Powered by Blogger.

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது?#10

Tuesday, October 23, 2012

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது..
டிரான்ஸ்மிட்டிங் செக்ஸன்:Tx -Transmitting.Tx
 மைக்கில் நாம் பேசும்போது உண்டாகும் ஒலி மின் அலைகள் சப்போர்டிங்
காம்போனண்ட்டுகளின் வழியாக ஆடியோ ஐசிக்கு செல்கிறது.டிரான்ஸ்மிஷனை TX என்று கூறுவர் மைக்கில் இருந்து ஒலி மின் அலைகள் ஆடியோ ஐசி-ல் ஆம்ளிபயர் செய்யப்படுகிறது.ஆம்ளிபை செய்யப்பட்ட ஒலி மின் அலைகள் நெட்வொர்க் ஐசியை சென்றடைகிறது பிறகு இந்த ஒலி மின் அலைகள் இந்த ஐசியில் பல மாற்றங்களை அடைந்து ரேடியோ அலைகளாக மாற்றப்பட்டு  பல சப்போர்டிங் காம்போனண்ட்டுகளின் வழியாக ஆண்டனா சுவிட்சிற்கு செல்கிறது.அங்கிருந்து ஆண்டனா வழியாக
டிரான்ஸ்மிட் செய்யப்படுகிறது டிரான்ஸ்மிட்  செய்யப்பட்ட சிக்னல்கள் காற்றின் மூலம் செல்போன் டவருக்கு சென்று நெட்வொர்க் ஆப்ரேட்டரின் உதவியுடன் அடுத்தவரின் செல்போனுக்குச் செல்கிறது.
ரிசீவிங் செக்ஸன்: Rx -Receiving Tx
ரிசீவிங் செக்ஸனை  Rx என்று குறிப்பிடுவர்  அடுத்தவர் நம்மிடம் செல்போனில் பேசும்போது அவரின்  செல்போனில் இருந்து வரும் ஒலி மின் அலைகள் ரேடியோ அலைகளுடன் கலந்து வருகிறது.அவ்வாறு வரும் ரேடியோ அலைகள் நமது செல்போனில் ஆண்டனா வழியாக ஆண்டனா சுவிட்சிற்கு வருகிறது.அங்கிருந்து பல சப்போர்டிங் காம்போனண்ட்டுகளின் வழியாக நெட்வொர்க் ஐ.சி.க்கு செல்கிறது அங்கே ரேடியோ அலைகளில் இருந்து ஒலி மின் அலைகள் தனியாக பிரிக்கப்படுகிறது.அவ்வாரு பிரிக்கப்பட்ட ஒலி மின் அலைகள் நெட்வொர்க் ஐ.சி.யில் இருந்து ஆடியோ ஐ.சி.க்கு செல்கிறது.அங்கே ஒலி மின் அலைகள் ஆம்ப்ளிபை செய்யப்படுகிறது அதன் பிறகு ஆம்ப்ளிபை  செய்யப்பட்ட ஒலி மின் அலைகள்
ஸ்பீக்கரில்  ஒலி மின் அலைகள் ஒலி அலையாக மாற்றப்பட்டு, நமது காதால் அடுத்தவரின் பேச்சை கேட்க முடிகிறது.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP