பெண்டுலம்
Friday, July 4, 2025
பெண்டுலம் அதற்கும் உயிருண்டு
பெண்டுலத்தைச் செயல்படுத்துவது மந்திர மாயம் எதுவுமில்லை. அதன் செயல்பாடு விஞ்ஞான விதிகளுக்கு உட்பட்டதுதான். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும், உயிருள்ளவைகளும், உயிரல்லாதவைகளும், அடிப் படையில் ஒரே தன்மையினைக் கொண்டவைதான். அனைத்துமே அணுக்களால் (atoms) ஆக்கப்பட்டவை. ஒவ்வொரு அணுவுக்கும் நியூக்ளியஸ் என்கிற மையம் உண்டு. அதைச் சுற்றிலும் எலக்ட்ரான்கள் ஒரு செகண்டுக்கு 1,86,000 மைல் வேகத்தில் சுழல்கின்றன. மிகச் சிறிய அணுவுக்குள் இந்த வேகத்தில் எலக்ட்ரான்கள் சுழல்வதை கற்பனை செய்வதற்கே ஒரு விசேஷ ஆற்றல் வேண்டும். நம்முடைய உடலிலுள்ள அணுக்கள் ஆனாலும், செடி, கொடி, தாவரங்கள், ஏனைய ஜடப் பொருட்கள் அனைத்திலும் உள்ள அணுக்கள் ஆனாலும் ஒரே அமைப்பைக் கொண்டவை. எனவே பிரபஞ்சத் திலுள்ள அனைத்துப் பொருட்களும் அடிப்படையில் ஒரே தன்மையானவை என்பது தெளிவாகிறது. இந்தத் தன்மைதான் ஒன்றை இன்னொன்றுடன் தொடர்பு படுத்துகிறது.
வெளித் தோற்றத்துக்கு இந்தத் தொடர்பு தெரியாமல் போகலாம். நாம் ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு அதிர்வும் (Vibration) பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கிறது
source:
ஆக்கபூர்வ சிந்தனையின் அற்புத ஆற்றல்கள்
கணேசன். பி சி
Read more...