Powered by Blogger.

Commodity A2Z-20

Thursday, March 17, 2016

கமாடிட்டி வியாபாரம் 20

கமாடிட்டி வியாபாரம் 20

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

சென்ற வாரங்களில் கேப் டவுன் என்றால் என்ன? அத்தகைய சூழலில் நாம் எவ்வாறு அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று விரிவாக பார்த்தோம்.

இனி...

கேப் அப்பை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

கேப் டவுனை படித்த உங்களுக்கு கேப் அப்பை விளங்கிக்கொள்வது மிகவும் எளிதான விஷயமே.அதற்காக முந்தைய கட்டுரை படிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த கட்டுரை மட்டும் படித்தாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள கேப் அப் பற்றிய விளக்கம் உங்களுக்கு எளிதாகவே புரியும்.

சரி, கேப் அப்பிற்க்கு வருவோம்.

கேப் அப் என்பது, ஒரு பொருளின் விலை முந்தைய நாளின் முடிவுவிலையைவிட இன்றைய நாளின் ஆரம்ப விலை, அதிகரித்து துவங்குவது ஆகும்.

கேப் அப்பில் சந்தை துவங்கியுள்ளது

இன்றைய ஆரம்பவிலை

நேற்றைய முடிவுவிலை

இவ்வாறு கேப் அப்பில் சந்தை துவங்கினால்,சந்தையானது மிக வலுவாக உள்ளது என்பதை காட்டுகிறது. விற்பவர்களைவிட வாங்குபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது காட்டுகிறது.சந்தையானது, காளைகளின் கையில் இருப்பது காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சந்தையின் நகர்வை பற்றி பேசும்போது, ஏற்கெனவே நான் சொல்லி இருந்த விவரத்தை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன்.

அதாவது...

பொதுவாக சந்தையின் செயல்பாடுகள் என்பது, பெருபான்மையானவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அந்த திசையில் நகரும். அதாவது, பெரும்பான்யானவர்கள் வாங்குபவர்களாக இருந்தால், சந்தை ஏறுமுகமாக இருக்கும். பெரும்பான்மையானவர்கள் விற்பவர்களாக இருந்தால், சந்தை இறங்குமுகமாக இருக்கும். பெரும்பான்மையானவர்கள் சந்தையில் பங்கெடுக்கவில்லையென்றால், சந்தை பக்கவாட்டு நகர்வில் இருக்கும்.

இந்த மூன்றுவகையான நகர்வில் சந்தை பொதுவாக நகரும்.

இப்போது, சந்தையானது சற்றே மேலே துவங்கி, மேலும் ஏறி வியாபாரம் ஆகிறது. இதைத்தான் கேப் அப் என்று சொல்லுகிறோம்.

இந்த கேப்பில், தொடர்ந்து என்ன நடக்கலாம் என்ற கேள்வியை முன்வைத்தால், சந்தை காளைகளின் கையில் இருக்கிறது. எனவே சந்தை தொடர்ந்து மேலே செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கிறோம்.

ஆனால், நாம் இப்போது வாங்கலாமா?

இந்த கேள்விதான் பொதுவாக ஒரு தர்மசங்கடமான கேள்வி. வாங்கலாம்தான்.

ஏறினா.... சந்தோஷம்.

ஒரு வேளை இறங்கிடிச்சினா?

சந்தை யார் கட்டுப்பாட்டிலும் இல்லைதான். இருந்தாலும், சந்தையில் வியாபாரம் செய்ய நாம் ஏதாவது ஒரு உக்கதியை கையாள வேண்டும் அல்லவா!

அந்த வகையில், சந்தை கேப் அப்பில் துவங்கினால், நாம் உடனடியாக வாங்குவதற்கு பதிலாக,முதல் அரை மணிநேரம் அல்லது முதல் ஒரு மணிநேர் நாம் காத்திருப்பது நல்லது

முதல் அரை மணி நேரம் அல்லது ஒர மணிநேர அளவிற்க்கு சந்தை எந்த பக்கம் நகருகிறது என்று பார்க்கவேண்டும்.

அதை எப்படி கணிப்பது?

சந்தை ஒரு கேப் அப்பில் துவங்கிய பிறகு, முதல் அரைமணி நேரத்தின் கேன்டில் அல்லது முதல் ஒரு மணிநேர கேன்டிலை எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த கேன்டிலின், உச்சம் என்பது முக்கியதடைநிலையாகவும், கீழே உள்ள குறைந்தபட்ச விலை என்பது, முக்கிய ஆதரவுநிலையாகவும் செயல்பட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே நாம் பயிற்சி வகுப்புகள் மூலமும், தொலைகாட்சிகள் மூலமும், தொடர்ந்து சொல்லிவருவதை நினைவுபடுத்துகிறேன். அதாவது, தடையை தாண்டி ஏறினால், வாங்கும் வாய்ப்பாகவும். (அதாவது, வாங்கி விற்பது), அதுவே ஆதரவு நிலையை உடைத்து இறங்கினால் விற்பதற்கான வாய்ப்பாகவும் (விற்று வாங்குதல்) பார்க்கவேண்டும்.

எனவே முதல் ஒரு மணிநேரத்தின் லோ உடைக்கப்படாதவரை சந்தை வலிமையாக மேலே ஏறுவதற்கான வாய்ப்பாகவே பார்க்கவேண்டும். அதிலும் முதல் ஒரு மணிநேரத்தின் உச்சம் உடைக்கப்பட்டால், சந்தை இன்னும் வலிமையாக ஏறுவதற்க்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்பலாம்.

முதல் ஒருமணிநேர உச்சம்

கேப் அப் ஓபனிங்

ஆரம்ப விலை

முந்தையநாள் முடிவுவிலை

மேலே உள்ள வரைபடத்தில், விலையானது,முந்தையநாள் முடிவு விலையைவிட உயரந்து துவங்கி உள்ளது. அடுத்து, சந்தையானது, முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை உடைத்து தாண்டி ஏற ஆரம்பித்துள்ளது. இது சந்தை இன்னும் மேலே ஏறுவதற்கான அறிகுறி ஆகும்.

இந்த அடையாத்தின் அடிப்படையில் வாங்க திட்டமிடலாம். அதன் பின் சந்தை வலுவாக மேலே ஏறிக்கொண்டு இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த ஏற்றம் என்பது வாங்குபவர்கள் சந்தையில் அதிகமாக இருப்பதையும், இதைத்தான் சந்தை காளைகள் கட்டுப்பாட்டில் இருப்பதை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

கேப் அப் முறையில் துவங்கி தொடர்ந்து வலிமையாக ஏறுவதற்க்கான சில எடுத்துக்காட்டுகளை இப்போது பார்க்கலாம்.

வெள்ளி:

இந்த வரைபடம் வெள்ளியின் ஒரு மணிநேர கேன்டில்களை கொண்டு வரையப்பட்டுள்ளது.

மேலே உள்ள வரைபடத்தில், வெள்ளியில் எப்படி கேப் அப் முறையில் துவங்கி தொடர்ந்து மேலே ஏறியது என்பதை பார்க்கலாம்.

வெள்ளி 24.11.14, அன்று 36221 என்ற விலையில் முடிந்துள்ளது. அடுத்த நாள், 36350 என்ற விலையில் துவங்கியது. அதுவாது, கிட்டத்தட்ட 130 புள்ளிகள் கேப் அப்பில் துவங்கி உள்ளது. பின் முதல் ஒரு மணிநேரத்தின் உச்சமான 36500ஐ தாண்டி ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றமானது,அடுத்து 36776 என்ற உச்சத்தை தொட காரணமாது.

நேச்சுரல் கேஸ்:

மேலே உள்ளது நேச்சுரல்கேஸ் வரைபடம்., இந்த வரைபடம் ஒரு தினசரி வரைபடம் ஆகும்.

இந்த வரைபடத்தில் 28.10.14 அன்று 223.20 என்ற விலையில் முடிந்துள்ளது. அடுத்த நாள் 29.1.14.அன்று விலை ஒரு கேப் அப்பில் துவங்கி உள்ளது. 229 என்ற விலையில் துவங்கி உள்ளது.இவ்வாறு கேப் அப்பில் துவங்கிய நேச்சுரல் கேஸ், அன்று முடியும்போது 235.40 என்ற விலையில் முடிந்துள்ளது. இந்த ஏற்றம் பின்பு தொடர்ந்தது. பல நாட்களாக தொடர்ந்த இந்த ஏற்றம், 7.11.14.வரை தொடர்ந்தது. இந்த ஏற்றத்தின் உச்சமாக 7.11.14.அன்று 276.40 என்ற விலையை தொட்டது.

இந்த வரைபடம் ஒரு தினசரி வரைபடம் ஆகும்.

ஆகவே நாம் இந்த கேப் அப் என்ற முறையில் ஓப்பன் ஆகும்போது, அடுத்து அடுத்து சந்தை ஏறுமுகமாக இருந்தால், சந்தை வலிமையாக ஏறும் என்பதிற்கு இதுவே சான்று.

இதுவரை நாம் கேப் அப் ஓபனில், சந்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்த்தோம். இது ஒரு வகையான நகர்வு ஆகும்.

அடுத்த வாரம் கேப் அப் ஓபன் நடக்கும்போது, எப்படி இன்னொரு வகையான செயல்பாடு நடக்கலாம் என்பதை பார்க்கலாம்.

Source:
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=9151

  

Read more...

Commodity A2Z-21

கமாடிட்டி A-Z தொடர் 21

கமாடிட்டி வியாபாரம் 21

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

நாம் சென்ற வாரம் கேப் அப் முறையில் சந்தை துவங்கி வலிமையாக ஏறினால், என்ன நிகழும் என்று விரிவாக பார்த்தோம்.

இனி...

இதே கேப் முறையில் சந்தை துவங்கிய பிறகு, இரண்டு வகையாக என்ன நடக்கலாம் என்று பார்க்கலாம்.

கேப் அப என்பது, சந்தையானது, முந்தைய நாள் முடிவுவிலையைவிட அதிகமான விலையில் அல்லது புள்ளியில் துவங்குவது என்று பார்த்தோம்.
இப்படி கேப் அப் முறையில் துவங்குவது என்பது, சந்தை வலிமையாக இருப்பதை காட்டுகிறது. எனவே சந்தையில் ஒரு புல்லிஷ் கேன்டில் தோன்றுவதைகூட பார்க்கலாம்.

படம் 1:

படம் - 1 ல், முந்தைய நாள் முடிவுவிலை என்பதை தாண்டி, இன்றைய ஆரம்பவிலை மேலே துவங்கி உள்ளதை காண்கிறீர்கள். இவ்வாறு கேப்அப்பில் துவங்குவது வாங்குபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. எனவே வாங்குபவர்களின் வலிமையை காட்டும்விதமாக ஒரு காளைகளுக்கான புல் கேட்டில் தோன்றி இருப்பதை காட்டுகிறீர்கள். புல் கேன்டில்கள் என்பதை காட்டுவதற்காக, அது பச்சை வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

படம் - 2:

கேப்அப்பில் துவங்கிய பிறகு, காளைக்களுக்கான வலிமையான கேன்டில் துவங்குவதை பார்த்தோம். அடுத்து, தொடர்ந்து எந்த திசையில் பயணிக்கும் என்பதே நம் கேள்வி?
பொதுவாக சந்தையை கேப் அப்பில் துவக்கவே காளைகள் தங்கள் பெரும் சக்தியை உபயோகப்படுத்தவேண்டும். அதாவது, எந்த அளவிற்க்கு அதிகவிலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை பொருத்தே அந்த கேப்பின் அளவு இருக்கும். எனவே கேப்பை அதிகமாக்க, காளைகள் அதிக விலையில் வாங்க தயாராக இருக்கவேண்டும். அவ்வாறு வாங்கும்போது, அவர்கள் தங்கள் பணசக்தியை அதிக அளவு பிரயோகம் செய்கிறார்கள். கேப் அப்பில் துவங்கிய சந்தை, முதல் அரைமணிநேரத்தில் அல்லது முதல் ஒரு மணிநேரத்தில், காளைகள் முழுமூச்சுடன் ஏற்றுவதில் முனைகிறார்கள். அப்போது முதல் ஒரு மணிநேரத்தில் அதிக வால்யூமுடன் வியாபாரமும் நடக்கிறது. அவ்வாறு ஏற்றிய பிறகு, காளைகள் மீண்டும் இரண்டாம் மணிதுளியில் அடுத்த கட்ட ஏற்றத்திற்க்கு முயற்சிக்கு முனைகிறார்கள்.

இந்த இரண்டாம் கட்ட முயற்சி என்பது முதல் ஒரு மணிநேரத்தில் ஏற்றியதைபோல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. ஏனெனில், கரடிகள் இப்போது களத்தில் இறங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போது காளைகளின் ஏற்றத்திற்கான முயற்சியை, கரடிகள் முறியடிக்க முயற்சிக்கிறார்கள். அதனால், காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. எனவே ஸ்பின்னிங் டாப் போன்ற கேன்டில்கள் தோன்றுகின்றன. இந்த நிலையில் முதல் ஒரு மணிநேரத்தின் உச்சமானது, ஒரு முக்கிய தடைநிலையாக மாறுகிறது.

படம் 3:

காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிகழ்ந்துக்கொண்டு இருக்கும்போது, அடுத்த கட்ட நிகழ்வாக கரடிகள் கைகள் மெள்ள மேலோங்க ஆரம்பிக்கிறது. காளைகள் தாங்கள் வாங்குதலின் அளவை முழுவதும் முடித்துவிடுவதால், அதன் பின் வாங்குதல் என்பது குறைய ஆரம்பிக்கிறது. அதாவது, இந்த சூழலில் விற்பவர்கள் அதிகமாகவும், வாங்குபவர்கள் குறைவாகவும், இருக்கிறார்கள். இதனால், சந்தையில் கரடிகள் பலமானவர்களாக மாறிகிறார்கள். பின் சந்தையில் விலையானது, குறைய ஆரம்பிக்கிறார்கள். இந்த நிலையில், முதல் ஒருமணிநேரத்தின் உச்சம் முக்கிய தடைநிலையாக இருக்கிறது. தடையை தாண்டாதவரை விலையானது, படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து கரடிகளுக்கான கேன்டில்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.

படம் 4:

இப்போது, சந்தைய முழுவதும், கரடிகளின் கட்டுப்பாட்டுக்கு மாறுகிறது. இந்த மாற்றத்தினால் விலை சரிய ஆரம்பிக்கிறது. விலை சரிய ஆரம்பிக்கும்போது, ஏற்கெனவே வாங்கியவர்களுக்கு நட்டம் வர ஆரம்பிக்கிறது. எனவே அவர்கள் நட்டத்தை தடுப்பதற்க்காக, தாங்கள் வாங்கி வைத்திருந்த பங்குகளை விற்கிறார்கள். எனவே சந்தையில் விற்பனை கூட ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே ஷாட் அடிப்பவர்கள், ஷாட் அடிப்பதன் மூலம், விலை இறங்க ஆரம்பிக்கிறது. இந்த விற்பனையுடன், வாங்கியவர்கள் நட்டத்தடையும் டிரிகர் ஆகும்போது, சந்தையில் விற்பனை அதிகமாக மாறுகிறது. ஆகவே சந்தையில் அதிக அளவில் விற்பனை கூடி கரடிகளுக்கான கேன்டில்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.

படம் 5:

படம் ஐந்தில் பார்க்கும்போது, ஒரு கேப் அப் நிகழ்ந்த பிறகு, விலையானது, தொடர்ந்து இறங்க ஆரம்பிக்கும்போது, முதல் ஒரு மணிநேரத்தின் குறைந்தபட்ச்ச விலையானது, ஒரு சப்போட் லெவலாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது, விலையானது, சப்போட்டை எடுத்து மேல்நோக்கி திரும்ப வாய்ப்புள்ள சூழ்நிலையில், விலையானது, நிற்காமல், தொடர்ந்து இறங்கி, சப்போட்டை உடைத்து இறங்க ஆரம்பிக்கிறது. இது இறக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. இதுவரை மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்த விலையானது, பலமான இறக்கத்திற்க்கு உள்ளாகிறது. இந்த இறக்கமானது, வேகமான இறக்கமாக மாறுகிறது. இந்த வேகமான இறக்கமானது, அடுத்த கட்ட சப்போட் லெவலான முந்தயைநாள் முடிவு விலையை நோக்கி நகர்கிறது.

படம் 6: சில்வர்

மேலே உள்ள சில்வர் மணிதுளி வரைபடத்தில், 07.11.2014. அன்று முடிவுற்ற விலையில் இருந்து அடுத்த வேலை நாளான, 10.11.14 அன்று, கேப் அப்பில் துவங்கியுள்ளது. இந்த நாளின், முதல் ஒரு மணிநேரத்தின் உச்சம் ரெசிஸ்ட்டன் லெவலாகவும், குறைந்தபட்ச விலை சப்போட் அளவாகவும் செயல்படுகிறது. இந்த வரைபடத்தில், கேப் அப் நடந்த பிறகு, முதல் ஒரு மணிநேரத்தின், லோவை உடைத்து படிப்படியாக இறங்க ஆரம்பிக்கிறது. பின் வேகமான இறங்கி, முந்தைய நாளின், முடிவு விலையையும் உடைத்து இறங்க ஆரம்பிக்கிறது. முந்தைய நாளின் முடிவு விலையை உடைத்து இறங்கிய பிறகு இன்னும் வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது.

படம் 7:

மேலே உள்ள இந்த படம் நிக்கல். இந்த நிக்கல், 07.11.14. வரைபடத்தில், இறங்கி முடிந்துள்ளது. அடுத்த நாள் 10.11.14 அன்று ஒரு கேப் அப்பில் துவங்கி உள்ளது. இந்த கேப் அப் என்பது முந்தைய நாள் இறக்கத்தில் இருந்து, மாறி இனி ஏறப்போகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சந்தயில் ஈடுபடுவர்களை வாங்கத்தூண்டுகிறது. விலையும் முதல் ஒரு மணிநேரத்தில் விலை முதல் ஒரு மணிநேரத்தில் வேகம் வேகமாக ஏற ஆரம்பித்து, அதன் பின் சற்றே தேங்க ஆரம்பிக்கிறது. அப்படி ஒரு மணிநேரத்தின் முடிவில் தேங்க ஆரம்பிக்கிறது என்பதை முதல் ஒரு மணிநேரத்தின் பச்சை நிற புல் கேன்டிலின் உச்சத்தில் உள்ள கேன்டிலின் திரி பகுதி நமக்கு காட்டுகிறது. அதாவது, விலையை உயர்த்திய காளைகள் ஏற்றிய உச்சத்தின் அளவை தக்கவைக்க முடியவில்லை என்பதை காட்டுகிறது.

பின் அடுத்த இரண்டு மணிநேரத்திற்க்கு பிறகு, முதல் ஒரு மணிநேரத்தின் லோவானது, முக்கிய ஆதரவுவாக செயல்பட வாய்ப்புள்ளதை காட்டுகிறது, ஆனால், மூன்றாவது மணிநேரத்தின் கேன்டிலானது, முதல் ஒரு மணிநேரத்தின் கேன்டிலின் லோவானது, உடைத்து இறங்க ஆரம்பிக்கிறது. சப்போட் லெவலை உடைக்க ஆரம்பிக்கும்போது, மிக வலிமையாக வேகமாக இறங்க ஆரம்பிக்கிறது. நிக்கல் விலை பின் மட மடவென இறங்க ஆரம்பித்துள்ளது.

Source:
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=9172

Read more...

Commodity A2Z-22

கமாடிட்டி A-Z தொடர் 22

கமாடிட்டி வியாபாரம் 22

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

தொடர்ந்து நாம் கேப் அப்பினால், எப்படிபட்ட தொடர் நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை பார்த்தோம்.

இதுவரைக்கும் நாம் பார்த்த கேப் அப் மற்றும் கேப் டவுனை நான் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன். பின்பு எந்த மாதிரியான, இதுவரை நாம் பார்க்காத கேப் அப் டவுன் வழிமுறைகளையும் பார்க்கலாம்.

முதலில் கேப் டவுன் பற்றி:

நான், கேப் டவுனை படிக்கும்போது இரண்டு வகையான நகர்வுகளை விளக்கி சொன்னேன்.

    கேப் டவுன் முறையில் சந்தை இறங்கிய பிறகு, மேல்நோக்கி திரும்புதல்.

படம் – 1

    கேப் டவுன் முறையில் சந்தை இறங்கிய பிறகு தொடர்ந்து இறங்குதல்.

படம் – 2

    கேப் அப் முறையில் சந்தை மேல்நோக்கி துவங்கிய பிறகு, கீழ்நோக்கி திரும்புதல்.

படம் – 3

    கேப் அப் முறையில் சந்தை மேல்நோக்கி துவங்கிய பிறகு தொடர்ந்து மேல்நோக்கி செல்லுதல்.

படம் – 4

தற்போதைய சந்தையானது, பல்வேறு முறையில் துவங்கி, பல்வேறு முறையில் நகர்வதால், நமக்கு குழப்பம் அதிகமாகிறது. நான் மேலே சொன்ன நான்கு முறைகளை தவிர்த்து வேறு எந்த முறைகளில் எல்லாம் நகர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் பார்க்கலாம். இதனால், மற்றமுறை நகர்வுகளையும் நாம் அறிந்து இருப்பதன் மூலம், அந்த மாதிரி நகர்வுகள் வரும்போதெல்லாம், நாம் சந்தையில் வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்கும்.

அந்த வகையில் சில நகர்வுகளை இப்போது பார்க்கலாம்.

முதலில் கேப் டவுன் முறையில் சந்தை துவங்கினால், ஏற்கெனவே நாம் பார்த்த நகர்வுகளை தாண்டி, வேறு எவ்வாறு நகரலாம் என்று பார்ப்போம்.

படம் – 5:

மேலே உள்ள படத்தில் தங்கம் 14.01.2015. என்று கேப்டவுன் முறையில் இறங்கி துவங்கி உள்ளது. பின்பு நாம் ஏற்கெனவே படித்ததுபோல், முதல் ஒரு மணிநேரத்தின் லோவை உடைத்து கீழே இறங்கி நாம் விற்று வாங்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதன்பின் நல்ல பாட்டத்தை உருவாக்கி மேலே திரும்புகிறது. இவ்வாறு திரும்பி, மீண்டும் அந்த நாளில் எங்கு ஆரம்பித்ததோ, அந்த ஆரம்ப புள்ளியை நோக்கி மேலே திரும்பி நகர்கிறது. அந்நாளின் முடிவில், நாளின் ஆரம்பவிலையின் அருகாமையில் தடுக்கப்பட்டு, பின் அந்த விலையிலேயே முடிகிறது.

இது ஒரு வகையான நகர்வு.

படம் – 6:

மேலே உள்ள வரைபடத்தில் தங்கத்தின் தொடர் நிகழ்வை காணலாம். முதலில் தங்கம் 14.01.2015 அன்று (படம் 5) எவ்வாறு இறங்கி துவங்கி பின்பு, துவங்கிய இடத்திலேயே வந்து முடிந்தது என்று பார்த்தோம்.

தற்போது நாம் மேலே பார்க்கும் படம் – 6, தங்கம் 15.01.2015. அன்று எவ்வாறு நக்ர்ந்துள்ளது என்பதை காட்டக்கூடிய படம் ஆகும்.

இந்த படத்தில், படம் – 4 நாளில் விளக்கிய அத்தனை நிகழ்வுகள் நடந்த பின்பு, அதன் தொடர்ச்சியாக, முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை உடைத்து மேலே ஏறுகிறது. அதாவது, காலையில் கேப் டவுனில் துவங்கிய உடன் ஏறாமல் ஒரு கணிசமான இறக்கத்தை கொடுத்த பிறகு, மேலே திரும்பியதோடுமட்டும் அல்லாமல், முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை உடைக்கும்போது, மிக வலிமையாக ஏறி, மீண்டு ஒரு மிகப்பெரிய உச்சத்தை தோற்றுவிப்பதை இதில் காணலாம்.

இதில் இன்னும் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில், விலையானது, கேப்டவுனில் துவங்கி, முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை தாண்டி ஏறிவதோடு மட்டும் அல்லாமல், அடுத்து முந்தைய நாளின் முடிவுவிலையையும் தாண்டி ஏற ஆர்ம்பிகிறது. இப்படி இரண்டு தடைநிலைகளை தாண்டி ஏறும்போது, அது மிகபலமாக ஏறலாம் என்பதற்க்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

படம்- 7

கேப்டவுனில் இன்னும் எந்தமாதிர் நகரலாம் என்பதை இப்போது படம் 7 மூலம் பார்க்கலாம்.

படம் 7ல், நாம் பார்ப்பது, சில்வர் 07.01.2015. நகர்ந்த நகர்வை எடுத்துக்காட்டாக வைத்து பார்க்கிறோம்.

இதில் நாம் ஏற்கெனவே பார்த்த விஷயங்களை ஒட்டியே ஆரம்பிக்கிறது. அதாவது, ஒரு கேப் டவுன் ஓபன், அடுத்து, முதல் ஒரு மணிநேரத்தின் லோவை உடைத்து விலை இறங்குகிறது. பின்பு இறக்கம் தொடர்கிறது. இப்போது நாம் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இறக்கம், எங்கே சப்போட் எடுத்து மேல்நோக்கி திரும்புகிறது என்பதே. இந்த வரைபடத்தை கவனித்து பார்த்தால், முந்தையநாளின் லோவிற்க்கு அருகாமையில், இந்த இறக்கம் முடிவுக்கு வந்து பின், மேலே திரும்ப ஆரம்பிக்கிறது. அப்படி திரும்பிய விலையானது, பின் வலிமையாக ஏறி ஆரம்பிக்கிறது. இந்த ஏற்றம் தொடர்ந்து முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தை தொடுகிறது. பின்பு அதையும் தாண்டி கொஞ்சம் ஏறுகிறது.

இந்த வரைபடத்தின் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னெவென்றால், சந்தை கேப்டவுனில் இறங்கி துவங்கிய பிறகு, தொடர்ந்து இறங்கினாலும், நாம் இந்த இறக்கம் எங்கே முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்பதை அறிந்து, அந்த திருப்ப்த்தில், நாம் வாங்கி விற்கும் நபராக திட்டமிடலாம்.

படம் – 8

படம் 8ல் தங்கம் 30.12.14ல் உள்ள நகர்வை எடுத்துகாட்டாக பார்கிறோம்.

இந்த படத்தில் தங்கம் ஒர கேப் அப்பில் துவங்கி, பின் ஒரு மணிநேர கேன்டிலின் உச்சத்தில் தடுக்கப்பட்டு கீழே இறங்குகிறது. இந்த இறக்கத்தில், ஒரு மணிநேர கேன்டிலின் குறைந்தபட்சவிலையை உடைத்து இறங்குகிறது. பொதுவாக நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ஒரு மணிநேர கேன்டிலின் லோவை உடைத்து இறங்கினால், வலிமையாக இறங்க வாய்ப்புள்ளது என்று முன்னமே படித்துள்ளோம். அந்த வகையில், வியாபாரிகள் விற்றுவாங்கலாம். ஆனால், நாம் இங்கே புதிதாக படிப்பது என்னவென்றால், தொடரந்து இறங்கிய தங்கம், நன்கு இறங்கிய பிறகு, முந்தையநாளின் முடிவு விலைக்கு அருகில் ஒரு ஆதரவை எடுத்து மேலே வலிமையாக ஏற ஆரம்பிக்கிறது.

ஆம், இந்த இடம்தான், நாம் வாங்கிவிற்பதற்க்கு சரியான இடம் ஆகும். மேலும் இது மிகவும் ரிஸ்க் குறைவான இடமாகவும் பார்க்கலாம்.

படம் – 9

படம் 9ல் தங்கம் 12.01.15. எவ்வாறு நகர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.

நாம் இப்போது, கேப் அப்பில் வரக்கூடிய வித்தியாசமான நகர்வுகளை பார்க்க இருக்கிறோம். இந்த படத்தில் தங்கம் ஒரு கேப் அப்பில் துவங்கி, முதல் ஒரு மணிநேரத்தின் உச்சத்தையும் தாண்டி ஏறி உள்ளது. அடுத்த ஒருமணிநேரத்தின் கேன்டிலும், ஏறுமுகமாகவே உள்ளது. ஆனால், அடுத்து தோன்றிய ஸ்பின்னிங் டாப் ஏற்றத்தை முடிவுக்கொண்டுவருவதாக நமக்கு தெரிவிக்கிறது. பின்பு இறங்கம் தொடர்கிறது.

இப்போது நமக்கு குழப்பம்.

கேப் அப்பில் துவங்கிய தங்கம் ஏறவும் செய்தது. ஒரு சிறிய லாபத்தையும் கொடுத்தது. ஆனால் நான் அதை தவறவிட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களுக்கான் ஒரு வாய்ப்பை பற்றிதான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

கேப் அப்பில் ஏறிய தங்கம், ஒரு குறிப்பிட்ட அளவு ஏறியபிறகு இறங்க ஆர்மபித்துள்ளது. இந்த இறக்கம் தொடர்ந்து, கேப் அப் முறையில் துவங்கிய தங்கத்தின், ஆரம்பவிலையை நோக்கி நகர்கிறது. இந்த இறக்கம், அந்த நாளின் ஆரம்பவிலையின் அருகே தடுத்து நிறுத்தப்படுகிறது. இப்போது, ஆரம்பவிலை என்பது முக்கிய ஆரவுநிலையாக மாறுகிறது. தங்கமானது, இந்த ஆரம்ப விலையின் அருகாமையில் தடுத்து நிறுத்தப்பட்டு மேல்நோக்கி திரும்பி ஏற ஆரம்பிக்கிறது.

இந்த ஏற்றத்தைதான், முன்னால், தவறவிட்டவர்களும், ஏற்கெனவே வாங்கி லாபத்தை எடுத்தவர்களும், வாங்குவதற்க்கு அடுத்த வாய்ப்பு ஆகும். தங்கம், இங்கே தடுக்கப்பட்டு மேல்நோக்கி திரும்பிய பிறகு, வலிமையாக ஏறுகிறது. இந்த ஏற்றம் முந்தைய உச்சத்தையும் தாண்டி பெரிய லாபத்தை கொடுக்கிறது.

இன்னும் பல வித்தைகளை தொடர்ந்து கற்கலாm

Source:

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=9212

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP