Powered by Blogger.

Commodity A2Z-26

Sunday, March 13, 2016

கமாடிட்டி டிரேடிங் 26

தி.ரா. அருள்ராஜன்

கமாடிட்டி டிரேடிங், இந்திய சந்தையில், காலை நேரத்தில் ஆரம்பிக்கிறது.  மாலை நேரம் ஆகும் போது, உலக சந்தை ஆரம்பிக்கிறது.

கமாடிட்டி சந்தையில்  இரண்டு வகையான பொருட்கள் வியாபாரம் ஆகின்றன.  ஒன்று, விவசாய பொருட்கள்.  இவை இந்தியாவில் உற்பத்திசெய்யப்பட்டு பெரும்பாலும் இந்தியாவிலேயே விற்கப்படுகிறது.

ஆகவே விலை முழுக்க முழுக்க உள்நாட்டில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக கமாடிட்டி விலைகள், டிமாண்ட் அன்ட் சப்ளை அடிப்படையில் நிகழும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆகவே உள்நாட்டில் உற்பத்தி ஆகும் பொருட்களின் தேவை உள்நாட்டில் உபயோகப்படுத்துவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.  அதேபோல், அந்த பொருட்களின் தேவை வெளிநாட்டில் அதிகம் ஆகும்போதும் அல்லது குறையும் போதும் அதையொட்டி விலை நிலவரம் மாறும்.  இதைத்தான் ஏற்றுமதியின் அடிப்படையில் விலை மாற்றம் என்று சொல்லுவோம்.

ஏற்றுமதியை போலவே இறக்குமதியினாலும், உள்நாட்டு பொருட்கள் விலை பாதிக்கப்படலாம்.

எடுத்துக்காட்டாக, பாமாயில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டால், உள்நாட்டில் உற்பத்தி ஆகும் எண்ணெய்வித்துகள் விலை குறைய ஆரம்பிக்கும்.

இதையெல்லாம் தாண்டி, விவசாயம் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய பொருட்கள் விலை உள்நாட்டு காரணிகளால் நிர்ணயிக்கப்படுதவதால், இந்த பொருட்களின் வியாபாரம் மாலை 5 மணியுடன் எல்லா சந்தையிலும் முடிவடைகிறது. அதாவது ஆன்லைன் வியாபாரம் உட்பட.

என்.சி.எக்ஸ். போன்ற சந்தைகளில் பல பொருட்கள் இரவு 11.30வரை வியாபாரம் ஆகிறது.

ஏன்?

இந்த பொருட்களை பன்னாட்டு பொருட்கள் என்று சொல்லுவோம்.  அதாவது, இந்த பொருட்கள் உலக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆகவே இந்த பொருட்களின் விலையானது, உலக சந்தைகள் துவங்கி வியாபாரம் ஆகும்போது, இந்த பொருட்களின் விலை மாறுகிறது.  (ஏறுகிறது அல்லது இறங்குகிறது.)

பன்னாட்டு பொருட்களுக்கு சில எடுத்துக்காட்டுகளை சொல்வதாக இருந்தால்....

விலை உயர்ந்த உலோகங்கள்:

தங்கம், வெள்ளி போன்றவை.

அடிப்படை உலோகங்கள்:

காப்பர், லெட், ஸிங், அலுமினியம் போன்றவை.

எனர்ஜி பொருட்கள்:

குரூட் ஆயில், நேச்சுரல் கேஸ் போன்றவை.

இந்த பொருட்களின் விலையானது பொரும்பாலும், உலகசந்தையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில், உலகசந்தையில் விலைமாற்றம் ஏற்படும்.

ஒருவேளை இந்தியாவில், உள்நாட்டின் பொருட்களின் வியாபாரம் மாலை 5 மணியுடன் நிறுத்துவதை போல, இந்த பன்னாட்டு பொருட்களின் வியாபாரத்தையும் நிறுத்தினால், என்ன ஆகும்?

நாம் இந்தியாவில் மாலை 5 மணிக்கு சந்தை முடியும்போது ஒரு பன்னாட்டு பொருளை வாங்கி இருந்தால், அதன் பின் பன்னாட்டு சந்தை, துவங்கி விலை ஏறி, பின்பு நாம் வாங்கிய விலையைவிட குறைந்து போனால், அடுத்த நாள் நாம் அந்த பொருளை நஷ்டத்தில்தான் விற்கவேண்டி இருக்கும்.

எனவே பன்னாட்டு சந்தையில் நிகழும் விலைமாற்றங்களை, நாமும் உபயோகப்படுத்தவேண்டும் என்பதால், குறிப்பிட்ட பன்னாட்டு பொருட்கள் இந்திய சந்தைகளில் இரவு 11.30வரை வியாபாரம் ஆகிறது.

இதனால், நமக்கு பன்னாட்டு சந்தையின் நகர்வு என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது.

இனி, பன்னாட்டு பொருட்கள் இந்திய சந்தையில் காலையில் எப்படி துவங்குகிறது.  பின் பன்னாட்டு சந்தை துவங்கும்போது எப்படி மாறுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

பொதுவாக, இந்திய சந்தையின் துவக்கமும், பின் பன்னாட்டு சந்தைகளில் விலை தொடர் விலை நகர்வும் என்று ஆராய்ந்தால், அவை நான்கு வகைப்படும்.

•    காலையில் உள் நாட்டு சந்தையில் விலை ஏற்றம்

மாலையில் உலக சந்தையில் விலை இறக்கம்

•    காலையில் உள் நாட்டு சந்தையில் விலை இறக்கம்

மாலையில் உலகச் சந்தையில் விலை ஏற்றம்

•    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை இறக்கம்

மாலையில் உலகச் சந்தையிலும் விலை இறக்கம்

•    காலையில் உள் நாட்டு சந்தையில் விலை ஏற்றம்

மாலையில் உலகச் சந்தையிலும் விலை ஏற்றம்

இனி முதல் வகையில் இருந்து பார்க்கலாம்.

•    காலையில் உள் நாட்டு சந்தையில் விலை ஏற்றம்

மாலையில் உலகச் சந்தையில் விலை இறக்கம்

இந்த வகை விலை நகர்வில் காலையில் 10 மணிக்கும் இந்திய சந்தையில் பன்னாட்டு பொருட்களின் விலை ஏறி துவங்கி வியாபாரம் நடப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

எச்சரிக்கை:

பன்னாட்டு பொருட்களில், ஒரு பொருள் ஏறி துவங்கினால், அதையொட்டி எல்லா பொருட்களும் ஏறி துவங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  அதாவது, தங்கத்தின் விலை ஏறி துவங்கினால், காப்பர் விலை ஏறி துவங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  ஒவ்வொரு பொருளும், அதன் டிமான்ட் மற்றும் சப்ளையின் அடிப்படையில்தான், ஏற்றமும் இறக்கும் அமையும்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம்.

இந்திய சந்தையில் ஏறி துவங்கும் பொருட்கள், மாலையில் இறங்கி துவங்கலாம் என்ற அளவில் இப்போது பார்க்கிறோம்.

படம்1 (ஸ்லைட்-1)

மேலே உள்ள படத்தில் முந்தைய நாள் முடிவு விலையை அறிந்துகொள்ள ஒரு நெடுக்குகோடு வரைந்துள்ளேன். முந்தைய நாளின் நகர்வை நாம் இப்போதைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  இந்த படத்தில் இன்று காலை இந்திய சந்தையில் வியாபாரம் துவங்கிய பிறகு, அதன் விலை ஏறி நகர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கிறோம். இந்த படத்தில் விலையானது பிற்பகால் வரை ஏறிக்கொண்டு இருப்பதை பார்க்கிறோம்.

அதற்க்கு பின்பு, மாலையில் பன்னாட்டு சந்தைகளின் வியாபாரம் துவங்குகிறது.  இந்த சமயத்தில்தான் விலையின் நகர்வு வேகமாக மாற வாய்ப்புண்டு.  அந்த வகையில் விலையானது, இதுவரை நகர்ந்து கொண்டு இருந்த திசையில் இருந்து மாறி எதிர் திசையில் நகர ஆர்பிக்கிறது.

இந்த வகை நகர்வுகளை நாம் சில எடுத்துக்காட்டுகளுடம் பார்க்கலாம்.

இதில் உள்ள வரைபடங்கள் ஒரு மணிநேர வரைபடம்.

படம் 2 (ஸ்லைட் – 2)

மேலே உள்ள படம் சில்வர் 26.02.2015:

இந்த படத்தில் சில்வர் விலையானது, காலையில் துவங்கிய சந்தையில் ஏற ஆரம்பித்து, பின்பு மாலையில் பான்னாட்டு சந்தை துவங்கியவுடம் இறங்கு ஆரம்பித்துள்ளதை காணலாம்.

படம் 3 (ஸ்லைட்-3)

மேலே உள்ளபடம் சில்வர் 11.02.2015.

இந்த படத்தில் சில்வர், முந்தைய நாளில் இறங்கி முடிந்தாலும், அடுத்தநாள் அது ஏறி துவங்கி நன்கு ஏறவும் ஆரம்பித்து உள்ளது.  இந்த ஏற்றம் காலைவரைதான் நீடித்தது.

பின்பு இறங்க ஆர்ம்பித்துள்ளது.  மாலையில் இந்திய சந்தையின் இறக்கம் பன்னாட்டு சந்தையிலும் தொடர்ந்துள்ளது.  மேலும் இறக்கமானது கடுமையானதாகவும் உள்ளது.

படம் 4 (ஸ்லைட் – 4)

மேலே உள்ள படம் சில்வர் 02.03.2015.

இந்த படத்தை ஆராயும்போது, இதன் விலை நகர்வு முந்தைய படத்தை போலவே, இந்திய சந்தையில் காலையில் உயர்ந்து துவங்கி வியாபாரம் ஆகி வருகிறது.  ஆனால், இந்த ஏற்றம் இந்திய சந்தையில்கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.  எனவே இந்தியாவின் பிற்பகல் சந்தையில்கூட, விலை இறங்க ஆரம்பித்துள்ளது.  அதன் பின் மாலையில் துவங்கிய சந்தையில் விலையின் வீழ்ச்சி மிகக்கடுமையாக இருப்பதை காணலாம்.

படம் 5 (ஸ்லைட் – 5)

மேலே உள்ள படம், தங்கம் 12.03.2015.

வெள்ளியை போலவே, தங்கத்தின் விலை நகர்வும், சில தினங்கள் பிரதிபலித்திருப்பதை இங்கு காணாலாம்.  குறிப்பாக காலையில் முதல் மூன்று மணிநேரம், இந்திய சந்தையில் ஒரு பலமான ஏற்றத்தை காண்கிறோம்.  ஆனால், அந்த பலமான ஏற்றம், இந்திய சந்தையின் நேரத்திலேயே தாக்குபிடிக்க முடியவில்லை.  மாறாக, விலையின் வீழ்ச்சி, இந்திய சந்தையின் நேரத்திலேயே, குறிப்பாக பிற்பகலில், கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதை காண்கிறோம். அதன்பின், மாலையில் பன்னாட்டு சந்தை துவங்கிய பிறகு, அந்த வீழ்ச்சி, இன்னும் கடுமையாக மாறி, இன்னும் பலமான இறக்கத்தை இங்கு பார்க்கிறோம்.

படம் 6 (ஸ்லைட் – 6)

மேல உள்ள படம் தங்கம் 12.02.2015.

இந்த படத்தில், தங்கமானது காலையில் வியாபாரம் ஆக துவங்கிய பிறகு, படிப்படியாக ஏற ஆரம்பித்துள்ளது. அதாவது, முந்தைய நாள், நன்க்உ இறங்கி முடிந்துள்ள நிலையில், அடுத்த நாள், மேல் நோக்கி திரும்பி உள்ளது.  இந்த ஏற்றம் எனபது, முந்தைய நாளின் இறக்கத்தின் ஏற்றமாகக்கூட பார்க்கலாம்.  இந்த ஏற்றம் என்பது இந்திய சந்தையில் ஒரு தற்காலிக ஏற்றமாகவே அமைந்துள்ளது.  இந்திய சந்தையின் பிற்பகல் நேரத்திலேயே, முந்தைய நாளின் இறங்குமுகமான நிலைப்பாட்டை, அது எடுத்து தொடர்ந்து இறங்கிக்கொண்டு இருப்பதை இந்த படத்தில் காணலாம்.

அடுத்த பகுதியில் மற்ற வகையான விலை நகர்வுகளை எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10299

Read more...

Commodity A2Z-27

கமாடிட்டி வியாபாரம் 27

கமாடிட்டி வியாபாரம் 27

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

விலை நகர்வை பற்றிய தொடர் ஆய்வு:

இந்திய சந்தையின் துவக்கமும், பின் பன்னாட்டு சந்தைகளில் விலை தொடர் விலை நகர்வும் என்று ஆராய்ந்தால், அவை நான்கு வகைப்படும்.

    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றம்

மாலையில் உலகச் சந்தையில் விலை இறக்கம்

    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை இறக்கம்

மாலையில் உலகச் சந்தையில் விலை ஏற்றம்

    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை இறக்கம்

மாலையில் உலகச் சந்தையிலும் விலை இறக்கம்

    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றம்

மாலையில் உலகச் சந்தையிலும் விலை ஏற்றம்

முன் பகுதியில் முதல் வகை விலை நகர்வை எடுத்துக்காட்டுடன் விரிவாக பார்த்தோம்.

இனி இரண்டாவது வகை நகர்வை பார்க்கலாம்.

காலையில் உள்நாட்டு சந்தையில் விலை இறக்கம்

மாலையில் உலகச் சந்தையில் விலை ஏற்றம்

சந்தையில் விலை நகர்வு என்பது யார் கட்டுப்பாட்டிலும் இல்லாதது. ஆகவேதான், சந்தையை டைனமிக் மார்கெட் என்று சொல்லுவோம். பொருள் சந்தையை பொருத்தமட்டில், வியாபார நேரம் என்று என்பது, ஒவ்வொரு நாட்டின் பகல் பொழுதின் நேரத்தை பொருத்து மாறும்.

இந்தியாவில் பகல் என்றால், அமெரிக்காவில் இரவு. ஆனால், முக்கிய பன்னாட்டு பொருட்கள் எல்லா நாடுகளிலும் வியாபாரம் ஆகும். இந்தியாவின் பகல் பொழுதில் தங்கம் வியாபாரம் ஆனால், நமகு இரவாக் மாறும், அமெரிக்க பகல் பொழுதில் தங்கம் வியாபாரம் ஆகும். பன்னாட்டு சந்தையில் நிகழும் விலை மாற்றத்தை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான், நம் நாட்டிலும் பொருட்சந்தை இரவு 11.30 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பன்னாட்டு பொருட்கள் உள்நாட்டின் பகல்நேரத்திலும், இரவு நேரத்திலும் எவ்வாறு எல்லாம் வியாபாரம் ஆகிறது என்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது, இரண்டாவது வகையான உள்நாட்டு சந்தையில் விலை இறக்கம், அதே பொருள் மாலையில் உலகச் சந்தைகள் துவங்கும்போது, ஏறி துவங்குவதை பற்றி பார்க்கபோகிறோம்.

சிலைட் - 7

மேலே உள்ள விளக்கப் படத்தில், முந்தைய நாள் முடிவு விலையை ஒப்பிட்டு பார்த்தால், அடுத்த நாள் விவையானது, அதே அளவில் தொடங்கி, பின்பு படிப்படியாக இறங்குகிறது. இந்த இறக்கம் மாலை, பன்னாட்டு சந்தை துவங்கும் வரை நீடிக்கிறது. பன்னாட்டு சந்தை துவங்கிய பிறகு, சந்தையானது, இதுவரை இறங்குமுகமாக இருந்தாலும், பின்பு ஏறுமுகமாக மாறுகிறது. மேலும் சந்தை முடியும் தருவாயில், நன்கு ஏறி முடிந்துள்ளது. ஆக வியாபார நாளின் முற்பகுதியில் சந்தையானது, உள்நாட்டு வியாபாரிகளின் ஆதிகத்தில் இருந்தததை பார்க்கிறோம்.

பின்பு பன்னாட்டு சந்தை, துவங்கிய பிறகு, அதன் போக்கிற்க்கு ஏற்ப, நம்சந்தையிலும் விலைகள் மாறவேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்படுகிறது.

இந்த மாதிரியான நகர்வை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்க்கலாம்.

சிலைட் 8; சில்வர்

மேலே உள்ள படம் சில்வர் 13.02.15. அன்று நடந்த விலைநகர்வை காட்டுகிறது. இதில் சில்வர் விலை அடுத்த நாள் கேப் அப்பில் துவங்கினாலும், பின்பு படிப்படியாக இறங்க ஆரம்பித்துள்ளது. மாலையில் பன்னாட்டு சந்தை ஆரம்பித்தவுடன், சந்தை மிக வலுவாக ஏற ஆரம்பித்துள்ளது. இதனால், சில்வர் விலையானது, மேல்நோக்கி திரும்பி, வேகமாக ஏற ஆரம்பித்துள்ளதை காணலாம்.

இந்த இடத்தில் கேப் தியரியைகூட நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். அதாவது, கேப் அப்பில் துவங்கிய பிறகு, விலையானது, இறங்கி அந்த கேப்பை மூடிவிட்டு பின்பு ஏற ஆரம்பித்துள்ளது.

சிலைட் 9; (நேச்சுரல் கேஸ்)

இதே மாதிரயான விலை நகர்வை நாம் நேச்சுரல் கேஸ் படத்திலும் பாரக்கலாம். மேலே உள்ள படம் நேச்சுரல் கேஸ் 11.03.15 அன்று நடந்த வியாபாரத்தை காட்டுகிறது. இந்த படத்தில், முந்தைய நாள் நேச்சுரல்கேஸ் ஏறி முடிந்துள்ளது.

அடுத்த நாள் காலையில் விலையானது, முந்தைய நாள் அளவைவிட குறைந்து இறங்க ஆரம்பித்துள்ளது.

இந்த இறக்கமானது, ஏற்கெனவே லாங் பொஷிஷன் வைத்திருப்பவர்களை ஓடிப்போய் கவர் பண்ணவைக்கும். அடுத்து, சந்தையை புதிதாக பார்பவர்களை, சந்தை இறங்க ஆரம்பித்துள்ளதே, இதில் ஷாட் அடித்தால் என்ன என்று எண்ண வைக்கிறது.

இதனால், சந்தையில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் பொஷிஷனை ஷாட் அடிக்கும் முறையில் மாற்றி அமைக்கிறார்கள். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை இறங்குமுகமாக இருந்த சந்தை, மாலை 5 மணிக்கு பிறகு, மிக வலிமையாக மேல்நோக்கி திரும்பி இருப்பதை மேலே உள்ள நேச்சுரல் கேஸ் படத்தில் பார்க்கலாம். இதனால் காலையில் ஷாட் அடித்தவர்கள் எல்லாம் பெரும் நட்டம் அடைவதற்க்கும் வாய்ப்புள்ளது.

சிலைட் 10 (சில்வர் – 23.02.15)

மேலே உள்ள படம், சில்வர் 23.02.15 அன்று வியாபாரம் ஆன விலையை காட்டுகிறது. இந்த வரைபடத்தில், சில்வர் விலையானது காலையில் இறங்கி துவங்கி தொடர்ந்து இறங்கியே வியாபாரம் ஆவதை பார்க்கிறோம். இந்த இறங்குமுகமான நிலை மாலைவரை நீடிக்கிறது. பின்பு ஏற்றம் என்று வரும்போது, மிக மிக வலிமையாக ஏறுவதை பார்க்கிறோம்.

இந்த நகர்வும், காலையில் ஷாட் அடிப்பதற்க்கு நம்மை தள்ளும், மாலையில் அடித்த ஷாட்டை எல்லாம் பெரிய நட்டத்தில் கவர் பண்ணவைக்கும்.

சிலைட் 11 (நேச்சுரல் கேஸ் – 18.03.15)

மேலே உள்ள விளக்கப் படத்தில், நேச்சுரல் கேஸ் 18.03.15 அன்று வியாபாரம் ஆன விலைநகர்வை நீங்கள் பார்க்கலாம். இந்த வரைபடத்தில், விலையின் துவக்கம் என்பது, முந்தைய நாள் முடிவுக்கு அருகாமையில் துவங்கி படிப்படியாக இறங்க ஆரம்பித்துள்ளதையும் பார்க்கலாம். அதன் பின், மாலையில் பன்னாட்டு சந்தை துவங்கியவுடன், மிக வலிமையாக ஏறி, முந்தைய நாள் முடிவுவிலையை தாண்டுகிறது. பின், இன்னும் வலிமையாக ஏறி புதிய உச்சத்தை தோற்றுவிக்கிறது. இந்த எடுத்துக்காட்டிலும், விலையானது, உள்நாட்டு வியாபார நேரத்தில் ஒரு மாதிரியாகவும், பன்னாட்டு சந்தை துவங்கும்போது, அதற்க்கு நேர் மாறாகவும் செல்வதை பார்க்கிறோம்.

இந்த மாதிரியான விலைநகர்வின் மாற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள டெக்கனிக்கல் அனாலிசிஸ் உதவும். சந்தைக்கு வருபவர்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ் படிப்பது நல்லது.

சந்தையில் பல்வேறு வகையான விலை நகர்வுகளை எடுத்துக்காட்டுகளுடன் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இன்னும் சில நகர்வுகளையும் அடுத்த மடலில் பார்க்கலாம்.

அடுத்த பகுதியில் மற்ற வகையான விலை நகர்வுகளை எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.

நோ டிப்ஸ்...

நோ டிரிக்ஸ்...

ஒன்லி எஜுகேஷன்.

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10075

Read more...

Commodity A2Z-28

கமாடிட்டி வியாபாரம் 28

உள்நாட்டு சந்தையில் விலை மாற்றம்..!

தி.ரா.அருள்ராஜன்

தலைவர்,  எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

உள்நாட்டு சந்தையில் விலை மாற்றமும், அதே நேரத்தில், உலக சந்தை துவங்கும்போது அது எவ்வாறு மாறுகிறது என்பது பார்த்து வருகிறோம்.  அதில் ஏற்கெனவே இரண்டு வகை பார்த்துவிட்டோம்.  அவை...
1.    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றம்
மாலையில் உலக சந்தையில் விலை இறக்கம்
2.    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை இறக்கம்
மாலையில் உலக சந்தையில் விலை ஏற்றம்

இனி நாம் மூன்றாவது வகையை பார்ப்போம்.

3.    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை இறக்கம்
மாலையில் உலக சந்தையிலும் விலை இறக்கம்
இந்த வகையில் விலை இறக்கம் என்பது, உள்நாட்டில் நிகழ்து கொண்டு இருக்கும்போது,  மாலையில் துவங்கும் பன்னாட்டு சந்தையிலும் அதுவே பிரதிபலிக்கும் சூழ்நிலையை பார்க்லாம்.

சிலைட் 12



மேலே உள்ள விளக்கப்படத்தில், நேற்றைய முடிவுவிலையை ஒட்டியே இன்னு விலை துவங்குவதாக கொடுத்துள்ளோம்.  பின் உள்நாட்டு சந்தையில் விலை படிப்படியாக இறங்குகிறது.  பின் மாலையில் உலக சந்தை துவங்கும்போது, ஏற்கெனவே இறங்கி உள்ள நிலையில், அந்த இறக்கத்தை தீவிரபடுத்துவதுபோல், உலக சந்தையில் விலை இறக்கம் தொடர்வதை பார்க்கிறோம்..

இந்த வகை நகர்வுகள் சந்தை எப்படி இன்னும் அதிக அளவில் வலிமை குன்றி இருப்பதை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.  இவ்வாறு, உள்நாட்டு இறக்கத்தின் போக்கே, பன்னாட்டு சந்தையிலும் பிரதிபலிப்பதை நாம் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாம்.

சிலைட் 13 (சில்வர் 29.01.15)





மேலே உள்ள வரைபடத்தில் 29.01.2015 அன்று சில்வர் விலையானது முந்தைய நாள் விலையைவிட குறைந்து துவங்கி, குறைந்தே வியாபாரம் ஆவதை பார்க்கலாம்.  சில்வர் ரூ.40000 என்ற விலையில் இருந்து படிப்படியாக குறைந்து வியாபாரம் ஆகிவருகிறது.  பன்னாட்டு சந்தை துவங்கும்போது 39500  என்ற அளவில் உள்ளது.  அடுத்து சில மணி நேரம், விலையானது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.  இந்த படிப்படியான இறக்கம் என்பது தொடரந்து கொண்டு இருக்கும் போது, திடீரென்று விலையானது 39200ல் இருந்து 38300 என்ற அளவிற்க்கு வேகமாக சரிவதை பார்க்கிறோம்.  பின்பு இன்னும் இறங்கி வலிமை குன்றியே முடிந்துள்ளது.

இந்த எடுத்துக்காட்டில், பன்னாட்டு சந்தையின் சூழலை, உள்நாட்டு சந்தை ஏற்கெனவே மோப்பம் பிடிப்பதாகவோ, அல்லது எதிர்பார்பின் அடிப்படையில் நிகழ்ததாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

சிலைட் 14:  நேச்சுரல் கேஸ் (19.03.15)




நேச்சுரல் கேஸ் விலைநகர்வை பொதுவாக பார்த்தோமேயானால், அது இன்ட்ரா டே அடிப்படையில் ஒரு திசையில் பயணிப்பது என்பது அறிது.  அதாவது அதன் அடிப்படை போக்கு என்பது, எடுத்துக்காட்டுக்கு இறங்குமுகமாக இருந்தாலும், நடுவே ஒரு வலிமையான ஏற்றத்தை ஏற்படுத்து, பலருடைய ஸ்டாப்லாஸ் அடுக்கப்பட்டு பின்பு, கீழ்நோக்கிய திசையில் தொடர்ந்து பயணிக்கும்.

அப்படிபட்ட நேச்சுரல்கேஸ், 19.03.15. அன்று, முந்தைய நாள் வலுவாக ஏறி 184 என்ற விலையில் முடிந்து இருந்தாலும், காலையில் 183.50 என்ற விலையில் துவங்கி பின்பு இறங்கு ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் படிப்படியாக 181வரை தொடர்ந்து உள்ளது. பின்பு பன்னாட்டு சந்தை துவங்கிய பிறகு, அதன் இறக்கம் இன்னும் வலுவாக மாறி 174.50 என்பதுவரை இறங்கி உள்ளதை,மேலே உள்ள படத்தில் காண்கிறோம்.

இந்த மாதிரியான இறக்கங்கள், சந்தையில் ஒரு வலுவான திசை திருப்பம் நடந்துள்ளதை காட்டுகிறது. அதாவது, சந்தை மேல் திசையில் இருந்து கீழ் திசைக்கு மாறி உள்ளது.

சிலைட் 15:  நேச்சுரல் கேஸ் (28.01.15)

மேலே உள்ள வரைபடத்தில் நேச்சுரல் கேஸ் 28.01.15. அன்று எவ்வாறு விலை நகர்ந்து உள்ளதை இப்போது பார்க்கிறோம்.  இந்த எடுத்துக்காட்டிலும், முந்தைய நாள் விலையானது வலிமையான ஏற்றத்தில் முடிந்துள்ளது.  இத்தைகைய வலிமையான ஏற்றங்கள் நமக்கு, அடுத்த நாள் இன்னு வலிமையாக ஏறலாம் என்ற அர்தத்தை கொடுக்கிறது.

இந்த எடுத்துக்காட்டில் நேச்சுரல் கேஸ் முந்தைய நாள், ரூ.183/- என்ற விலையில் முடிந்துள்ளது.  ஆனால், அடுத்தநாள், அதே நேச்சுரல் கேஸ் ரூ.179 என்ற விலையில் துவங்கி உள்ளது.  இதை நாம் ஒரு கேப் டவுன் என்று சொல்லுவோம்.  பொதுவாக கேப் ஆகும்போது ஏறி முடிவதும் வழக்கம்.  ஆனால், தற்போது பார்க்கும் எடுத்துக்காட்டில், கேப் டவுனில் துவங்கும் விலையானது , தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. உள்நாட்டு வேலை நேரத்தில் இறங்கிக்கொண்டு இருக்கும் இந்த விலையானது, மாலையில் உலக சந்தைகள் துவங்கும் நேரத்தில் எவ்வாறு நகர்கிறது என்றும் பார்ப்போம்.

நேச்சுரல் கேஸ் விலை நகர்வை பற்றி ஏற்கெனவே என்னுடை கருத்துகளையும் கூறி இருக்கிறேன். இறங்கும்போது, நடுவில் ஒரு வலிமையான ஏற்றத்தை காட்டி, எல்லா ஸ்டால் அளவயும் தொட்டு, பின் இறங்கும்.  மேலே உள்ள வரை படத்தில் கூட அப்படிபட்ட ஒரு விலை நகர்வைதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வரை படத்தில் 180.50 என்ற விலையில் இருந்து இறங்கிக்கொண்டே இருக்கும், படிப்படியாக இறங்கி 176.50 என்ற அளவிற்க்கு இறங்கிய பிறகு, திடீரென்று 179.50 வரை ஒரு வேகமான ஏற்றத்தை காட்டி எல்லா ஸ்டாப் லாஸ் அடிப்பதை பார்க்கிறோம். பின் 179 என்ற எல்லையில் இருந்து இறங்கி, இறங்கி நாள் முடியும்போது 174 என்ற விலையில் முடிந்ததை பார்க்கிறோம்.
இதில் இரண்டு விஷயங்களை நாம் பார்க்க முடிகிறது.
1.    உள்நாட்டு விலையின் இறக்கத்தை ஒட்டியே, பன்னாட்டு சந்தையிலும் விலை இறங்கு முடிந்துள்ளது.
2.    விலை இரண்டு சந்தைகளிலும் ஒரே திசையில் (இறங்குமுகமாக) இருந்தாலும்கூட, நடுவே ஒரு வலிமையான ஏற்றத்தை காட்டி பின் இறக்கம் தொடர்ந்து உள்ளது.
ஒவ்வொரு கமாடிட்டியும், ஒவ்வொரு வகையான விலைநகர்வை கொண்டு இருக்கும். அந்த வகையில் நேச்சுரல் கேஸ் என்பது, பொதுவான, ஒரு திசை சார்ந்த நகர்வு என்பது ஒரு வகை.  ஆனால், நடுநடுவே, அதன் விலையானது, செங்குத்தாக ஏறி இறங்குவதை பார்கிறோம்.  ஆகவே இதில், வியாபாரம் செய்பவர்கள் எப்போதும் கட்டுபாட்டுடான வியாபாரத்தை செய்வது நல்லது.
இதுவரை மூன்று வகையான, உள்நாட்டு விலைநகர்வும், அதெயொட்டி பன்னாட்டு விலை நகர்வையும் பார்த்தோம்.  இதில் கடைசியாக நாம் பார்க்க இருப்பது, நான்காவது வகை ஆகும்.
அதாவது.....
4.    காலையில் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றம்
மாலையில் உலகச ந்தையிலும் விலை ஏற்றம்
இந்த நான்காவது விலை நகர்வு என்பது, குறிப்பிட்ட கமாடிட்டி  மிக மிக வலிவுடன் காணப்படுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
சிலைட் 16:

மேலே உள்ள வரைபடத்தில், நேற்றைய முடிவு விலையைவிட, இந்திய சந்தை துவக்கத்தில், அதிக அளவில் துவங்கி வியாபாரம் ஆக ஆரம்பித்துள்ளது.  இந்த ஏற்றம், தொடர்கிறது மாலை உலக சந்தை துவங்கும் வரை.  பின் உலக சந்தை துவங்கிய பிறகு, விலையானது, உள்நாட்டு சந்தை உயர்ந்த முடிந்த இடத்தில் இருந்து தொடரந்து ஏற ஆரம்பிக்கிறது.  இதன் பிறகு உலக சந்தையிலும், விலையானது தொடர்ந்து ஏறி, முடிவில் வலிமையாக ஏறி முடிகிறது.
நாம் பார்த்த நான்கு வகை விலைநகர்வில், இதுதான் நான்காவது வகை விலைநகர்வு.  இந்த வகை விலை நகர்விற்க்கு, சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்.
சிலைட் 17: தங்கம் 13.03.15

மேலே உள்ள வரைபடத்தில், தங்கத்தின் விலை, உள்நாட்டு சந்தை துவங்கியபோது, ஒரு கேப் அப்பில் துவங்கி உள்ளதை பார்க்கிறோம்.  காலையில் 25700 அளவில் துவங்கி வியாபாரம் ஆகி உள்ளது.  ஏறக்குறைய அன்றைய பகல் பொழுது முழுவதும், அதன் உச்சத்தை தக்கவைத்துள்ளது.   மாலையில் சந்தை துவங்கிய பிறகு, இன்னும் சற்றை உயர்ந்து துவங்கி வியாபாரம் ஆனது.  அதாவது 25850 என்ற உச்சம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டது.  அதன் பிறகு,  உலகசந்தையில் ஏற்படும் மாற்றத்திற்க்கு ஏற்ப விலை சற்றே இறங்கினாலும், முடிவில் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தை ஏற்படுத்தி வலிமையாக முடிந்துள்ளதை பார்க்கிறோம்.  தங்கத்தின் விலை சந்தை முடியும்போது 29100 என்ற விலையில் முடிந்துள்ளதை பார்க்கிறோம்.
இதுவரையில் வேறுபட்ட விலை நகர்வுகளை பார்த்தோம்.  இனி விலை நகரும்போது,  பணம் சம்பாதிப்பதும், விலை நகராமல் இருக்கும் போது எப்படி நட்டம் வருகிறது என்று பார்ப்போம்.

.
நோ டிப்ஸ்...
நோ டிரிக்ஸ்...
ஒன்லி எஜுகேஷன்.

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10790

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP