உளுந்தங் கஞ்சி தயாரிப்பது எப்படி
Tuesday, August 31, 2021
ஆரோக்கியம் வழங்கும் உளுந்தங்கஞ்சி!
உடலுக்கு ஆரோக்கியம்தரும்
உளுந்தங்கஞ்சி தயாரிப்பது எப்படி என விளக்குகிறார், பிரபல சமையல் கலைஞர் திவாகர்:-
உளுந்தங்கஞ்சி என்பது நம் பாரம்பரிய
உணவுகளில் ஒன்று. ஊட்டச்சத்து மிகுந்தஉணவு இது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு.எந்த சீதோஷ்ணத்திலும் எளிதாக தயாரித்து, சுகமாக அருந்தக்கூடிய கஞ்சி உணவு இது.வாரத்தில் ஒரு முறையாவது இந்த கஞ்சிஉணவை அருந்தி வர,உடல் ஆரோக்கியம்மேம்படும். உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி என பார்ப்போம்.
தோல்நீக்கிய
உளுந்து - 100 கிராம்,
வெல்லம் - 150 கிராம்,
துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால்
தேவைக்கு ஏற்ப,
சுக்கு - 1 கிராம், ஏலக்காய் - 2,
நல்லெண்ணெய் அல்லது நெய்
தேவையான அளவு.
உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் மாவாக கொள்ளவேண்டும். வெல்லத்தை கரைத்து,வைத்துக் கொள்ள வேண்டும்.
அடிகனமானபாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்அரைத்தஉளுந்துமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து
அதை மரக்கரண்டியால் கிளறவேண்டும்.
உளுந்தின் பச்சை வாசனை போன பின்,
சிறிது நேரம் கொதிவிட்ட பின், வெல்ல
கரைசலை சேர்க்க வேண்டும்.
அப்போது தேங்காய் துருவல், சுக்கு,
ஏலம் போன்றவற்றை பவுடர் செய்து வைத் திருப்பதை சேர்த்து,சூடாகபரிமாற
வேண்டும்.உளுந்தங்கஞ்சிக்கு
பனை வெல்லம் பயன்படுத்துவது
சிறப்பானது. பனைவெல்லம்
பயன்படுத்துவதால்ஜலதோஷம்,இருமல் போன்றவைகுணமாகும்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment