பித்தப்பை கற்கள் என்றால் என்ன?
Sunday, January 3, 2021
பித்தப்பை கற்கள் என்றால் :
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும்.
பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.
பெண்களுக்கு அதிகம் :
இந்த பித்தப்பையில் கல் உருவாகும் பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள்,கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
காரணம் :
இதைத் தவிர நம்முடைய வாழ்க்கை முறையும் பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றே சொல்லலாம். அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன.
நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், டயட் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.
வகைகள் :
பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர்.
அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன.இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.
Source:
Mohideen Acu Meetheen:
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment