சமையல் எண்ணெயில்கலப்படம் உள்ளதா,,?
Tuesday, November 9, 2021
ஏழாம் சுவை
கலப்படம் உள்ளதா சமையல் எண்ணெய்?
அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் பொருட்களில் மிகவும் முக்கியமானது, எண்ணெய். உங்கள் எண்ணெயிலும் கலப்படம் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பல ஆண்டுகளாக எண்ணெய் விலை மற்றும் அதன் தேவை அதிகரித்திருப்பதை அனைவரும் அறிவோம். இதுவே, சமையல் எண்ணெயில் கலப்பட அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
கலப்பட எண்ணெய், பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், 'சமையல் எண்ணெயின் தூய்மையை எவ்வாறு சரிபார்க்கலாம்' என்பதை விளக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
அதில், ஒரு கிண்ணத்தில், நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை, 2 மி.லி. அளவு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் வெண்ணெயைச் சேர்க்க வேண்டும். எண்ணெயின் நிறம் மாறவில்லை என்றால், அது தூய்மையானது மற்றும் பயன்படுத்தப் பாதுகாப்பானது.
நிறம் சிவப்பாக மாறினால், எண்ணெய் தூய்மையற்றது மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று, அந்த வீடியோவில், எப்.எஸ். எஸ்.ஏ.ஐ. விளக்கியுள்ளது.
Siurce:- தினமலர்
Read more...பச்சை மிளகாயில் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ளதா?
பச்சை மிளகாயில் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ளதா?
எல்லா உணவும் நன்மை தான். பல்வேறு வகை காய், கனிகள், இறைச்சி முதலியவற்றை உண்ணும்போது, நுண்ணூட்டச் சத்து பரவல் கிடைக்கிறது. பச்சை மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவை செறிவாக உள்ளன. இதில் காப்சாய்சின் (Capsaicin) என்ற வேதிப்பொருள், நாக்கு அல்லது தோலின் மீது பட்டால், அங்கே உள்ள வெப்பம் உணரும் செல்களைத் தூண்டி, 'காரம்' எனும் சுவையை ஏற்படுத்துகிறது. பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது, உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
Source:- தினமலர்
Read more...ஐசோகிராம்(isogram) என்பது என்ன?
ஐசோகிராம் (isogram) என்பது
Cat, Deer என்கிற
ஆங்கிலச் சொற்கள்
இருவேறு விலங்குகளைக் குறிக்கின்றன. ஆனால், இவற்றினிடையே இன்னொரு முக்கியமான வேறுபாடும் உண்டு: Cat என்பது Isogram சொல். Deer என்பது Isogram சொல் இல்லை.
அதென்ன ஐசோகிராம் ? ஆங்கிலத்தில் ஒரே எழுத்து மீண்டும் திரும்ப வராத சொற்களை ஐசோகிராம் என்கிறார்கள். Cat என்பதில் C, A, T என்ற வெவ்வேறு எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. எதுவும் திரும்ப வரவில்லை. ஆகவே, அது ஐசோகிராம் ஆகிறது. Deer என்பதில் E என்ற எழுத்து இரண்டுமுறை இடம்பெற்றுள்ளதால், அது ஐசோகிராம் ஆகாது.
Source :- தினமலர்
Read more...