப்பு (BRADY CARDIA)H-9, K-7, SP-3, SP-4
19. கண்ணிமை நடுக்கம் (BLEPHARD CONJUNCTIVITIS)GB-37, LIV-3
19. விழித்திரை மீது தோல் வளருதல் (CATARACT)
20. காலரா (CHOLERA)SI-3, SI-4, SI-8, K-3, SP-4, LI-14,GV-20
21. பிரசவ வேதனை (CHILD BIRTH PAINFUL)TW-5,UB-60
22. மார்புச்சளி நோய் (BRONCHITIS)LIV-2, UB-67, UB-13, UB-14, P-9, ST-40, GV-14
23. மார்புச் சளியால் ஏற்படும் நிமோனியா (BRONCHO NEUMONIA)LU-5, LU-7, TW-5, UB-13, K-2, K-3
24. கருப்பை புறத்தோல் அழற்சி (CHOREA)SI-8, L-5, UB-14, G-20
25. ஆழமாக நினைவு தவறுதல் (COMA)UB-19, GV-26,K-1
26. பித்தப்பை அழற்சி (CHOLECYSTITIS)GB-23, GB-34, GB-37, GB-38, GB-40, GB-43M SP-15, LIV-3, LIV-9, UB-67, K-3
27. ஜலதோஷம் (COLD)K-7, H-7, LI-14, ST-45, UB-64
28. மலச்சிக்கல் (CONSTIPATION)SI-3, SI-4, UB-25,K-3, TW-3, TW-4, LIV-2, LIV-9, ST-25, ST-4, ST-1, S-42, LI-4, LI-11, SP-3, SP-5, SP-15
29. கல்லீரல் சம்பந்தப்பட்ட வயிற்றுவலி (HEPOTIC COLIC)K-3, P-6, GB-6, GB-23, GB-25, GB-38, GB-40, GB-43, LIV-6, LIV-3, LIV-9, SP-15
30. ஈரல் சம்பந்தப்பட்ட வயிற்றுவலி (LIVER COLIC)SP-6,GB-34,UB-18,LIV-3,6,SP-15,LI-4,ST-36
31. குடல் சம்பந்தப்பட்ட வயிற்றுவலி (INTESTINAL COLIC)SI-3, SI-4
32. புட்டம் சம்பந்தப்பட்ட வயிற்றுவலி (RENAL COLIC)UB-28, K-4, LIV-9
33. மூளையில் இரத்த அடைப்பு (CEREBRAL CONGESTION)H-7, UB-64, LIV-2
34. ஈரலில் இரத்த அடைப்பு (LIVER CONGESTION)K-2, ST-45, SP-15
35. நுடையீரலில் இரத்த அடைப்பு (PULMONARY CONGESTION)UB-13, K-3, GB-43, L-5, L-7, L-9
36. வயிற்றுப் போக்கு (DIARPHOEA)ST-25, UB-21, UB-22, UB-43, TW-5, LIV-2, LIV-3, LIV-14, LI-2, LI-3, LI-4, SP-2, SP-15
37. உடல் நடுக்கம் அல்லது வலிப்பு (CONVULSION)SI-3, SI-4, SI-8, K-1, UB-14, LU-5, SP-5, GV-20, GV-23, GV-26, LIV-3
38. இருமல் (COUGH)LI-11, ST-40, UB-22, UB-13, GV-14
39. இரத்த கசிவு இருமல் (BLEEDING COUGH)LI-1,LI-4
40. சுளுக்கு (வயிறு சம்பந்தமானது) (ABDOMEN CRAMP)K-4
41. தாய்மார்களுக்கு ஏற்படும் பிடிப்பு (MOTHER'S CRAMP)LIV-2, LIV-3,SP-6
42. எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பிடிப்பு (WRITER'S CRAMP)SI-4, UB-15, LI-4
43. காது கேளாமை (DEAFNESS)TW-5, TW-21, TW-17, UB-19, GB-2, GB-3, GB-20, SI-19
44. சிறுநீர்ப்பை அழற்சி (CYSTITIS)UB-23, UB-27, UB-28, UB-64, UB-65, K-4, K-7
45. சன்னி காய்ச்சல் (DELIRIUM)LI-4, LU-5, GV-20
46. சோர்வு (DEPRESSION)SI-3, P-6, GV-20
47. நீரிழிவு நோய் (DIABETES)LIV-3, K-3, TW-5, UB-23, ST-40, SP-6
48. சீதபேதி (DYSENTRY)UB-25, UB-27, K-3, TW-5, LIV-3, LIV-9, ST-42, ST-25, SP-2, SP-3, LI-4
49. மந்தமான ஜீரணம் (DIGESTION - SLUGGISH)ST-41, ST-36, SP-6
50. அஜீரணக் கோளாறு (DYSPEPSIA)LIV-9, LIV-14, SP-15, SP-6, ST-41, ST-45, ST-25, ST-36
51. வயிற்று மந்தம் (INDIGESTION)ST-36, ST-45
52. மூச்சு விடுவதில் சிரமம் (DYSPNOEO)UB-13, K-3, TW-5, TW-10, LIV-2, LU-7, CV-16, CV-12, CV-6
53. சிறுநீர் கழிக்கும்போது வலித்தல் (DYSURIA)UB-27, UB-64, UB-65, K-3, GB-25, SP-15
54. பேறுகாலச் சன்னி (ECLAMPSIA)SI-3, GV-20, GV-26, LIV-3, K-2, P-6
55. காக்காய் வலிப்பு (EPILEPSY)GV-20, GV-26, SI-3, SI-4, UB-14, UB-15, TW-10, TW-5, LIV-2, LIV-3, LU-5, ST-40
56. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் (EPISTAXIS)ST-3, UB-15, UB-64, LU-5, ST-40
57. முகம் வெளுத்தல் (FACE - PALE)LIV-2
58. முக வீக்கம் (FACE - PUFFY)ST-42, LU-1
59. மயக்கமடைதல் (FAINTING)SI-8, GV-26,K-1
60. பாதம் குளிர்ந்து போதல் (FEET COLD)LIV-3, K-7
61. காய்ச்சல் (FEVER)H-7, K-3, GV-14, LU-5, LU-9, LI-4, LI-11, LIV-3, ST-40, P-6, GB-34
62. குடல் நோய் (ENTERITIS)SP-4, LI-4
63. வெடிப்புகள் (FISSURES)K-12, GV-1, G-14
64. ஆசனப் பவுத்திரம் (FISTULA)ST-25, SP-5, GV-1, GV-14
65. வாயு தொந்தரவுகள் (FLATULANCE)UB-22, K-3, TW-5, GB-34, LI-2, LI-3, ST-41, ST-45, ST- 36, ST-25, SP-15, SP-6
66. இரைப்பை அழற்சி (GASTRITIS)P-6, SP-4, ST-36
67. இரத்தம் உறையாமை (HEMOPHILIA)TW-5, LU-9
68. இரத்தப் போக்கு (HEMORRHAGE)SP-15, SP-3, TW-5, LU-9
69. தலைவலிகள் (HEAD - ACHES)UB-2, H-7, H-5, TW-3, TW-4, TW-5, TW-23, GB-4, GB-14, LI-4, ST-44
70. விக்கல்கள் (HICCOUGH)ST-36, ST-40, UB-17
71. மிக உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION)GV-20, H-5, K-2, K-3, P-6,  LIV-3
72. ஹிஸ்டீரியா (HYSTERIA)ST-40, ST-36, GV-20, GV-26
73. ஆண்மையின்மை (IMPOTENCE)UB-22, TW-4, LIV-8, CV-4, CV-6
74. இன்புளூயன்ஸா (INFLUENZA)LU-7, H-7, GV-20, GV-14, LI-4, LI-11
75. தூக்கமின்மை (INSOMNIA)H-7, P-6, GV-20, UB-62
76. நாடி வேகமாக அடித்தல் (ICTUSES)UB-18, UB-20, LIV-3, K-3
77. குடிமயக்க வெறி (INTOXICATION)UB-13, GV-20
78. விழிவெண்படல அழற்சி (KERATITIS)TW-3, LI-14
79. அடக்கமுடியாமல் சிறுநீர் கழித்தல் (INCONTINANCE URINE)UB-25, UB-64, UB-67, K-3, CV-4
80. குரல்வளை அழற்சி (LARYNGITIS)TW-10, LU-1, UB-22
81. பெண்களுக்கு வெள்ளைப் படுதல் (LEUCORRHOEA)ST-25, SP-6, CV-4, K-3
82. பொட்டெலும்பு நோய் (MASTODITIS)TW-3, TW-4, SP-2
83. நாட்பட்ட சுய இன்பம் பெறுதல் (MASTURBATION CHRONIC)UB-3, GV-20, P-6,ST-25
84. தட்டம்மை (MEASLES)LI-4, GV-14
85. மாத விலக்கில் அதிக இரத்தப் போக்கு (MENORRHAGIA)LIV-2, CV-4, CV-6, CV-12
86. கடைசி மாத விலக்கு (MENOPAUSE)K-2, LIV-3, CV-4, CV-6, CV-12, SP-6
87. மனக் கோளாறுகள் (MENTAL DISORDERS)LU-9, H-3, P-6, GV-20, UB-62
88. வலியுடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (MICTURITION PAINFUL)UB-18, K-3, CV-4, CV-6
89. சிரமத்துடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (MICTURITION - DIFFICULT)UB-27, UB-64, UB-65, CV-4, CV-6
90. ஒற்றைத் தலைவலி (MIGRAINE)UB-67, UB-62, TW-3, TW-5, LIV-3, GB-41, P-6
91. வாந்தி வருவது போன்ற உணர்வு (NAUSEA)P-6, ST-36, GV-20, LI-4
92. நெஞ்சுப்பை தசை வீக்கம் (MYOCARDITIS)H-7, H-9, P-6
93. புட்ட வீக்கம் (NEPHRITIS)SP-6, H-9, GV-14, UB-23, UB-27, K-3
94. நரம்பு வலி (NEURALGIA)SI-3, K-3, S-36, LI-4, SP-6
95. நரம்பு பலவீனம் (NEURASTHENIA)K-3, LIV-3, SP-6, ST-36, GV-20
96. நரம்பு தளர்ச்சி (NEUROSIS)P-6, UB-60, UB-62, GV-20
97. விரை வீக்கம் (ORCHITIS)UB-22, SP-6, LIV-3, CV-4, CV-6
98. இழைம அழற்சி (OEDEMA)K-3, ST-42,ST-25 SP-9
99. நரம்புக் கட்டி (FIBROMA)C-4, K-4, SP-6
100. மனச்சோர்வு நோய் (MELANCHOLY)H-7, GV-20, K-1, K-3, K-7, TW-4, GB-40
101. தண்டுமூளை சவ்வு அழற்சி (MENINGITIS)SI-3, LIV-3, L-5, G-20, G-26, G-14
102. வேகமான இருதயத் துடிப்பு (PALPITATION)H-7, H-9, H-3, K-3, P-6, S-45, S-36, G-20
103. உடல் நடுக்கம் (PARKINSONS DISEASE)UB-15, GB-20, G-20, P-6, UB-62
104. நகச் சுற்று (PARONYCHIA)LI-4, G-14
105. பக்கவாதம் (PARALYSIS)H-5, SI-3, LIV-3, LI-4, LI-11, G-20
106. மூல வியாதி (PILES)G-1, G-20, C-4, C-6, K-6
107. நுரையீரல் சவ்வு அழற்சி (PLEURISY)T-5, SP-6, K-3, GB-34, LIV-3, G-14
108. சிறுநீர் அதிகமாக வெளியேறுதல் (POLIURA)C-6, UB-21, S-36, SP-6, SP-20
109. மாதவிலக்கு - எல்லா வகை தொல்லைகளுக்கும் (PERIODS - ALL DISTURBANCES)SP-15, C-4, C-6
110. ஒழுங்கற்ற மாதவிலக்கு (PERIODS IRREGULAR)LI-11, C-4, C-6
111. நெஞ்சுப்பையை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு வீக்கம் (PERICARDITIS)H-7, SI-3, K-3, P-6
112. அடிவயிற்று இரட்டை சவ்வுப்பை சுழற்சி (PERITONITIS)C-4, C-6, LIV-2, LIV-4, S-42
113. நிமோனியா காய்ச்சல் (PNEUMONIA)K-3, G-14, T-10, T-5, L-5, L-7, L-9, UB-13
114. ஆணின் உயிர் உறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு (PRIAPISM)K-10, K-37, C-6, UB-23, P-6
115. கருப்பை நெகிழ்ச்சி (PROLAPSE - UTERUS)SP-4, SP-6, LIV-3
116. புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (PROSTATISTIS)UB-18, UB-25, K-3, C-3, C-4, C-6
117.அதிகமான தளர்ச்சி (PROSTRATION) UB-13, C-6, G-20, S-36, SP-6
118. அரிப்புக் கொப்புளம் (PRURITUS)UB-40, K-2, K-3, SP-20, L-5
119. உடலுறவுப் புழையில் அரிப்புக் கொப்புளம் (VAGINAL PROURITUS)K-3, K-7
120. பருக்கள் (PUSTULES)UB-6, G-14, LI-11
121. ஈறிலிருந்து இரத்தம் கசிதல் (PYORRHEA)LI-4, K-12, G-14
122. அமைதியின்மை (RESTLESSNESS)G-20, P-6, H-7
123. விழித்திரை அழற்சி (RETINITIS)LIV-3, T-10
124. வாத ரோகம் (RHEUMATISM)SI-3, K-3, P-6, LIV-2, LI-4, LI-11, S-45, SI-36
125. குழந்தை கணை (RICKETS)SP-5, UB-11, UB-23
126. தொடை நரம்பு வாதம் (SCIATICA)UB-65, UB-28, UB-30, GB-40, GB-30, SP-2
127. தூக்கத்தில் நடக்கும் நோய் (SOMNAMBULISM)SP-5, G-20, GB-20
128. பேச முடியாமை ( SPEECH- INABILITY)SI-3, C-24
129. ஜீவசத்தி கழிவு (SPERMATORRHEA)SP-15, SP-6, UB-67, K-3, K-7, LIV-8, C-6
130. மலட்டுத்தன்மை - பெண் (STERILITY - FEMALE)C-6
131. மலட்டுத்தன்மை - ஆண் (STERILITY - MALE)UB-23, LIV-8, K-1, K-11, K-3, T-5
132. வியர்த்தல் (SWEATS)K-3, P-6, GB-37, P-6
133. தாடைத் தோல் (SYCOSIS)UB-60, UB-62, G-20
134. குறைந்த இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மயக்கம் (SYNCOPE)K-3, G-26
135. இடைவிடாத வேகமான இருதயத் துடிப்பு (TACHYCARDIA)H-7, H-5, P-6, G-20
136. முகத்தசைத் துடிப்பு (TICS-FACE)L-5, G-20
137. தாகம் எடுத்துக் கொண்டே இருத்தல் (THIRSTY)H-9, LI-4, LI-6, SP-4
138. கண் அரிப்பு நோய் (TRACHOMA)LI-4, LI-11
139. உடல் நடுக்கம் (TREMBLING)UB-15, L-5, G-20, P-6
140. எலும்புருக்கி நோய் (TUBER CLOSIS)T-5, L-1, L-7, L-5, L-9, LIV-3, K-3, UB-13, G-14, S-40
141. சொத்தைப் பல் (TEECH DECAY)S-45, LI-4
142. தசைச் சுருக்க நோய் (TETANUS)SI-3, UB-64, G-20
143. விரை நோய் (TESTITIS)LIV-3, SP-6
144. அடிநாக்கு அழற்சி (TONSILITIS)L-1, LI-4, LI-11, G-14
145. கழுத்துப் பிடிப்பு (TORTICOLIS)SI-3, UB-14, UB-60, UB-62
146. டைபாய்ட் (TYPHOID)G-14, UB-25, LI-2, LI-3, LI-4, LI-11, S-25
147. வயிற்று கீழ்ப்புண் (ULCER)S-45, S-41, S-36, S-25, UB-22, UB-23, P-6
148. சிறுநீர்க்குழாய் சுழற்சி (URETHRITIS)K-3, UB-28
149. சிறுநீர்க் குழாயில் எரிச்சல் (URICAEMIA)K-3, LIV-3, LIV-2
150. உடலுறவுப் புழையில் வலி (VAGINA PAIN)K-3, LIV-3, SP-6
151. தளர்ந்த சிரைகளில் வலி (VARICOSE VEINS - PAIN)SP-5, GB-34, L-9
152. தலைச் சுற்றல் (VERTIGO)SP-6, H-5, U-15, K-3, LI-2, LI-3, G-20
153. வாந்தி எடுத்தல் (VOMITTING)H-5, P-6, LI-4, S-42, S-36, SP-3, SP-6
154. மனத் தளர்ச்சி (WEAK - MENTAL)SP-6, UB-10, K-6, K-3, G-20
155. கொட்டாவி விடுதல் (YAWNING)UB-13, G-20

Read more...

சோன் பப்டி எப்படி தயாரிக்கலாம்.


 சோன் பப்டி எப்படி தயாரிக்கலாம்.
சுவையான சோன் பப்டியை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - ஒன்றரை கப்
மைதா மாவு ஒன்றரை கப்
பால் இரண்டு டேபிள் ஸ்பூன்
சக்கரை இரண்டரை கப்
ஏலக்காய் பவுடர் ஒரு ஸ்பூன்
தண்ணீர் - ஒன்றரை கப்
நெய் 250 கிராம்
செய்முறை:
   ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து
கொள்ள வேண்டும். பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய்யை
ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்தமாவை போட்டு ,லேசாக 
பொன்னிறத்தில் வரும்போது இறக்கிவிடவும்.பின் அதை குளிர் வைக்க
வேண்டும்.அதே சமயம் ஒரு வாணலியில் தண்ணீர்,சக்கரை,பாலை 
ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.அந்த பாகு 
கெட்டியானதும் இறக்கி, அதையும் குளிர் வைக்கவேண்டும்.
   பின்பு ஒரு தட்டு எடுத்து,அதில் நெய்தடவி தனியாக வைத்துக்
கொள்ளவேண்டும்.பின் குளிர வைத்துள்ள மாவை,சக்கரை  பாகுவுடன் 
கரண்டியை வைத்து கிளரவேண்டும் .அவ்வாரு கிளறும்போது,நீளநீளமாக 
மாவானது சுருளும். அது குறைந்தது, பின் அதை தட்டில் ஊற்றி ஊற்றி,
அதன் மேல் ஏலக்காய் பவுடரை தூவி குளிர் வைத்து சதுர வடிவத் 
துண்டுகளாக்கி, பாதம் மற்ற்ம் பிஸ்தாவை வைத்து அலங்கரித்தால், 
சூப்பரான சோன் பப்டி ரெடி.



Read more...

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா..

Thursday, November 8, 2012


Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....


SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது. 
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.  
 
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, Memory Card Slot, Front Mic, Audio,SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்
மேலும் அறிந்து கொள்ள

Read more...

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது?#10

Tuesday, October 23, 2012

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது..
டிரான்ஸ்மிட்டிங் செக்ஸன்:Tx -Transmitting.Tx
 மைக்கில் நாம் பேசும்போது உண்டாகும் ஒலி மின் அலைகள் சப்போர்டிங்
காம்போனண்ட்டுகளின் வழியாக ஆடியோ ஐசிக்கு செல்கிறது.டிரான்ஸ்மிஷனை TX என்று கூறுவர் மைக்கில் இருந்து ஒலி மின் அலைகள் ஆடியோ ஐசி-ல் ஆம்ளிபயர் செய்யப்படுகிறது.ஆம்ளிபை செய்யப்பட்ட ஒலி மின் அலைகள் நெட்வொர்க் ஐசியை சென்றடைகிறது பிறகு இந்த ஒலி மின் அலைகள் இந்த ஐசியில் பல மாற்றங்களை அடைந்து ரேடியோ அலைகளாக மாற்றப்பட்டு  பல சப்போர்டிங் காம்போனண்ட்டுகளின் வழியாக ஆண்டனா சுவிட்சிற்கு செல்கிறது.அங்கிருந்து ஆண்டனா வழியாக
டிரான்ஸ்மிட் செய்யப்படுகிறது டிரான்ஸ்மிட்  செய்யப்பட்ட சிக்னல்கள் காற்றின் மூலம் செல்போன் டவருக்கு சென்று நெட்வொர்க் ஆப்ரேட்டரின் உதவியுடன் அடுத்தவரின் செல்போனுக்குச் செல்கிறது.
ரிசீவிங் செக்ஸன்: Rx -Receiving Tx
ரிசீவிங் செக்ஸனை  Rx என்று குறிப்பிடுவர்  அடுத்தவர் நம்மிடம் செல்போனில் பேசும்போது அவரின்  செல்போனில் இருந்து வரும் ஒலி மின் அலைகள் ரேடியோ அலைகளுடன் கலந்து வருகிறது.அவ்வாறு வரும் ரேடியோ அலைகள் நமது செல்போனில் ஆண்டனா வழியாக ஆண்டனா சுவிட்சிற்கு வருகிறது.அங்கிருந்து பல சப்போர்டிங் காம்போனண்ட்டுகளின் வழியாக நெட்வொர்க் ஐ.சி.க்கு செல்கிறது அங்கே ரேடியோ அலைகளில் இருந்து ஒலி மின் அலைகள் தனியாக பிரிக்கப்படுகிறது.அவ்வாரு பிரிக்கப்பட்ட ஒலி மின் அலைகள் நெட்வொர்க் ஐ.சி.யில் இருந்து ஆடியோ ஐ.சி.க்கு செல்கிறது.அங்கே ஒலி மின் அலைகள் ஆம்ப்ளிபை செய்யப்படுகிறது அதன் பிறகு ஆம்ப்ளிபை  செய்யப்பட்ட ஒலி மின் அலைகள்
ஸ்பீக்கரில்  ஒலி மின் அலைகள் ஒலி அலையாக மாற்றப்பட்டு, நமது காதால் அடுத்தவரின் பேச்சை கேட்க முடிகிறது.

Read more...

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி

Monday, October 22, 2012

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முருகனுக்கு என்றே தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்!
ஆனால் அவர் கண்ணனுக்குத் தந்த பாடல்கள் ஏராளம் இல்லை என்றாலும்...
ஒவ்வொரு பாடலும் தாராளம் தாராளம்!
அந்த இசை நுணுக்கத்திலும், இசை இன்பத்திலும் தாராளம், தாராளம்!

கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு! "வெளித் தோற்றம் போலவே உள்ளமும் கருப்பாய்க் கொண்டவனுக்கென்றே" எம்.எஸ்.வி தொடுத்த பாமாலை!

அந்த மாலையில் மொத்தம் எட்டு விதமான மலர்கள்! எட்டு விதமான வாசனைகள்! ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ஈர்ப்பு!
* சுசீலாம்மாவின் தேன் குரலும் உண்டு, ஜானகியின் கீச்கீச்-சும் உண்டு!
* TMS-இன் கம்பீரமும் உண்டு! SPB-யின் நளினமும் உண்டு!
* எல்.ஆர். ஈஸ்வரி-யின் கும்மாளம் பறக்கும்! வீரமணியின் ஏகாந்தமும் தொனிக்கும்!
* இத்தனை பாடகர்களுக்கு மத்தியில், கண்ணனுக்குத் தன் குரலையும் சேர்த்தே தரத் துடிக்கும் எம்.எஸ்.வி! துவக்கத்தையே எம்.எஸ்.வி தான் துவங்கி வைக்கிறார்!

1. அமர ஜீவிதம் சுவாமி, அமுத வாசகம் - எம்.எஸ்.வி
2. ஆயர்ப்பாடி மாளிகையில் - எஸ்.பி.பி
3. கோகுலத்தில் ஒரு நாள் ராதை - பி.சுசீலா
4. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி
5. கோபியரே கோபியரே - எல்.ஆர். ஈஸ்வரி
6. கோதையின் திருப்பாவை - கி. வீரமணி
7. குருவாயூருக்கு வாருங்கள் - பி.சுசீலா
8. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - TMS

இப்போ சொல்லுங்க!
கண்ணனுக்கென்றே எம்.எஸ்.வி கட்டிய மலர்கள்...இன்னும் வாடாமல், மணம் வீசிக் கொண்டு தானே இருக்கின்றன?
வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம் நாடீர் நாள் தோறும், வீடே பெறலாமே!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...பாட்டைக் கேட்போமா?


இசை அரசி சுசீலாம்மா தான்! - அனைத்து இசைகளுக்கும்!
இன்-இசை அரசி எஸ்.ஜானகி - இன்னிசைக்கு மட்டும்!

ஜானகிக்கே உரித்தான "கிக்"கான கீச் கீச் குரலில், கீசு கீசென்றெங்கும் கோகுலத்துப் பசுக்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாடுறாங்க! இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை

ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)



பாட்டைக் கொஞ்சம் பிரிச்சி மேஞ்சா அந்தரங்கச் சுகம் தெரியும்! அந்த ரங்கச் சுகம் புரியும்!

அட படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

என்ன ஒரு அழுத்தம், வரிகளிலே! படிப்பில்லாத ஆட்களுக்குக் கூட, வேதத்துக்கே பொருள் விளங்குதாம்!
எப்படி? = பாதத்திலே போய் விழுந்தால்!

அதான் இதோ திருவடிகள்,
இதைப் பற்றிக் கொண்டார்க்கு எல்லாம்...
உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான்!
என்று காட்டி நிற்கிறான் திருவேங்கடமுடையான்!

நாலுபடி பால் கறக்குது இராமாரி!
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

ஒரு படி = எட்டு ஆழாக்கு!
நாலு படி = 32 ஆழாக்கு!
கிட்டத்தட்ட ஆறு லிட்டர்!

அது எப்படி ஆறு லிட்டர் பாலை ஒரே மாடு, அதுவும் படக்-க்குனு கொடுக்குது?
கறக்க எல்லாம் வேணாமாம்! சும்மா கண்ணன் பேரை ஜாலியாச் சொல்லிக்கிட்டே, பாத்திரத்தைக் காட்டினாலே போதுமாம்! ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...!

கன்றுக்குட்டிகள் எல்லாம் முதல் முறையா மேய்ச்சலுக்குப் போகும் போது, தாகம் அடிக்குது! முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது! நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு! அம்மா பசுவும் அருகில் இல்லை! இதுக என்ன பண்ணுங்க?

ஒரு முறை வேணும்-ன்னா, வாளியில் தண்ணி பிடிச்சிக் கொடுக்கலாம்! ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது? மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம்! கண்ணனும் அதையே செய்கிறான்! எப்படி? தன்னைத் தான் தாழ்த்திக் கொண்டே!

தன்னையே ஒரு மாடு ஆக்கிக் கொள்கிறான்!
ஆமாம்! கைகளையே முன்னங் கால் ஆக்கி, கால்களை மடிச்சி, கரையில் கால்களுக்கு முட்டுக் கொடுத்து ஊன்றி, ஆற்றின் வேகத்துக்கு அசைந்து கொடுப்பது போல் கொடுத்து, குடிச்சிக் காட்டுறான்!

அவனைப் பார்த்து ஒவ்வொரு கன்னுக்குட்டியும் அப்படியே செய்கிறது! செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான்! அத்தனை குட்டிகளுக்கும் முகத்தில் சிரிப்பு!

இதைப் பார்த்த தாய்ப் பசுக்கள் எல்லாம், கண்ணன் மேல் ஒரு இனம் புரியாத வாஞ்சை! அதான் நாலுபடி பால் கறக்குது இராமாரி! மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

கண்ணன் மாடுகளை மேய்க்கும் உழவுகோலை (சாட்டையை) ஒரு போதும் பயன்படுத்தியதே இல்லை! அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன! = நல்ல மேய்ப்பன்!
பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், மேய்ப்பன் உங்களுக்கு என் ஜீவனையே கொடுக்கிறேன்!! ஆமென்!



சேலை திருத்தும் போது அவன் பெயரைஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!

என்ன அழுத்தம்? என்ன சுகம்? என்ன பொருள் மேற்கண்ட வரிகளுக்கு? :)


ஆங்...சொல்ல மறந்து போனேனே!
எட்டு பாடல்களும் ஏழு பேர் பாடுகிறார்கள்!
ஆனால் அத்தனையும் எழுதியது ஒரே ஒருவர் தான்!
யாராய் இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

எம்.எஸ்.வி தொடுத்த வாடா மலர் மாலைக்கு, பூக் கொணர்ந்தவன் வேறு யார்? கண்ணனுக்கே தாசனான நம் கண்ணதாசனே!

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்

மேலும் அறிந்துகொள்ள

Read more...

காயத்ரி மந்திரம்,

Sunday, October 21, 2012

காயத்ரி மந்திரம்

  "ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

 காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று கொண்டோ, அல்லது பத்மாசனத்தில் அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். உடலும்,உதடும் அசையாமல் மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே சிறப்பு.

இந்த மகா மந்திரத்தினை காலையிலும், மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு, யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்வதே சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக (உயிர்) இருந்து காக்கும் என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.

இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்திடுவோம்..

.குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம்.

Read more...

நண்பர்களின் வலைப்பூக்கள் - 2

முக்கிய வலைப்பூக்கள்
தங்கம்பழனி
வேலன்
ப்ளாக்கர்நண்பன்
வந்தேமாதரம்
நிலவைதேடி
பிகேபி
தெரிந்துகொள்ளலாம் வாங்க
வடகரை தாரிக்
MANI-G
சித்தர்கள் இராச்சியம்
99likes.blogspot.com
இனயம் தாஹிர்
 தமிழ்த்தேனீ
ORATHANADUKARTHIK
kingdom of கீழக்கரை
இம்தியாஸ்
புரியாதகிறுக்கல்கள்
என்டர் தி வேல்ட்
கற்போம்
விண்மணி
hacking all products
உங்களுக்காக
தமிழ்நுட்பம்
தமிழ்த் தேனீ
கம்ப்யூட்டர் உலகம்
மருத்துவம் பேசுகிறது
பொன்மலர் பக்கம்
தமிழ் கம்ப்யூட்டர்
மழை
my blogger tricks
அன்பை தேடி,,அன்பு
கணினி மென்பொருட்களின் கூடம்
தமிழ்வாசி
தமிழ் கம்ப்யூட்டர் தகவல்கள்




Read more...

How to create XP Live CD in 15 minutes

Tuesday, October 16, 2012

Microsoft Windows XP live CD is the best way to boot into the Operating System without installation into the computer. By using this XP Live CD you can use XP and its features without actually installing them. This sounds cool, right? Creating a Live CD is not a big problem. It just involves adding of some plugins. One of the easiest ways to do this is using a software called pebuilder. Using it, you can create an XP Live CD in just about 15 minutes!
 Here’s all the software you’ll need:

The XP live CD can be created by the following steps:
Step 1: Download pebuilder3110a1.exe and install it.
Step 2: For the wallpaper, replace C:\pebuilder3110a\bartpe.bmp with the image you want as your wallpaper. You can
find the default XP wallpaper at C:\WINDOWS\Web\Wallpaper\bliss.bmp.
(Both these, of course, assume the C drive as the installation location.)
Step 3: Download the plugins:
  • xpe-1.0.7.cab: This will create the XP START Button taskbar. It is the GUI shell of the XP Live CD.
  • Network Driver Plugin Pack: This provides many network card drivers
  • FreeAV Virus Scanner: This integrates FreeAV
  • diskexplorer_for_ntfs.cab: A very good file explorer And more you can choose what you want to download to add functionality. There are 537 plugins right now to choose from!
Step 4: Open pebuilder. Specify the source path to the Windows installation file. This should be your Windows XP installation bootable CD, where the i386 folder resides.
Step 5: Click Plugins and add the plugins you’ve downloaded. Since you’ve included xpe-1.0.7.cab, disable nu2shell and the 
startup group.
Step 6: Specify the ISO image file, and click Build.
 
Step 7: After that’s done, use Nero and burn the image file to a CD. You’re done

Thanks -tip for xp
 

Read more...

NOKIA PHONE –ல் YOUTUBE VIDEO PLAY –ஆக AIRTEL SETTINGS.

Monday, August 13, 2012

 NOKIA PHONEல் YOUTUBE VIDEO PLAY –ஆக AIRTEL SETTINGS
நோக்கியா மொபைலில் airtel network  உபயோகிப்பவர்களுக்கு மட்டும்
முதலில் நோக்கியா மொபைலில் மெனுவை OPEN செய்யவும்
MENU -->SETTINGS-->CONFIGURATION-->
Open  “PERSONAL CONFIG SETTINGS “-->
Click  “OPTIONS”
Select “ADDNEW”
Select “STREAMING”
Open “ACCOUNT NAME”-->type “MO”
UDP PORT RANGE-->1024-65535
USE PREF ACCESS PT-->NO
Select “ACCESS POINT SETTINGS”-->
 PROXY-->DISABLED
Select “BEARER SETTINGS”-- >
PACKET DATA ACC.PT – type “airtelgprs.com”{small letters only-don’t space}
NETWORK TYPE – IPV4
AUTHENTICATION TYPE – NORMAL
மொபைலில் மூன்று தடவை-BACK கொடுத்து
Select “OPTIONS”-- >select & click “ACTIVATE”
பின்பு மொபைலை SWITCH OFF செய்து ON செய்யவும்.
இப்போது Youtube video open செய்தால் play  ஆகும்.

Read more...

பஞ்சபூத புள்ளிகள்

Saturday, August 11, 2012


LU –LUNGS
METAL – LU8
WATER – LU5
WOOD – LU11
FIRE – LU10
EARTH – LU9

H  -HEART
METAL –H4
WATER –H3
WOOD – H9
FIRE – H8
EARTH – H7

P – PERICARDIUM
METAL –P5
WATER –P3
WOOD – P9
FIRE – P8
EARTH – P7

ST – STOMACH
METAL –ST45
WATER –ST44
WOOD – ST43
FIRE – ST41
EARTH – ST36

SI – SMALL INTESTINE
METAL –SI1
WATER –SI2
WOOD – SI3
FIRE – SI5
EARTH – SI8

TW – TRIBLE WARMER
METAL –TW1
WATER –TW2
WOOD – TW3
FIRE – TW6
EARTH – TW10

LIV – LIVER
METAL –LIV4
WATER –LIV8
WOOD – LIV1
FIRE – LIV2
EARTH – LIV3

GB – GALL BLATTER
METAL – GB44
WATER – GB43
WOOD – GB41
FIRE – GB38
EARTH – GB34

SP – SPLEEN
METAL – SP5
WATER – SP9
WOOD – SP1
FIRE – SP2
EARTH – SP3

K – KIDNEY
METAL – K7
WATER – K10
WOOD – K1
FIRE – K2
EARTH – K3

UB - URINARY BLADDER 
METAL – UB67
WATER – UB66
WOOD – UB65
FIRE – UB60
EARTH – UB40

LI - LARGE INTESTINE
 METAL – LI1
WATER – LI2
WOOD – LI3
FIRE – LI5
EARTH – LI11




Read more...

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது # 9

Sunday, August 5, 2012

மொபைல் போன்  நுண்ணலை கோபுரங்கள்அமைப்பும்,செயல்பாடும்-CELL PHONE TOWER 
மொபைல் போன் தொலை தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கோபுரமும் (TOWER) ஒரு செல்(CELL) என்று குறிப்பிடுகின்றனர் .ஒரு கோபுரம் செயல்படும் பரப்பிற்கு செல் சைட்(CELL SITE) என்று பெயர்.இது சுமார் 8 முதல் 16 கிலோமீட்டர் ஆரத்தைக் கொண்ட பரப்பளவிற்கு அமைகிறது. அதாவதுஒரு செல் டவரிலிருந்து வெளிப்படும் மின்காந்த ஒலி அலை அதிகபட்சமாக 16 கிமீ சுற்றளவில் உள்ள இடங்களை சென்றடைகிறது.அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு, இந்த கோபுரத்திற்கு அடுத்துள்ள கோபுரத்திலிருந்து,மின்காந்த ஒலி அலை வருகிறது.
 
மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் கட்டுப்பாட்டு அறை (DEPARTMENT OF TELECOMMUNICATION - DOT) ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.ஒரு மொபைல் போன் நிறுவன சேவையிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளும் போது.எ.கா AIRTEL TO VODAFONE அந்த அழைப்பு தொடர்பான தகவல்கள் DOT- ன் கட்டுப்பாட்டு அறையிலேயே பதிவு செய்யப்படுகின்றன. இந்த தொலை தொடர்பில் ஏதேனும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால் பெரிய அளவில் மாற்றம் ஏற்படலாம்.

Read more...

அக்குபஞ்சரின் முக்கிய புள்ளிகள்.

Friday, August 3, 2012



DANGEROUS POINTS
 UB1,UB10 ,LI18,DU15,DU16,LU8,P1,LU1,LIV3,H1 ,SP4,UB67,
[ST21 to 25-don’t use right side] ,ST1,REN8,ST18,17

DISTAL POINTS
 TOP-3 POINTS
LI4 –முகம்,தலை,கழுத்து முன்பகுதி,இடுப்புக்கு மேல்வலி
LU7-தலை,பின்பகுதி,கழுத்து,மார்பு,நுரையீரல்,BP
P6- மார்பு ,வயிறுமேல்பகுதி,வாந்தி, காய்ச்சல்

BOTTOM -3 POINTS
ST36-வயிறு,குடல்
UB40-இடுப்பு, சிறுநீரகம்,இனவிருத்தி
SP6-ஆண்,பெண் உறுப்புநோய்கள் இனவிருத்தி

நோய் எதிர்ப்பு சக்திபுள்ளிகள்
LI11,SP6,DU14,ST36,SP10

வலி நீங்க LI4,ST44
 மனதை அமைதிப்படுத்த DU20,H7,UB62,GB34
 உடல் வீக்கம் - SP6,SP9,REN5,REN9
அலர்ஜி - SP10, SP6
உடல் வலிகள் நீங்க
முன்பக்க உடல் வலிக்கு - ST44
பின்பக்க உடல் வலிக்கு –UB60,UB40
பக்கவாட்டு வலிகள் –GB43,GB38
இடுப்புக்கு மேல் எல்லா வலிகளும் - LI4

Read more...

மனிதநாட்காட்டி - ORGAN CLOCK.

Thursday, August 2, 2012

ஆர்கான் கிளாக் விதி 
ஆர்கான் கிளாக் விதி சீனர்களால் உருவாக்கப்பட்டது.உயிர் சக்தியின் ஓட்டம் உடலிலுள்ள உறுப்புகளின் ஒரு சில மணி நேரத்திற்கு,அவ்வுறுப்புகளின் சக்தி ஓட்டம் அதிகமாக இருப்பதை அறிந்தார்கள்.
உடம்பில் உள்ள 12 உறுப்புகளை முறைப்படுத்தி அந்த உறுப்புகளின் சக்தி ஓட்டத்தின் அளவினை, நேரத்தினை நிர்ணயித்தார்கள்.
ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில்,ஒவ்வொரு உறுப்பிலும் 2 மணி நேரம் சக்தி ஓட்டம் அதிகமாக இருப்பதை அறிந்து,அவற்றை வரைமுறை செய்தனர்.இதனை ஆர்கான் கிளாக் விதி எனப்பெயரிட்டனர்.

நுரையீரல்
3.00AM
5.00PM
பெருங்குடல்
5.00AM
7.00PM
இரைப்பை
7.00AM
9.00AM
மண்ணீரல்
9.00AM
11.00AM
இருதயம்
11.00AM
1.00PM
சிறுகுடல்
1.00PM
3.00PM
சிறுநீரகப்பை
3.00PM
5.00PM
சிறுநீரகம்
5.00PM
7.00PM
இருதய உறை
7.00PM
9.00PM
மூவெப்பக்குழி
9.00PM
11.00PM
பித்தப்பை
11.00PM
1.00AM
கல்லீரல்
1.00AM
3.00AM

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP