Powered by Blogger.

பெண்டுலம்

Friday, July 4, 2025

பெண்டுலம் அதற்கும் உயிருண்டு

பெண்டுலத்தைச் செயல்படுத்துவது மந்திர மாயம் எதுவுமில்லை. அதன் செயல்பாடு விஞ்ஞான விதிகளுக்கு உட்பட்டதுதான். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும், உயிருள்ளவைகளும், உயிரல்லாதவைகளும், அடிப் படையில் ஒரே தன்மையினைக் கொண்டவைதான். அனைத்துமே அணுக்களால் (atoms) ஆக்கப்பட்டவை. ஒவ்வொரு அணுவுக்கும் நியூக்ளியஸ் என்கிற மையம் உண்டு. அதைச் சுற்றிலும் எலக்ட்ரான்கள் ஒரு செகண்டுக்கு 1,86,000 மைல் வேகத்தில் சுழல்கின்றன. மிகச் சிறிய அணுவுக்குள் இந்த வேகத்தில் எலக்ட்ரான்கள் சுழல்வதை கற்பனை செய்வதற்கே ஒரு விசேஷ ஆற்றல் வேண்டும். நம்முடைய உடலிலுள்ள அணுக்கள் ஆனாலும், செடி, கொடி, தாவரங்கள், ஏனைய ஜடப் பொருட்கள் அனைத்திலும் உள்ள அணுக்கள் ஆனாலும் ஒரே அமைப்பைக் கொண்டவை. எனவே பிரபஞ்சத் திலுள்ள அனைத்துப் பொருட்களும் அடிப்படையில் ஒரே தன்மையானவை என்பது தெளிவாகிறது. இந்தத் தன்மைதான் ஒன்றை இன்னொன்றுடன் தொடர்பு படுத்துகிறது.

வெளித் தோற்றத்துக்கு இந்தத் தொடர்பு தெரியாமல் போகலாம். நாம் ஏற்படுத்துகின்ற ஒவ்வொரு அதிர்வும் (Vibration) பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கிறது

source:

ஆக்கபூர்வ சிந்தனையின் அற்புத ஆற்றல்கள்

 கணேசன். பி சி

Read more...

கருப்பு பெட்டி' ரகசியம் ..

Monday, June 16, 2025

 கருப்பு பெட்டி' ரகசியம் என்ன...

இந்திய விமானத்தின் பின்பகுதியில் 'கருப்பு பெட்டி' (பிளாக் பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். இதில் 'பிளைட் டேட்டா ரிகார்டர்', 'காக்பிட் வாய்ஸ்' என இரு பகுதி இருக்கும். ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரென் இதை கண்டுபிடித்தார். இது கருப்பு நிறத்தில் இருக் காது. எளிதில் தெரியும் விதமாக ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். விமானம் புறப்பட்டது முதல் தரையிறங்கும் வரையிலான புள்ளி விவரங்கள், கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் பேசியது இதில் பதிவாகியிருக்கும்.

இது 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும். துருப்பிடிக்காத இரும்பு அல்லது டைட்டா னியம் உலோகத்தால் ஆன நினைவுத்திறன் பகுதி (மெமரி) இருக்கும். 25 மணி நேர தகவல்களை பதிவு செய்யும். பேட்டரி 6 ஆண்டு நீடித்திருக் கும். 30 நாட்களுக்கு ரேடியோ சிக்னல் வரும். நீரில் 20 ஆயிரம் அடி ஆழத்திலும் வேலை செய்யும்.

Source:-

தினமலர்.

Read more...

தைராய்டு சுரப்பி*

Sunday, June 8, 2025

 தைராய்டு பரிசோதனைகள், தீர்வுகள்...

தைராய்டு சுரப்பி*

தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி. தொண்டையில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பியாகும். இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது, இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. உடலிலுள்ள அயோடினில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தைராய்டில்தான் இருக்கிறது. உணவின் மூலம் கிடைக்கக்கூடிய அயோடினில் பற்றக்குறை ஏற்பட்டால் தைராய்டு குறைபாடு ஏற்படும். 

தைராய்டு ஹார்மோன்கள்* 

மூளையிலுள்ள `ஹைப்போதாலமஸ்’ என்றழைக்கப்படும் பகுதிதான் தைராய்டைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹைப்போதாலமஸ், தைராய்டு ஹார்மோன்களுக்கான தேவை இருப்பதைக் கண்டறிந்தால், மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் கொடுக்கும். இந்தச் சுரப்பி ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்படி தைராய்டுக்கு சிக்னல் கொடுப்பதற்காக, தைராய்டு சுரப்பித் தூண்டு ஹார்மோனை (TSH) இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் TSH மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் தைராய்டின் செயல்பாட்டையும் நம்முடைய உடல்நிலையையும் பற்றி டாக்டர்களால் சொல்ல முடியும்.  


*தைராய்டுக்கு காரணங்கள்*

* உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது.

* வாய் திறந்து தண்ணீர் அருந்துவது முக்கிய காரணம்.

* தைராய்டு பிரச்னைக்கு, உணவில் அயோடின் சத்துக் குறைவது,  உடல்ரீதியான அல்லது மனரீதியான அழுத்தம், மரபியல் குறைபாடுகள், தொற்றுகள், நோய் சுயதடுப்பாற்றல்  (Autoimmune disease), பல்வேறு நோய்களுக்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகள் ஆகியவை காரணமாக இருக்கலாம். 


* தைராய்டு வீங்கியிருப்பது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அந்த வீக்கம் தைராய்டு சுரப்பி முழுவதும் பரவியிருக்கலாம் அல்லது கட்டிகள் வடிவில் இருக்கலாம். பொதுவாக, அது சாதாரண வீக்கமாக இருக்குமென்றாலும் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியது முக்கியம்; ஏனென்றால், சில சமயங்களில் அது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கு அறிகுறியாகவும் இருக்கலாம். 


* பொதுவாக, சரிவர செயல்படாத தைராய்டு மிகக் குறைவாகவோ மிக அதிகமாகவோ ஹார்மோன்களை உற்பத்தி செய்யலாம். அதிகமாக உற்பத்தி செய்வது, மிகைநிலை தைராய்டு - ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism) என்றும் குறைவாக உற்பத்தி செய்வது, குறைநிலை தைராய்டு  - ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) என்றும் அழைக்கப்படுகின்றன. 


*குறை தைராய்டு அறிகுறிகள்*


* எப்பொழுதும் சோர்வு, அதிகத் தூக்கம்.

* தாங்க முடியாத குளிர்.

* மெத்தனம், செயல்கள் மந்தமாகும்.

* நாடி துடிப்பில் வேகம் குறைவு.

* முகம் வீங்கும்.

* வறண்ட சருமம்.

* குரலில் மாற்றம்.

* முறையற்ற மாதவிலக்கு, அதிக இரத்த போக்கு.

* ஞாபக மறதி.

* பசியின்மை ஆனால், உடல் எடை கூடுதல்.

* மன அழுத்தம்.

* வறண்ட முடி, இளநரை, முடி கொட்டுதல்.

* மூட்டு வலி.

* இரத்தத்தில் கொழுப்பு அதிகம்.

என பல அறிகுறிகள் அடுத்தடுத்து வரும். 


*தைராய்டு ஹார்மோன் குறைவாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை*


* சிறு தானியங்கள்

* காலி பிளவர்

* ப்ரோகலி

* பசலை கீரை

* புகையிலை

* மது

* சோயா

* க்ளூடன் உணவு

* செயற்கை சர்க்கரை

* அதிக மாவு சத்து

* துரித உணவு ஆகியவை ஆகும்.


*மிகைத் தைராய்டு அறிகுறிகள்*


* அதிக தாகம்

* அதிக பசி

* சூடுபொறுக்க முடியாமை

* நாடித்துடிப்பு அதிகம்.

* அசதி

* நடுக்கம், விரல்கள் நடுக்கம்.

* எரிச்சல்

* அதிக வியர்வை

* எடை குறைதல்

* தசை பலவீனம்

* முறையான தூக்கமின்மை

* அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்;

* கண் பார்வை தொந்தரவு

* முறையான மாதவிடாய் இன்மை

* உடலில் அரிப்பு ஆகியவை ஏற்படும்.

* தைராய்டு ஹார்மோன் அதிகம் இருந்தாலும் மனச்சோர்வு, இருதய பாதிப்பு ஆகியவை ஏற்படும். 

https://chat.whatsapp.com/LWjLAyXUiWA0JEvkwHt0yE

*தைராய்டு ஹார்மோன் அதிகம் இருக்கும் பாதிப்பு உடையவர்கள் தவிர்க்க வேண்டியது*


* காபி, டீ போன்றவை

* அடர்ந்த பால்

* அதிக சர்க்கரை

* சிவப்பு அசைவம்

* அலர்ஜி தருபவை

* வனஸ்பதி போன்ற அடர்ந்த கொழுப்பு

* அயோடின் அதிகமானவை

* கடல் உணவு

* ஆல்கஹால் ஆகியவை ஆகும். 


*யார்யார் பாதிக்கப்படுவார்கள்* 


*தைராய்டு பாதிப்பு உடையவர்களில்*


* 10-ல் 8 பேர் பெண்களாக இருக்கின்றனர். 


* நீரிழிவு பாதிப்பு உடையவர்களில் 20- சதவீதம் நபர்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்படுகின்றது. 


* தைராய்டு நோய் படிப்படியாகவும் புலப்படாத விதத்திலும் ஏற்படலாம்; ஆகவே, பல வருடங்களாக அந்த நோய் இருப்பது ஒருவருக்குத் தெரியாமல் போகலாம், இதற்கும் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் குணம் பெறலாம்.


*தைராய்டு பரிசோதனைகள்*

• பரிசோதனை வெறும் வயிற்றில் செய்யப்படும்.


• பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தியிருக்கக் கூடாது; புகைபிடித்திருக்கக் கூடாது. 


• அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை தெரிந்து கொள்ள முடியும். 


• இப்போது ஐசோடோப் ஸ்கேன் (Isotope Scan) பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை  துல்லியமாகத் தெரிவிக்கிறது. 


• வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி, செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறியமுடியும். 


*யாருக்கெல்லாம் பரிசோதனை அவசியம்..?*


* குறை, மிகை தைராய்டு பிரச்சனை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள், இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


* தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்னை உள்ளவர்கள் தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இதயநோய்க்காக அமியோடாரோன் (Amiodarone) மாத்திரையை உட்கொள்பவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


*என்ன பரிசோதனை* 


வழக்கமான இரத்தப் பரிசோதனைகளுடன், இரத்தத்தில் T3, T4, TSH, FT3, FT4, Anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். 


*பொதுவாக* 


• T3 - 0.7 - 2.04 ng/dL என்ற அளவிலும், 

• T4 - 4.4  - 11.6 ng/dL என்ற அளவிலும் 

• TSH - 0.28 - 6.82 IU/dL என்ற அளவிலும் 

• FT3 - 1.4 - 4.2 pg/dL, 

• FT4 - 0.8 - 2 ng/dL இருக்க வேண்டும். 


இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் உட்கொள்ளும் மருந்துகள், கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் உட்கொள்ளும் மருந்து விவரத்தையும், கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். 


*முடிவுகள் எப்படி இருக்கும்?*


• குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும். 


• மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும். 


• இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள். 


• சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும். 


• சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும். 


• FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம். 


• குறை தைராய்டு உள்ளவர்களுக்கு இரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும். 


*தைராய்டு சிகிச்சை முறை*


தைராய்டு குறைபாட்டை சரி செய்யும் சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம். 8-10 மணி நேர தூக்கம் மிகவும் உதவும். அதிகம் செல்போன் பயன்படுத்தாது இருப்பது நல்லது. 


*தைராய்டை கட்டுக்குள் கொண்டு வர உதவும் உணவுகள்...* 


• பசலைக் கீரை

• முட்டை மற்றும் பால் பொருள்கள்

• பழுப்பு நிற அரிசி

• பார்லி

• தக்காளி

• உருளைக்கிழங்கு

• பூண்டு

• காளான்

• நாட்டுக்கோழி

• ஆட்டுக்கால் சூப். 


*சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா*


நமது பாரம்பர்ய சித்த மருத்துவ முறையிலும் தைராய்டு பிரச்னைக்கு தீர்வு உண்டு. தைராய்டு பிரச்னையைச் சரிசெய்ய முதலில் மனஅழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். 


இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முதலில் மன அழுத்தத்துக்குத் தகுந்த சிகிச்சை மேற்கொண்டே தைராய்டு பிரச்னையை சரிசெய்ய வேண்டும். பிராணயாமம், யோகாசனம் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.


*ஆரம்பகட்ட தைராய்டு பிரச்னைக்கு...*


* சீதாமர இலைகளில் நான்கைந்தை எடுத்து, ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அதில் இலைகளைப் போட்டு, அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு, காலை, மாலை இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் அருந்தலாம். தைராய்டு அளவைச் சீராக்கும் அற்புத மருந்து இது. 


* தைராய்டைப் போக்கக்கூடிய அற்புத மருத்துவ குணம் எலுமிச்சம்பழத்திற்கு உண்டு, காலை வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சம் பழத்தை  தோலோடு வெட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி  குடிங்கள் இனிப்பு உப்பு எதுவும் சேர்க்க கூடாது தைராய்டு சமன்படும்.


• சிறு பழமாக தேர்வு செய்து போடவும் பாதி பழம் இன்று மீதி நாளை  என்று ஜூஸ் போடக்கூடாது. 


•  மதிய உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன் எலுமிச்சம் பழத்தை தோலோடு ஜூஸ் போட்டு குடிங்கள்.

மேலும் தைராய்டின் தன்மைக்கேற்ப, மருத்துவரின் அறிவுரைப்படி சில சூரணங்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். 


ஆக, தைராய்டு மிகப்பெரிய பிரச்னை அல்ல. நம் மனதை அமைதியாகவும் தெளிவாகவும் வைத்துக்கொண்டாலே தைராய்டு பிரச்னையை தீர்க்கலாம். 


*தைராய்டு பிரச்னைக்கான உணவுமுறை...*


தைராய்டு நோயாளிகள் நோய்க்கான  முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது. அப்படியான உணவு வகைகள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம். 


*எந்த ஊட்டச்சத்து ஹைப்போ தைராய்டுக்கு நல்லது?*


* அயோடின் நம் உடலின் மெட்டபாலிசத்துக்கு அவசியம். தைராய்டு சுரப்பதற்கும் மிகவும் தேவை.  கடல் உணவுகள், பால், தயிர், சீஸ், யோகர்ட்(Yogurt), முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கீரை வகைகள், வேர்க்கடலை, பருப்பு வகைகள் போன்றவற்றில் அயோடின் தேவையான அளவு உள்ளது. 


* செலினியம் என்ற கனிமமும் தைராய்டு குறைபாட்டை சரி செய்யும். செலினியம் நிறைந்த உணவுகள் முட்டை, மீன், இறைச்சி, காளான், ஓட்ஸ், கொட்டை வகைகள், நட்ஸ், செலினியம் சேர்க்கப்பட்ட உணவுகள் (Enriched Selenium goods), கோழிக்கறி, தானியங்கள், சீஸ், பிரௌன் அரிசி, சூரியகாந்தி விதை, பீன்ஸ், கீரை, பால், யோகர்ட், வாழைப்பழம், பூண்டு போன்றவற்றில் செலினியம் நிறைந்துள்ளது. 


* துத்தநாகம்(Zinc) தைராய்டை ஆக்டிவேட் செய்யும். அதாவது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கும். இறைச்சி வகைகள், மட்டி (Shellfish), பருப்பு வகைகள், விதைகள், நட்ஸ், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், முட்டை, தானியங்கள், டார்க் சாக்லேட் போன்றவற்றில் துத்தநாகம் நிறைந்துள்ளது. 


*ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்* 


* பனீர், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீச் பழம், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ், விதைகள் போன்றவற்றை ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.  


* இதேபோல் க்ளூட்டன்(Gluten) என்கிற புரத உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கோதுமை மற்றும் பார்லியில் க்ளூட்டன் போன்றவை புரத உணவுகள், பிரெட், பாஸ்தா போன்றவையும் க்ளூட்டன் உணவுகளே! 


* அயோடின் அதிகம் உள்ள உணவுகள், நைட்ரேட்ஸ் அதிகம் இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளரிக்காய், பூசணிக்காய், கேரட், Gluten உணவுகள், சோயா மற்றும் சோயா பொருட்கள். கஃபைன் (Caffeine) நிறைந்த டீ, காபி, சோடா, சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 


*ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்*


* அயோடின் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக உப்பு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, வெள்ளைக்கரு சாப்பிடலாம். மேலும் ஃப்ரெஷ் பழங்கள், உப்பு இல்லாத நட்ஸ் மற்றும் பட்டர், உப்பு இல்லா பிரெட், பால் சார்ந்த பொருட்கள், ப்ரோக்கோலி, முளைகட்டிய தானியங்கள், காலிஃப்ளவர், கடுகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். 


* இரும்புச்சத்து குறைவாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு வரும். எனவே நட்ஸ், முட்டை, கோழி கறி, மீன், கீரை, முழுதானியங்கள், பீன்ஸ், விதைகள் போன்ற இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செலினியம் தைராய்டு ஹார்மோனை சரி சமமாக வைத்திருக்க உதவும். 


* எனவே கொட்டை வகைகள், நட்ஸ், மீன், செலினியம் சேர்க்கப்பட்ட உணவுகள், கோழிக்கறி, தானியங்கள், சீஸ், முட்டை, பிரௌன் அரிசி, சூரியகாந்தி விதை, பீன்ஸ், மஷ்ரூம், கீரை, பால், யோகர்ட், வாழைப்பழம், பூண்டு போன்றல் செலினியம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். 


* இதேபோல் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைக்க துத்தநாகம்(Zinc) உதவும். எனவே, Zinc நிறைந்த இறைச்சி வகைகள், மட்டி(Shellfish), பருப்பு வகைகள், விதைகள், நட்ஸ், பால் மற்றும் பால்i சார்ந்த உணவுகள், முட்டை, தானியங்கள், போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


Thanks

Source - வாழ்வை  வாழ்வோம் 

 channel on WhatsApp:

Reflexology,Yoga & Naturopathy 

Alternative Therapist-Jai Satheesh

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156, 9284964104*  

https://chat.whatsapp.com/BH5o0oIEtY252YF5MW8Zym 



Read more...

செம்மொழி

Tuesday, June 3, 2025

 செம்மொழி என்பது ஒரு மொழியில் இலக்கிய பழமை செறிந்திருப்பதன் அடிப்படையில் தரப்படும் சிறப்பு பெருமையாகும். செம்மொழியாக ஒரு மொழியை தேர்வு செய்ய அதன் இலக்கிய படைப்புகள் வளம் மிகுந்தவையாகவும், பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளை சாராததாகவும் இருக்கவேண்டும். மேலும் அந்த மொழி 1500 முதல் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழமையான இலக்கியங்களை கொண்டிருக்கவேண்டும். உலக மொழிகளில் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, பாரசீகம் ஆகிய மொழிகள் இத்தகைய தகுதிகளை பெற்றிருக்கின்றன. 2004-ம் ஆண்டு ஜூன் 6-ந்தேதி அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் செம்மொழியாக அறிவித்து தமிழுக்கு மகுடம் சூட்டினார். இந்த அளப்பரிய சாதனைக்கு சொந்தக்காரர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல. இதுமட்டுமல்ல 2010-ம் ஆண்டு கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை 5 நாட்கள் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார். அந்த மாநாட்டுக்காக கலைஞர் கருணாநிதி எழுதி ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து புகழ்மிக்க பாடகர்கள் பாடிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் தமிழ் உள்ளளவும் தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பிக்கொண்டே இருக்கும்.

Daily thanthi .

Read more...

நிம்மதி

Thursday, October 31, 2024

கீழே உள்ள கட்டளைகளை ஏற்றால் நிம்மதியாக வாழலாம்

அதிகாலையில் எழு

ஆண்டவரை மறக்காதே

இல்லை என சொல்லாதே

ஈவிரக்கம் கொள்

உதவி செய்யப் பழகு

ஊர் போற்ற வாழ்

எண்ணத்தால் உயர்ந்திடு.

 ஏற்றம் பெற உழை.

ஐம்புலனை கட்டுப்படுத்து

ஒற்றுமையே பலம்.



பாக்கியசாலி

நோயின்றி வாழ்பவர்

கவலை இல்லாதவர்

மகிழ்ச்சியுடன் உதவுபவர் இந்த பண்புகளைக் கொண்டவர் பாக்கியசாலி.

Read more...

தோலின் பணி

Monday, July 29, 2024

 தோலின் பணி: உடலில் உள்ள கழிவு உறுப்புகளில் மிகப் பெரியது தோல் அது உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலுக்கு அழகைத் தருகிறது. தோலில் கோடிக்கணக்கான வியர்வைத் துளைகள் உள்ளன. இவற்றின் வழியாக உள்ளுறுப்பு களின் கழிவுகள் வியர்வையாக வெளியேறுகின்றன.


தோல் பாதுகாப்பு: வியர்வைத் துளைகள் வழியாக வெளி யேறும் நீரும் சுற்றுப் புறத் தூசிகளும் சேர்ந்து தோலில் அழுக்காகப் படிந்து வியர்வைத் துளைகளை அடைத்து விடும். எனவே, தோலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கு உதவுவது குளியல். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. தொடர்ந்து வெந்நீரில் நல்லதல்ல. குளிப்பது


அருவி நீரில் குளிப்பது அற்புதம். ஆற்று நீரில் குளிப்பது சிறப்பு. குளம், கிணறுகளில் குளிப்பது நன்று. வீட்டில் குளியலறையில் குளிப்பதும் சரியே! எந்த வேளையில் எங்குக் குளித்தாலும் சரி. தலையுடன் சேர்த் திதுக் குளிக்க வேண்டும்.


தலையில் தண்ணீர் ஊற்றி, உடம்பு முழுவதும் நன்றாக நனைத்து, தண்ணீரில் உடம்பு சிறிது நேரம் ஊறும்படி வைத்திருக்க வேண்டும். பின்னர் கை விரல்களாலோ தடித்த துணியாலோ உடம்பைத் தேய்க்க வேண்டும். கால் முதல் வயிறு வரை கீழிருந்து மேலாகவும், தலையிலிருந்து கழுத்து வரை மேலிருந்து கீழாகவும் தேய்க்க வேண்டும். முதுகு, விலாப் புறங்களைத் தேய்க்கும் போது இதயத்தை நோக்கித் தேய்க்க வேண்டும். பின்னர் தலையில் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும்.

Read more...

முதன்மையான காயத்ரி மந்திரம்

Tuesday, August 29, 2023

 முதன்மையான காயத்ரி மந்திரம்

படைப்புக் கடவுளான பிரம்மதேவன், புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் நடத்திய யாகத்தின் போது, தன்னுடைய சக்தியால் காயத்ரி தேவியை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. இந்த காயத்ரி தேவி 5 முகங்களையும், 10 திருக்கரங்களையும் கொண்டவள். காயத்ரி மந்திரம் அனைத்து மந் திரங்களிலும் மேலானதாக விளங்குகிறது. என வேதான் பகவத் கீதையில் கிருஷ்ணர், 'நான் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறுகிறார்.

'காயத்ரி' என்பதற்கு 'தன்னை ஜபிப்பவர்களை காப்பாற்றுவது’ என்று பொருள். 'ஓம் பூர் புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந ப்ர சோதயாத்' என்ற காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப் பவர்களுக்கு, அனைத்து விதமான ஆபத்துகளும் நீங்கும். பயம் என்பதே அறியாதவர்களாக அவர்கள் மாறு வார்கள். காயத்ரி மந்திரம் ஜபிக்கப் பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட் டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். இந்த மந்திரத்தில் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்தில் இருந்தும், 'பர்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜூர் வேதத்தில் இருந்தும், 'தியோயோந ப்ரசோதயாத்' என்ற வார்த்தை சாம வேதத்தில் இருந்தும் எடுக்கப்பட்டு ஒரே மந்திரமாக அருளப் பட்டுள்ளது.

Read more...

நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்

 நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்


சூரியன் காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சனி காயத்ரி

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ சனிப் ப்ரசோதயாத்

புதன் காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புதப் ப்ரசோதயாத்

கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

சந்திரன் காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்ம விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

 ராகு காயத்ரி

ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்

குரு காயத்ரி
 
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருப் ப்ரசோதயாத்

சுக்ரன் காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

ஆன்மீக மலர் தினத்தந்தி.

Read more...

மனம் என்னும் மாமருந்து!

Sunday, August 20, 2023

 மனம்  என்னும் மாமருந்து!


அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்

ஒன்றே ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது..

எண்ணங்களில் சரி, தவறு கிடையாது. அவற்றை உருவாக்குவது நாம் இல்லை. எனவே, அவற்றுக்காக நாம் வருந்தவோ பொறுப்பேற்றுக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லை.

எல்லாம் சரிதான், இப்படி எண்ணம் - சிந்தனைக்கான வேறுபாடுகளை புரிந்துகொண்டு, அவற்றைக் கையாள்வதால் என்ன பயன்? அதற்கும் நோய்கள் குணமாவதற்கும் என்ன தொடர்பு?

இதனை புரிந்துகொள்ள, நாம் இதுவரை பார்த்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

உடல் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ளும் தன்மை படைத்தது. நம்முடைய முறையற்ற வாழ்க்கை முறையால் நாமே உருவாக்கிக் கொள்ளும் எல்லா நோய்களையும் உடலால் குணப் படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு குணமாக்கும் முயற்சியைத்தான் பராமரிப்பு சக்தியின் பணிகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

உடலின் பராமரிப்பு சக்தி தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்ய வேண்டுமானால், நாம் அதன் பணிகளில் குறுக்கிடக் கூடாது. நாம் குறுக்கிடுவது என்பது உடலின் மூலமாகக் குறுக்கிடுவதையும்,

மனதின் மூலமாகக் குறுக்கிடுவதையும் குறிக்கிறது.

. இயற்கைக்கு மாறான எந்தவிதமான பழக்க வழக்கங்களால் நமக்கு தொந்தரவுகள் ஏற்பட்டதோ.. அதே பழக்கங்களை தொடர்வதும், உடல் வெளியேற்ற விரும்பும் கழிவுகளை அடக்கி வைக்க முயற்சிப்பதும் உடல் ரீதியான குறுக்கீடுகள் ஆகும்.

உடலை சமநிலையில் வைத்திருப்பதைப் போலவே மனதை சமநிலையில் வைத்திருப்பதும் பராமரிப்பு சக்தியின் மிக முக்கியப் பணியாகும். கோபம், துக்கம், கவலை, மகிழ்ச்சி, பயம்.. இவை அனைத்தும் உணர்ச்சிகளாக மாறும்போது மனம் சமநிலை தவறுகிறது. தொடர்ந்து மனச்சமநிலை பாதிக்கப்பட்டால், அதனை இயல்பிற்குக் கொண்டுவர பராமரிப்பு சக்தி அதிக அளவில் தன் ஆற்றலைச் செலவளிக்கிறது.

சாதாரணமாக உடலில் தோன்றும் ஒரு காயத்தை எவ்வித மருத்துவ உதவியும் இன்றி பராமரிப்பு சக்தி சில நாட்களில் ஆறவைக்கிறது. ஆனால், காயம் பற்றிய பயம் மனதில் தோன்றி மனச் சமநிலை குலையும்போது, காயத்தை குணமாக்க வேண்டிய பராமரிப்பு சக்தியின் ஆற்றல் பயத்தைப் போக்குவதற்காக செலவழிந்து விடுகிறது. சில நாட்களில் தானே குணமாகி இருக்க வேண்டிய காயம், பயம் என்னும் உணர்ச்சியால் நீடித்த காயமாக மாறுகிறது.

உடல் தன் இயல்பில் இயங்க வேண்டுமானால், மனமும் தன் இயல்பில் இயங்கவேண்டும். மனம் தன்னியல்பில் இருக்க வேண்டுமானால், நம் சிந்தனையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையை நாமே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

எண்ணத்தில் பயம் வருவது இயற்கை. எண்ணத்தில் எது வேண்டுமானாலும் வரலாம். அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. அவை அனைத்தும் உணர்வு நிலையில் இருப்பவை. அவற்றால் உடலுக்கோ, மனச்சமநிலைக்கோ கேடு ஏற்படுவதில்லை. ஆனால், எண்ணத்தில் தோன்றும் பயத்தை சிந்தனையில் அனுமதித்தால் மனச்சமநிலை குலைந்து பராமரிப்பு ஆற்றலை வீணாக்கும். நோய் இருப்பவர்கள், நீடித்த நோயாளியாக மாறுவார்கள். நோயற்றவர்கள், நோயை தாங்களே வரவழைத்துக் கொள்வார்கள்.

மனச்சமநிலை என்பது 'பாசிடிவ் தாட்' என்று சொல்லப்படும் நல்லெண்ணத்தைக் குறிப்பதில்லை. எண்ணத்தில் தோன்றும்

அனைத்தையும் ஏற்றுக்கொள்வதும், அவற்றுக்கு எதிராக போராடாமல் இருப்பதுமே மனச்சமநிலை ஆகும்.

ஒரே ஒருமுறை மனச் சமநிலையை அறிவு ரீதியாகப் புரிந்து கொண்டால், அது நிரந்தரப் புரிதலாக மாறி, எண்ணங்களைக் கையாளும் எளிய கலை நமக்குக் கைகூடுகிறது.

நாம் நூலின் துவக்கத்தில் பார்த்த, அற்புதங்கள் அனைத்தும் மனச்சமநிலையில் நிகழ்ந்தவை. உடலின் பணிகளில் மனம் குறுக்கிடாதபோது நடந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளும்போது 'நோசிபோ' என்னும் நாசமாக்கும் விளைவு தோன்றுகிறது. மன ஆற்றலையும் உடல் ஆற்றலையும் வீணடிக்கிறது.

நாம் மனதைப் புரிந்து கொண்டால் உடலைப் புரிந்துகொள்வது எளிது. ஏனென்றால், உடல்தான் மனமாகவும் இருக்கிறது. உடல், கண்ணுக்குத் தெரிகின்ற மனம். மனம், கண்ணுக்குத் தெரியாத உடல்!

மனதினுடைய திட வடிவம்தான் உடல். உடலினுடைய ஆற்றல் வடிவம்தான் மனம். ஒன்றைச் சீர்குலைத்தால் மற்றொன்றும் சீர்குலையும்.

இயற்கை விதிகளைப் பின்பற்றினால் உடல் நலத்தோடு வாழமுடியும். எண்ணங்களைக் கையாளத் தெரிந்தால் மன பலத்தோடு வாழமுடியும். ஏனெனில், நலம்தான் பலம்.

புற உலகும் அக உலகும் தன்மையில் வேறு வேறானவை. புற உலகில் போராட்டமும், அக உலகில் நீரோட்டமும் அவசியம். உடல் தன்னைக் காக்க போராடுகிறது. மனம் இயல்பில் இருக்க நீரோட்டத்தைப் போல இருக்க வேண்டும்.

இயல்பான மனதோடு வளமாக வாழ்வோம்.

Read more...

ஆன்லைன் மருந்து

Monday, June 12, 2023

 

ஆன்லைன் மருந்து


ஆன்லைனில் ஆர்டர் செய்தால் காய்கறி முதல் சாப்பாடு வரை அனைத்துமே வீடு தேடி வந்துகொண்டி ருக்கும்போது மருந்தை மட்டும் அனுமதிப்பதில் என்ன தப்பு? ஆன்லைனில் வாங்கும்போது தள்ளுபடி, கூடுதல் சலுகைகள் வேறு கிடைக்கின்றனவே என்று வாடிக்கை யாளர்கள் நினைக்கிறார்கள்.


மருந்து வணிகர்கள் சொல்வது நேரடி மருந்து வணிகத் தில் 7.25 லட்சம் மருந்துக் கடைகள், 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வணி கம் நடப்பதாக மருந்து வணிக அமைப்புகள் சொல்கின் றன. இவ்வளவு பெரிய வருமான-வேலைவாய்ப்பு தரும் கட்டமைப்பை ஆன்லைன் மருந்து வணிகம் சின்னா பின்னமாக்கிவிடும் என்பது மருந்து வணிக அமைப்புக ளின் குற்றச்சாட்டு. மருந்துக் கடைகள் மட்டுமல்லாமல், மருந்து விற்பனை பிரதிநிதிகளின் வேலையையும் இது பாதிக்கும்.

தூக்க மாத்திரை போன்ற ஒரு சில மருந்துகள் மட்டுமே, மருத்துவர் பரிந்துரை இல்லாததால் பார்மசிகளில் மறுக் கப்படுகின்றன. மிக பெரிய பாரம்பரிய நிறுவனங்கள் மட்டுமே மருந்துச்சீட்டு அடிப்படையில் மருந்துகளைத் தருகின்றன. தெரிந்த பார்மசி என்றால், எந்த மருந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கக் கூடிய நிலைமை உள்ளது. அரசு மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் இதை கண்காணிக்கின்றனவா என்பதிலும் தெளிவில்லை.


மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து அனுப்பி, ஆன்லைன் மூலம் மருந்தை பெறுவதில் பிரச்சினை ஏற்படும். எழுதப் பட்ட மருந்து கிறுக்கலாக உள்ளதால், ஆன்லைன் பார்ம சிகளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் கள். இது உண்மைதான். ஒரெழுத்து மாறுபாட்டில் நோய்க் கான மருந்து தலைகீழாக மாறலாம். வாடிக்கையாளருக் கும் மருந்துகளை பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காது.

அதேநேரம் மருத்துவர்கள் ஏன் கிறுக்கலாக எழுத வேண் டும் என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பிட்ட மருத்துவர்க ளுடன், சில பார்மசிகள் புரிதலை வைத்துக்கொண்டுள் ளன. அதனால்தான் இந்த மருந்து நிச்சயமாக அங்கே கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


அதேநேரம் ஆன்லைன் மருந்து விற்பனை வந்தால், மருந்துக் கடைகள் குறைந்துவிடும், அவசர தேவைக்குக் கூடப் பக்கத்தில் இருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதும் உண் மையே.

Source:-

தினத்தந்தி 

Read more...

கலப்பட தேனை கண்டறிவது எப்படி?

Friday, June 2, 2023

 கலப்பட தேன் கண்டறிதல்


உணவுப் பொருளில் கலப்படம் செய்பவர்கள் தேனையும் விட்டு வைக்கவில்லை. தேனிலும் சர்க்கரைப் பாகு கலந்து சிலர் விற்பனை செய் கின்றனர். சிலர் வெல்லப் பாகுவை தேன் என்று ஏமாற்றி விற்பனை செய்வதும் உண்டு. எனவே தேனில் கலப்படம் இருக்கிறதா? என்பதை கண் டறிய சில வழிகளை பின்பற்றலாம்.


* ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடும் போது, அந்த தேனை வெள்ளைத்தாள் உறிஞ்சாமலும், காகிதத்தில் மேலும் தேன் பரவாம லும் இருந்தால் அது அசல் தேன். காகிதத்தால் தேன் உறிஞ்சப்பட்டால் அது கலப்படத் தேன்.


* ஒரு டம்ளர் தண்ணீருக்குள் சில துளி தேனை விட்டால், அந்த துளி தேன் தண்ணீரில் கரையாமல் இருந்தால் அது அசல் தேன். தண் ணீரில் கரைந்தால் அது கலப்படத் தேன்.


* ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை தீப்பெட் டியில் உரசும் போது உடனே தீப்பற்றினால் அது அசல் தேன். தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்படத் தேன்.

Source :- 

தினத்தந்தி 




G

Read more...

Forex கற்றுக் கொள்ள

Tuesday, May 2, 2023

Forex தமிழில் கற்றுக் கொள்ள -learnforexintamil

 

Read more...

Astrology --ஜோதிடம்

Monday, May 1, 2023

 வகுப்பறை classroom 2007

ஜோதிடம் கற்றுக் கொள்ள .ஜோதிடம் சம்பந்தமான பாடங்கள்

Astrology -ஜோதிட பாடங்கள்  


Read more...

முதுகு தண்டுவட நரம்புகளுக்கும் பாடி உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு

Sunday, November 28, 2021

 Spine nerves correspondence to the body organs




Read more...

சமையல் எண்ணெயில்கலப்படம் உள்ளதா,,?

Tuesday, November 9, 2021

 ஏழாம் சுவை

கலப்படம் உள்ளதா சமையல் எண்ணெய்?

அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் பொருட்களில் மிகவும் முக்கியமானது, எண்ணெய். உங்கள் எண்ணெயிலும் கலப்படம் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?


பல ஆண்டுகளாக எண்ணெய் விலை மற்றும் அதன் தேவை அதிகரித்திருப்பதை அனைவரும் அறிவோம். இதுவே, சமையல் எண்ணெயில் கலப்பட அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


கலப்பட எண்ணெய், பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், 'சமையல் எண்ணெயின் தூய்மையை எவ்வாறு சரிபார்க்கலாம்' என்பதை விளக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.


அதில், ஒரு கிண்ணத்தில், நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை, 2 மி.லி. அளவு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் வெண்ணெயைச் சேர்க்க வேண்டும். எண்ணெயின் நிறம் மாறவில்லை என்றால், அது தூய்மையானது மற்றும் பயன்படுத்தப் பாதுகாப்பானது.


நிறம் சிவப்பாக மாறினால், எண்ணெய் தூய்மையற்றது மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று, அந்த வீடியோவில், எப்.எஸ். எஸ்.ஏ.ஐ. விளக்கியுள்ளது.

Siurce:- தினமலர்

Read more...

பச்சை மிளகாயில் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ளதா?

 பச்சை மிளகாயில்  உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ளதா?


எல்லா உணவும் நன்மை தான். பல்வேறு வகை காய், கனிகள், இறைச்சி முதலியவற்றை உண்ணும்போது, நுண்ணூட்டச் சத்து பரவல் கிடைக்கிறது. பச்சை மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகியவை செறிவாக உள்ளன. இதில் காப்சாய்சின் (Capsaicin) என்ற வேதிப்பொருள், நாக்கு அல்லது தோலின் மீது பட்டால், அங்கே உள்ள வெப்பம் உணரும் செல்களைத் தூண்டி, 'காரம்' எனும் சுவையை ஏற்படுத்துகிறது. பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது, உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

Source:- தினமலர்

Read more...

ஐசோகிராம்(isogram) என்பது என்ன?

ஐசோகிராம் (isogram) என்பது

 Cat, Deer என்கிற

ஆங்கிலச் சொற்கள்

இருவேறு விலங்குகளைக் குறிக்கின்றன. ஆனால், இவற்றினிடையே இன்னொரு முக்கியமான வேறுபாடும் உண்டு: Cat என்பது Isogram சொல். Deer என்பது Isogram சொல் இல்லை.


அதென்ன ஐசோகிராம் ? ஆங்கிலத்தில் ஒரே எழுத்து மீண்டும் திரும்ப வராத சொற்களை ஐசோகிராம் என்கிறார்கள். Cat என்பதில் C, A, T என்ற வெவ்வேறு எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. எதுவும் திரும்ப வரவில்லை. ஆகவே, அது ஐசோகிராம் ஆகிறது. Deer என்பதில் E என்ற எழுத்து இரண்டுமுறை இடம்பெற்றுள்ளதால், அது ஐசோகிராம் ஆகாது.

Source :- தினமலர்

Read more...

உளுந்தங் கஞ்சி தயாரிப்பது எப்படி

Tuesday, August 31, 2021

ஆரோக்கியம் வழங்கும் உளுந்தங்கஞ்சி!

 உடலுக்கு ஆரோக்கியம்தரும் 

உளுந்தங்கஞ்சி  தயாரிப்பது எப்படி என விளக்குகிறார், பிரபல சமையல் கலைஞர்  திவாகர்:-

உளுந்தங்கஞ்சி என்பது நம் பாரம்பரிய

 உணவுகளில் ஒன்று. ஊட்டச்சத்து மிகுந்தஉணவு இது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு.எந்த சீதோஷ்ணத்திலும் எளிதாக தயாரித்து, சுகமாக அருந்தக்கூடிய கஞ்சி உணவு இது.வாரத்தில் ஒரு முறையாவது இந்த கஞ்சிஉணவை அருந்தி வர,உடல் ஆரோக்கியம்மேம்படும். உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி என பார்ப்போம்.

தோல்நீக்கிய

உளுந்து - 100 கிராம்,

வெல்லம் - 150 கிராம்,

 துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால்

தேவைக்கு ஏற்ப, 

சுக்கு - 1 கிராம், ஏலக்காய் - 2, 

நல்லெண்ணெய் அல்லது நெய்

தேவையான அளவு.

உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் மாவாக கொள்ளவேண்டும். வெல்லத்தை கரைத்து,வைத்துக் கொள்ள வேண்டும். 

 

அடிகனமானபாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்அரைத்தஉளுந்துமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து

அதை மரக்கரண்டியால் கிளறவேண்டும்.

 உளுந்தின் பச்சை வாசனை போன பின்,

 சிறிது நேரம் கொதிவிட்ட பின், வெல்ல

 கரைசலை சேர்க்க வேண்டும்.

 அப்போது தேங்காய் துருவல், சுக்கு,

 ஏலம் போன்றவற்றை பவுடர் செய்து வைத் திருப்பதை சேர்த்து,சூடாகபரிமாற

வேண்டும்.உளுந்தங்கஞ்சிக்கு

 பனை வெல்லம் பயன்படுத்துவது

 சிறப்பானது. பனைவெல்லம் 

பயன்படுத்துவதால்ஜலதோஷம்,இருமல் போன்றவைகுணமாகும்.

Read more...

Learn forex tamil

Wednesday, August 25, 2021

 http://learnforexintamil.blogspot.com/2020/10/top-10-chart-pattern-10.html?m=1

Read more...

பெட்ரோல் விலை நிர்ணயம்

Wednesday, July 14, 2021

 ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 74 டாலர்; அதாவது, 5,450 ரூபாய். பேரல் என்பது 159 லி., கொள்ளளவு.அப் படியென்றால் 1 லி., கச்சா எண்ணெய் 34.28 ரூபாய்.


 சுத்திகரிப்பு செலவு 3.82 ரூபாய்; டீலர் கமிஷன் 3.87 ரூபாய் என்றால், 1 லி., பெட்ரோல் 41.97 ரூபாய்.


 அதிகபட்ச ஜி.எஸ்.டி.,யான 28 சதவீதம் வரி விதித்தாலும், 11.75 ரூபாய் தான். அப்படியென்றால், 1 லி., பெட் ரோலை 53.72 ரூபாய்க்கு மக்களுக்கு வினியோகிக்க முடியும்

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP