Powered by Blogger.

Commodity A2Z - 29

Sunday, March 13, 2016

கமாடிட்டி வியாபாரம் 29

கமாடிட்டி டிரேடிங் -  மெகாவிலா? மினியிலா?

- தி.ரா.அருள்ராஜன்
தலைவர்,   எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

கமாடிட்டி டிரேடிங் என்பது ஃபியூச்சர்ஸ் என்பது நாம் அறிந்ததே.

இந்த வியாபாரம் என்பது ஒன்று லாபத்தில் முடியும் அல்லது நஷ்டத்தில் முடியும்.
பெரிய பெரிய லாபத்தில் முடியலாம், அல்லது பெரிய பெரிய நஷ்டத்தில் முடியலாம்.
என்ன பெரிசா பொடி போட்டு எழுத ஆரம்பிச்சேட்னு பார்கிறீங்களா!  காரணம் இருக்குதுங்க.
பொதுவாக நாம் கமாடிட்டி சந்தையில் ஈடும்படும்போது,  லாபம் சம்பாதிக்கவேண்டும் என்று விரும்பினாலும், அதில் நமக்கு வரக்கூடிய சங்கடங்களை பார்க்கவேண்டும். 

மேலும், அடிக்கடி நாம் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன?எந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் தவறு செய்து இழப்பை சந்திக்க நேரிடும்? ஏன் இழப்புகள் ஏற்படுகிறது?அதுவும் இழப்புகள் எப்படி அதிகமாக மாறுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் பற்றிய ஓர் அலசல்தான் இந்தக் கட்டுரை.

ஃபியுச்சர்ஸ் வியாபாரம் என்பதை ஒரு  Zero Sum Game  என்றும் அழைக்கலாம்.
அதாவது ஒருவருடைய லாபம், இன்னொருவருக்கு இழப்பாக மாறலாம்.  இதில் ஈடுபடுவர்களை,  அவர்களுடைய ரிசல்ட்டை வைத்து  மூன்று வகையாக பிரிக்கலாம்.

•     ஒரு குறிப்பிட்ட கால அளவில், பல்வேறு வியாபாரம் செய்து முடிவில்,  லாபம் மற்றும் நஷ்டம் என்பதை சமமாக வைத்து இருப்பவர்.    இவர் இந்த வியாபாரம் பற்றி ஓரளவிற்கு ஞானம் கொண்டவர்.   தற்போதைய வியாபார முறையில், கொஞ்சம் மாற்றம் கொண்டுவந்தால்கூட போதும்,  இவர் லாபம் சம்பாதிக்கக்கூடிய மனிதராக மாறி விட முடியும்.

•    ஒரு குறிப்பிட்ட  கால அளவில், ஒருவர் தொடர்ந்து வியாபாரம் செய்யும்போது, பெரும்பான்மையான வியாபாரத்தில், அவர் லாபம் அடைவராக இருந்தால்,  தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு தகுதி படைத்தவராக எடுத்துக்கொள்ளலாம்.  இவரால், தன்னை நல்ல வெற்றியாளாராக மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

•    ஒரு குறிப்பிட்ட கால அளவில், ஒருவர் தொடரந்த்து ஒருவர் வியாபாரம் செய்யும் போது,  நெட்டாக நஷ்டத்தையே அடைகிறார் என்றால், அவருடைய சூழ்நிலை மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.  இவர் இதை தொடர்ந்து செய்துவந்தால், இன்னும் அதிக நஷ்டத்தைதான் அடைவார் என்று அர்த்தம்.    இவர் கொஞ்சம் சதாகரித்துக்கொண்டு, தன்னுடைய செயல்திட்டத்தை மாற்றினால், தப்பித்துக்கொள்ளலாம். இல்லையென்றால்,  இவருடைய பலத்த நஷ்டம், பலருடைய லாபத்துக்கு காரணமாக இருக்கும்.
இவர்கள் தங்களை தகுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.  முறையாக பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும்.
பொதுவாக சந்தையில் நம்முடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும்? எப்போது வாங்குகிறோம்?
ஒரு கமாடிட்டியின் விலையை நாம் உற்று பார்க்க ஆரம்பிக்கிறோம்.  அவ்வாறு நாம் பார்க்கும்போது, நாம்  பார்த்த விலையில் இருந்து மேல் நோக்கி நகர ஆரம்பிக்கிறது.    அந்த விலை நகர்வை பார்க்கும்போது, நம் மனதில் ஒரு எண்ணம் பிறக்கிறது.

எஸ்....  இந்த கமாடிட்டி நன்கு ஏறுகிறது.  எனவே நாம் வாங்கலாம்.   இந்த எண்ணம் வந்தவுடன் நாம் வாங்குவதற்கான ஆர்டரை போடுகிறோம்.   வாங்குவும் செய்துவிட்டோம்.
ஏன் வாங்கினோம்?  ஏறுதேன்னு வாங்கினேன்.

இவ்வாறு வாங்கிய பிறகு,  நாம் விலை ஏறும் கட்சியில் சேர்ந்துவிட்டோம்.    இனி ஏறும் கட்சிதான் ஜெயிக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்கிறோம்.
நியாயம்தானே!

ஓகே...  விலையும் கொஞ்சம் ஏறி ஆரம்பிக்கிறது.   இன்னும் ஏறட்டும் என்று நாம் காத்திருக்கிறோம்.   ஆனால்   விலை இறங்க ஆரம்பிக்கிறது.
இப்போது  நாம் கவலைபட ஆரம்பிக்கிறோம்.
மனது கொஞ்சம் தடுமாற ஆரம்பிக்கிறது.  இப்ப வாங்கினது தப்பா, ரைட்டா?   இன்னும் கொஞ்சம் பொருத்து வாங்கி இருக்கலாமோ?

விலையை பார்க்கிறோம்.  அது இன்னும் இறங்கிக்கொண்டு இருக்கிறது.   இப்போது நம் நிலை என்ன?  நஷ்டம் கூடிக்கொண்டே போகிறது.  நஷ்டம் கூட கூட, நம் மனதில் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
இப்போது என்ன செய்யலாம்.   விலை ஏறும் என்ற கட்சியில் சேர்ந்தோம். அந்த கட்சி இப்போது தோல்வியை சந்தித்து வருகிறது.   மாறாக விலை இறங்கும் என்ற கட்சி இப்போது வலுவாக மாறிக்கொண்டு இருக்கிறது. 

மனதில் ஒரு ஊசலாட்டம்.
தொடர்ந்து ஏறும் என்ற கட்சியிலேயே இருக்கலாமா? அல்லது இறங்கும் என்ற கட்சிக்கு மாறிவிடலாமா?
விலை இறங்க...  இறங்க.... மனசு கட்சி மாற துடிக்கிறது.  ஒரு கட்டத்தில்  நஷ்டம் அதிகமாக மாறும் போது,  நம்மால் தாக்குபிடிக்க முடியாத போது,
சரி...  சரி.... விற்றுவிடு.  நஷ்டம் கூடிக்கொண்டே போகிறது.

டக்கென்று ஏறும் என்ற கட்சியில் இருந்து வெளியேறி விடுகிறோம்.
நல்ல நஷ்டத்தில் விற்றாகிவிட்டது.  இனி என்ன செய்வது?
ஏதாவது ஒரு கட்சியில் சேரனுமே.

இப்ப எந்த கட்சி வலுவாக இருக்கிறது.  இறங்கு என்கிற கட்சிதான் வலுவாக இருக்கிறது.  சரி அப்ப இறங்கும் கட்சியில் சேரந்துவிடுவோம்.
ஓகே.... ஒரு லாட் ஷாட் போடு.
இப்போது நாம் வாங்கி விற்கும் முறையில் இருந்து, விற்று வாங்கும் முறைக்கு மாறிவிடுகிறோம்.  எதிர் கட்சி்க்கு தாவி விட்டோம்.  இந்த கட்சியாவது, வர எலக் ஷனில் ஜெயிக்குதான்னு பார்ப்போம்.
விலை இறங்க ஆரம்பிக்கிறது.  ஓகே... ஓகே...  ஷாட் அடிச்சது கரெக்டுதான்.  விலையை உற்று பார்க்க ஆரம்பிக்கிறோம்.

விலை இறங்குதுதானே?  ஆமாம். இறங்குது.
அடுத்த சில நிமிடங்களில்...
விலை இறங்குதுதானே?    ஆமாம்....   இல்லை... இல்லை.. இப்ப கொஞ்சம் ஏற ஆரம்பிக்குது.
இப்ப....
ஐய்யய்யோ இன்னும் நல்லா ஏற ஆரம்பிக்குது.  ஷாட் அடிச்சதல, நஷ்டம் வர ஆரம்பித்துவிட்டது.   அந்த நஷ்டம் கூடவும் ஆரம்பித்துவிட்டது.   உடலில் பதட்டம் தொற்றிக்கொள்கிறது.
விலை வலிமையாக ஏற ஆரம்பிகிறது.
பதட்டம்  கூட ஆரம்பிக்கிறது.
என்ன பண்ண...   என்ன பண்ண....
ஓடு... ஓடு.... ஷாட்டை கவர் பண்ணு. 
வித்ததை வாங்கிவிட்டோம்.
விலை இறங்கும் கட்சியில் இருந்து விலகிவிட்டோம்.
இப்ப இரண்டு டிரேட் பண்ணி ரெண்டிலேயும் லாஸ்.
இவ்வளுவு லாஸ் ஆயிட்சே.   இதை எப்படி எடுக்கிறது?
இப்ப விலையில என்ன நடக்குது?  விலை ஏறுது.  சரி மீண்டும் ஏறும் கட்சியிலே சேரந்து விடுவோம்.
ஒரு லாட் வாங்குப்பா.....
இப்போது நாம் இரண்டு வகையான செயல்பாடுகளை பார்த்தோம்.  இந்த இரண்டு செயல்பாடுகளைதான் நாம் மீண்டும் மீண்டும் செய்கிறோம்.
கீழே அதை ஒரு வரைபடத்தில் பார்க்கலாம்.

படம்: சிலைட் 9

இந்த வரைபடத்தில் .....
ஏறுதேன்னு வாங்கினேன்:    இதுதான் நாம் நிம்மதியுடன் ஆரம்பிக்கும் முதல் வியாபாரம்.  மனதும் தெளிவாக இருக்கிறது.

இறங்குதேன்னு கவலைப்பட்டேன்:   இதுதான் மனது குழம்ப ஆரம்பிக்கும் முதல் கட்டம்.   நாம் தவறு செய்துவிட்டோம் என்று நம்மை நாமே குற்றம் சாட்டும் மனநிலைக்கு வருகிறோம்.
நஷ்டத்தில் விற்றுவிட்டு ஷாட் போனேன்:  நஷ்டம் கூடும்போது, நமக்கு இப்போது பதற்றம் கூடுகிறது.   மூளை மழுங்க ஆரம்பிக்கிறது.  உணர்வு பூர்வமாக கொந்த்தகளிக்க ஆரம்பிக்கிறது.
ஏறுதேன்னு கவலைப்பட்டேன்:  மனதில் ஒரு விறுவிறுப்பு வருகிறது.  மனதில் ஏதோ பிசைவது போல் தோன்றுகிறது.

ஷாட் கவர் பண்ணிவிட்டு லாங் போனேன்:  இரண்டுமுறை நஷ்டத்தை  அனுபவித்த பிறகு,  மனது அதிக அளவில் கலங்கி, பலத்த குழப்பத்தை நோக்கி போகிறது.
அடச்சே... இறங்குதே:  நம் மீது நமக்கே வெறுப்பு வரும் நேரம் இது.  நாம் செய்யும் இந்த வேலை நமக்கு சரிபட்டு வராதோ என்று, அவநம்பிக்கை வரும் நேரம்.

இதைத்தான் நாம் திரும்ப திரும்ப,  ஒவ்வொரு நாளும் பண்ணுகிறோம்.
இதை படிக்கும்போது, ஏற்கெனவே சந்தையில் இருப்பவர்களுக்கு, ஆமாங்க, இது உண்மைதானுங்க அப்படின்னு தோணும்.
சந்தை இன்னும் வராத புதியவர்களுக்கு,  அட என்னங்க, இந்த மாதிரியா எல்லோரும் பண்ணுவாங்க அப்படின்னு ஒரு கேள்விகுறியா இருக்கும்.
இது எந்த அளவிற்க்கு உண்மை என்று, உண்மையாகவே நடந்த ஒரு வரைபடத்தை கீழே உங்களுக்காக காட்டுகிறேன்.

படம்:  சிலைட் 10

கீழே உள்ள படத்தில் லெட் என்ற கமாட்டி, 24.08.2015. அன்று, காலை 10 மணியில் இருந்து இரவு 11.30 வரை எவ்வாறு நகர்ந்து உள்ளது என்பதை பார்க்கிறோம்.
சிலைட் 9 என்ற படத்தில் வெறும் கோடுகளாக பார்த்த நாம், அது எவ்வாறு நிஜ வியாபார வாழ்க்கையில் நடக்க வாய்ப்புண்டு என்பதையும் இங்கு பார்கிறோம்.
இதைத்தான் ரோலர் கோஸ்டர் நகர்வு என்று நான் பெயர் இட்டிருக்கிறேன்.

தனித்தனியாக பார்த்த இந்த இரண்டு படத்தையும், இணைத்து கீழே கொடுத்துள்ளேன்.
மேலே நீங்கள் கோடுகளாக இருந்த படத்தை தனியாக பார்த்த போது, அது ஏதோ கற்பனை போல் தோன்றும்.  பின் உண்மையாகவே லெட் அவ்வாறுதான் நகர்ந்துள்ளது என்பதை நான் வரைபடத்துடன் காட்டும்போது, அது சரிதான் என்று தோனும்.  ஆனால், இரண்டு எப்படி ஒன்று போல் இருக்க முடியும் என்ற சந்தேகமும் கூடவே வரும் அதை நிவர்த்தி செய்யத்தான்,  அந்த இரண்டு படங்களையும் இணைத்து கீழே கொடுத்துள்ளேன்.

அதை பார்க்கும்போது நமக்கு ஆச்சரியம் தோன்றலாம்.
எப்படி அது?
இரண்டு நிலையும் அப்படி அச்சு அசலாக அப்படியே பொருத்துகிறது.   அப்படியென்றால் நாம் இப்படித்தான் தொடர்ந்து நடந்து கொள்கிறோமா?
இந்த கேள்விக்கு ஆம் என்பது பதில்.
அதை நம்புவதற்கே கீழே இந்த படம்.

படம் : சிலைட் 11

கமாட்டி வியாபாரத்தில் நாம் முதலில் அறியாமல் இந்த மாதியான செயல்பாட்டில் மாட்டிக்கொண்டாலும், பின்பு அதுவே பழக்கமாக மாறி, பணத்தை இழப்பது நடக்க ஆரம்பிக்கிறது.
இதுபோன்ற நாம் இன்னும் எந்த மாதியான பிரச்சனைகளில் தொடர்ந்து மாட்டிக்கொண்டு பணத்தை இழக்க நேரிடுகிறது, என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
நோ டிப்ஸ்....
நோ டிரிக்ஸ்...
ஒன்லி எஜுகேஷன்...

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10913

Read more...

Commodity A 2 Z -30

கமாடிட்டி வியாபாரம் 30

நான் டிரேடரா? கேம்ளரா?

- தி.ரா.அருள்ராஜன் தலைவர்,  

எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

பணம் சம்பாதிக்கதான் கமாடிட்டி வியாபாரத்திற்க்கு வருகிறோம்.

ஆனால், இந்த என்ன தொழில், இதில் வியாபாரம் செய்ய நமக்கு என்ன தெரியும்?

இந்த வியாபாரத்தில் என்ன ரிஸ்க் இருக்கிறது? இந்த ரிஸ்கை கையாள நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்?

இந்த கேள்விகளுக்கு விடையுடன் களத்தில் இறங்குபவர்கள், ஓரளவுக்கு தாக்கு பிடிக்கிறார்கள்.

அதனுடன், நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு வியாபாரத்தில் இறங்குபவர்கள் ஒரு வெற்றியாளர்களாக இருப்பதற்க்கு அதிக வாய்ப்பு. தொடர்ந்து கற்றதை பின்பற்றும்போது, நாம் வியாபாரியாக மாறுகிறோம்.

என்னென்ன வகையில் நாம் சந்தையில் பாதிக்கப்படுகிறோம் என்று பார்க்கலாம்.

முதலில் நம் எதிர்பார்ப்பு என்ன என்று பார்கலாம்.

இதில என்னங்க கேள்வி எதிர்பார்ப்பு என்பது, நிறைய லாபம் வரணும்.

அது கரெட்டுங்க. எவ்வளவு லாபம் வரணும்?

எதுக்கு இப்படி கேட்கறீங்க. எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அந்த அளவிற்க்கு வரட்டுமே.

இதுதான் நம்முடைய முதல் பதிலாக இருக்கும்.

இரண்டாவது ஒரு கேள்வி? நிறைய லாபம் எவ்வளவு சீக்கரம் வேணும்?

இது என்னங்க கேள்வி. எவ்வளவு சீக்கிரம் வருதோ அந்தளவுக்கு நல்லதுதானே.

நிறைய லாபம் வேணும், எவ்வளவு சீக்கிரம் வருதோ அந்தளவுக்கு நல்லது. இந்த விஷயங்களும்தான், நம்மை, மெகா லாட்டை நோக்கி நகர்த்துகிறது.

அனுபவம் நிறைந்தவர்களுக்கு இது நன்கு புரியும். இருந்தாலும், புதியர்வகளுக்கு புரிய....

மெகா லாட் என்பது, அதிக எண்ணிக்கையில் கமாடிட்டியை வாங்குவது. எடுத்துக்காட்டாக. கோல்ட் மெகா லாட் 1000 கிராம்( ஒரு கிலோ)

மினி லாட் என்பது, குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது. எடுத்துக்காட்டாக 100 கிராம் கோல்ட்.

பொதுவாக தங்கம் 10 கிராம் என்ற விலையில் வியாபாரம் ஆகும்.

அப்படி என்றால், தங்கம் விலையில் ரூ.10/- நகர்ந்தால், மினியில் ரூ.100/- லாபம் கிடைக்கும். மெகாவில் வாங்கி இருந்தால் ரூ.1000/- லாபம் கிடைக்கும்.

தங்கம் விலை, ஒருவேளை ரூ.100/- ஏறினால், மினியில ரூ.1000/- கிடைக்கும். அதுவே மெகாவில ரூ.10000/- கிடைக்கும்.

ஏங்க...

ஏங்க...

படிக்கிற உங்களத்தாங்க.

ம்....

உங்களுக்கு மெகா வேணுமா அல்லது மினி வேணுங்களா?

என்னங்க.... நான் உங்களைதாங்க கேட்கிறேன்.

ம்... ம்... ம்... மெகாதான் வேணும்.

அப்படி போடுங்க...... உங்க உள்ள இருகிறது எல்லாம் வெளியே வந்துச்சா?

லாபம் என்று சொல்லும்போது, நமக்கு மெகா என்பதுதான் உற்சாகம் கொடுக்கும். இப்ப இன்னும் ஒரு கேள்வி. தங்கம் வாங்கின பிறகு ஏறினா.... வர்ற லாபத்தை பத்தி பேசினோம் இல்ல.

ம்....

இப்ப இறங்கினா என்னவாகும் அப்படின்னு பாத்திடலாமா?

இறங்கினாவா? ஏங்க இப்படி அபசகுணமா பேசறீங்க.

சார்.... மார்கெட்ல விலை ஏறவும் செய்யும். இறங்கவும் செய்யும் சார். விலை இறங்கும்போது என்ன பண்ணுவது என்பதற்க்கும் தயாராக இருக்கனும்.

அப்படியா....

ஆமாம் சார். சரி இப்ப சொல்லுங்க.

இறங்கம் வந்தா நட்டம் வரும்னு தெரியும். ஆனால், இறங்க வேணாம். எனக்கு நஷ்டம் வேணாம்.

அது எனக்கு புரியுது சார். நட்டம் அப்படின்னு வந்தால், எவ்வளவு ஏத்துக்க தயாராக இருக்கீங்க.

அதுவா கொஞ்சமா இருந்தா நல்லது. அதாவது, ரூ.100/- ரூ.200/-

சுருக்கமா சொல்லுங்க சார்...

நஷ்டம் என்று வந்தால், மினி அளவில இருக்கனும்.

அதாவது, லாபம் அப்படின்னு வந்தா மெகா லாட் அளவிற்க்கு வரணும். அதுவே நட்டம் என்று வந்தால், அது மினி நட்டம் அளவிற்க்கு மட்டுமே வரணும்.

அப்போ, நாம டிரேடிங்கில் இறங்கும்போது, நமக்கு, மெகா அளவிற்க்கு லாபம் வரணும் விருப்பப்படுகிறோம். ஆனால், நட்டம் என்தை மினி அளவிற்க்கே தயாராக இருக்கிறோம்.

கமாடிட்டி டிரேடிங் - மெகாவில் லாபம் வேண்டும்? மினியில் நட்டம் இருக்கனும்?

இதில் நம்முடைய லாப, நட்டம் இக்வேஷன் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

இதனால் என்ன நடக்கிறது. பார்கலாமா?

படம்: சிலைட் 1

மேலே உள்ள படத்தில் நேச்சுரல் கேஸ இன்ட்ரா டே வரைபடத்தில், விலையானது 175க்கும் 177க்கும் இடையே நகர்ந்துள்ளது. அதாவது, நாள் முழுவதும், விலை இந்த இரண்டு ரூபாய்க்குள் நகர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கலாம்.

இதுக்கும் நம்ப விளக்கத்திற்க்கும் என்ன சம்ந்தம்.

நேச்சுரல் கேஸ் விலை 177ஐ தொட்டு தாண்ட முயற்சிக்கும்போது, நாம் வாங்கி, பின் அது இ்றங்கி 175 தொடும் போது விற்றால், நமக்கு நட்டம் வருகிறது. இங்கே லாட் அளவு 1250 ஆகும். ஆக ஒரு லாட்டை வாங்கி ரூ.2/- நட்டத்தில் விற்றால், நமக்கு ரூ.2500/- நட்டம் வருகிறது.

சரி வாங்கி விற்றுதான் நட்டம் வருகிறதே என்று...

ரூ.175/- என்ற அளவில் ஷாட் அடித்து லாபம் பார்க்கலாம் என்று பார்த்தால், அது மேல 176, 177 என்று ஏறும்போது, மனசு லபக் லபக் என்று அடித்துக்கொள்கிறது. அப்படி 177ஐ தொடும்போது, மனதில் பெரிய அச்சம் ஏற்படுகிறது. அதாவது, 177ஐ தாண்டினால், ஒரு பெரிய ஏற்றம் வரும், எனவே ஓடிப்போய் ஷாட்டை கவர் பண்ணுகிறோம்.

இதனால், இன்னும் ஒரு ரூ.2500/- நட்டம் வருகிறது.

இப்போ ரூ.5000/- நட்டம் வந்துவிட்டது. இனி என்ன செய்ய?

இந்த ரூ.5000/- நட்டத்தை ஈடுகட்ட என்ன பண்ணலாம். மனசு துறு துறுக்கிறது.

சரி, எப்படியாவது, ரூ.5000/- நட்டத்தை எடுக்கனும், சரி 2 லாட்டை எடுப்போம். ரூ.2/- ஏறுச்சின்னா, ரூ. 5000/ லாபம் வரும். ஒரு வழியா ரூ.5000/- நட்டத்தை தடுத்துவிடலாம்.

சரி..... நேச்சுரல்கேஸ் 2 லாட்டை எடுத்த பிறகு, இரண்டு ரூபாய் இறங்கினால், மீண்டும் மனசு தடுக்.... தடுக்....

இந்த முறையும் அதே இரண்டு ரூபாயும் நட்டம் வரும் என்று வைத்தால், ரூபாயாக பார்த்தால், ஒரு டிரேடில் ரூ.5000/- நட்டம் வந்துவிடுகிறது. ஏற்கெனவே இரண்டு டிரேடில் ரூ.5000/- நட்டம் அடுத்து ஒரே டிரேடில் ரூ.5000/- நட்டம். ஆக வெகு குறுகிய நேரத்தில் ரூ.10000/- நட்டம்.

ஒரே நாளில் விலை நகர்வு பக்கவாட்டில் இருக்கும்போது, கையில் இருக்கும் முழுபணமும்கூட நட்டமாகக்கூடும்.

இது போன்ற பக்கவாட்டு நகர்வில் நாம் பலமாக பாதிக்கப்படுகிறோம்.

அதற்க்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளையும் கீழே பார்க்கலாம்.

குரூட் ஆயில் 24.09.2015.

படம் : சிலைட் 2

மேலே உள்ள படத்தில், குரூட் ஆயில், கீழே 2920 என்ற எல்லையையும், மேலே 3020 என்ற எல்லையும் கொண்டு நகர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கிறோம்.

குரூட் நாள் முழுவதும் 100 புள்ளிகளுக்கு இடேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது. வாங்கி விற்றாலும் நட்டம், விற்று வாங்கினாலும் நட்டம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 100 பாயின் மினி லாட்டில் நட்டமாக வந்தால், ரூ.1000/- மட்டுமே நட்டமாக இருக்கும்.

மெகாவாக இருந்தால், ரூ.10000/- நட்டம் வரும்.

இதனால நாம என்ன பண்ணுவோம். மெகாவை வாங்கிவிட்டு 10-20 புள்ளிகள் நட்டத்தில் வெளிவந்தாலும் அது ரூ.1000/- - 2000/- நட்டத்தில் முடிகிறது. ரூ.2000/- நட்டம் என்பது, 2 – 3 முறை நிகழ்ந்தால் அது பெரும் நட்டமாக இருக்கும்.

இதுபோன்ற நிகழ்வுகள் தினசரி வர்த்தகத்தில் சகஜமாக நடக்கிறது.

இதே போன்று மெகாவில் அதிக அளவு பாதிப்பை கொடுக்கும் இன்னும் ஒரு கமாடிட்டியை எடுத்துக்காட்டாக சொலன்னால், தங்கத்தையும் சொல்லலாம்.

தங்கம்

படம் : சிலைட் 3

மேலே உள்ள படத்தில் தங்கம் 15.09.15 அன்று, பெரும்மான்மையான நேரம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நக்ரந்து கொண்டிருப்பதை பார்கிறீர்கள். விலையானது கீழே 25950 என்ற எல்லையிலும் மேலே 26050. இந்த நகர்வுக்குள் செய்யும் சில தவறான டிரேட், பெரிய பெரிய நட்டத்திற்க்குள் கொண்டுபோய்விடும்.

ஸ்டாப் லாஸ் டிரிகர்:

எல்லாதையும் கற்றுக்கொண்டேன். எனக்கு டெக்னிக்கல்ஸ் நல்லா தெரியும். இப்படி பலதும் தெரிந்தவர்களையும் இந்த சந்தை சமயங்களில் நன்கு காலை வாரிவிட்டுவிடும்.

அதற்கான எடுத்துக்காட்டுதான் கீழே உள்ள படம்.

படம்: சிலைட் 4

மேல உள்ள வரைபடம். நேச்சுரல் கேஸ். இதில் விலையானது, ஒரு குறிப்பிட்ட எல்லையில் நன்கு சப்போட் எடுத்து, மேலே திரும்புகிறது. இந்த இடம் நமக்கு வாங்குவதற்க்கு சரியான இடமாக தெரிகிறது. வாங்கியும் விடுகிறோம். பின் விலை ஏறுவதுபோல் ஏறி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, பின்பு வலிமையாக இறங்க ஆரம்பிக்கிறது. இந்த இறக்கம். நாம் நல்ல சப்போட் என்று நினைத்துக்கொண்டு இருந்த இடத்தையும் தாண்டி இறங்க ஆரம்பிக்கிறது.

அடச்சே.... என்று வேதனையும் அந்த வியாபாரத்தை நட்டத்துடன் விற்றுவிடுகிறோம். அதன் பின் விலை வலிமையாக ஏற ஆரம்பிப்பதை பார்கிறோம்.

விலை ஏறுகிறதுதான்..... ஆனால், மீண்டும் வாங்குவதற்கான தைரியம் நமக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியே....

இதுபோன்ற சூழ்நிலைகளையெல்லாம் கையாள தேவையானது....

கவனம்...

கவனம்...

கவனம்...

எனக்கு தெரிந்து நான் பண்ணவேண்டியது என்னவென்று சில விஷயங்களை இங்கு கொடுத்து இருக்கிறேன்.

வெற்றியின் ரகசியம் எது?

படம் : சிலைட் 5

மூன்று விஷயங்களை முக்கியம் என்று கருதுகிறேன். வியாபரத்தில் வெற்றியடைய தேவையானது 1. சரியான மனநிலை. இது 50% வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன். 2. ரிஸ்க் மேனெஜ்மென்ட். என்பது நம் முதலீட்டை எவ்வாறு கையாளுவது என்பதற்கான திட்டம். இது வெற்றிக்கு 25% காரணம். 3. என்ட்ரி மற்றும் எக்சிட் அடுத்து 25% அளவிற்க்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அடுத்து வியாபாரத்திற்கான சில முக்கியமான விதிமறைகள் நினைவுபடுத்து இந்த தொடரை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

படம்: சிலைட் 6

படம்; சிலைட் 7

படம்: சிலைட் 8

படம்: சிலைட் 9

கமாடிட்டி வியாபாரம் என்பது அதிக லாபத்தையும் அதிக நட்டத்தையும் கொடுக்கக்கூடிய இடம். இந்த சறுக்கு பாறையில் ஏறும் போது நாம் நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டு மட்டுமே வரவேண்டும் என்று அடிக்கடி நினைவுறுத்தி வருகிறேன்.

கமாடிட்டி வியாபாரத்தில் அதிக அளவு மக்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்படுவர்களுக்கு எப்படி சரியான வழியை சொல்லவது என்று நான் முழித்துக்கொண்டு இருக்கும்போது, நாணயம் விகடம் தன் கரத்தை நீட்டியது.

நாணயம் விகடன், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கட்டுரைகளையும் கொடுத்து வருகிறது.

அந்த வகையில், நாணயம் விகடன் நீட்டிய கரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு, இதுவரை காமட்டிட்டி A –Z என்ற தொடரில் 30 கட்டுரைகளை எழுதி உள்ளேன்.

கமாடிட்டி வியாபாரத்தில் புதிதாக வருபவர்களுக்கும், ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் இந்த தொடர் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.

இதை படிக்க படிக்க உங்களுக்கு நல்ல வியாபாரம் ரீதியாக நல்ல தெளிவு ஏற்படும். விதிமுறையை பின்பற்றும்போது நாம் டிரேடராகவும், அதை மீறும் போது நாம் சூதாட்டகாரனாகவும் மாறுகிறோம். ஆகவே விதிமுறைகள் முக்கியம்.

மீண்டும் நாணயம் விகடனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து, கமாடிட்டி A – Z முடிக்கிறேன்.

நோ டிப்ஸ்

நோ டிரிக்ஸ்

ஒன்லி எசுகேஷன்.

http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=11043

Read more...

Commodity A 2 Z - 1

புதிய தொடர் - 1. கமாடிட்டி வர்த்தகம்

கமாட்டி வர்த்தகம்  -  தெரிந்துக் கொள்ள வேண்டியது.
பணம் சம்பாதிக்கிறோம், செலவு செய்கிறோம், கொஞ்சம் சேமிக்கவும் செய்கிறோம்.  நாம் சேமித்த பணத்தை பெருக்க தேடும் பல வழிமுறைகள் என்று பார்தால்,  அவை...
வங்கி மற்றும் தபால் அலுவலக முதலீடு,
நிலம் அல்லது வீடு வாங்குதல்
தங்க நகை வாங்குதல்
என்று நாம் பல வழிமுறைகள் நாம் பின்பற்றி வருகிறோம்.  இதில் எல்லாம் போட்ட காசு பத்திரமாக இருக்கும் கூட கொஞ்சம் வருமானமும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம், கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்கள்,  பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.  நல்ல லாபம் ஈட்டும் பங்குகளாக வாங்கி, அவற்றை விலை நன்கு கூடும் போது விற்று லாபம் ஈட்டுகிறார்கள்.

- தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

இதையும் தாண்டி நான் இன்னும் கூடுதலாக ரிஸ்க் எடுக்கத்தயார், எனக்கு இன்னும் கூடுதலாக லாபம் வேண்டும் நினைப்பவர்கள், பங்குச் சந்தையில் வர்த்தகம் (டிரேட்) செய்ய நினைக்கிறார்கள்.  வர்த்தகம் என்பது, முதலீட்டில் இருந்து வேறுபட்டது.  முதலீடு என்பது நிறுவனங்களின் அடிப்படை பொருளாதார காரணிகளையும், நிதி நிலைமையும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் இந்த நிறுவனம், நமக்கு அதிக லாபத்தை ஈட்டித்தரும் என்று நம்புவதன் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துக்கொள்வது.
வர்த்தகம் என்று பார்க்கும்போது, அதே நிறுவனத்தை எப்போது ஏறும் அல்லது எப்போது இறங்கும் என்று அதன் விலைநகர்வை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஒரு குறுகிய காலத்திற்க்கு வாங்கி விற்பது ஆகும்.  வியாபாரம் என்று பார்க்கும்போது, வாங்கிய பிறகு வைத்திருக்கும் கால அளவு என்பது, சில நாட்கள், சில மணி நேரம் அல்லது சில நிமிடங்களாகக்கூட இருக்கலாம்.

வியாபாரம் செய்யும்போது, ஏறும் என்று நம்பும் பங்குகளை வாங்கி விற்கலாம்.  இறங்கும் என்று நம்பும் பங்குகளை விற்று வாங்கலாம்.  இரண்டிலுமே, நாம் நினைப்பது நடந்தால் லாபம், ஒருவேளை அதற்க்கு எதிராக நடந்தால், நஷ்டம்.

ஒரு எடுத்துக்காட்டாக பார்த்தால், ஒரு முதலீட்டாளாராக ஸ்டேட் பேங்க் பங்குகளை ரூ.2425/--க்கு (11.07.14) வாங்குவதாக வைத்துக்கொள்ளலாம்.  நோக்கம் இரண்டு வருடங்கள் காத்திருந்து, சுமார் ரூ.3500/- என்ற விலைக்கு போகும்போது விற்றுவிட வேண்டும்.  இங்கு நான் ஒரு முதலீட்டாளராக இருக்கிறேன்.
அதே ஸ்டேட் பேங்க் பங்குகளை நான் ரூ.2425க்கு வாங்கி ரூ.2525/-க்கு போனால் விற்றுவிட வேண்டும் என்று நினைத்தால், நான் வர்த்தகராக மாறுகிறேன்.  வாங்குவதற்க்கும், விற்பதற்கும் இடையே உள்ள கால அளவு,  ஓரிரு தினம் அல்லது ஓரிரு மணிகளாகக்கூட இருக்கலாம்.  ஏறும் என்று நான் நினைத்து வாங்கி விற்கும் முறையை ‘லாங்’ என்று சொல்லுவோம்.

ஸ்டேட் பேங்க் பங்குகள் 2525ல் இறங்கும் என்று நம்பும்போது, ரூ.2525 - ல் விற்றுவிட்டு, அது ரூ.2425க்கு வாங்கும்போது, எனக்கு லாபம் கிடைக்கிறது.  இங்கு முதலில் விற்றுவிட்டு பின்பு வாங்குவதால், இத்தகைய வியாபாரத்தை ‘ஷார்ட்’ என்று சொல்லுவோம்.

இதுவரை நாம் பார்த்த முதலீடு மற்றும் வியாபர செயல்பாடுகளை நாம் பங்குச் சந்தையில் கேஷ் மார்க்கெட் என்று சொல்லும் பகுதியின் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

அது என்ன சார் கேஷ் மார்கெட்? என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி ஓடலாம்.

இதை தமிழில் ரொக்க சந்தை என்றும் அழைக்கிறோம்.  கேஷ் மார்கெட்டை நாம் தமிழில் உள்ள ஒரு வழக்கு வாக்கியத்தை உபயோகித்து விளக்கலாம்.  அதாவது, கையில காசு வாயில தோசை.   இப்ப உங்களுக்கு நல்லா தெரியுமே, எவ்வளவு பங்கு வாங்குவதாக இருந்தாலும், முழுசா காசு கொடுத்துதான் வாங்கனும்.
அட... அப்படினா காசு கொடுக்காமக்கூட வாங்கலாமா? ஒரு நமட்டு சிரிப்புடன் நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
அப்படி எல்லாம் யோசிக்ககூடாதுங்க.  நான் சொன்னது முழுசா காசு கொடுத்து வாங்கவேண்டிய இடம் கேஷ் மார்க்கெட்டு, முழுசா காசு கொடுக்காம, கொஞ்சமாக கொடுத்து வர்த்தகம் பண்ற இடம் இன்னொரு மார்க்கெட்டு.

அது என்ன இன்னொரு மார்கெட்டு?

அதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் பார்க்கலாமா?

ஸ்டேட் பேங்க் பங்கு இப்போது ரூ.2425 இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.  இன்னும் 10 நாட்களில் அது ரூ.2750  என்ற விலையை எட்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
அப்ப என்ன செய்வீங்க?

ஸ்டேட் பேங்க் ஒரு பங்கு ரூ.2425  வீதம், உங்களுக்கு எத்தனை பங்கு வேண்டுமோ அத்தனை பங்குகளை வாங்குவீர்கள்.  இந்த எடுத்துக்காட்டில், நீங்கள் வாங்க நினைக்கும் எண்ணிக்கையை 125 என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், நீங்கள் முதலீடு செய்யவேண்டிய தொகை 2425 x 125 = ரூ.303125/-
ஒருவேளை நீங்கள் ரூ.303125/-க்கு பதிலாக அதில் 10% பணம் கட்டி, அதாவது, ரூ.30312 மட்டும் கட்டிவிட்டு 125 ஸ்டேட் பேங் வாங்கலாம் என்று நான் சொன்னால், உங்களுக்கு விருப்பம் உண்டா இல்லையா?
உங்களுக்கு உள்ளே என்ன ஓடுது?  பேஷா.... பேஷா.... அப்படிதானே?

கூடவே உங்களுக்கு இன்னொரு கேள்வியும் ஓடனுமே.  அதாவது, ஒரு 10% மட்டுமே கொடுத்துட்டு, மொத்தமா வாங்கலாம்னு சொல்றாங்க?  கூடவே ஏதாவது கன்டிஷன் இருக்கனுமே?
ம்....ம்.... ம்....   நீங்க நினைக்கிறது ஓரளவிற்க்கு கரெக்ட்தாங்க.  இதில் ரெண்டு கன்டிஷன் இருக்குது.  ஒன்னு, நீங்க 10% பணம் கட்டி ரூ.303125 மதிப்புள்ள ஸ்டேட் பேங் வாங்கின பிறகு, வாங்கின விலையான ரூ.2425க்கு கீழ போச்சினா, உதாரணத்திறக்கு 2375க்கு போச்சினா, நீங்க இறங்கிய தொகை ரூ.50 x 125 எண்ணிக்கை = ரூ.6250 உடனே கட்டனும். இப்படி தினம் தினம் எவ்ளோ இறங்குதோ, அவ்ளோ தொகைய 125ஆல் பெருக்கி அந்த தொகைய கட்டனும். 
எவ்ளோ நாளுக்கு இப்படி கட்டனும்?

இந்த மாதிரி இறங்க இறங்க, நீங்க அதை விக்கறவரைக்கும் அல்லது, அனுதிக்கப்பட்ட கால அளவு வரை கட்டனும்.(அந்த மாதத்தின் கடைசி வியாழக்கிழமை வரை)
கட்டின பணத்தை திருப்பி கொடுக்கமாட்டாங்களா?
கொடுப்பாங்க, பங்கின் விலை ஏற ஏற அந்த பணத்தை திருப்பி கொடுப்பாங்க.

அப்ப லாபம் வந்தா?

அதையும் கொடுப்பாங்க.  இப்ப ஸ்டேட் பேங்க் பங்கை ரூ.2425 வாங்கினீங்க. அது ரூ.2375-க்கு வந்த பிறகு, இறங்கமடைந்த ரூ.50 x 125 = ரூ.6250 கட்டினீங்க இல்லையா. 
அதுவே மீண்டும் ரூ.2425 க்கு வந்தா, உங்க ரூ.6250 திரும்ப உங்க கணக்கிற்கே வந்துடும்.  பிறகு ரூ.2475 அப்படின்னு அடுத்த நாள் மேலே ஏறினா, உங்களுக்கு ரூ.50 x 125 = ரூ.6250 உங்க கணக்குக்கு வந்துடும். இப்படியே ஏற ஏற, எவ்வளவு ஏறுதோ அவ்வளவு x 125 உங்களுக்க லாபமா வரும்.
இது என்னா மெத்தேடுங்க?

இதுக்கு பேருதான் எம்.டி.எம். என்று சொல்வார்கள். மார்க்ட் டு மார்கெட் லாஸ் என்று. விலை நீங்கள் வாங்கியதைவிட கீழே போகும்போதும், மார்க்ட் டு மார்கெட் பிராஃபிட் என்று விலை நீங்க வாங்கியதைவிட அதிகமாக போகும்போதும் சொல்லுவார்கள்.

இந்த வகையான வியாபாரத்தை ஃயூச்சர்ஸ் வியாபாரம் என்று அழைப்பார்கள்.
ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தில் சாதகம் என்ன, பாதகம் என்ன?

சாதகம் –
*     குறைவாக காசை கொடுத்து அதிகமான மதிப்பிற்க்கு வாங்குகிறோம்.
*    லாபம் என்று வந்தால், அதிக லாபம் வரும்

பாதகம் –
*     எப்படி அதிக லாபம் வரும்னு சொல்லுகிறோமோ அதுபோல், அதிக நட்டமும் வரும்.
*    வாங்க வேண்டிய பங்குகளின் எண்ணிக்கையை ஸ்டாக் எக்சேஞ் நிர்ணயம் செய்யும்.  நீங்கள் குறைக்க முடியாது, கூட்ட வேண்டுமானல், அதன் மல்டிபுல்ஸ் என்று சொல்லும் வகையில், 125 + 125 என்றுதான் கூட்ட வேண்டும்.  இதைத்தான் லாட் சைஸ் அல்லது கான்டிராக்ட் சைஸ் என்று சொல்லுவார்கள்.
கால அளவு.

ஃப்யூச்சர்ஸ் வியாபரத்தில் சாதகம் மற்றும் பாதகத்தை தாண்டி, இன்னும் ஒரு முக்கிய அம்சம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  அது நாம் வாங்கிய பங்குகளையோ அல்லது பொருட்களையோ எத்தனை காலம் வைத்திருக்கலாம் என்பது.  மேலே ஒரு இடத்தில், நான் மாதத்தின் கடைசி வியாழக்கிழமைவரை என்று என்று சொல்லியிருந்தேன் அல்லவா!  அதைத்தான் முடிவுநாள் அல்லது எக்ஸஃபயரி நாள் என்று சொல்லுவார்கள்.  நடப்பு மாதத்தின் கடைசி வியாழக்கிழமை என்பது முதல் சீரிஸ் அல்லது வரிசை என்று சொல்லலாம். பங்குச்சந்தையில் இது போல், எப்போதும் மூன்று சீரிஸ் அல்லது வரிசை அல்லது மாத கால வியபாரம் நடக்கும்.  ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தில், நடப்பு மாதத்தில் வியாபாரம் செய்தால், நடப்பு மாத கான்டிராக்ட் என்று சொல்லுவோம்.

இன்னும் கூடுதல் காலம் நாம் வைத்திருக்க நினைத்தால், அடுத்த மாத கான்டிராக்ட்டை இப்போதே வாங்கலாம்.  அது விலை சற்று கூடுதலாக இருக்கும்.  மேலும், உங்களை போல் எத்தனைபேர் அடுத்த மாத கான்டிராக்டை வாங்குவார்கள்.   நடப்பு மாதத்தை ஒப்பிட்டு பார்த்தால், மிக்குறைவாகத்தான் இருப்பார்கள்.  எனவே அதில் வியாபாரும் கொஞ்சம் குறைவாகத்தான் நடக்கும்.

மேலும் ஒரு வியாபாரத்திற்க்கும் அடுத்த வியாபாரத்திற்க்கும் இடைவெளி கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம்.  இது தினசரி வர்த்தகருக்கு நல்லதல்ல.  எனவே தினசரி வர்தகர்கள் நடப்பு மாதத்தில் வியாபாரம் செய்வது நல்லது.

இப்ப கமாடிட்டிக்கு வருவோமா?

இந்த மாதிரி, அதிகம் லாபம் அல்லது அதிக நட்டம் கொடுக்ககூடிய வியாபார முறையான ஃப்யூச்சர்ஸ் வர்த்தக முறையில்தான், கமாடிட்டி வியாபாரம் செய்யவேண்டும்.

அடுத்து தங்கத்தில் வியாபாரம்

http://www.vikatan.com/personalfinance/article.php?aid=8038

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP